Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழனின் வாக்குகள் கனடியத்தேர்தலில் தமிழ்வாக்குகளின் பலத்தை நிரூபிக்குமா?

Who you are gioing to vote? 19 members have voted

  1. 1. For who you are going to vote?

    • Conservative
      0
    • NDP
    • Liberal
    • Block Quebequa
      0

Please sign in or register to vote in this poll.

Featured Replies

என்டீபீக்கும், லிபரல் கட்சிக்கும் ஒரே அளவான மக்கள் ஆதரவு உள்ளதாக புதிய கருத்துக் கணிப்பொன்று காட்டுகிறது.

என்டீபீ மற்றும் லிபரல் கட்சிகளுக்கு ஒரே அளவான மக்கள் ஆதரவு தற்போது நிலவுகிறதென, புதிய கருத்துக் கணிப்பொன்று தெரிவிக்கிறது.

பொதுத் தேர்தலுக்கு சரியாக இரண்டு வாரங்கள் உள்ள நிலையில், அங்கஸ் ரீட் நிறுவனத்தின் கருத்துக் கணிப்பில், என்டீபீயும், லிபரல் கட்சியும், ஒவ்வொன்றும் 25 சதவீதமான ஆதரவைப் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

கொன்சவேற்றிவ் கட்சி, 36 சதவீதமான ஆதரவுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. புளொக் குபெக்குவா, ஒன்பது சதவீதமான ஆதரவையும், பசுமைக் கட்சி, 5 சதவீதமான ஆதரவையும் பெற்றுள்ளன.

ஆனால், என்டீபீக்கு ஆதரவளிக்கும் வாக்களர்களில், 41 சதவீதமானவர்கள், எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர், தமது மனதை மாற்றக்கூடுமெனக் கூறியதாக அங்கஸ் ரீட் நிறுவனம் குறிப்பிடுகிறது.

2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில், கட்சித் தலைவர்களின் தொலைக்காட்சி விவாதத்தின் பின்னர், என்டீபீ, மற்றும் லிபரல் கட்சிகளுக்கு ஆதரவு ஒரே அளவாகக் காணப்பட்டபோதிலும், தேர்தலின்போது, என்டீபீக்கு அதிகளவு ஆசனங்கள் கிடைக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

கொன்சவேற்றிவ் கட்சி பெரும்பான்மை பெறுவதைத் தடுப்பதற்காக, லிபரல் கட்சிக்கு வாக்களிக்கப் பலர் முடிவு செய்யலாமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=7463

  • கருத்துக்கள உறவுகள்

ராதிகா சிற்சபேசன் வெற்றி பெறுகிராரா இல்லையா என்பதினைவிட தமிழர்களின் வாக்குப்பலத்தினை நிறுபிப்பதற்காக அவருக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் வாக்களிக்க உரிமையுள்ள அனைத்து தமிழர்களும் அவருக்கு வாக்களிக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ராதிகா போட்டியிடும் பகுதியில் சென்றமுறை லிபரல் 50 விகிதத்தையும், கொன்சவேற்றிக் 20 விகிதத்தையும் என்டிபி 15 விகிதத்தையும் பெற்றிருந்தன. சென்றமுறை லிபரல் வந்தமைக்குப் பல தமிழ்மக்களின் வாக்குகளும் காரணமாக இருந்தது. ஆயினும் இம்முறை தமிழர் போட்டிபோடுவதாலும், சென்றமுறை போட்டி போட்ட லிபரல் உறுப்பினர் ஒதுங்கி புதிய ஒருவர் போட்டி போடுவதாலும் ஓரளவான வெற்றி வாய்ப்பு இருக்கின்றது.

இதற்கு அப்பகுதி வாழ் தமிழ்மக்கள் கட்டாய வாக்களிப்புச் செய்வதாலேயே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். வெறுமனே நான் போகாவிட்டால் குறைந்து விடாது என்று ஒவ்வொருவரும் இருந்து வெற்றி விகிதத்தைக் குறைத்துக் கொள்ளாதீர்கள்.

ஏப்பிரல் 20, 2011

அனைத்துக் கட்சி வேட்பாளர் சந்திப்பும் விவாதமும்

கனடியத் தமிழர் பேரவையும் (CTC) சீனக் கனடியர் தேசிய அமைப்பும் (CCNC) இணைந்து ஏற்பாடு செய்யும் அனைத்துக் கட்சி வேட்பாளர் சந்திப்பு மற்றும் விவாத நிகழ்வில் அனைத்துத் தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு கனடியத் தமிழர் பேரவை அழைப்பு விடுக்கிறது.

வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் நூற்றுக் கணக்கிலே திரண்டு வந்து கட்சிகளின் வேட்பாளர்களை நேரிற் சந்தித்து அவர்களின் கொள்கை விளக்கங்களை அறிவதோடு உங்களின் கேள்விகளுக்கான பதில்களையும் பெற்றுக்கொள்ளுங்கள். மிக முக்கியமான இத் தேர்தலில் நீங்கள் காத்திரமான முடிவுகளை எடுத்திட இந்நிகழ்விற் கலந்து கொள்ளுமாறு பணிவுடன் அழைக்கிறோம்.

இடம்: Global Kingdom Ministry Hall (Opposite Tuxedo Court Apartments / Markham & 401)

1250 Markham Road

Scarborough, Ontario M1H 2Y9

காலம்: Wednesday April 27, 2011

நேரம்: 6:30 pm – 9:30 pm

மேலதிக விபரங்களுக்கு: 416 240 0078 அல்லது www.canadiantamilcongress.com

குபெக்கில் என்டீபீ முதல் நிலைக்குச் சென்றுள்ளதாக இன்று வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பு காட்டுகிறது

குபெக்கில், மக்கள் ஆதரவில் முன்னணியில் இருந்த புளொக் குபெக்குவாவைப் பின்தள்ளிவிட்டு, என்டீபீ முதல் நிலைக்குச் சென்றுள்ளதாக இன்று அங்கு வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பொன்று காட்டுகிறது. இத்தகைய நிலை முன்னொருபோதும் ஏற்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று வெளியிடப்பட்ட அந்தக் கருத்துக் கணிப்பில், என்டீபீ, 36 சதவீதமானவர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள புளொக் குபெக்குவா, 31 சதவீதமான ஆதரவைப் பெற்றுள்ளது. கொன்சவேற்றிவ் கட்சி 17 சதவீதமான ஆதரவையும், லிபரல் கட்சி 13 சதவீதமான ஆதரவையும் பெற்றுள்ளதாக இந்தக் கருத்துக் கணிப்புக் காட்டுகிறது.

