Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. அறிக்கைக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள ஜனாதிபதி அழைப்பு

Featured Replies

ஐ.நா. அறிக்கைக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள ஜனாதிபதி அழைப்பு

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் அலுவலகம் இன்று அறிவித்தள்ளது.

நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களுடனான சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி, எதிர்வரும் மே தினம், போர்க் குற்றங்களுக்கு எதிரான விசாரணையை நடத்த வேண்டுமென்ற சர்வதேச கோரிக்கைகளுக்கு எதிராக எமது வலிமையை வெளிப்படுத்துவதற்கான தினமாக அமைய வேண்டுமென கூறியுள்ளார்.

இவ்வளவு நாள் எமது வலிமையை நாம் வெளிப்படுத்தவில்லை. ஆனால் மே தினத்தில் நாம் எமது வலிமையை வெளிப்படுத்துவோம் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் கடைசி கட்டத்தில் போர்க் குற்றங்களும் மனிதத்தன்மைக்கு எதிரான குற்றங்களும் இடம்பெற்றதான நம்பத் தகுத்த குற்றச்சாட்டுகள் இருப்பதாக ஐ.நா. நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ள நிலையில் ஜனாதிபதி மேற்கண்ட அழைப்பை விடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கையின்படி நாட்டை பிளவுபடுத்துவதற்கு தான் அனுமதிக்காததால் சர்வதேச சமூகத்தில் ஒரு பகுதியினர் இலங்கைக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்வதுடன் பொறாமை கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் சுமத்தப்பட்ட போர்க் குற்றச்சாட்டுகள் புதியதல்ல, போருக்குத் தலைமை தாங்கியவர்கள் போர்க்குற்ற விசாரணை மன்றத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டுமென அதிகமானோர் கூறியிருந்தனர் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாட்டுக்காக மின்சார நாற்காலியில் அமர வலியுறுத்தப்பட்டாலும் நான் அதை மகிழ்ச்சியுடன் செய்வேன் எனவும் ஜனாதிபதி கூறினார்.

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/19829-2011-04-17-08-17-37.html

  • தொடங்கியவர்

மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை: அஸ்கிரிய பீடாதிபதி

உலகெங்குமுள்ள தமது நலன்களை பாதுகாப்பதற்காக யுத்தத்தில் ஈடுபட்ட ஏனைய நாடுகளைப் போல் அல்லாமல் நாட்டின் பிரஜைகளை பாதுகாப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கையையே இலங்கை மேற்கொண்டதாகவும் அந்நடவடிக்கையின்போது மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை எனவும் அஸ்கிரிய பௌத்த பீடத்தின் மகாநாயக்கரான  அதி வண. உடகம புத்தரகித்த தேரர் கூறியுள்ளார்.

பயங்கரவாத அமைப்பொன்று நாட்டு மக்களை படுகொலைசெய்யும்போது பொறுப்புள்ள அரசாங்கம் செயற்படமலிருக்க முடியாது. இவ்வன்முறைச் சக்திகளை கட்டுப்படுத்துவதற்கு ஏனைய அரசாங்கங்களைப் போலவே இலங்கை அரசாங்கமும்  நடவடிக்கை மேற்கொண்டது' என அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஆயுத படையினரும் பொலிஸாரும் நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் தமது கடமைகளை செய்துள்ளதாகவும். இம்மனிதாபிமான நடவடிக்கையின்போது அப்பாவி தமிழ் மக்களுக்கு அரசாங்கம் எவ்வித பிரச்சினையையும் ஏற்படுத்த வில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/19831-2011-04-17-10-41-48.html

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=zHSiqYMuDuM

அவனோட திமிறின் அளவை அவன் காட்டுறான்.. ஈழ தோழர்களும் நாங்கள் குரைக்கிற ஜாதியில்லடா... கடிக்கிற ஜாதி என்பதற்கேற்ப பெரிய ஆர்பாட்டத்தினை முன்னெடுக்கவேணும் ..

