Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடையாளம் காணப்படும் போராளிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாலதி படையணி மகளிர் போராளி அஜந்தி அவர்கள் இனம் காண பட்டுள்ளார் .

Friday, April 29, 2011, 11:29

உலகம், சிறீலங்கா, தமிழீழம்

.வன்னியில் இறுதிப்போரில் வீரச்சாவடைந்த மற்றும் சிறீலங்கா படையினரால் கைதாகிப் படுகொலை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்கள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

எமது (www.tamilthai.com) இணையத்தளம் ஊடாக நூற்றுக்கும் மேற்பட்ட போராளிகளின் நிழற்படங்கள் வெளியிட்டு இருந்தோம் பின்புலத்தில், போராளிகளையும், பொதுமக்களையும் அவர்களின் உறவினர்கள் அடையாளம் காட்டி வருகின்றனர்.

தமிழீழ விடுதலை புலிகளின் மாலதி படையணியை சேர்ந்த மகளிர் போராளி அஜந்தி அவர்களை அவரது சகோதரி அடையாளம் காட்டியுள்ளார் .சில தினங்களிற்கு முன்னர் தமிழ் தாய் இணையத்தினால் வெளியிட பட்ட நூற்றி நாப்பது நிழல் படங்களை அடுத்து அதில் உள்ளபோராளிகள் படிப்படியாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர் .அந்தவகையில் இன்று இவரது சகோதரி இவரை அடையாளம் காட்டியுள்ளார் .இவர்களின் உறவுகள் பாதுகாப்பு கருதி அவர்களிற்கு இந்த அடையாளம் காட்டுதலின் பின் எதிரியானவனால்அச்சுறுத்தல் வரும் என்கின்ற நிலையில் இவரது பெயர் விபரங்களை அச்சத்தின் பிரகாரம் வெளியிட தணிக்கை செய்ய பட்டுள்ளது .

எம்முடன் தொடர்புகளை ஏற்படுத்தி கண்ணீர் மல்க அவர் உரையாடியதன் காரணத்தினால் அவரினால் தொடர்ந்து உரையாட முடியவில்லை . ஆயினும் பல்வேறு பட்ட தகவல்களை அவர் நமக்கு வழங்கியுள்ளார் .

மாலதி படையணி மகளிர் போராளி அஜந்தி அவர்களின் சகோதரி தமிழ்த்தாய் இணையத்துக்கு வழங்கிய செவ்வி .

http://www.youtube.com/watch?v=v_VIktPbD7M&feature=player_embedded

tamilthai.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊடறுப்பு தாக்குதல் மேற்கொண்ட தளபதி கேணல் கஜன் அவர்கள் இனம் காண பட்டுள்ளார்

Friday, April 29, 2011, 11:15

உலகம், சிறீலங்கா, தமிழீழம்

கட்டளை தளபதிகளில் ஒருவரான கேணல் கஜன் அவர்கள் இனம் காண பட்டுள்ளார் .வன்னியில் இறுதிப்போரில் வீரச்சாவடைந்த மற்றும் சிறீலங்கா படையினரால் கைதாகிப் படுகொலை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்கள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

எமது (www.tamilthai.com) இணையத்தளம் ஊடாக நூற்றுக்கும் மேற்பட்ட போராளிகளின் நிழற்படங்கள் வெளியிட்டு இருந்தோம் பின்புலத்தில், போராளிகளையும், பொதுமக்களையும் அவர்களின் உறவினர்கள் அடையாளம் காட்டி வருகின்றனர்.

கேணல் கஜன் என அழைக்கப்படும் சோதிராஜ் விமலவர்ணன் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் 1989 ஆம் ஆண்டு இயக்கத்தில் இணைத்து முன்னால் யாழ் மாவட்ட தாக்குதல் படை பிரிவு தளபதியாகவும் , கிட்டு பிரங்கி படை அணி துணை தளபதியாகவும், மட்டகளப்பு துணை கட்டளை தளபதியாகவும் அதன் பின்பு இறுதி நேரத்தில் தாக்குதல் தளபதியாகவும் விசேட தளபதியாகவும் பணியாற்றி. முள்ளிவாய்க்கல் முள்ளியவளை பகுதியில் தாக்குதல் தளபததியாக பணியாற்றி சிங்கள முற்றுகையை உடைத்து வெளியேறும் போது 17 .05 .2009 ம் ஆண்டு வீரகாவியம் ஆனார் .

