Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனப்படுகொலை நாளிலிருந்து எதிர்காலத்தை நோக்கி ஒன்றிணைவோம் : புதியதிசைகள்

Featured Replies

social.jpg

அறுபது நீண்ட ஆண்டுகள், தமிழ் பேசும் சிறுபான்மையினர், இடைவெளியின்றிச் சூறையாடப்பட்டிருக்கின்றனர். வேறுபாடின்றி தெருவோரத்தில் கொன்று போடப்பட்டிருக்கின்றனர்;. அவர்கள் காணி நிலம், வீட்டு முற்றம், தெருக்கோடி எல்லாமே பேரினவாதப் புற்று நோய்க் கிருமிகளால் சிறுகச் சிறுக அரிக்கப்பட்டு அதன் உச்ச பட்ச வடிவமாக வன்னி நிலம் முழுவதுமே அபகரிக்கப்படும் அபாயத்துடன் கூடவே தமிழர் பகுதிகள்; மறுபடி மறுபடி அவலங்களின் பூமியாக மாற்றப்பட்டு விட்டது.

வட கிழக்கு பௌத்த சிங்கள மயமாவதற்குக் கூட இலங்கை அரசின் தமிழ் உளவாளிகளும் அரசின் புலம் பெயர் நீட்சிகளும் நியாயம் சொல்கின்றன. நாளாந்த உணவிற்காக, தமது குழந்தை செத்துப் போகாமல் வளர்வதற்காக அநாகரிகமான இராணுவத்திற்கு உடலை விற்கும் தமிழ்ப் பெண்களின் சோக வரலாறுகள் நெஞ்சைப் பிழிகின்றன. இரண்டு வருடங்கள் வெற்றுச் சுலோகங்களோடு கடந்துபோயின. அரச உளவாளிகள் புற்று நோய் போல புலம் பெயர் நாடுகளின் ஒவ்வொரு அங்கங்களுக்குள்ளும் தம்மைச் செருகிக் கொண்டுள்ளனர்.

இப்போது மறுபடி ஒன்றிணைவோம் என்கிறார்கள்.

இவர்களை நோக்கி மக்கள் மீது பற்றுள்ளவர்களின் கேள்வி ஒன்று தான் ‘எதற்காக ஒன்றிணைகிறோம்’? வன்னிப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட வேளையில் இலட்சோப இலட்சமாய் ஐரோப்பியத் தெருக்களில் ஒன்றிணைந்தும் ஏன் இனப்படுகொலையை நிறுத்த முடியவில்லை? மூன்று லட்சம் பொது மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டு, சிறுகச் சிறுக அழிக்கப்பட்ட போது ஏன் ஒன்றிணைவு மட்டும் பலனளிக்கவில்லை? இன்றும் சூறையாடப்படும் வட-கிழக்கு மக்களின் அவலத்தை ஏன் நிறுத்த முடியவில்லை, குறைந்த பட்சம் அவர்களின் குரல் உலகிற்குக் கேட்கும் வண்ணம் எம்மை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை?

எமது மக்களின் நலன்களை முன்னிறுத்தி ஒன்றிணைவோம்!

எமது ஒவ்வொரு நகர்வையும் நிதானமாக முன்வைப்போம். ஏமாற்றியவர்களை முற்றாக நிராகரிப்போம்!

இன்று வரை ஒடுக்கும் அரசுகளோடும், சந்தர்ப்ப வாத அரசியல் வாதிகளோடும் தான் ஒன்றிணைந்திருக்கிறோம். நண்பர்களுக்குப் பதிலாக எதிரிகள் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம். நியாயமான எமது போராட்டம் ஆயிரமாயிரம் மக்கள் அழிவில் முள்ளிவாய்க்காலில் கரைந்துபோன போது இவர்களில் யாருமே எம்மைத் திரும்பிப்பார்த்ததில்லை.

இப்போது என்ன செய்யலாம்?