கடந்த சில நாட்களாக, குபெக்கில் என்டீபீக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. ஜக் லேய்ற்றனின் பரப்புரைச் செயற்பாடுகள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்றத்தில், மொன்றியல் - Outremont தொகுதியில் மட்டும் என்டீபீ வெற்றி பெற்றிருந்தது. எதிர்வரும் பொதுத் தேர்தலில், மேலதிகமாகச் சில தொகுதிகளில் அந்தக் கட்சி வெற்றி பெறும் வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=7508

NEW DEMOCRATIC PARTY: Rathika Sitsabaiesan

647-800-2029, rathikasitsabaiesan@ndp.ca, www.rathika.ca

1) How will Toronto benefit from your party's platform?

Toronto and all of our cities would benefit from the NDP platform because the plan outlined by Jack Layton and the NDP includes dedicated resources to build green infrastructure, with targeted funds for urban transit, clean water, research and development. It will help communities all across Canada realize their vision for a healthy and sustainable future. The NDP plan is focused on improving health services, rewarding the job creators, strengthening pensions and making life for all Canadians and Torontonians more affordable.

2) Tell us about a local issue you plan to champion as MP and how it will affect your local constituents?

My lifelong commitment to fairness, equality and social justice will be the framework for the many issues I plan to champion as Member of Parliament. Many of my neighbours and constituents I am speaking with have been raising the issue of employment in our community and the level of engagement of our youth in the community. Scarborough-Rouge River has a high youth-to-population ratio of 23.6 per cent and working with the Malvern Votes team in the recent municipal election I helped to increase the awareness and participation rates of our youth. I will continue to engage and outreach to all of the neighbours.

3) Would you vote against your party if an issue came up that did not align with the feelings of your constituents?

As the member of Parliament for Scarborough-Rouge River I will be elected to be the representative of the community and the aggregate voice to advocate on behalf of the constituents. The NDP is a democratic party that allows for the members of caucus to vote freely, and fortunately my personal values and principles align with those of the party. Selecting me to be their voice is a sign of trust and faith in my ongoing commitment to the betterment of our local community. I will always ensure that the best interests of my constituents are at the forefront of all of my actions including the votes in the House of Commons.

4) Tell us a bit about yourself.

Rathika Sitsabaiesan is a former student leader and community activist who has worked on many projects and campaigns ranging from education, transit, domestic and international human rights, womens' rights and overall social justice. She has a Bachelor of Commerce from Carleton University and a Master of Industrial Relations from Queen's University. She has been given many awards for her leadership and commitment to community service and will continue her passion for advocating for social injustices and for the interest of the community of Scarborough-Rouge River.

http://www.insidetoronto.com/news/local/article/996783--scarborough-rouge-river

கனடாவில் மே மாதம் 2 ஆம் திகதி நடக்கவுள்ள பொதுதேர்தலில் மூன்றாம் இடத்தில் இருந்த பொதுவுடைமைக்கட்சி ( இராதிகா இந்த கட்சி சார்பாக போட்டியிடுகின்றார்) கடந்த சில நாட்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இது முதலாவது தமிழர் ஒருவரை பாராளுமன்றம் அனுப்பும் சாத்தியத்தை அதிகரித்துள்ள அதேவளை, இந்த தொகுதியில் வாக்களிக்கக்கூடிய ஒவ்வொரு தமிழரும் வாக்களித்தால் வெற்றி கொள்ளுவார்.

இந்த தொகுதியில் கிட்டத்தட்ட 16000 தமிழர்கள் வாக்களிக்கும் தகமை பெற்றுள்ளனர் என கூறப்படுகின்றது.

இராதிகா அவர்களின் பேட்டி

Edited by akootha

We can make a new Canadian history by voting for NDP

by Meera Bharathy

We can make a new Canadian history by voting for NDP

If you are voting for conservative,

Then you are voting to take away your rights, benefits and privileges which you have already.

If you are a student and voting for conservative,

Then you are voting to raise higher tuition fees.

If you are a couple or parent and voting for conservative,

Then you are voting to cut the funds for your children’s education and community services,

Then you are voting for higher tax cut for you and lower tax cut for your boss.

Then you are voting to get laid off from your job.

Then you are voting to cut your retirement and senior’s benefits.

If you are a senior and voting for conservatives,

Then you are voting to lose your senior’s benefits and community facilities.

If you are an immigrant and voting for conservatives,

Then you are voting against you and your status in Canada and against your family and relatives who are waiting in your home country to come here.

Therefore, Think twice, before you vote.

If you are voting for NDP,

Then you are voting to protect your rights, benefits and privileges which you have already.

If you are a student and voting for NDP,

Then you are voting to reduce your tuition fees.

If you are a couple or parent and voting for NDP,

Then you are voting to save your children’s education and community services,

Then you are voting to reduce your tax.

Then you are voting to save your job and create more jobs for everyone.

Then you are voting to protect your retirement and senior’s benefits and of course your parents and grandparents too.

If you are a senior and voting for NDP,

Then you are voting to protect your seniors benefits and community facilities.

If you are a immigrant and voting for NDP,

Then you are voting for your rights and to protect your status in Canada and to give a hope for your family and relatives who are waiting in your home country to come here.

Therefore, Think twice, before you vote.

