Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்காலும் சர்வதேசமும்!

Featured Replies

அண்மைக்காலங்களில் நிறையவே உள்ளூர் உலக அரசியல் மாற்றங்கள் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாததாய் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன. மீண்டுமொரு உலகளாவிய பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மக்கள் கிளர்ச்சி, சர்வாதிகார ஆட்சி கவிழ்ப்பு, ஜனநாயகத்தேர்தல்கள் என்று அநேகமான நாடுகளில் என்னென்னவோ நெருக்கடிகள். எல்லாமே ஏதோவொரு மாற்றத்தை, தீர்வை, விடிவை நோக்கிய நகர்வுகளாய் நிறையவே எதிர்பார்ப்புகளோடு. எல்லோருக்கும் எங்கேயோ இருந்து ஓர் வலுவான ஆதரவும், அதன் முடிவு நோக்கிய பயணமும் தொடர்கிறது. ஈழத்தமிழர்களுக்கும் ஓர் முக்கிய நிகழ்வாக கடந்த 2009 May மாதம் இடம்பெற்றதாக கருத்தப்படும் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான்-கி-மூன் அமைத்த மூன்று பேர் கொண்ட குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வருடம் முள்ளிவாய்க்கால் படுகொலைகளும், ஈழத்தின் இறுதியுத்த இழப்புகளும் ஐ. நாவின் பான் - கி- மூன் அமைத்த மூன்று பேர் அடங்கிய குழுவினால் தயாரிக்கப்பட்ட ஈழம் தொடர்பான அறிக்கை மூலம் நீதியைப் பெறுமா என்கிற எதிர்பார்ப்புகளோடு! இந்த குழு குறித்த புரிதல்களும், குழப்பங்களுமே ஆரம்பத்தில் விவாதத்திற்கு உள்ளாகியது. இந்தக் குழு போர்க்குற்றங்களை விசாரிக்க அமைக்கப்படவில்லை என்கிற அரிய, பெரிய உண்மையை வழக்கம் போல் இலங்கையின் இறையாண்மையை கட்டிக்காக்கும் சிங்கள ஆட்சியாளர்கள் கண்டுபிடித்து சொன்னார்கள்.

இது May 2009 ஐ. நாவின் செயலர் இலங்கைக்கு சென்றபோது ராஜபக்க்ஷேவுடன் பேசியதன் பிரகாரமே உருவாக்கப்பட்டது. மூன்று பேர் கொண்ட குழு ஈழத்தின் இறுதி யுத்தத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டனவா, மனித உரிமைகள் தொடர்பான சட்டங்கள் மீறப்பட்டனவா என்றும்; அப்படியானால், அது குறித்த இவர்களின் தீர்வுக்குரிய ஆலோசனைகளும் என்ன என்பது தான்.

முன்னாள், ஐ. நாவின் பேச்சாளர் Gordon Weiss ஓய்வுபெற்றபின் இலங்கையின் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் இலங்கை அரசு குறித்து சொன்னதை நாங்கள் மறக்கவில்லை. அறிக்கை தயாரித்து ஐ. நா. செயலரிடம் சமர்ப்பித்தாகிவ்ட்டது. இனி அவர் அதை பகிரங்கப்படுத்துவாரா என்றெல்லாம் எதிர்பார்ப்பு இருக்கிறது. மூன்று பேர் கொண்ட குழுவை எந்த காரணம் கொண்டும் இலங்கைக்குள் எந்தவொரு விசாரணை செய்யவும் அனுமதிக்கமாட்டோம்; இந்த குழு சட்டாபூர்வமானதால என்றெல்லாம் சொல்லிவிட்டு; அமெரிக்காவில் இலங்கைப் பிரதிநிதிகள் இந்த குழுவை ஐ. நாவின் அரசியல் விவகாரங்களுக்கான Lyn Pascoe வின் ஏற்பாட்டில் பான்- கி- மூன் சம்மதத்துடன் இரகசியமாக சந்தித்ததாக Sunday Times பத்திரிகை சொல்கிறது. அந்த இரசிய சந்திப்பு வெளிப்பட்டு சிரிப்பாய் சிரித்தது தனிக்கதை. இப்போ, ஐ. நா. இலங்கையிடம் சமர்ப்பித்த இந்த அறிக்கையை இலங்கை அரசு பக்கச்சார்பானது, "Fundamentally Flawed" என்றும் விமர்சிக்கிறது. இலங்கை அரசுக்கு ஆதரவான Island பத்திரிகையில் அந்த அறிக்கை குறித்த சில விடயங்கள் கசிந்திருப்பதாக தெரிகிறது. ஆனால், Island பத்திரிகையில் பகுதியாக வெளிவந்த அறிக்கைப்படி இலங்கை அரச படைகளின் குற்றங்களோடு, புலிகள் பற்றிய குற்றங்களும், ஐ. நா. மக்களை காப்பாற்ற தவறி விட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இனி அது சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு இட்டுச்செல்லுமா என்கிற எத்தனையோ கேள்விகள் இன்னும் மிச்சமிருக்கிறது.