1. இனப்படுகொலையின் இலங்கை அரசு தண்டிக்கப்பட வேண்டும்

2. இனச்சுத்திகரிப்பு நிறுத்தப்பட வேண்டும்

3. மீள் குடியேற்றம் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்

4. காணாமற் போனோரின் தகவல்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்

5. வடக்கிழக்கில் இராணுவ ஆட்சி நீக்கப்பட வேண்டும்

6. சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்

இரவோடிரவாக மக்களைக் கொன்றொழித்த கொலைகாரர்களிடமிருந்து இவற்றைக் கேட்டுப் பெற்றுக்கொள்ள முடியாது. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அறிக்கை இலங்கை அரசின் கொலைகளை உத்தியோக பூர்வமாக வெளிக்கொண்டு வந்திருக்கிறது. இலங்கை அரசுக்கு எதிரான உலகம் தழுவிய கருத்தை உருவாக்க இதனைப் பயன்படுத்திகொள்வோம். உலகமெங்கும் பரந்திருக்கும் மனிதாபிமானிகளும், ஜனநாயக வாதிகளும், முற்போக்கு சக்திகளும் எமது போராட்டத்தை, எமது மக்கள் மீதான ஒடுக்குமுறையைத் திரும்பிப்பார்க்க வேண்டும். அவர்களுக்கெல்லாம் நமது மக்கள் அழிகப்படுவதையும் நமது போராட்டம் அதற்கு எதிரான போராட்டம் எனபதையும் தெளிவுபடுத்த வேண்டும். உலகப் பொது கருத்தை ஏற்படுத்த ஒவ்வொரு அசைவையும் நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஒடுக்கும் கறைபடிந்த அரச அதிகாரங்களோடு கைகோர்த்துக்கொண்டு அவர்களை நாம் வென்றெடுக்க முடியாது. போர்க்குற்றங்களைச் சுமந்துகொண்டு அதனை முன்னெடுக்க முடியாது. எமது போராட்ட அரசியல் என்பது இன்று சிலர் கருதுவது போல பழைய மொந்தையில் புதிய கள்ளாக இல்லாது புதிய வழிமுறையானது என்பதையும் உலகிற்கு உணர்த்துவோம். எமது போராட்டத்தின் உண்மையான நண்பர்களிடம் இதை எடுத்துச் செல்வதன் மூலமே எமது போராட்டங்களை வெற்றிகரமானவையாக மாற்றியமைக்க முடியும்.

நாமும் ஜனநாயக வாதிகளதும் முற்போக்கு சக்திகளினதும் பக்கம் தான் என்பதை அவர்களுக்குக் கூறவும், இலங்கை அரசின் போர்க்குற்றங்களை வெளிப்படுத்தவும் இன்னொரு சந்தர்ப்பமாக போர்க்குற்ற நாளைப் பயன்படுத்திக்கொள்வோம்.இலங்கை அரசின் போர்க்குற்றங்களை வெளிப்படுத்தவும் இன்னொரு சந்தர்ப்பமாக போர்க்குற்ற நாளைப் பயன்படுத்திக்கொள்வோம்.

இத்தோடு இணைக்கப்பட்டிருக்கும் ஆங்கிலப் பிரசுரத்தை பிரித்தானியாவில் வாழ்கின்ற ஏனைய சமூகம் சார்ந்தவர்களுக்கு வழங்குமாறும் கோருகின்றோம்.

இனப்படுகொலைக்கு எதிரான உலகப் பொதுக் கருத்தை உருவாக்க ஒன்றிணைவோம்!

உலகின் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களோடு ஒருங்கிணைவோம்!!

http://inioru.com/?p=21355

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைவோம் இணைந்திருப்போம்.

இணைப்புக்கு நன்றி.

1. இது தான் அந்த ஆங்கில இணைப்பும பரப்புரைக்கு பாவிக்கலாம்.

http://inioru.com/wp-content/uploads/2011/05/NDS_Press_Release2011May_English.pdf

2. கனடாவின் நாடு கடந்த அரசும், கனேடிய தமிழர் பேரவையும் இணைந்து கனடாவின் தலைநகர் ஓட்டாவாவில் உள்ள சில பிரதிநிதிகளை சந்தித்துள்ளார்கள். இவர்கள் சேர்ந்து வேலை செய்வது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33960

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்புக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றிணைவோம்! இனியாவது!!!

இணைப்புக்கு நன்றிகள் நெல்லை!!!

  • தொடங்கியவர்

... நாம் எமக்குள் குத்துப்படுவோம், சேறள்ளி எறிவோம் ... நடக்கட்டும் ... அது நல்லதற்கே!! ... பிழைகள் அம்பலத்துக்கு வரும், விமர்சனங்கள் சரியான பாதையில் இட்டுச் செல்ல உதவும்!! பட்டுத்தெளிவோம் ... ஓரளவு தெளிந்தும் விட்டோம், குழம்பிய குழம்பங்களிலிருந்து!!!

