Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைச்செயற்பாடு: புரிந்துணர்வும் பொறுப்பு கூறுதலும்

Featured Replies

தனிப்பட்ட பிரச்சினைகள், தனி நபரின் செயற்பாட்டு எல்லைகளுக்கு அப்பால் ஒரு போராளி அல்லது இயக்கம் இன்ற நிலைப்பாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டால் அல்லது விசாரனைக்கு உட்பட்டால் அது நடக்கவேண்டும் அல்லது நடந்திருக்க வேண்டும் என திட்டமிட்டால் போல் ஊடகங்கள் செய்திகளைப்போடுவது வழக்கமாகி விட்டது.

இந்த ஊடக ஜாம்பவான்களின் ( பெயரளவில்) கதைகள் பொலிஸ் விசாரணைகளை விட மோசமாகத்தான் இருக்கும்.

.

நெடியவன் கைது செய்யப்பட்டுள்ளார். வீடு சுற்றி வளைக்கப்பட்டது என்றெல்லாம் சில ஊடகங்கள் எழுத அதனை சில இணையங்கள், தமிழில் பத்திபத்தியாக எழுத அதனைப்பார்த்து பொதுமக்கள் கருத்துக்கூறி தமக்குள்ளேயே வாக்குவாதப்பட இப்படி கடந்த மூன்று நாளாக சிலருக்கு நல்ல இணைய தீனிகள் கிடைத்தன.

.

சரி நெடியவன் என்ற போராளி விசாரணைக்காக தார்மீக ரீதியாக அணுகப்பட்டார் இரண்டு நாள் விளக்கம் கேட்டபின்னர் அவரை வீட்டிற்கே அனுப்பி விட்டனர் குறித்த விசாரனை அதிகாரிகள். இதுதான் நடந்தது. அவர் இப்போ வீட்டில்தான் இருப்பதாக நோர்வே தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இது இவ்வாறு இருக்க இலங்கை அரசும் விடுதலைப்புலிகள் அமைப்பினை வேரோடு இல்லாது ஒழிக்க வேண்டும் என நினைக்கின்ற சக்திகளும் நெடியவன் விடயத்தினை சாக்காக வைத்து நோர்வேயில் புலிகளை தடை செய்யவேண்டும் என மடித்துக்காட்டிக்கொண்டு வெளிக்கிட்டுள்ளன.

ஆகவே இதனை முறியடிக்க வேண்டிய கடப்பாடும் அனைவருக்கும் உண்டு.

.

1. 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் விடுதலைப்புலிகள் எந்தவிதமான ஆயுத கடத்தல், ஆயுத தாக்குதல்களை செய்யவில்லை. அதற்கான முன்னெடுப்புக்களையும் செய்யவில்லை. இது தமிழ் நாட்டு உளவுப்பிரிவின் கடந்த ஆறுமாத அறிக்கை இந்த அறிக்கை புது டெல்லிக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு வலிமை சேர்க்க விடுதலைப்புலிகளும் கடிதம் ஒன்றினை தமிழ் நாடு மற்றும் இந்திய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளனர்.

.

2. 2009 மே மாதத்தின் பின்னர் இயக்கம் ஆயுத போராட்டத்தினை முன்னெடுப்பதற்கான எந்தவித மீழ் ஒருங்கிணைப்பினையும் செய்யவில்லையென வெளினாட்டு ஆய்வாளர்களும் குறிப்பிட்டுள்ளனர். விடுதலைப்புலிகளும் தாம் நிதிசேகரிப்பதனை நிறுத்தியுள்ளதாக ஓர் அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர்.

.

3. ஆனால் சில இடங்களில் நிகழ்ச்சி செய்வதற்கும், மாவீரர் நிகழ்வுகளை நடத்துவதற்கும், பொதுக்கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும் மட்டுமே நிதி சேகரிப்பதாக இயக்க ஆதரவாளர் சிலர் கூறியுள்ளனர்.

.

4. உண்மையில் இயக்கம் நிதி சேகரிக்கின்றது என்பதனை ஆதாரப்படுத்தி மீண்டும் இயக்கத்திற்கு நெருக்கடிகளை ஏற்படுத்தவும் இன்னமும் தடை செய்யப்படாத நாடுகளில் தடைகளைக்கொண்டுவரவும் சில தீய சக்திகள் முயற்சிகளை செய்கின்றன.

.

5. எவ்வாறு சிங்கள அரசு அங்கு புலிகள் இயக்கம் இருக்கின்றார்கள் என திட்டமிட்டு சில வதந்திகளை செய்ய முற்பட்டதோ அதே போல வெளி நாடுகளிலும் புலிகளின் செயற்பாடுகள் இருக்கின்றன என கூறுவதற்கு நிதி சேகரிப்பினை ஒரு சாட்டாக காட்ட முற்படுகின்றது விடுதலைப்புலிகளை விரும்பாத சக்திகள்.

.