கட்டளை தளபதி கஜன் அவர்களின் சகோதரர் வண்ணன் அவர்கள் தமிழ்த்தாய் இணையத்துக்கு வழங்கிய செவ்வி .

http://www.youtube.com/watch?v=YAAxLZgiFDg&feature=player_embedded

www.tamilthai.com

  • கருத்துக்கள உறவுகள்
:mellow: மே 17 இல் சிங்களத்தின் முற்றுகையை உடைத்துக்கொண்டு வெளியேறியது யார்?? அப்படி வெளியேறியவர்கள் எங்கே இருக்கிறார்கள்??

:mellow: மே 17 இல் சிங்களத்தின் முற்றுகையை உடைத்துக்கொண்டு வெளியேறியது யார்?? அப்படி வெளியேறியவர்கள் எங்கே இருக்கிறார்கள்??

may 16ம்17ம் கடும் முயற்சி நடைபெற்றது அதை வைத்து இனி கதைகள் வெளிவரும்.

ஆனால் 2 முயற்சியும் வெற்றி அளிக்கவில்லை என்பதை உண்மையோ பொய்யோ தெரியவில்லை.

:mellow: மே 17 இல் சிங்களத்தின் முற்றுகையை உடைத்துக்கொண்டு வெளியேறியது யார்?? அப்படி வெளியேறியவர்கள் எங்கே இருக்கிறார்கள்??

முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து படகுகள் மூலம் நந்திக்கடலைக் கடப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் படையினரின் தாக்குதல்களில் சிக்கி பல படகுகள் மூழ்கிப் போக கேப்பாப்புலவு - வற்றாப்பளைக்கு இடைப்பட்ட பகுதியைச் சில படகுகள் சென்றடைந்தன. இவ்வாறான ஒரு தரையிறக்கத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த படையினர் கடுமையான தாக்குதலை தரையிறங்கிய போராளிகள் மீது நடத்தினர். சுமார் 70ற்கும் மேற்பட்ட போராளிகள் இந்தத் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். (இது படைத்தரப்பு அப்போது வெளியிடப்பட்ட தகவல்கள்).

Edited by மின்னல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருமலைமாவட்ட அரசியல் பிரிவு முன்னால் தலைவர் திலக் அடையலாம் காணப்பட்டுள்ளார்

Saturday, April 30, 2011, 5:01

சிறீலங்கா, தமிழீழம்

வன்னியில் இறுதிப்போரில் வீரச்சாவடைந்த மற்றும் சிறீலங்கா படையினரால் கைதாகிப் படுகொலை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்கள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். எமது (www.tamilthai.com) இணையத்தளம் ஊடாக நூற்றுக்கும் மேற்பட்ட போராளிகளின் நிழற்படங்கள் வெளியிட்டு இருந்தோம் பின்புலத்தில், போராளிகளையும், பொதுமக்களையும் அவர்களின் உறவினர்கள் அடையாளம் காட்டி வருகின்றனர்.

வன்னியில் இடம்பெற்ற போரில் சிறீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் பலரை சிறீலங்கா இராணுவ அதிகாரிகள் பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவுக்கமைவாக கொடூரமாக படுகொலை செய்துள்ளனர். கேணல் ரமேஸ் இன் படுகொலை தொடர்பான ஆதாரங்கள் வெளிவந்துள்ள நிலையில், தற்போது விடுதலைப்புலிகளின் பொருளியல் ஆலோசனை நிலையத்தின் பணிப்பாளர் திரு சிவலிங்கம் சுகுணன் (திலக்) என்பவரையும் சிறீலங்கா இராணுவம் படுகொலை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.