எமக்குள் ஆயிரம் பிரிவுகளானாலும் ... இலக்கில் உறுதியாக இருக்க வேண்டும்! எதிரியை தனிமையுற வைக்க ..... முன்பொருக்கால் இஸ்ரவேலுடன் கூட்டுச் சேர ஜேயார் கூறியது போல் "சாத்தானுடனும் கூட்டு வைப்பேன்" .... யாருடனும் இணைவோம்! எமக்கு நண்பர்கள் வேண்டும், மிக மிக சிறிய இனம் ... ஒரு கை ஓசை இனி வேண்டாம், முயற்சித்தோம் முடியவில்லை ... இனி பிறர் கைகளையும் எமக்காக தட்டச் செய்வோம்!!

எல்லாவற்றுக்கும் மேல் இன்று எதிரி எம்மில் பலரை விலைக்கு வாங்கி, முதலைக் கண்ணீர் விட வைத்திருக்கிறான், அவலமுறும் எம் மக்களின் பெயரால்!!! ... அவர்களை இனம் காட்டப்பட வேண்டும், அதற்கு மேல் புலிக்காச்சலில் திரிவதாக கூறிக்கொண்டு சிங்கள இனவழிப்புக்கு துணை போனவர்கள், இன்று அநாதைகளாக ... அவர்களை வரலாற்ரில் எம்மினம் மன்னிக்காது!

... கேட்பாரற்று ஓரிரு நாட்களில் அழிக்கப்பட்ட 40000 எம்முறவுக்களுக்கு நாம் செய்யும் அஞ்சலி, அவர்களினது இறப்புக்களுக்கு நீதி தேடுவதே. , கொலைகாரர்கள் சர்வதேச சட்டங்களின் முன் கொணர்ந்து நிறுத்த வேண்டும், அங்குள்ள எம்மக்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும், கவுரவமாகவும் வாழ வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் ...இவைகள் புலம்பெயர் எம்மவர்களால் மட்டுமே முடியும்

  • தொடங்கியவர்

valvaizagara : (18 May 2011 - 11:53 AM)

இளங்குருத்து உடல் கிழிய,

இரத்தாறு கொப்பளிக்க,

விருப்போடு அணைத்ததாய் பிணம் மிதித்து,

உயிர் குலைய…..,

கொடுஞ்சிறைபட்டு,

பெரும் கறைபட்டு

மூச்சொடுங்கிப் போவதற்கும் முடியாத நிலைபட்டு

பேச்சொடுங்கி போயினரே........

அவர்களுக்காகவும் நாமே பேசுவோம்

ஒரு தினத்தை அனுஸ்டிப்பதில் கூட ஒற்றுமையைக் கடைப்பிடிக்க முடியாத திருந்தாத ஜென்மங்களை முன்வைத்து…

விடுதலைப்புலிகளின் நடைமுறை அரசு தமீழீழம் நோக்கிய பயணம் எல்லாமும் 2009 மே 18 ஆம் நாளில் நிறைவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து நம்ப முடியவில்லையே என்று சிவாஜி கணேசன் பாணியில் அழுது புலம்பியவர்கள் ஒரு புறம். அது அவர் இல்லை அவரையாவது இவங்கள் நெருங்குவதாவது என்று கொஞ்சமும் தளராமல் தெருவில் கூடிக் கதைத்துக் கொண்டோர் இன்னொரு புறம்.

அவர் பாதுகாப்பாக இருக்கிறார் தக்க தருணத்தில் தமிழ் சினிமாவில் கதாநாயகன் வருவது போன்று தோன்றுவார் என்று கூறித் திரிவோர் இன்னொரு புறம். ஆக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தனது இறப்பின் மூலம் பல்வேறு குழப்பங்களையும் கூடவே விதைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

திரு. பிரபாகரன் அவர்கள் இருக்கிறார், வருவார் என்று கூறும் கோடாம்பக்கத்தில் படைப் பயிற்சி எடுத்த சில புலம்பெயர் தேசியவாதிகள் நமது பெரும்தலைவர் பிரபாகரன் இறந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியாகும் நிலையிலாவது அவரை உயிர்த்தெழச் செய்வார்களாக இருப்பின் அவர்களுக்கு கோடி புண்ணியம் உண்டாகும்.