6. அதற்கு துணை போகுமால் போல் சில சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன. நாடுகளில் செயற்படுகின்ற, செயற்பட்ட விடுதலைச்செயற்பாட்டாளர்களில் சிலர் இதற்கு தெரிந்தோ தெரியாமலோ துணை போகின்றனர் என்றே கூற முடியும்.

.

7. போராளிகளை பராமரிப்பதற்கும், மாவீரர் நிகழ்வு, மக்கள் போராட்டங்களை நடத்துவதற்கு ஏன் இப்போதும் விடுதலைப்புலிகளின் பேரில் அல்லது அந்த இலட்சனையின் கீழ் நிதி சேகரிக்க வேண்டும். இவற்றை செய்வதற்கு ஏன் பொது அமைப்புக்கள் முன் வந்து செயற்படக்கூடாது. இவை எல்லாம் அந்த நாட்டு சட்டங்களுக்கு உட்பட்டவையே.

.

8. நீண்டகாலமாக இயக்கத்திற்கு நிதி சேகரிப்பு செய்தவர்கள் அல்லது பணி செய்தவர்கள் இந்த விடயங்களில் கவனமாக செயற்படவேண்டும். சட்டத்திற்கு உட்பட்ட பணிகளை பொது மக்கள் அமைப்புக்கள், பொதுப்பணி ஆர்வலர்கள் ஊடாக செய்யப்படவேண்டும். அதற்கு மேலதிகமாக என்றாலும் பொதுமக்களிடம் செல்வதனை தவிர்க்க வேண்டும்.

.

9. எடுத்ததற்கு எல்லாம் இயக்கத்தின் பெயர்களை பாவித்தல் இலகுவாக போய்விட்டது. போராட்டம், விடுதலை இயக்கத்திற்கு அல்ல மக்களுக்குத்தான். வெளினாடுகளில் இயக்கத்தை முன்னுரிமைப்படுத்தி, இயக்கத்தின் பெயர்களைப்பாவித்து செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களும் அந்த நாட்டில் அலல்து ஒரு நகரத்தில் செய்பவர்களுக்கு வீரம் செறிந்த செயற்பாடாக இருக்கலாம். நாங்கள் தான் பெரிசு என சொல்ல நல்லாக இருக்கும். ஆனால் காலபோக்கில் விடுதலை இயக்கத்திற்கும் அதில் முழு நேரமாக உழைக்கும் போராளிகளுக்கும் எத்தகைய பாதகங்களை கொண்டுவரும் என யாரும் சிந்திப்பதில்லை.

.

10. அண்மையில் உலகளாவிய ரீதியில் பணி புரியும் 2009 இற்கு பின் தொடங்கப்பட்ட ஓர் அமைப்பு கூட அமைப்பிற்கு நிதி சேகரிப்பவர்களை அணுகி தமது செயற்பாட்டிற்கு காசு சேகரித்து தரும்படி இரகசியமாக கேட்டிருக்கின்றார்கள். ஏன்? இவர்கள் தங்கள் பணிகளை மக்களிடம் கூறி நிதி கேட்க முடியாதா? இயக்கத்திற்கு நிதி சேகரிப்பவர்கள் என்ன நிதி வசூலிக்கும் இயந்திரமா? நிதி சேகரிப்பவர்களை மீண்டும் நிதி சேகரிக்க தூண்டுபவர்கள் யார்?

.

11. ஆகவே எங்கள் சமூகத்திற்கும் பொறுப்பு உண்டு. சமூகத்தில் உள்ளவர்கள் உண்மையாக விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு நேர்மையாக உழைப்பவர்கள் விரும்புவர்கள் என்றால் என்ன செய்ய வேண்டும்?

.

தம்பி மார் உங்கட பணிகளை எங்களிடம் சொல்லுங்கோ நாங்கள் செய்கின்றோம். நீங்கள் தயவு செய்து நிதி சேகரிக்கும் வேலைகளை விட்டுவிட்டு வேறு பணிகளை செய்யுங்கள் என எல்லோரும் கூறினால் அவர்கள் கேட்கத்தான் வேண்டும். ஆனால் பொதுப்பணிகளில் செய்பவர்கள் மைக் பிடிப்பதில் இருந்து எல்லாவற்றையும் செய்வார்கள் ஆனால் வளங்கள் தேவை என்றால் உடனே இயக்க செயற்பாட்டாளர்களைத்தான் பார்ப்பார்கள். இது மாறவேண்டும்.

.

12. இனி வரும் காலங்களிலும் விடுதலைப்புலிகளை சில நாடுகள் தடை செய்ய புகுந்தால் அது புலம்பெயர் மக்களும் அமைப்புக்களும் தான் பதில் சொல்லவேண்டும்.

.

13. சட்ட ரீதியானவற்றை சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்ட அமைப்புக்கள் ஊடாக செய்வது இல்லையேல் தனி நபர்கள் செய்து விட்டு போவது. எதற்கெடுத்தாலும் இயக்கம் தலைவர் என்ற வார்த்தைகளைப்பாவிப்பதனை இனியாவது அனைவரும் நிறுத்த வேண்டும். உரிமைப்போர் எங்களுக்கானது; தனித்து பிரபாகரனுக்கோ, போராளிகளுக்கோ அல்ல. ஒவ்வொரு நாட்டிலும் முடிவுகளை தாமே எடுத்துவிட்டு பழிகளை எங்கோ இருக்கும் இயக்கத்திற்கும் போராளிகள் மீதும் போடுவதை நிறுத்த வேண்டும்.