Make a better choice….

This time that choice should be NDP who fight for our rights, stand with us when we have problems, and talk and fight for social issues.

All we are saying….

Vote for NDP.

Imagine all the people

Vote for NDP…

We can make a new Canadian history.

And we can also show political leaders

People have the power to change anything and any time when they want.

Changing is happening already.

We can do it this time

Yes! We can.

நாடு கடந்த தமிழீழ அரசு

பிரதிப் பிரதமர் அலுவலகம்

Transnational Government of Tamil Eelam

Office of the Deputy Prime Minister

Dr. Ram Sivalingham Ph.D, B.Sc (Hons), FIMechE, C. Eng, P.Eng

ஊடக அறிக்கை

கனடா நாடாளுமன்றத் தேர்தல் மே 2, 2011

அன்பும் பாசமும் கொண்ட எம் உறவுகளே!

கனடா நாட்டில் நடைபெறவிருக்கும் கனடா நாடாளுமன்றத்திற்கான தேர்தல் மே மாதம் 2 ஆம் நாள் நடைபெற இருப்பது நாம் எல்லோரும் அறிந்ததே. இன்றைய நிலையில் இத்தேர்தலில் நாம் பங்கு கொள்வது முக்கியமானதும் தேவையானதும் ஆகும். ரொறொன்ரோ பெரும்பாகத்தில் உள்ள பல தொகுதிகளில் தமிழர்களது வாக்குப் பலம் கணிசமாக உள்ளது. அதில் சில தொகுதிகளில் தமிழர்களது வாக்குக்கள் அத்தொகுதிக்கான வெற்றி தோல்வியை முடிவு செய்யக் கூடியதாக இருக்கிறது. இது கட்சித் தலைவர்க்ளுக்கும் தெரிந்த உண்மையே..

இத்தேர்தல் எமது திடமான கொள்கையும் கட்டுப்பாடுடனான செயற்பாடும் எம்மைப் பற்றி மற்றவர்கள் அறிவதற்கும் எமது நிலையை அவர்களுக்கு விளக்குவதற்குமான ஒரு வாய்ப்பாக அமையவேண்டும். இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தினால் அரசியல் அடிப்படையில் வருங்காலத்தில் எமக்கு சாதகமான நிலமையை எமக்கு ஏற்படுத்தும்.

எமது நோக்கத்தை, எம்மவர் தேவையை தெளிவுபடுத்தும் விதத்தில் எமது வாக்குக்கள் பதிவாகவேண்டும். எனவே எல்லோரும் கீழேதரும் கருத்துக்களை மனதில் வைத்து உங்கள் வாக்குக்களை அளிக்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசின் சார்பில் அன்புடன் வேண்டுகிறேன்..

1. நாம் எல்லோரும், ஒருவர்கூடத் தவறாமல், வாக்குச் சாவடிகளுக்குச் சென்று எமது வாக்குக்களை அளிக்கவேண்டும். இது, நாம் ஜனநாயகத்திற்கு முன்னுரிமை கொடுப்பவர்கள் என்பதையும் அதேவேளை எமது வாக்குப்பலத்தையும் மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவதாக அமையும்.

2. ஒவ்வொரு தமிழ் வாக்காளரும் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் திட்டம், நிகழ்ச்சி நிரல் மற்றும் கொள்கை ஆகியவற்றையும் வேட்பாளர்களது தகுதியையும், திறமைகளையும்,

அவர்களின் எம் இனத்திற்கான பங்களிப்பையும் சீர்தூக்கிப் பார்த்து வாக்களிக்க வேண்டும்.

எங்கள் உரிமைப்போருக்கு அவர்கள் காட்டும் அனுதாபம், எங்களது நலன்கள் பற்றி அவர்களது ஏற்புத்தன்மை ஆகியவையே நாங்கள் வாக்களிக்கு முன்னர் எமக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

நன்றி.

தங்கள் அன்புள்ள,

கலாநிதி ராம் சிவலிஙகம

பிரதிப் பிரதமர் – நாடுகடந்த தமிழீழ அரசு

பெரும்பான்மை பெறுவது சாத்தியமற்றதென கொன்சவேற்றிவ் கட்சி ஏற்றுக் கொண்டுள்ளதென செய்தி வெளியாகியுள்ளது

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொன்சவேற்றிவ் கட்சி பெரும்பான்மை பெறாதென அந்தக் கட்சியினர் ஏற்றுக் கொள்வதாக கொன்சவேற்றிவ் கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரொறன்றோ ஸ்ரார் செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில், தமது கட்சி பெரும்பான்மை பெறவேண்டுமானால், ஒன்றாரியோவில் உள்ள 106 தொகுதிகளில் குறைந்தது 74 தொகுதிகளில் தமது கட்சி வெற்றி பெறவேண்டுமெனவும், அது சாத்தியமற்றதெனவும் கொன்சவேற்றிவ் கட்சி உயர் அதிகாரிகள் கூறியதாக அந்த ஏடு தெரிவிக்கிறது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டபோது, ஒன்றாரியோவின் 51 தொகுதிகளில் கொன்சவேற்றிவ் கட்சியினர் உறுப்பினர்களாக இருந்தார்கள்.

பிரிட்டிஷ் கொலம்பியாவிலும், குபெக்கிலும் கொன்சவேற்றிவ் கட்சியின் தொகுதிகள் பலவற்றை என்டீபீ வெல்லும் சாத்தியம் உள்ளதனால், தமது கட்சி வெல்லக்கூடிய தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதென கொன்சவேற்றிவ் கட்சி தெரிவிக்கிறது.