எமது விடுதலைப் போராட்டமானது இறந்தவர்களின் எண்ணிக்கையைக் காட்டியே வளர்ந்த ஒன்றாகும். மாவீரர்களின் எண்ணிக்கையைக் காட்டி மக்களின் அனுதாபத்தைத் திரட்டுதல். இராணுவத்தின் இறப்பைக் காட்டி போராளிகளைத் திரட்டுதல். மக்களின் இறப்பைக் காட்டி சர்வதேசத்தின் அனுதாபத்தை திரட்டுதல். இப்படி எந்தப் பக்கம் திரும்பினாலும் எங்களது உயர்ந்த விடுதலைப் போராட்டத்திற்கு ஒப்பாரிப் பாடல்தான் தேவையாக இருந்தது.

எமது விடுதலைப் போராட்டத்தின் மிக உயர்ந்த பாடலே ஒப்பாரிதான். ஒப்பாரி இல்லாமல் எங்களால் தமிழ்த் தேசியம் பேச முடியாது. இதன் தொடர்ச்சிதான் புலம்பெயர் நாடுகளிலும் A-5 அளவில் இறந்தவர்களின் படங்களைக் கொண்டு தருமாறு விளம்பரம் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை நமக்கு ஏற்பட்டுள்ளது. இந்தப் பாடசாலையில் படித்தவர்கள்தான் இப்போது மே18 இனை துக்க தினமாக அனுஸ்டிப்பதா, போர்க் குற்ற நாளாக அனுஸ்டிப்பதா அல்லது இனவழிப்பு தினமாகப் பின்பற்றுவதா என்று விவாதம் செய்கின்றனர்.

இறுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரிலும் மே 18 முன் நிறுத்தி இரு வேறு பிரிவினரின் அறிக்கை வந்துள்ளது. இன்னும் சில வருடங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை எந்த ஒரு தமிழனும் நம்ப மறுக்கும் சூழல் உருவாகப்போவது என்னவோ உண்மை.

இதில் மே18 இனை இனவழிப்பு நாளாகத்தான் கையாள வேண்டும் என்போர் அதற்குச் சொல்லும் விளக்கம் – இந்த சந்தர்ப்பத்தில் உலகின் பாராளுமன்றங்களின் முன்னர் திரண்டு எங்கள் எதிர்ப்பைக் காட்டினால் உலகம் தனது மூண்றாவது கண்ணை திறக்கும். அதன் மூலம் எங்களுக்கு தமிழ் ஈழம் மலரும் என்பது இவர்களின் ஆலோசனையாக இருக்கிறது. இதற்கு முன்னரும் நாங்கள் உள்ள பாராளுமன்றங்கள் எல்லாவற்றுக்கும் முன்னால் புலிக்கொடியோட நின்று தொண்டைத் தண்ணி வத்தக் கத்தியிருக்கிறம். அப்போதெல்லாம் திறக்காத அந்த சர்வதேச சிவனின் முன்றாவது கண் இப்போது திறக்கும் என்பதை எந்தக் கோமாளிக் கணக்கில் சேர்ப்பது.

இவர்கள் இனவழிப்பு என்றால் அதற்குப் போட்டியாக நெடியவனின் ஜனநாயக அணி மே18 இனை போர்க்குற்ற நாளாக அனுஸ்டிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. எங்கள் கண்ணீர்ப் பூக்களை காணிக்கையாக்க வருமாறு உணர்வு பூர்வமாக அழைப்பு வேறு விட்டிருக்கின்றனர் அந்தத் தேசியவாதிகள். அடுத்து உருத்திர குமாரன் தலைமையிலான நாடுகடந்த அரசு – மே 18 இனை தமிழீழ தேசிய துக்க தினமாகப் பிரகடனம் செய்யுமாறு கோரியிருக்கின்றன.

இதில் போர்க்குற்ற நாள் இனவழிப்பு நாள் என்ற சுலோகத்தில் அழைப்பு விடுவோர் அவசரத்தில் ஒரு விடயத்தை மறந்து விட்டார்களாக்கும். ஜ.நாவின் நிபுணர் குழுவின் அறிக்கையின்படி அரசின் மீது ஜந்து போர்க் குற்றச்சாட்டுகளும் புலிகள் மீது ஆறு குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. எப்போதுமே அறிவை நாடார் கடையில் அடைமானம் வைத்திருக்கும் இந்தமாதிரி தேசிய மக்குகள் ஆழ்ந்து சிந்தித்து எதையுமே செய்ய வக்கற்றவர்களாகவே இருந்திருக்கின்றனர். இருக்கின்றனர். இப்படியான ஆக்களைத்தான் எங்களின் பெருந்தலைவரும் புண்ணாக்குப் போட்டு வளர்த்து வந்தார்.