இதற்கிடையே அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிளேக், லிபியாவின் கடாபியை கண்டித்த கையோடு இலங்கையையும் போகிற போக்கில் கண்டித்து வைத்தார். இவர் அகம், புறமாக கண்டித்ததோடு நில்லாமல் அமெரிக்காவின் 'Strategic Interest' இலங்கை என்பதை வெளிப்படையாகவே சொல்லியும் விட்டார். இதை பல பத்திரிகைகள், ஆய்வாளர்கள் விமர்சித்து தீர்த்துவிட்டார்கள். கூடவே புலத்தில் உலக தமிழர் பேரவை தலைவரையும் சந்தித்திதார், பேசினார். இலங்கை இதற்காக கோபப்பட பிறகு Island பத்திரிகையில் கொஞ்சம் சமாதானப்படுத்தவும் முயன்றிருக்கிறார். ஒரே இலங்கைக்கும் அமைதியும், சமாதானமுமான தீர்வு என்கிறார். ஒரே இலங்கை இருக்கும், தமிழர்களுக்கு அமைதியும், சமாதானமும் இருக்குமா! இன்றுவரை ஈழத்தமிழர்கள் தங்களுக்குரிய தீர்வாக தனி ஈழம் ஒன்றையே இறுதித் தீர்வாக கருதுகிறார்கள். அது எங்கேயோ காற்றில் இருந்து வருவிக்கப்பட்டதல்ல. மக்கள் ஆணையாக வழங்கப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானமே புலிகளால் Defacto State ஆக வடிவம் கொடுக்கப்பட்டது. இன்று அதுவே நாடு கடந்த தமிழீழம் ஆகவும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களால் வடிவம் மாற்றம் பெற்றிருக்கிறது. காலமும், வடிவமும் மாறினாலும் எங்கள் இலக்கு எப்போதுமே ஈழம் தான் என்பதை ஆணித்தரமாக சொல்லவேண்டிய கடமை எங்களுக்கும் உண்டு. எங்கள் காலத்தில் இல்லை என்றாலும் அடுத்த சந்ததி அந்த லட்சியத்தை தொடர வேண்டும், தமிழனுக்கு ஈழத்தில் சுதந்திரம் கிடைக்கும் வரை.

வருகிற மே மாதம் பத்தொன்பதுக்கு முன் பான்-கி-மூன் முதல் பிளேக் வரை எல்லோருமே ஏதோவொரு நிகழ்ச்சிநிரலோடு பேசுவார்கள். பான்-கி-மூனுக்கு இந்த வருட முடிவோடு பதவிக்காலம் முடிய இருக்கிறதாம். மீண்டும் பதவியில் தொடர எதையாவது சாதிக்க நினைத்து ஈழத்தமிழர்களின் படுகொலைகளுக்கு நியாயம் கிடைக்க ஏதாவது செய்வாரா? ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகிற போதிலும் இன்னும் அவர்களின் மரணத்திற்கு நீதியோ, நியாயமோ கிடைக்காத நிலையில் எல்லோருமே எதையோ செய்ய முனைவது போல் ஓர் தோற்றப்பாட்டை உருவாக்கிகொண்டிருக்கிறார்கள் என்று தான் தோன்றுகிறது.

என்னுடைய மனதில் தோன்றும் கேள்விகள் ஈழத்தில் போர் மூழ, புலிகள் அழிய அதிக ஆதரவை வழங்கிய இந்தியா, அமெரிக்காவின் நிலைப்பாடு இந்த அறிக்கை குறித்து என்னவாக இருக்கும். ராஜபக்க்ஷேவை அவரது இனவாதத்தை ஊட்டி, ஊட்டி வளர்த்தவர்கள் இந்த இருசாராரும் தானே. இனி ஈழம் குறித்த அவர்கள் அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும். ஒருவேளை போர்குற்றங்கள் குறித்த சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட்டால் இந்தியாவும் இனப்படுகொலைக்குத் துணை போனதுக்கு விசாரிக்கப்படுமா???? இந்தியா விசாரிக்கப்படுகிறதோ இல்லையோ ஈழத்தமிழினம் அழிக்கப்பட்டதில் இந்தியாவின் பங்கை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.*