கடந்த ஒரு வருடகாலமாக லிபரல் கட்சித் தலைவர் மைக்கல் இக்னாட்டியெஃப்புக்கு எதிராகத் தாம் மேற்கொண்ட பரப்புரை காரணமாக, இக்னாட்டியெஃப்புக்கு ஆதரவை விலகிக் கொண்டவர்கள், தமது கட்சிக்கு ஆதரவளிக்காது, ஜக் லேய்ற்றனுக்கு ஆதரவளிப்பதாக கொன்சவேற்றிவ் கட்சியைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக ரொறன்றோ ஸ்ரார் கூறுகிறது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=7631

  • கருத்துக்கள உறவுகள்

கனடியத் தேர்தலில் யாருக்கு தமிழர் வாக்கு?

சனி, 30 ஏப்ரல் 2011 10:25

ஏழு ஆண்டுகளில் நான்காவது முறையாக கனடியப் பொதுத்தேர்தல் மே 2ஆம் திகதி நடைபெறவுள்ளது. இது நாற்பத்தியோராவது அரசாங்கத்தை அமைப்பதற்கான தேர்தலாகும்

கட்சித் தலைவர்களின் பிரசாரமும் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.

இம்முறை தேர்தலில் பரபரப்பு என்னவென்றால் கட்சி நிலைவரங்களின் புள்ளிவிபரக் கணக்கெடுப்புகள் தரும் திடுக்கிடும் கணிப்புகள்தான். இரண்டாவது இடத்தில் இருந்த லிபரல் கட்சியை என்.டி.பி. மூன்றாவது இடத்துக்குத் தள்ளிவிட்டது என்பதாகும்.

தற்போது லிபரல் கட்சி ஆட்சியைப் பிடிப்பது என்ற கதை போய் இரண்டாவது இடத்தைத் தக்கவைப்பதற்கு போராடுகிறது. ஆனால் புதனன்று வெளிவந்த கணிப்பின்படி மக்களாதரவில் முதலிடத்தில் உள்ள கொன்சவேற்றிவ் கட்சியை என்டீபீ நெருங்கி வருவதாக புதிய கருத்துக் கணிப்பொன்று தெரிவிக்கிறது.

Forum Research நிறுவனத்தின் கருத்துக் கணிப்பொன்றில் கொன்சவேற்றிவ் கட்சிக்கு 34 சதவீத மக்கள் ஆதரவும் என்டீபீக்கு 31 சதவீத மக்கள் ஆதரவும் உள்ளமை தெரியவந்துள்ளது.

லிபரல் கட்சிக்கு ஆதரவு தொடர்ந்து குறைந்து தற்போது 22 சதவீதமாகியுள்ளது.

ஆனாலும் இந்தக் கணக்கெடுப்புகள் அண்ணளவு ஆனது என்பதுடன் நாளுக்கு நாள் மாற்றமடைந்து வருகின்றது.

கனடியத் தேசிய அரசியலில் பரபரப்பு காணப்படும் அதேவேளை கனடியத் தமிழர் அரசியலிலும் பரபரப்பு இல்லாமல் இல்லை. ஏனெனில் தமிழர்கள் இருவர் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்பதினாலாகும்.

கனடியப் பொதுத்தேர்தலில் இம்முறைதான் முதன்முதலாக போட்டியிடுகிறார்கள் என்று கூறுவதற்கில்லை. இதற்கு முன்னைய தேர்தல்களிலும் இருவர் போட்டியிட்டனர்.

(DonValley West) டொன்வலி மேற்குத் தொகுதியில் என்.டி.பி. சார்பில் போட்டியிட்ட டேவிட் தோமஸ் 2004ம் ஆண்டுத் தேர்தலில் 4393 வாக்குகளையும் 2006ஆம் ஆண்டுத் தேர்தலில் 4902 வாக்குளளையும் பெற்றிருந்தார். கனடியப் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட முதலாவது தமிழ் வேட்பாளர் என்ற பெருமை இவருக்குரியது.

2006 ஆம் ஆண்டில் (Scabrough South-West) ஸ்காபரோ தென்மேற்குத் தொகுதியில் வின்சன் வீரசுந்தரம் கொன்சர்வேட்டிவ் கட்சியில் போட்டியிட்டு 10017 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

இவ்வருடம் ஸ்காபுரோ தென்மேற்குத் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளராக ராகவன் (கவன்) பரஞ்சோதியும் ஸ்காபரோ றுபஜ் றிவர் தொகுதியில் என்.டி.பி. சார்பில் ராதிகா சிற்சபேசனும் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் தமிழர்கள் என்பதனாலும் கனடிய மண்ணில் எங்கள் பலத்தை நிரூபிப்பதற்கும் தமிழர்கள் கனடிய தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்து போவதற்குமாக இவர்களுக்கு வாக்களித்து இவர்களை வெல்ல வைக்க வேண்டியது இவர்கள் போட்டியிடும் தொகுதிகளின் தமிழ் வாக்காளர்களின் கடமையாகும். எனவே தமிழர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்குடன் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களுக்கு கட்சி பேதமின்றி வாக்களிக்க வேண்டியது தமிழர் கடமையாகும்.

ஆனால் தேர்தல் ஒன்றில் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் சுதந்திரம் அந்த மக்களின் உரிமை. ஆயினும், கனடாவில் சிறுபான்மையினமாக இருக்கும் தமிழர்கள் ஒருமித்து எடுக்கும் முடிவே முழுத்தமிழ் மக்களுக்கும் நன்மையளிப்பதாக அமையும். நாம் எக்கட்சிக்கு வாக்களிக்கலாம் என்பதற்கு முன்னர் கனடிய தேசிய அரசியலில் தமிழருக்கு எந்தெந்தக் கட்சிகள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தன என்பது பற்றி தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் தேர்தல் காலங்களில் இலங்கைத் தமிழர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தியது போல் கனடாவிலும் தேர்தல் காலத்தில் தமிழர்கள் பயன்படுத்தப்படுகின்றனர் என்றே கூறலாம்.

2000ஆம் ஆண்டில் அப்போதைய லிபரல் அரசின் நிதி அமைச்சர் போல் மாட்டின் அவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர் மரிய மின்னா அவர்களும் கனடியத் தமிழரின் சங்கங்களின் சம்மேளனத்தினால் (Federation of Associations of Canadian Tamils - FACT) ஏற்பாடு செய்யப்பட்ட இரவு விருந்துபசாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தனர்.

