Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களுடன் அமெரிக்கத் தூதுவர் இரகசிய சந்திப்பு !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களுடன் அமெரிக்கத் தூதுவர் இரகசிய சந்திப்பு !

சனி, 30 ஏப்ரல் 2011 09:55

ஐ.நாவின் நிபுணர்குழு அறிக்கை தொடர்பாக கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் அமெரிக்கத் தூதுவர் இரகசியமான முறையில் ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சந்திப்பு நேற்றுமுன்தினம் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புற்ரெனிசின் அதிகாரபூர்வ வதிவிடத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால் இச்சந்திப்பு இடம்பெற்றது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரகம் உறுதிப்படுத்துவோ மறுக்கவோ இல்லை.

அத்துடன் அமெரிக்கத் தூதுவரின் சந்திப்புகள் அல்லது அதில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் என்பன கொள்கை சார்ந்தவை என்பதனால் அதுபற்றி கருத்து வெளியிட முடியாது என்று அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் தூதுவர் பற்றிசியா புற்ரெனிசின் அழைப்பின் பேரிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெஹான் பெரேரா உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தியா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், நெதர்லாந்து, பிரான்ஸ், கனடா, அவுஸ்ரேலியா, ஐ.நா, ஜப்பான், நோர்வே, தென்னாபிரிக்கா, தென்கொரியா, சுவிற்சர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளின் முக்கிய தூதுவர்கள் இந்த இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர். அத்துடன் உள்ளூர் அரச்சார்பற்ற நிறுவனங்கள் சிலவற்றின் முக்கிய பிரமுகர்களும் இந்தச் சந்திப்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பாகவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இந்த அறிக்கையை எவ்வாறு ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது பற்றியும் இதில் கலந்துரையாடப்பட்டதாகவும் ஜெகான் பெரேரா தெரிவித்தார்.

வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, செரின் சேவியர், வெலியமுன, சுதர்சன குணவர்த்தன, சுனிலா அபேசேகர ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

tamilenn

இது நிச்சயமாக ஒரு இரகசிய சந்திப்பு அல்ல. பீரிசின் சந்திப்புக்கு பின்னர் நடாத்தப்பட்ட இந்த நிகழ்வு சிங்களத்துடன் பல நாடுகள் உடன்படவில்லை என எண்ணவைக்கின்றது. ஆனால் கதைக்கப்பட்ட விடயங்கள் இரகசியமாக, அதுவும் அரசசார்பு அற்ற நிறுவனங்கள் இல்லாமல் அளவளாவப்பட்டு இருக்கலாம்.

இல்ல இந்தியாவின் நிலைப்பாட்டை அறிய நிகழ்த்தப்பட்டு இருக்கலாம். பிளேக்கிடம் இந்தியா உட்பட நாடுகளின் நிலைமையை விளக்கப்படும். அதேவேளை அமெரிக்காவின் நிலைப்பாடு சொல்லப்பட்டு இருக்கும்.

இது நிச்சயமாக ஒரு இரகசிய சந்திப்பு அல்ல. பீரிசின் சந்திப்புக்கு பின்னர் நடாத்தப்பட்ட இந்த நிகழ்வு சிங்களத்துடன் பல நாடுகள் உடன்படவில்லை என எண்ணவைக்கின்றது. ஆனால் கதைக்கப்பட்ட விடயங்கள் இரகசியமாக, அதுவும் அரசசார்பு அற்ற நிறுவனங்கள் இல்லாமல் அளவளாவப்பட்டு இருக்கலாம்.

இல்ல இந்தியாவின் நிலைப்பாட்டை அறிய நிகழ்த்தப்பட்டு இருக்கலாம். பிளேக்கிடம் இந்தியா உட்பட நாடுகளின் நிலைமையை விளக்கப்படும். அதேவேளை அமெரிக்காவின் நிலைப்பாடு சொல்லப்பட்டு இருக்கும்.

ஐக்கிய நாட்டிற்கன அமெரிக்க வதிவிட பிரதி நிதி சுசான் ரைஸ் நேற்று முந்தினம் கூறிய கருத்துக்களை பார்த்டிருப்பீர்கள். அதில் அவசரப்பட்டு இந்தியா முடிவெடுக்காமல் ஆறுதலாக ஆழமாக அறிக்கையினை ஆராய்வதனை அமெரிக்கா வரவேற்பதாக கூறி இருந்தார். இது இலங்கைக்கு சார்பாக அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம் என கூறுவதாகவே பார்க்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இராஜதந்திர புன்னகைக்குப் பின்னால் - அமெரிக்காவின் அதிரடித் திட்டம்...

April 30, 2011, 12:28 pm[views: 1063]

சிறிலங்காவுக்கு எதிரான ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பாக கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் முக்கியமான அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் அமெரிக்கத் தூதுவர் இரகசியமான முறையில் ஆலோசனை நடத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புற்ரெனிசின் அதிகாரபூர்வ வதிவிடத்தில் இந்தச் சந்திப்பு நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்கத் தூதுவர் பற்றிசியா புற்ரெனிசின் அழைப்பின் பேரிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், நெதர்லாந்து, பிரான்ஸ், கனடா, அவுஸ்ரேலியா, ஐ.நா, ஜப்பான், நோர்வே, தென்னாபிரிக்கா, தென்கொரியா, சுவிற்சர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளின் முக்கிய இராஜதந்திரிகள் இந்த இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

அத்துடன் உள்ளூர் அரச்சார்பற்ற நிறுவனங்கள் சிலவற்றின் முக்கிய பிரமுகர்களும் இந்தச் சந்திப்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

எனினும், இந்தச் சந்திப்பு தொடர்பாக தகவலை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரகம் உறுதிப்படுத்துவோ மறுக்கவோ இல்லை.

அமெரிக்கத் தூதுவரின் சந்திப்புகள் அல்லது அதில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் என்பன கொள்கை சார்ந்தவை என்பதால் அதுபற்றி கருத்து வெளியிட முடியாது என்று அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெகான் பெரேரா, இந்தச் சந்திப்பு இடம்பெற்றதை உறுதிப்படுத்தியுள்ளதுடன், அமெரிக்கத் தூதுவரின் அழைப்பின் பேரிலேயே அதில் தான் பங்கேற்றதாகவும் கூறியுள்ளார்.

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பாகவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இந்த அறிக்கையை எவ்வாறு ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது பற்றியும் இதில் கலந்துரையாடப்பட்டதாகவும் ஜெகான் பெரேரா தெரிவித்தார்.

வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, செரின் சேவியர், வெலியமுன, சுதர்சன குணவர்த்தன, சுனிலா அபேசேகர ஆகியோரும். இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

http://www.paristamil.com/tamilnews/news_detail.php?id=10270&v=1063

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.