அரச சார்பற்ற நிறுவனமாக சிறீலங்காவில் பதிவுசெய்யப்பட்டிருந்த இந்த நிறுவனத்தில் பணியாற்றிய திலக் விடுதலைப்புலிகளின் முன்னாள் திருமலைமாவட்ட அரசியல் பிரிவுத் தலைவருமாவார். பொருளியல் ஆலோசனை அமைப்பில் பணியாற்றிய உறுப்பினர் ஒருவரே திலக்கின் சடலத்தை அடையாளம் காண்பித்துள்ளார். சடலத்தின் புகைப்படம் சிறீலங்கா இராணுவத்தினரால் எடுக்கப்பட்டது.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் காலை 6.15 மணியளவில் தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட திலக், தான் சாராதரண உடையில் சிறீலங்கா இராணுவத்தினரிடம் சரணடையவுள்ளதாக தெரிவித்திருந்தார். சரணடைந்த அவரை சிறீலங்கா இராணுவத்தினர் கோரமாக அடித்துப்படுகொலை செய்துள்ளனர்.

சிறீலங்கா இராணுவத்தின் தடுப்பு முகாமில் இருந்து தப்பிய திலக்கின் முன்னாள் உதவியாளர் ஒருவர் முகாமில் தடுத்துவைக்கப்;பட்டிருந்த முக்கிய நபர்கள் மற்றும் சிறீலங்கா இராணுவத்தினரின் இனஅழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் மேலதிக தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் காலம்சென்ற பேராசிரியர் துரைராஜாவின் ஆலோசனையின் அடிப்படையில் தான் பொருளியல் ஆலோசனை இல்லம் ஆரம்பிக்கப்பட்டது. கேயர், போரம் போன்ற அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றிய இந்த நிறுவனம் வடக்கு கிழக்கு மக்களின் அபிவிருத்தியில் பெரும் பங்கு வகித்திருந்தது.

அதன் பணிப்பாளராக கடமையாற்றிய சுகுணன் ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் நோர்வே ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.

tamilthai.com

Edited by நிழலி
தலைப்பு திருத்தப்பட்டுள்ளது

Emerging evidence on Sri Lanka military targeting civilian leadership of Eezham Tamil development organizations at the end of Vanni war further reinforces the credible allegation that Sri Lanka's war crimes and crimes against humanity had genocidal intentions. C. Sivalingam Suhunan, alias Thilak, the executive director of TECH (The Economic Consultancy House), the flagship development NGO of the de-facto state of Tamil Eelam and a registered NGO in Sri Lanka, was one of the victims, according to a Senior official of TECH, who has identified Thilak's body in a recently leaked photograph taken by Sri Lankan soldiers. Mr. Suhunan had phoned his family last on 18 May, 2009 at 6:15 a.m. local time, informing that he was among a group of persons in civil clothes, going into Sri Lanka Army (SLA) controlled territory in Mullaiththeevu.

A former associate of Mr. Suhunan who escaped from the SLA-run internment camp, alleged that Sri Lankan military identified capable people among the captives and civilians, isolated them for extermination as part of the continued genocidal agenda, after committing serious war crimes on the former LTTE members.

Mr. Suhunan was earlier the Trincomalee Political Head of the LTTE.

TECH was the brain child of late Professor Thurairajah, Vice Chancellor of Jaffna University (1988-1994), and evolved into a formidable research and development facility during the CFA period. TECH worked with international NGOs including CARE and FORUT, and ws mandated to carry out projects that promote creation of income generating small scale enterprises to help economically disadvantaged section of the NorthEast population.

Suhunan took over the leadership at TECH in the latter part of 2003 and was instrumental in obtaining diaspora support for several agricultural and poultry farming projects for economic upliftment of the low-income strata of the population.

During the ceasefire, Mr. Suhunan, visited Germany, France and Norway for discussions with government and non-government development agencies in Europe.

www.tamilnet.com/

  • கருத்துக்கள உறவுகள்
:( ஆக எவருமே தப்பவில்லை என்பதுதானே உண்மை??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.