Jump to content

தமிழகம் கருத்துக் கணிப்புகளில் முடிவு: அதிமுக கூட்டணி அமோக வெற்றி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம் கருத்துக் கணிப்புகளில் முடிவு: அதிமுக கூட்டணி அமோக வெற்றி

புதுதில்லி,மார்ச் 31: தமிழ்நாடு சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக - தேமுதிக - கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி பெருவாரியான மக்களின் ஆதரவுடன் அமோக வெற்றி பெறும் என்று இந்தியா டுடே - ஹெட்லைன்ஸ் டுடே - மெயில் டுடே - ஓஆர்ஜி ஆகியவை நடத்திய கருத்துக் கணிப்பும் அவுட் லுக் வார இதழும் எம்டிஆர்ஏ அமைப்பும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பும் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும் கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ஆட்சியைப் பிடிக்கும், அசாமில் எந்தக் கட்சிக்கும் அணிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நிலைமை ஏற்படும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கடந்த சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் கிடைத்த வாக்குகளை அடிப்படையாக வைத்தும், இப்போதைய பிரச்னைகள் தொடர்பாக சில கேள்விகளுக்கு வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட பதில்களின் அடிப்படையிலும் இந்தக் கணிப்பு நடைபெற்றுள்ளது.2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல், விலைவாசி உயர்வு, இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது, இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவது, சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு, அமைச்சர்கள் - அதிகாரிகள் நிலையில் காணப்படும் ஊழல் போன்ற காரணங்களால் திமுக தலைமையிலான கூட்டணியை எதிர்ப்பதாக கருத்துக்கணிப்பில் பங்கு கொண்டவர்களில் பெருவாரியானவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில் 51% பேர் ஊழலை முக்கிய பிரச்னையாகக் கருதுகின்றனர். 34% பேர் அது பெரிய பிரச்னை இல்லை என்கின்றனர்.முதல்வர் பதவிக்கு ஏற்றவர் ஜெயலலிதாவே என்று 37% பேரும் கருணாநிதியே என்று 34% பேரும் கருதுகின்றனர்.கருணாநிதியின் அரசுதான் ஊழல் மிகுந்தது என்று 39% பேரும் ஜெயலலிதாவின் அரசுதான் ஊழல் அரசு என்று 21% பேரும் கூறினர்.அலைக்கற்றை ஊழல் குறித்து தெரியும் என்று 51% பேரும், தெரியாது என்று 17% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அலைக்கற்றை ஊழலில் கருணாநிதி குடும்பத்தாருக்குத் தொடர்பு உள்ளது என்று 38% பேரும் இல்லையென்று 26% பேரும் நினைக்கின்றனர்.

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது அந்த விவகாரத்தை சரியாகக் கையாள கருணாநிதி அரசு தவறிவிட்டது என்று 41% பேரும் சரியாகத்தான் கையாண்டது என்று 25% பேரும் கருதுகின்றனர். விலைவாசி உயர்வு தங்களை பாதிக்கும் பிரச்னை என்று 59% பேரும், இது முக்கிய பிரச்னையே இல்லை என்று 29% பேரும் கருத்து தெரிவித்தனர்.

2009 மக்களவை பொதுத் தேர்தலில் நடந்த வாக்குப்பதிவு அடிப்படையில் ஹெட்லைன்ஸ் டுடே ஓஆர்ஜியின் கருத்துக் கணிப்பு முடிவு வருமாறு:2009 மக்களவை பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 37% வாக்குகள்தான் கிடைத்தன, திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு 43% வாக்குகள் கிடைத்தன.இப்போது நடைபெறவுள்ள சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 50% வாக்குகளும் 164 தொகுதிகளும் கிடைக்கும்.திமுக கூட்டணிக்கு 45% வாக்குகளும் 68 தொகுதிகளும் கிடைக்கும்.மற்றவர்களுக்கு 5% வாக்குகளும் 2 தொகுதிகளும்தான் கிடைக்கும்.

மேற்கு வங்கம்: மேற்குவங்க மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணிக்கு 44% வாக்குகளும் 182 சட்டப் பேரவைத் தொகுதிகளும் கிடைக்கும். மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணிக்கு 43% வாக்குகளும் 101 தொகுதிகளும் கிடைக்கும். மற்றவர்களுக்கு 12% வாக்குகளும் 11 தொகுதிகளும் கிடைக்கும்.கேரளம்: கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 48% வாக்குகளும் 96 தொகுதிகளும் கிடைக்கும்.மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணிக்கு 40% வாக்குகளும் 41 தொகுதிகளும்தான் கிடைக்கும். மற்றவர்களுக்கு 12% வாக்குகளும் 3 தொகுதிகளும்தான் கிடைக்கும்.

அசாம்: அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 32% வாக்குகளும் 46 தொகுதிகளும்தான் கிடைக்கும். அசாம் கண பரிஷத் கட்சிக்கு 25% வாக்குகளும் 38 தொகுதிகளும்தான் கிடைக்கும்.பாஜகவுக்கு 12% வாக்குகளும் 15 தொகுதிகளும்தான் கிடைக்கும். அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 14% வாக்குகளும் 15 தொகுதிகளும்தான் கிடைக்கும். மற்றவர்களுக்கு 16% வாக்குகளும் 12 தொகுதிகளும் கிடைக்கும். எனவே அசாமில் இழுபறி நிலைமை ஏற்படும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

அவுட்லுக் - எம்டிஆர்ஏ கணிப்பு: 2011 சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் - பாமக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று 37.4% பேரும் அதிமுக -தேமுதிக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று 54% பேரும் மற்ற கட்சிகள் ஆட்சிக்கு வரும் என்று 8.6% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

-தினமணி .