இதனை அப்போது எதிர்கட்சி வரிசையில் இருந்த கொன்சர்வேட்டிவ் கட்சி பெருமளவில் எதிர்ப்பிரசாரக் கருவியாகவே எடுத்துச் செயற்பட்டது. பயங்கரவாதிகளின் விருந்துபசாரத்தில் நிதி அமைச்சர் கலந்துகொண்டு விட்டார் என போல் மாட்டின் அரசு கவிழும் வரை ஓங்கி ஒலித்ததனை போல் மாட்டினின் செல்வாக்கைக் குறைப்பதற்கு அல்லது லிபரல் அரசினை தோற்கடிப்பதற்கு கொன்சர்வேட்டிவ் கட்சி ஓர் ஆயுதமாகப் பாவித்தது நாடறிந்த விடயம்.

அதேவேளை 2006ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் 'விடுதலைப் புலிகள் பயங்கரவாத இயக்கம் இவர்களை இந்த நாட்டில் தடைசெய்தே தீருவோம்" என்று சொல்லி வந்த கொன்சர்வேட்டிவ் தேர்தலில் வென்றதும் முதல் வேலையாக அதே ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்தது.

அதன் பின்னர் 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் உலகத் தமிழர் இயக்கத்தைத் தடை செய்தது. அப்போதும் கொன்சர்வேட்டிவ் கட்சி சார்பு பத்திரிகைகள் போல் மாட்டின் கலந்துகொண்ட விருந்துபசாரத்தை நினைவுபடுத்தத் தவறவில்லை. லிபரல் கட்சி ஆட்சியில் இருக்கும்வரை தமிழர் அமைப்புகள் எதுவும் தடை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லிபரல் அரசு பதவியிலிருந்த காலத்தில் “விடுதலைப் புலிகளைத் தடை செய்வீர்களா?” எனக் கேட்டதற்கு இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும்போது தடைசெய்வது பற்றி யோசிக்க வேண்டிய அவசியமில்லையென அதற்குப் பொறுப்பான லிபரல் அமைச்சர் ஒருவர் பதிலளித்திருந்தார்.

முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்குப் பின்னர் தமிழர்கள் நொந்து வெந்து இருக்கும் வேளையில் MV Sun Sea என்ற கப்பலில் 495 தமிழ் அகதிகள் கனடாவுக்கு வரப்போகிறார்கள் என்றவுடனேயே பூரணமாக அவர்களைப் பற்றி அறியாமலேயே பயங்கரவாதிகள் வருகிறார்கள் என்ற கென்சர்வேட்டிவ் அமைச்சர்கள் கூறத் தொடங்கினர். தற்போதும் தேர்தல் காலத்திலும் MV Sun Sea கப்பலையே தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்துகிறது கொன்சர்வேட்டிவ் கட்சி.

1986ஆம் அண்டு நியூபவுன்லாந்தில் 155 தமிழ் அகதிகள் இரண்டு வள்ளங்களில் வந்தபோது அவர்களை வரவேற்று வாழ்வளித்தது அப்போதைய கொன்சர்வேட்டிவ் அரசு என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதைய பிரதமர் மதிப்புக்குரிய பிறையன் மல்றோனி 80களில் நடுப்பகுதியினல் இலங்கையிலிருந்து தமிழ் மக்கள் அகதிகளாக வந்த வேளை அவர்களை கூடுதலாக அங்கீகரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் இணையத்தளங்களிலும் ஊடகங்களிலும் பரவலாக காணப்பட்ட விடயம் தற்போதைய லிபரல் கட்சித் தலைவர் இக்னாட்டியவ் அவர்கள் பெண் கரும்புலிகள் பற்றி தான் எழுதிய புத்தகத்தில் மிகவும் கேவலமாக கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதியுள்ளார் என்பதாகும்.

அதில் கரும்புலிகள் பற்றி சிங்கள அரசாங்கத்தின் விமர்சனங்களை எல்லாம் விஞ்சுவதாகவே அது அமைந்திருந்தது. இது தமிழர் மனங்களை மிகவும் பாதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

என்.டி.பி. பொறுத்தவரை கனடிய நாடாளுமன்றத்தில் அக்கட்சிக்கு ஒருபோதும் ஆட்சிப்பீடம் ஏறவில்லை. ஆனால் இதுவரை தமிழர்களுக்குத் தேவையான நேரத்தில் குரல்கொடுத்து வருகின்றது. ஒருவேளை ஆட்சியைப் பிடித்தால் எப்படி இருப்பார்கள் என்பது அப்போதுதான் தெரியும்.

2004ஆம் ஆண்டு பொங்குதமிழ் நிகழ்வு ரொறன்ரோ குயின்ஸ் பார்க் திடலில் நடைபெற்ற வேளை ஏறக்குறைய ஒரு இலட்சம் மக்கள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வில் உரையாற்றிய ஒரேயொரு கட்சித் தலைவர் என்.டி.பி.யின் ஜக் லேய்ட்டன் என்பதை நாம் மறந்துவிடலாகாது.

2009ஆம் ஆண்டு வன்னியின் இராணுவத் தாக்குதல் உச்சக்கட்டம் பெற்றிருந்த காலத்தில் பெப்ரவரி 4ஆம் திகதி சிறிலங்காவின் 61ஆவது வருட சுதந்திர நாளினை துக்க நாளாகக் கடைப்பிடித்தும் கனடிய அரசு இலங்கை இனப்பிரச்சினையில் காத்திரமான பங்கு வகிக்க வேண்டும் எனவும் அனைத்துக் கட்சிகளை வேண்டி கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் கவனயீர்ப்பு நடைபெற்றது.

இதில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்துகொண்டனர். இந்தக் கவனயீர்ப்பைத் தொடர்ந்து அன்று மாலை 6:30 மணிக்கு இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான கனடிய நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் இடம்பெற்றது.