.

14. எனக்கு மனம் இருந்தால் துணிவு இருந்தால் நான் பழிகளை சுமந்து இயக்கத்தையும் , போராளிகளையும் பாதுகாக்க வேண்டும். மாறாக புகழை மட்டும் நான் எடுத்துவிட்டு பழிகளை அவர்கள் மீது சுமத்துவதை நிறுத்தும் போதுதான் எமது பணிகள் வலுவுடையதாகவும் வாய்மை உடையதாகவும் இருக்கும்.

.

நன்றி

உமை

http://www.eelanatham.net/story/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D

காலத்திற்கு மிகவும் தேவையான கட்டுரை. நன்றிகள்.

கனடாவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அமைப்புக்களில் சில தாமாகவே இங்குள்ள உளவுத்துறையை அணுகியுள்ளனர். அவர்களுடன் தொடர் சந்திப்பை கேட்டும் இருந்தனர். கணக்கு வழக்குகள் ஒரு திறந்த வியாபாரக்கணக்காக வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் அந்த கணக்குகள் ஒரு கணக்குகள் சம்பந்தமான துறைசார் வல்லுனர்களால் உறுதிப்படுத்தப்படும்.

விளைவு, கெடுபிடிகள் குறைந்துள்ளன, தொண்டர்கள் சுயமாக இயங்கும் நிலை, கூடிய புரிந்துணர்வுகள்.

மிகவும் நன்றி உமை இந்தக்கட்டுரையை சகல இணையத்தளங்களிலும் பிரசுரிக்க முயற்சிக்கவும். இக்கட்டுரை எல்லா தமிழ் உறவுகளிடமும் போய்ச்சேர்வது காலத்தின் கட்டாயமாகும்.

  • தொடங்கியவர்

மிகவும் நன்றி உமை இந்தக்கட்டுரையை சகல இணையத்தளங்களிலும் பிரசுரிக்க முயற்சிக்கவும். இக்கட்டுரை எல்லா தமிழ் உறவுகளிடமும் போய்ச்சேர்வது காலத்தின் கட்டாயமாகும்.

[/quote

கருத்திற்கு நன்றி.

மின்னஞ்சலில் எல்லோருக்கும் அனுப்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தில் ஒதுங்கியிருந்தோர்

வேடிக்கை பார்த்தோர்

மக்களின் பணத்தில் பயிற்சி எடுத்துவிட்டு இடையில் ஓடிவந்தோர்................

................................................???????????????

போன்றோருக்கு

இன்று தாம் நினைத்தது அல்லது தாம் சொன்னது நடந்துவிட்டது போன்றதொரு பிரமை

அதனால் எஞ்சியிருக்கும் இனப்பற்றாளர்களுக்கு நடக்கும் இது போன்ற நிகழ்வுகளில் ஒரு புத்துணர்ச்சி. அத்துடன் பொழுது போக்கு.

அவை இது போன்ற செய்திகள் மூலமும் பரபரப்பான ஆய்வுகள் மூலமும் கவிதை கதை.............? என்று தொடர்கிறது.

இதை விடுத்து அதிலிருக்கும் தவறுகளையோ அல்லது எமது இனத்துக்கான பாதிப்புக்கள் குறித்தோ சுட்டிக்காட்டுவோர் மீது இது போன்ற அரச நடவடிக்கைகள் வரும்போது தம் கருத்துக்களால் வெல்லமுடியாதவர்களை சட்டத்தால் வென்றுவிட்ட நினைப்பில் இவற்றுக்கான வெடிகளும் ஆர்ப்பரிப்பும் எங்கும் கேட்கிறது.

அதற்காக வேறு எங்கும் போகத்தேவையில்லை யாழிலேயே எனக்கே வந்துள்ளது மிரட்டுதல் கெதியாக உள்ளே போவீர்கள் என்று.

பயங்கரவாத சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட இயக்கத்துக்காக பேசுதல் தடையல்ல என்று உச்சநீதிமன்றம் சொன்னாலும் இவர்கள் விடமாட்டார்கள். ஏனெனில் தமது கருத்துக்கு வலுச்சேர்ப்பது மட்டுமே இவர்களது வேலை. அதனால் பாதிக்கபடுவது தமது இனமா என்ற கேள்வி கூட இவர்களுக்கு வருவதில்லை.

இனப்பற்றுள்ளவன் இவற்றை ஆதரிக்கமாட்டான். தற்போது குழப்பமான சூழ்நிலை இருப்பதாக நினைப்பவன் கூட இது போன்ற செய்திகளைக்கண்டு அமைதி காப்பானே தவிர வரவேற்கமாட்டான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.