நன்றி

http://lulurathi.blogspot.com/2011/04/blog-post_16.html

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய மனதில் தோன்றும் கேள்விகள் ஈழத்தில் போர் மூழ, புலிகள் அழிய அதிக ஆதரவை வழங்கிய இந்தியா, அமெரிக்காவின் நிலைப்பாடு இந்த அறிக்கை குறித்து என்னவாக இருக்கும். ராஜபக்க்ஷேவை அவரது இனவாதத்தை ஊட்டி, ஊட்டி வளர்த்தவர்கள் இந்த இருசாராரும் தானே. இனி ஈழம் குறித்த அவர்கள் அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும். ஒருவேளை போர்குற்றங்கள் குறித்த சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட்டால் இந்தியாவும் இனப்படுகொலைக்குத் துணை போனதுக்கு விசாரிக்கப்படுமா???? இந்தியா விசாரிக்கப்படுகிறதோ இல்லையோ ஈழத்தமிழினம் அழிக்கப்பட்டதில் இந்தியாவின் பங்கை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.*

கோமகன், இந்தியா கட்டாயம் விசாரிக்கப் பட வேண்டும். இல்லாதவிடத்து, இலங்கையைப் போர்க்குற்றவாளியாக்க இந்தியா ஒத்துழைக்கும் பட்சத்தில் பிரணாப் முகர்ஜி, சிவசங்கர் மேனன்,நம்பியார் ஆகியோர் தனிப்பட்ட முறையிலாவது விசாரிக்கப் படவேண்டும்.இரசாயனத் தாக்குதல் பற்றிய உண்மைகள் வெளியுலகத்துக் தெரியவேண்டும். அம்பதினாயிரம் + உயிர்கள் பறிக்கப் பட்ட உண்மையும்,அதில் இந்தியாவின் தார்மீகப் பொறுப்பின்மையும் உலகத்திற்குத் தெளிவாகத் தெரியப் படுத்தப் பட வேண்டும்.தண்டனைகளைப் பற்றி நாம் அவ்வளவு அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.ஆனால் உண்மைகள் வெளிக்கொணரப் பட வேண்டும் என்பதில் இரு கருத்துக்கு இடம் இருக்க முடியாது!!!

  • தொடங்கியவர்

கோமகன், இந்தியா கட்டாயம் விசாரிக்கப் பட வேண்டும். இல்லாதவிடத்து, இலங்கையைப் போர்க்குற்றவாளியாக்க இந்தியா ஒத்துழைக்கும் பட்சத்தில் பிரணாப் முகர்ஜி, சிவசங்கர் மேனன்,நம்பியார் ஆகியோர் தனிப்பட்ட முறையிலாவது விசாரிக்கப் படவேண்டும்.இரசாயனத் தாக்குதல் பற்றிய உண்மைகள் வெளியுலகத்துக் தெரியவேண்டும். அம்பதினாயிரம் + உயிர்கள் பறிக்கப் பட்ட உண்மையும்,அதில் இந்தியாவின் தார்மீகப் பொறுப்பின்மையும் உலகத்திற்குத் தெளிவாகத் தெரியப் படுத்தப் பட வேண்டும்.தண்டனைகளைப் பற்றி நாம் அவ்வளவு அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.ஆனால் உண்மைகள் வெளிக்கொணரப் பட வேண்டும் என்பதில் இரு கருத்துக்கு இடம் இருக்க முடியாது!!!

கருத்துப் பதிவிற்கு நன்றி புங்கையூரான்.உலகின் பூகோள அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டாலே இவர்களின் பங்கு வெளிவரும் இல்லாவிட்டால் பத்துடன் பதினொன்றாகத் தான் இருக்கும்.சந்தடி சாக்கில் நாம் ஒரு தேசிய இனம் என்றோ அல்லது எமக்கு பாரம்பரியமான நிலப்பரப்புகள் இருந்ததையோ இந்த மேதாவிகள் தமது அறிக்கையில் விபரிக்கவில்லை, பின்னால் நின்று முண்டு கொடுத்து இந்தக் கொடூரத்தை நிறைவேற்ரிய பங்காளிகளைப் பற்ரி வாயே திறக்கவில்லை இதை எப்படி சுயாதீனமான நடுநிலையான விசரணையாக எடுப்பது?

Edited by komagan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.