இந்த விவாதத்தினை நடத்தவேண்டுமென என்.டி.பி. தலைவர் ஜக் லேய்ட்டனே அனுமதி கோரியிருந்தார். அத்துடன் அவரே இந்த விவாதத்தை தமிழில் 'வணக்கம்" சொல்லி ஆரம்பித்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேநாள் கனடிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை தொடர்பாக அறிக்கை ஒன்றையும் விடுத்தார். இலங்கையின் இனப்பிரச்சினையை உள்விவகாரம் என்று கூறிவருவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அது தொடர்பான தீர்வில் கனடாவின் பங்களிப்பு தேவை என்றும் லிபரல் கட்சியைச் சேர்ந்த பொப் ரே தெரிவித்தார்.

2009 பெப்ரவரி நான்காம் திகதி நடைபெற்ற விவாதம்தான் கனடிய அரசியல் வரலாற்றில் கனடிய நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர் பற்றி நடைபெற்ற முதலாவது விவாதம் எனலாம்.

அதன் பிற்பாடு வன்னியில் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறிலங்காப் படைகளால் கொல்லப்பட்ட வேளை 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கடும் குளிரையும் பொருட்படுத்தாது 50000இற்கும் அதிகமான மக்கள் கனடிய நாடாளுமன்றத்துக்கு முன்னால் திரண்டனர்.

இளையோர் பல மணிநேரமாக முழந்தாளிட்டு மன்றாடினர். கண்ணீர் விட்டு அழுதனர். ஆனால் என்.டி.பி. கட்சி ஜக் லேய்ட்டன் மட்டுமே அதில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வேறு எந்த கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவில்லை.

அதன்பின்னர் முள்ளிவாய்க்கால் சம்பவம் நடைபெற்று முடிந்துவிட்டது. ஐ.நா.வின் குழுவும் அறிக்கை விட்டாயிற்று. அமெரிக்கா உட்பட பல மேற்கத்தேய நாடுகள் போர்க்குற்ற விசாரணை நடைபெற வேண்டுமென அறிக்கைமேல் அறிக்கை விடுகின்றன.

ஆனால் கனடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி அரசு இதுவரை இது தொடர்பாக ஆக்கபூர்வமான எந்த அறிக்கையும் விடவில்லை என்பதே உண்மை. லிபரல் கட்சியும் என்டீபியும் அறிக்கையை வரவேற்பதாக பகிரங்கமாகத் தெரிவித்துள்ளன.

கனடியத் தமிழர்கள் கனடாவில் சொல்லக்கூடிய அளவில் மூன்று தசாப்தங்களாக வாழ்கின்றனர். ஆனால். இதுவரை நாடாளுமன்ற உறுப்பினராக ஒரு தமிழர்கூட தெரிவுசெய்யப்பட முடியாதிருப்பது ஏன்?

கனடிய கட்சிகளின் பார்வையில் தமிழர்கள் முக்கியமானவர்களாகத் தென்படவில்லையா? தமிழர்களை அக்கட்சிகள் தேவைக்கு மாத்திரம் பயன்படுத்துகிறார்களா? கனடாவில் தமிழர் எண்ணிக்கையில்;சிறிய தொகையினராக இருப்பது உண்மையே. எனவே அரசியல் கட்சிகளில் முக்கியத்துவம் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.

இருப்பினும் ரொறன்ரோ பெரு நகரம் மிசிசாகா பிராம்ரன் மற்றும் மார்க்கம் பிரதேசங்களின் பல தேர்தல் தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அளவிற்கு தமிழர் வாக்காளர்களாக உள்ளார்கள் என்பது உண்மை. எனினும் தமிழர்கள் தம்மை முக்கியத்துவப்படுத்தி அடையாளப்படுத்தாமல் வெறும் வாக்கு வங்கிகளாகவா கட்சிகளுக்குப் பயன்படுகின்றனர்.

பலர் சிதறுண்டு ஒருங்கிணைப்பின்றி அரசியல் கட்சிகளுக்கு வேலை செய்கின்றனர்.

இது கட்சிகளினால் அடையாளப்படுத்தப்படுவதற்குரிய சந்தர்ப்பம் குறைவு. எனவே ஒருங்கிணைந்து சேவையாற்றுவது அவசியமாகும்.

நாம் சிறிய சமுகம் என்பதனால் ஒருங்கிணைந்து அனைத்துக் கட்சிகளுக்குள்ளும் செல்வாக்குச் செலுத்தக்கூடிய வகையில் பணியாற்றவேண்டியது அவசியம். அதேவேளை கட்சியில் ஒரு வேட்பாளராக தெரிவு செய்யப்படக்கூடிய தகமையுள்ளவர்களை முன்னிலைப்படுத்த வேண்டும். கட்சிகளின் நடவடிக்கைகளுக்கு தமிழர்களின் பலமும் அவர்களின் உதவியும் அவசியம் என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்.

தமிழர் அரசியலைத் தலைமை தாங்கும் அமைப்புகள் இவற்றை உணர்ந்து செயற்பட வேண்டியது தலையாய கடமையாகும்.

ஆனால். 2000ஆம் ஆண்டளவில் தமிழர் அரசியல் நடவடிக்கைக்காக ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு சிலரின் கைகளுக்குள் சிக்கித் தவிக்கின்றது.

பல கட்சிகளுக்குள்ளும் பன்முக ஆளுமையுடன் செயலாற்ற வேண்டிய அந்த அமைப்பு ஒரு கட்சி (அந்த அரசியல் கட்சியை நாம் குறைகூறவில்லை) சார்ந்து ஒரு சிலரின் நன்மைக்காக செயலாற்றுகிறது. ஒரு கட்சியின் தலைவரை தமிழர் பண்டிகைக்குக் கூப்பிட்டுச் சாப்பாடு கொடுத்தால் அதுதான் அரசியல் வெற்றி என்று நினைக்கிறார்கள். அந்தக் கட்சித் தலைவர் ஆளும் கட்சிதானா என்றால் அதுவுமில்லை.