Link to comment
Share on other sites

ஏற்கனவே மதுரையில் ஒரு கருத்துக் கணிப்பு நடாத்தியதில் தினகரன் பத்திரிகை அலுவலகத்துக்கு ஏற்பட்ட கதி தினமணிக்குத் தெரியாதா? கருத்துக் கணிப்பை தினமணி நடாத்தியதா இல்லையா என்பதெல்லாம் மதுரைப் பக்கத்தில் பிரச்சினையில்லை... தினமணி பிரசுரித்திருக்கிறதல்லவா? மவனே... அருவாவை எடு!!

:mellow: :mellow:

Link to comment
Share on other sites

அதிமுக கூட்டணிக்கு வெற்றி: லயோலா கருத்துக் கணிப்பு

எதிர்வரும் 2011 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று லயோலா கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

அதிமுக ஆட்சிக்கு வரும் என்று 51.1 சதவீத வாக்காளர்களும், திமுக வுக்கு அந்த வாய்ப்பு இருப்பதாக 36.7 சதவீத வாக்காளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு தேர்தலின் போதும் லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வகம் மாநில அளவில் பொது மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிடுவது வழக்கம்.

அதன்படி, மார்ச் மாதம் 21ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரையிலும் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையில் தமிழகத்தில் உள்ள 117 சட்டமன்ற தொகுதிகளில் கள ஆய்வு நடத்தி இன்று அதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டது.

லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு முடிவுகளின் முக்கிய அம்சங்கள்:

* தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் பொது மக்கள் இன்று வாக்கு அளிப்பதாக இருந்தால் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்கப்பட்டதற்கு பதில் அளித்த வாக்காளர்கள் அதிமுக அணிக்கு 48.6 சதவீதம் பேரும், திமுக அணிக்கு 41.7 சதவீதம் பேரும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். முடிவு செய்யவில்லை என்று 8.2 சதவீதமும் பிறருக்கு வாக்களிப்பதாக 1.5 சதவீத பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

* சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் அதிமுக அணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் என்று 51.1 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இதில், அதிமுக தனித்து வெற்றி பெறும் என்று 25.9 சதவீதம் பேரும், அணியுடன் இணைந்து பெரும்பான்மை பெறும் என்று 25.2 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

* திமுக அதிக பெரும்பான்மை இடங்களை பெறும் என்று கருத்து தெரிவித்துள்ள 36.7 சதவீதம் மக்களில் திமுக தனித்து வெற்றி பெறும் என்று 16.2 சதவீதம் பேரும், அந்த அணியினரோடு இணைந்து தான் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்ற முடியும் என 20.5 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

* தொகுதி அளவிலான விவரங்களை நுணுகி ஆராய்ந்து கருத்துக் கணிப்பு நடத்தியதில் 5 சதவீதத்துக்கும் அதிக மான வாக்குகளுடன் அதிமுக அணிக்கு 105 தொகுதிகள் வரை சாதகமாக இருப்பதாகவும், திமுக அணிக்கு சாத கமாக 70 தொகுதிகள் இருப்பதாகவும் இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. மீதமுள்ள 59 தொகுதிகளில் இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

* தேர்தல் ஆணையம் பொறுப்புடனும் பாரபட்சமற்ற வகையிலும் செயல்படுவதாக 60.5 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். 24.7 சதவீதம் பேர் அந்த ஆணையம் அதிகார வரம்பை மீறி கண்டிப்புடன் செயல்படுவதாக தெரிவித்துள்ளனர்.

* திமுக மற்றும் அதிமுக அணிகளை ஒப்பிடும்போது தொகுதி பிரச்னைகளை தீர்ப்பதில் அதிமுக அணி கவனம் செலுத்தும் என்று 33.7 சதவீதம் பேரும், திமுக அணிக்கு சாதகமாக 21.9 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

* மதிமுக தேர்தலை புறக்கணித்திருப்பதாக அறிவித்திருப்பதால் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று 53.6 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அதிமுக அணிக்கு பாதிப்பு ஏற்படும் என்று 25.4 சதவீதம்பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

* அரசியல் கட்சிகளின் தேர்தல் வியூகத்தில் எந்த அணி சிறப்பாக செயல்பட்டது என்பது குறித்த கருத்துக் கணிப்பில் தேர்தல் அறிக்கையில் திமுக அணிக்கு 49.4 சதவீத ஆதரவும், அதிமுக அணிக்கு 43.5 சதவீத ஆதரவும் இருப்பதாக அந்த கருத்துக் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* சுமூகமான தொகுதி பங்கீடு, சரியான வேட்பாளர்கள் தேர்வு, உட்கட்சி பூசல்கள் இல்லாதது, சிறுபான்மையினர் ஆதரவு, டிவி பத்திரிகை விளம்பரங்கள், சுவர், சுவரொட்டி பேனர்கள், தெருமுனை கூட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள், வாக்காளர்களுடன் நேரிடை சந்திப்பு, தலைவர்களின் பிரச்சாரம் ஆகிய தேர்தல் வியூகங்களில் பெரும்பாலானவற்றில் திமுகவே முன்னிலை பெற்றிருப்பதாகவும், ஒரு சில அம்சங்களில் மட்டுமே அதிமுக அணி முன்னிலை பெற்றிருப்பதாகவும் இந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது முட்டாள் தின செய்தி இல்லை அண்ணை

மாலை மலர்..தினமலர் இணைய தளத்துக்குப் போனா நீங்கள் அங்கை வடிவா பார்க்கலாம் :):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ திருக்குவளை முத்துவேலர் கருனாநிதி அவர்கட்குக் கடைசிகாலத்திலை சென்னை மரீனா கடற்கரையில் இடம்கிடையாது கண்ணம்மாப்பேட்டைதான் என்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.