இப்போது புலிகளுக்கு ஆறு குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் அரசை மட்டுமே குறிவைத்து பிரச்சாரங்கள் செய்யும் போது அதனை சர்வதேச பாராளுமன்றங்களில் இருப்பவர்கள் எப்படிப் பார்ப்பார்கள்? மனித உரிமைகள் குறித்தோ ஜனநாயக நெறிமுறைகள் குறித்தோ எதுவுமே தொரியாத மடையர்கள் என்று எங்களை நினைப்பார்களா, அல்லது முன்றாது கண்ணை திறந்து மகிந்தவை சுட்டெரிப்பார்களா? எனவே இந்த இடத்தில் நாங்கள் இந்தமாதிரி தேசிய மக்குகளுக்கு மே18 இன் செய்தியாக ஒன்றைத்தான் சொல்ல முடியும். சர்வதேசத்தின் நெற்றிக் கண்ணை திறப்பதை பிறகு பார்ப்போம் முதலில் உங்களின் அறிவுக் கண்ணை கொஞ்சமாவது திறக்க முயலுங்கள்.

உண்மை என்னவெனில் போர்க் குற்ற நாள், இனவழிப்பு நாள் என்பதெல்லாம் ஒவ்வொரு வருடமும் நினைவு கொள்ளக் கூடிய தினங்கள் அல்ல. ஆகக் குறைந்தது இரண்டு வருடங்கள் செய்யலாம் அதன் பிறகு?

ஆனால் தேசிய துக்க தினம் அவ்வாறனதல்ல. இதனை விளங்கிக் கொண்டுதான் உருத்திரகுமாரன் பிரிவினர் இந்தப் பிரகடனத்தை முன்வைத்திருக்கின்றனர். மக்களை தங்கள் அடையாளம் சார்ந்து ஒன்றுபடுத்தவும், மக்கள்சார் அரசியலை முன்னெடுக்கவும் இவ்வகையானதொரு நினைவு கூரல் பயனுடையதாக அமையலாம். ஆனால் நெடியவன் குழுவினர் போர்க்குற்ற நாள்இ இனவழிப்பு நாள் என்றெல்லாம் தடுமாறுவதற்கு பிறிதொரு காரணமும் உண்டு. அது தேசிய துக்க நாளை ஏற்றுக் கொண்டால் பிரபாகரன் மற்றும் அனைவரும் இறந்து விட்டார்கள் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டிவரும். பிறகு அலிபாவின் திறந்திடு சீஸே கதை போல் பிரபாரகன் திறந்திடு சீஸே என்றெல்லாம் நெடியவன் குழுவால் கதைக்க முடியாமல் போகும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் நாங்கள் சொல்லக் கூடியது ஒன்று மட்டும்தான் புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட அவருடன் இறுதிவரை இணைந்திருந்து விசுவாசத்தின் பேராலும், தமிழர் விடுதலை மீது கொண்டிருந்த பற்றுதியின் பேராலும் தங்களை மாய்த்துக் கொண்ட நமது முகமறிந்த, முகமறியாத தோழர்கள் அனைவருக்காகவும் ஒரு சுடரேற்றி சில மணித்துளிகள் மௌனமாக இருங்கள்.

நம்மால் இறந்தவர்களுக்காக செய்யக் கூடியது இவ்வளவே! ஆனால் இருப்பவர்களுக்காக நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் ஏராளம். அது குறித்து ஒன்றுபட்டு கடந்தகாலத்தின் பகைகள், குரோதங்களை, அர்த்தமற்ற சந்தேகங்கள் அனைத்தையும் மறந்து செற்படுவதற்கான ஒரு குறியீடாக மே18 இனைக் கொள்வோம். ஒவ்வொரு மே18 உம் நாம் தவறுகளில் இருந்து கற்றுக் கொண்டு முன்னேறுவதற்கான தினமாக இருக்கட்டும். தவறுகளிலிருந்து படிப்பதே அடுத்த கட்டம் நோக்கி நகர்வதற்கான அடித்தளம் என்பதை நினைவு படுத்தும் ஒரு தினமாக மே18 இருக்கட்டும். இது ஒன்றுதான் நாம் அறிந்தும் அறியாமலும் கொடுத்த பெரும் விலைக்கு ஓரளவாவது நன்மை பெற வழி.

– ஜொனி கபிலா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.