ஒரு கட்சிக்கு ஒரு இனம்சார் அமைப்பு பகிரங்கமாக ஆதரவளிக்கும்போது அந்த குறிப்பிட்ட கட்சி தோல்வியடைந்தால் பாதிக்கப்படப்போவது அந்த இனமே அன்றி அந்தச் சிலர் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

தமிழர்களை வேட்பாளர்களாக ஒரு கட்சி தேர்தலில் நிறுத்தும்போது அவருக்குச் சாதகமான தொகுதியை தெரிவு செய்ய வேண்டும். ஆனால் இவ்விடயத்தில் அரசியல் சதிகள் இடம்பெறுவதுபோலத் தெரிகிறது.

தமிழர் ஒருவர் தாம் சார்ந்த கட்சியில் குறிப்பிட்ட ஒரு தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியும் என்று ஆயத்த நிலையில் இருக்கும்போது அவருக்கெதிராக இன்னொரு கட்சியில் மற்றொரு தமிழரை நிறுத்துகிறது. இது தமிழ் சமூகத்தை பிளவுபடுத்தும் ஒரு செயல் இதற்குத் தமிழர்கள் இடமளிக்கக்கூடாது.

கனடாவில் எந்த ஒரு கட்சியும் தமிழர்களுக்கு இலகுவாக வெல்லக்கூடிய தொகுதியை வழங்குவதற்கு இன்னமும் ஆயுத்தமாகவில்லை என்றே தோன்றுகிறது.

16000 வரையான தமிழரின் வாக்குகளையுடைய றூஜ்-றிவர் தொகுதியில் லிபரல் கட்சி சார்பில் இரு தசாப்தத்திற்கு மேலாக பா.உ.ஆக இருந்த டெரிக் லீ அண்மையில் ஓய்வுபெற்றார்.

அந்த தொகுதியில் தமிழ் வாக்காளர்கள் அதிகமாக இருந்தும் தமிழர் தரப்பால் நிரப்ப அந்தக் கட்சி முன்வரவில்லை. வேற்றினத்தவர் ஒருவருக்கே அந்த இடம் வழங்கப்பட்டது. தமிழர் தரப்பில் சிலர் மனப்பால் குடித்ததே மிச்சம்.

இத்தொகுதியில் என்டீபி சார்பில் ராதிகா சிற்சபைஈசன் போட்டியிடுகின்றார். இங்கு 2008 பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட டெரிக் லீ 23716 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

மூன்றாவது இடத்திற்கு வந்த ஏன்.டி.பி. வேட்பாளர் றையன் ஸ்லோன் 5954 வாக்குகளை பெற்றிருந்தார். இருவருக்கும் உள்ள வித்தியாசம் 17762 வாக்குகள். கடந்த தேர்தலில் கூடுதலான தமிழர்கள் லிபரல் கட்சிக்குத்தான் வாக்களித்திருப்பார்கள் என்பதை அறிய முடிகிறது.

எனவே தமிழ்ச் சமூகத்தினர் முழுமையாக ராதிகாவுக்கு ஆதரவளித்தாலும் வெற்றி பெறுவதற்கு மற்றைய சமூகத்தினரையும் அணுக வேண்டும்.

இத்தேர்தலில் லிபரல் கட்சிக்கான ஆதரவு மிவும் குறைந்துள்ளது கொன்சாவேட்டிவ் கட்சிக்கான ஆதரவு அதிகரிக்கவில்லை. ஆனால் என்.டி.பி.க்கான ஆதரவு அதிகரித்துள்ளது. இந்த சாதக நிலைமையை பயன்படுத்துவதற்கு கடுமையாக உழைக்கவேண்டிய தேவை தமிழ் சமூகத்திற்கு உண்டு.

ராகவன் பரஞ்சோதி போட்டியிடும் ஸ்காபரோ தென்மேற்குத் தொகுதியில் 2008 பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட மிசேல் சிம்சன் 15480 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார். கொன்சர்வேட்டிவ் சார்பில் போட்டியிட்ட கிறேக் குறொம்ரன் (Greg Crompton) 10900 வாக்குகளைப் பெற்று இரண்டாவதாக வந்தார். வித்தியாசம் 4580 வாக்குகள் தான்.

தற்போதைய தேர்தலில் லிபரல் கட்சியின் ஆதரவு குறைந்திருப்பதால் லிபரல் கட்சிக்கான வாக்குகள் குறைவடைய வாய்ப்புண்டு. இச்சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் இப்பகுதியில் வாழ்ந்த தமிழரில் பெரும்பாலானோர் வேறு பகுதிகளிற்கு வாழச் செற்றுவிட்டனர் அத்துடன் கொன்ச்வேட்டிவுக்கான ஆதரவும் குறைந்து என்.டி.பிக்கான ஆதரவு அதிகரித்துள்ளது.

ஓருங்கிணைந்த தமிழர்களின் அரசியற் செயற்பாடே வெற்றியைத் தேடித்தரும். அது ஈழத்தமிழ் மக்களின் துயரத்தையும் துடைக்கும். தமிழர் போட்டியிடும் தொகுதிகளில் கட்சி பேதமின்றி தமிழருக்கே வாக்களிப்போம். தமிழர் போட்டியிடாத தொகுதிகளில் தமிழருக்கு ஆதரவு அளித்தவரை அல்லது அதரவு அளித்த கட்சியை இனங்கண்டு அவ்வேட்பாளருக்கு வாக்களிப்போம்.

வாக்களி தமிழா வாக்களி!

tamilenn

கனடாவில் பொதுத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரங்கள் இந்த வார இறுதியில் நடைபெறுகின்றன

பொதுத் தேர்தலுக்கான இறுதிக் கட்டப் பிரச்சாரங்கள் இந்த வார இறுதியில் மேற்கொள்ளப்படுகின்றன.