  • தொடங்கியவர்

ஐ.நா.வின் அறிக்கையானது கோமாளித்தனத்தின் உச்சம்: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

இலங்கைக்கு எதிரான சர்வதேச நாடுகளின் போர்க் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை, அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகளுக்கு எதிராக இவ்வாரத்தில் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

நாட்டின் சுயாதீனத் தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு சர்வதேச நாடும் ஊடுருவ இடமளிக்க முடியாது.

பான் கீ மூனின் அறிக்கை வேடிக்கையானதும் கோமாளித்தனத்தின் உச்சகட்டமாகும் என்றும் அந்த இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=31019

  • தொடங்கியவர்

ஐ.நா. அறிக்கைக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள ஜனாதிபதி அழைப்பு

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் அலுவலகம் இன்று அறிவித்தள்ளது.

நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களுடனான சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி, எதிர்வரும் மே தினம், போர்க் குற்றங்களுக்கு எதிரான விசாரணையை நடத்த வேண்டுமென்ற சர்வதேச கோரிக்கைகளுக்கு எதிராக எமது வலிமையை வெளிப்படுத்துவதற்கான தினமாக அமைய வேண்டுமென கூறியுள்ளார்.

இவ்வளவு நாள் எமது வலிமையை நாம் வெளிப்படுத்தவில்லை. ஆனால் மே தினத்தில் நாம் எமது வலிமையை வெளிப்படுத்துவோம் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் மே தின அழைப்புக்கு எதிர்ப்பு

இலங்கை போரின் இறுதி நிகழ்வுகள் குறித்து ஐநா குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக மே தின ஊர்வலங்களை பயன்படுத்த வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

தனது கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பேசும்போதே சனிக்கிழமையன்று அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

ஊடகங்களில் கசிந்த ஐநாவின் அந்த அறிக்கையின்படி இலங்கை அரசாங்கத்தின் மீது போர் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தது. ஆனால், அதனை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.

தமது அரசாங்கத்துக்கும், செயலுக்கும் பொதுமக்களின் பூரண ஆதரவு இருக்கிறது என்பதை காண்பிப்பதற்காகவே, இந்த மே தின கொண்டாட்டங்களை ஐநாவின் அறிக்கைக்கு எதிராக குவிப்பதற்கு ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்தார்.

தனது நாட்டுக்காக மின்சார நாற்காலியில் அமரவும் தான் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், தொழிலாளர் தினமான மே தினத்தை ஐ நாவின் போர் குற்ற அறிக்கையை எதிர்ப்பதற்கான தினமாக பயன்படுத்துவதை தொழிற்சங்கங்கள் எதிர்த்துள்ளன.

இலங்கை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத்தில் அங்கம் வகிப்பவரும், செங்கொடிச் சங்கம் உட்பட பல மலையக தொழிற்சங்கங்களின் மூத்த தலைவருமான ஓ. இராமையா அவர்கள, தொழிற்சங்கவாதி என்ற ரீதியில் மே தினத்தை இதற்கு பயன்படுத்துவதை தான் ஆதரிக்கவில்லை என கூறினார்.

அதேவேளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மற்றுமொரு இடதுசாரி அமைப்பான லங்கா சமசமாஜக் கட்சியின் தொழிற்சங்கமான லங்கா தொழிலாளர் சங்கத்தின் செயலாளரான ரி. எம். ஆர் . ரசூல்டீனும் ஜனாதிபதியின் இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளார். தமது சங்கங்கள் எல்லாம் அரசாங்கத்தின் தனியார் துறைக்கான பென்சன் திட்டத்தை எதிர்த்து அதனையே மே தின கோசமாகக் கொள்ளப்போவதாகவும் அவர் கூறினார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/04/110417_mahindamayday.shtml

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை: அஸ்கிரிய பீடாதிபதி

முள்ளி வாய்க்காலில் ஒரு பெரிய கிடங்கு வெட்டி அதனுள் உங்கள் புத்தரின் புனிதப்பல்லையும்,உங்கள் மனச்சாட்சியையும் சேர்த்துப் புதைத்து விட்டு, நீங்கள் பேசுவதைப் பேசுங்கள்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.