Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழருடன் அதிகாரப் பகிர்வுக்கு அரசாங்கம் இணக்கம்! அடுத்த சுற்றில் ஆராய்ந்து இறுதி முடிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருடன் அதிகாரப் பகிர்வுக்கு அரசாங்கம் இணக்கம்! அடுத்த சுற்றில் ஆராய்ந்து இறுதி முடிவு

[ பிரசுரித்த திகதி : 2011-04-30 08:09:22 AM GMT ]

அரசாங்கம் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற பேச்சுக்களில் தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள அரசு இணங்கி உள்ளது. எந்தெந்த அதிகாரங்களை, எந்த அளவில் எப்படிப் பகிர்ந்து கொள்வது என்று அடுத்தடுத்த அரசியல் பேச்சுக்களில் ஆராய்வது என்றும் இரு தரப்புகளும் முடிவு செய்துள்ளன.

அதிகாரங்களைப் பகிரும் போது மத்திய, மாநில அல்லது மாகாண அரசுகளுக்கு இடையில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் பொதுப்பட்டியல் இருக்கக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு இடையிலான ஐந்தாம் கட்ட சந்திப்பு நேற்று மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்றது.

அரச குழுவில் அமைச்சர்களான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நிமால் சிறிபால டி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க ஆகியோரும் குழுவின் செயலாளர் சஜின்வாஸ் குணவர்த்தனவும் கலந்துகொண்டனர். அரச குழுவில் இடம்பெற்றிருந்த மூத்த அமைச்சரும் முன்னாள் பிரதமருமான ரட்ணசிறி விக்கிரமநாயக்கவுக்குப் பதிலாக ரஜீவ விஜேசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கூட்டமைப்பின் தரப்பில் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், சிரேஷ்ட சட்டத்தரணி கனகேஸ்வரன் ஆகியோர் பங்குபற்றினர். குழுவினரான நாடாளுமன்ற உறுப் பினர் மாவை சேனாதிராசா பேச்சில் கலந்துகொள்ளவில்லை.

இந்தப் பேச்சுக் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தமை வருமாறு:

நேற்றைய பேச்சில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அதிகாரப் பகிர்வு குறித்து முக்கியமாக ஆராயப்பட்டது. அதிகாரப் பகிர்வு எந்த வகையில் அமைய வேண்டும் என்ற அடிப்படை வரைவு ஒன்று பற்றிப் பேசப்பட்டது. (Frame Work) பேச்சுக்களின் போது தமிழர்களுடன் அதிகாரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்பதை அரச தரப்புப் பிரதி நிதிகள் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டனர்.

அதிகாரங்களைப் பகிரும் போது மத்திய அரசுக்கான அதிகாரப் பட்டியல் மற்றும் மாநில அரசுக்கான அதிகாரப் பட்டியல் என்ற இரண்டு மட்டுமே இருந்தால் போதுமானது என்று நாம் வலியுறுத்தினோம். இரண்டு அரசுகளுக்கும் பொதுவான அதிகாரங்களைக் கொண்ட பட்டியல் ஒன்று தேவையில்லை என்ற எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினோம்.

ஆனால் மத்திய, மாகாண அல்லது மாநில அரசுக்களுக்கு இடையில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் பொதுப் பட்டியலை அடியோடு நிராகரிக்க முடியாது என்று அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்படியானால் அந்தப் பட்டியலில் அதிக அதிகாரங்களைச் சேர்த்துக் கொள்ளாமல் ஒரு சிலவற்றை மட்டும் சேர்த்துக் கொண்டால் போதுமானது என்று தெரிவித்துள்ளோம்.

அதற்கும் அரசு கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்தது. அடுத்த கட்டப் பேச்சுக்களில் அதிகாரப்பகிர்வு தொடர்பாக ஆராய்ந்து இறுதி முடிவு எடுப்பது என நேற்றைய பேச்சில் இணக்கம் எட்டப்பட்டது.

அதேவேளை, சரணடைந்து கைது செய்யப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்களின் விவரங்களை எதிர்வரும் 12ம் திகதிக்கு முன் அவர்களது பெற்றோர், உறவினர்கள் வவுனியாவில் பார்வையிட ஏற்பாடு செய்வதாக அரச தரப்பு மீண்டும் தெரிவித்தது. அதற்கு முன்னதாக பத்திரிகைகள் மூலம் எப்போது பட்டியலைப் பார்வையிடலாம் என அறிவிப்பதாகவும் அரசதரப்புப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 850 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்றும் அரச தரப்பிடம் வலியுறுத்தியுள்ளோம்.

சம்பூர், வலி.வடக்கு பகுதிகளில் அந்தப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட மக்கள் மீள்குடியமர்த்தப்பட வேண்டும். என்று கோரினோம் என்றார்.

அடுத்த கட்டப் பேச்சு எதிர்வரும் 12ம் திகதி இடம்பெறும்.

http://www.tamilulakam.com/news/view.php?id=25559

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிந்தித்து செயற்பட வேண்டிய காலகட்டம் இது

போர்க்குற்ற விசாரணையில் இருந்து சிங்களவன் தப்பிக்க முயற்சிக்கின்றான் என்பதுதான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய பேச்சில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அதிகாரப் பகிர்வு குறித்து முக்கியமாக ஆராயப்பட்டது. அதிகாரப் பகிர்வு எந்த வகையில் அமைய வேண்டும் என்ற அடிப்படை வரைவு ஒன்று பற்றிப் பேசப்பட்டது. (Frame Work) பேச்சுக்களின் போது தமிழர்களுடன் அதிகாரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்பதை அரச தரப்புப் பிரதி நிதிகள் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டனர்.

அதிகாரங்களைப் பகிரும் போது மத்திய அரசுக்கான அதிகாரப் பட்டியல் மற்றும் மாநில அரசுக்கான அதிகாரப் பட்டியல் என்ற இரண்டு மட்டுமே இருந்தால் போதுமானது என்று நாம் வலியுறுத்தினோம். இரண்டு அரசுகளுக்கும் பொதுவான அதிகாரங்களைக் கொண்ட பட்டியல் ஒன்று தேவையில்லை என்ற எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினோம்.

ஆனால் மத்திய, மாகாண அல்லது மாநில அரசுக்களுக்கு இடையில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் பொதுப் பட்டியலை அடியோடு நிராகரிக்க முடியாது என்று அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தூரப் பார்வையில்லாமல் செயல் படுகின்றது.

தந்தை செல்வா காலத்திலிருந்தே இது தான் பிரச்சனையே.

சிங்களம் தங்கள் நோக்கம் நிறைவேறும் வரையும், இவர்களுக்கும், உலகத்திற்கும் நிலாக் காட்டும்!

இவர்களும் நிலாவை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்க வேண்டியது தான்.

எத்தனையோ தடவைகள், சிங்களத்தின் கழுத்தில் கயிறு இறுகும்போது, தமிழ் தேசிய அமைப்பும், இந்தியாவும் ஏதோ ஒரு வழியில் தலையிட்டு சிங்களத்தைப் பிணையில் எடுத்து விடும்!

நாங்கள் கேட்கப் போனால்,இது ராஜதந்திரமாம்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.