லிபரல் கட்சித் தலைவர் மைக்கல் இக்னாற்றியெஃப் இன்று டொரன்டோவில் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றார்.

கடைசியாக லிபரல் கட்சியின் அதிகூடிய ஆதரவு டொரன்டோவிலேயே இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒன்ராறியோவின் ஓக்வில், கல்ஃப், மிசிசாகா மற்றும் பிரம்டன் ஆகிய இடங்களில் மைக்கல் இக்னாற்றியெஃப் பிரச்சாரங்களை மேற்கொள்வார்.

கனடாவின் மேற்குப் பிராந்தியத்தில் லிபரல் கட்சிக்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கின்றது. அதேபோன்று குபெக்கிலும் என்.டி.பியின் ஆதரவு காரணமாக லிபரல் கட்சிக்கான வாய்ப்பு மிகவும் குறைந்திருக்கின்றது.

ஆகவே ஒன்ராறியோவையே லிபரல் கட்சி தற்போது நம்பியிருக்க வேண்டியுள்ளது.

இதேவேளை, கன்சவேற்றிவ் கட்சியின் சார்பில் பிரதமர் ஸ்ரீவன் ஹார்ப்பர் இன்று காலை றிச்மன்ட் ஹில்லில் தமது பிரச்சாரத்தை ஆரம்பிக்கின்றார்.

அதன் பின்னர் இன்று பிற்பகல் அவர் நோவஸ்கோஷியாவிற்கு சென்று அங்கு பிரச்சாரத்தை மேற்கொள்வார்.

என்.டி.பி கட்சித் தலைவர் ஜக் லேய்ற்றன், பிரிட்டிஷ் கொலம்பியாவின் பேர்ணபியில் பிரச்சார நிகழ்வொன்றை நடத்துவார்.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=7639

-----------------------------------------------------------------

( அடிக்கிற NDP காற்றுல லிபரல் அம்மி தான் பறக்கும் எண்டு நினைச்சம் இப்ப பார்த்தல் கோன்செர்வடிவ் ஆடடுக்கல்லே பறக்கும் போல கிடக்கு..)

What went wrong for the Liberals - http://www.thestar.com/news/canada/politics/article/982976--what-went-wrong-for-the-liberals?bn=1

Harper pleads with Liberal supporters to vote Tory to stop NDP - http://www.thestar.com/news/canada/politics/article/983413--harper-pleads-with-liberal-supporters-to-vote-tory-to-stop-ndp?bn=1

to: letters@globeandmail.com

cc: areinhart@globeandmail.com

Subject: Former Tiger chief confirms he talked to man now running for Tories

Dear Editor,

Thanks for your continued investigative journalism ( http://www.theglobeandmail.com/news/politics/former-tiger-chief-confirms-he-talked-to-man-now-running-for-tories/article2005082/). I also think that Mr.Reinhart should note that Thambiaiya Selvarasa Pathmanathan alias KP is still wanted by Interpol ( http://www.interpol.int/public/Data/Wanted/Notices/Data/1998/43/1998_4743.asp ) and Canadians are to report whereabouts of those from Interpol, according to RCMP.

All this beg the question the sincerity of Sri Lankan government who now being accused by UN of wiping some 100,000 Tamils leading into May in the name of war on terror (http://www.un.org/News/dh/infocus/Sri_Lanka/POE_Report_Full.pdf). I would not trust what anyone says in the custody of state lead by war criminals.

Sincerely,

Edited by akootha

Focuses on the status of Canadian parliamentary election 2011.

http://www.thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=7662

Layton ends campaign in Scarborough Rouge River

இராதிகாவின் தொகுதியில் தனது பிரச்சாரத்தை முடித்தார் தலைவர் ஜாக் லேய்ட்டன்

Layton brought his wife, Olivia Chow, to the rally for Rathika Sitsabaiesan, his candidate in this riding. "I can't wait to have these two sisters sitting side-by-side in the House of Commons," he said.

http://electionblog.ctv.ca/post/2011/05/01/Layton-ends-campaign-in-Scarborough-Rouge-River.aspx

  • கருத்துக்கள உறவுகள்

May 3, 2011 / பகுதி: செய்தி /

தமிழ் மக்களின் தோழனாக மார்க்கத்தில் பொப் சரோஜா

கனடாவின் 41வது நாடாளுமன்றத் தேர்தலில் Markham-Unionville இல் கென்சவேட்டிவ் கட்சியில் போட்டியிடும் Bob Saroya தமிழ் மக்களின் ஆதரவை பெற்று வருகின்றார்.

இந்தியாவை பிறப்பிடமாகக்கொண்ட சீக்கிய இனத்தை சேர்ந்த Bob Saroya 1975 ஆம் ஆண்டு குடிவரவாளனாக கனடா சென்றடைந்தார். கனடாவில் இன்று நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கனடியத் தமிழர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர்

அது மட்டுமன்றி தமது பிரதேசங்களில் உள்ள வேட்பாளர்களில் தமிழ் மக்களுக்காக குரல் எழுப்பக்கூடியவர்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

இது கனேடிய தமிழ் மக்களின் தெளிந்த அரசியல் சிந்தனைகளின் வெளிப்பாடாக கருதப்படுகின்றது. இந்த வகையில் நீண்ட காலமாக தமிழ் மக்களுடன் மிகுந்த நட்பைப் பேணிவரும் Bob Saroya மீது தமிழ் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இந்தமுறை நடைபெறவுள்ள கனேடிய நாடாளுமன்ற தேர்தலில் இரு தமிழ் வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

ஸ்காபுறோ றுச் றிவர் தொகுதியில் என்டீபி கட்சி சார்பாக ராதிகா சிற்சபேசனும், ஸ்காபுறோ தென்மேற்கு பகுதியில் சென்சவேட்டிவ் கட்சி சார்பாக ராகவன் பரஞ்சோதியும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

pathivu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.