Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்துக்காக என் குரல் ஒலிக்கும் -கனடாவின் முதல் தமிழ் எம்.பி - குமுதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். ஐ.நா. அறிக்கை தந்த நம்பிக்கையைத் தொடர்ந்து ஒரு வெற்றிச் செய்தி!

50824580.jpg

சமீபத்தில் நடந்து முடிந்த கனடா நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இலங்கைத் தமிழரான ராதிகா வெற்றிபெற்றுள்ளார். இருபத்தொன்பதே வயதான ராதிகா,கனடா பாராளுமன்ற எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டிக்கும் முதல் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. ராதிகாவைச் சந்தித்தோம்.

நீங்கள் கனடாவுக்கு வந்தது இனக் கலவரத்துக்கு முன்பா, பின்பா?

”யாழ்ப்பாணம் அருகே ஒரு குட்டிக் கிராமம் எங்களுடையது. 1983 இனக் கலவரத்துக்குப் பின்னரான குழப்பமான,நம்பிக்கையற்ற சூழலில் அங்கிருந்து தப்பி வந்த குடும்பத்தினர் நாங்கள். எனது ஐந்தாவது வயதில் மூன்று சகோதரிகளுடன் என் பெற்றோர் கனடாவுக்குக் குடிபெயர்ந்தனர்.’’

நீங்கள் எப்படி அரசியலுக்கு வந்தீர்கள்?

”ஆரம்பப் பள்ளியில்

கற்கும்போதே பிறருக்கு உதவுதலும் சமூகப் பொறுப்பும்; நடனம், நாடகம் போன்ற கலை சார்ந்த விடயங்களில் அக்கறையும் எனக்கு இருந்தது. வானவில் குழுவினரின் நாடகங்களில் நடித்ததன் மூலம் இளைய தாரகையாக மக்கள் மனங்களில் இடம் கிடைத்தது.பல்கலைக்கழக நாட்களில் மாணவர் சங்கங்களில் பொறுப்பான பதவிகளை வகித்ததன் மூலம் தமிழரல்லாத சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களிடையேயும் எனக்கு நன்மதிப்பு இருந்தது. தொழிற்சங்க நடவடிக்கைகள், பெண்களின் நலம் பற்றிய அக்கறை போன்ற செயற்பாடுகள் தொடர்ந்ததும் அரசியல் ஈடுபாட்டுக்கான உத்வேகத்தை வளர்த்தன.’’

வெற்றிபெறுவீர்கள் என்ற நம்பிக்கை முதலிலேயே இருந்ததா?

”ஸ்காபரோ ரூஜ் றிவர் தொகுதி கால் நூற்றாண்டாகவே என்னை எதிர்த்து நின்ற லிபரல் கட்சியின் கோட்டையாக விளங்கி வரும் தொகுதி. சுமார் 13000 தமிழ் வாக்காளர்களைக் கொண்ட இத் தொகுதியில் எல்லாத் தமிழரது வாக்குகளும் கிடைத்து, அதே வேளை வழமையான வேற்றின மக்களின் வாக்குகளும் கிடைத்தால் வெற்றியை எட்ட வாய்ப்புண்டு என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. தமிழர்களின் ஒற்றுமையான, அயராத உழைப்பின் பலனாக 18886 வாக்குகளைப் பெற்று, சுமார் 5000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றேன்.’’

உங்கள் வெற்றிச் செய்தியாக நீங்கள் சொல்ல விரும்புவது?

‘‘ஈழத்தமிழ் உறவுகளின் விடிவிற்காக, எதிர்காலத்தில் எங்கள் கட்சி உரத்துக் குரல் கொடுக்கும் வகையில் கட்சிக்கு அழுத்தம் கொடுப்பேன். கனடாவில் தமிழ் இனத்தின் விடிவுக்கான குரலாக,கனடிய பாராளுமன்றத்தில் என்றும் என் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.’’

-கனடாவிலிருந்து செல்வம் அருளானந்தம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.