Jump to content

சற்றிங் சாலையில்.. அவங்க.. இவங்க..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சற்றிங் சாலையில்....

காலை நேரம் பல்கலைக்கழக வாசலில் ஒரே கூட்டம். பஸ்ஸில் இருந்து இறங்கிய சங்கர் ஓட்டமும் நடையுமாய் அவசரமாய் போய்க் கொண்டிருந்தான். அவனை வாசலில் கண்டுவிட்டு ஓடி வந்த துசி

" டேய் சங்கர் எங்க போறா... ஒப்படை (அசைன்மெண்ட்) கொடுக்கிறதுக்கோ, நில்லு நானும் வாறன்" என்றான்.

அதுக்கு சங்கர்.. இல்லையடாப்பா, சின்னப் பிரச்சனை ஒன்று, என்ர நண்பிகள் அவசரமா வரச் சொல்லி போன் பண்ணிச்சினம் அதுதான் போறன்.

"இன்று ஒப்படைக்கு இறுதி நாள் எல்லோ.. சரி சரி நீங்கள் போய் அவைக்கு விலக்குப் பிடியுங்கோ.. நான் ஒப்படை கொடுக்கப்போறன்" என்றான் துசி பதிலுக்கு.

சங்கர் பல்கலைக்கழகம் வந்த புதிதில் அப்பாவியாகத்தான் தெரிந்தான். பின்னர் நாட்கள் போகப்போக நண்பிகளோடு சுற்றுவதும் அவர்களோடு கடலை ( அரட்டை அடிப்பது) போடுவதும் "காட்ஸ்" விளையாடுவதும் என்று தன் பல்கலைக்கழகப் பொழுதை செலவு செய்ய ஆரம்பித்தான். அவன் தன் நண்பர்களைக் காணும் போதெல்லாம் தான் பழகும் ஒவ்வொரு பெண்ணைப் பற்றியும் அவர்களின் குணம், இயல்புகள், நடத்தைகள் என்று பலவாறு விபரிப்பான். அவர்களும் கேட்டு ரசித்து சிரிப்பார்கள். இது அவனோடு பழகும் பெண்களுக்கும் தெரியும். இருந்தும் அவர்களும் இவற்றைக் கண்டுகொள்வதில்லை. சில சந்தர்ப்பங்களில் மிக மட்டமாகக் கூடக் கதைப்பான்.அதைக் கூட அவர்கள் பெரிதுபடுத்துவதில்லை. அதையே வேறு யாரும் செய்துவிட்டால் காவாலி, பொறுக்கி என்று திட்டுவார்கள், கோவிப்பார்கள். ஒருவேளை அவர்களும் அவனிடம் அதை விரும்பினமோ என்னவோ, சங்கர் அவர்களுக்கு மிக நெருக்கமானவனாகவே இருந்தான்.

ஒரு நாள் சங்கர் துசியிடம்.. டேய் இவள் மதி பற்றி என்ன நினைக்கிறா என்றான்.

" டேய் உனக்கே இது தகுமா.. எனக்குத்தான் பெரிசா அவையளோட பழக்கமில்லையே. பார்க்க அமைதியான நல்ல பிள்ளையாத்தான் தெரியுது. பழகிப் பார்த்தாத்தான் புரியும். நமக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை. ஏன் கேட்கிறாய் ஏதும் பிரச்சனையோ ??" என்று பதில் கேள்வியோடு முடித்தான் துசி.

ம்.. சின்னப்பிரச்சனை அவளை இங்க ஒரு பொடியன் விரும்புறான். இவளும் அவனோட நல்ல மாதிரித் தான். இப்ப சமீபத்தில அவைக்க புதிசா ஒரு பிரச்சனை கிளம்பியிருக்கு. அதுதான் போன் பண்ணி என்னை அன்று வரச் சொன்னாள்.

" ஓஓ அப்படியே.. அவைக்கு இப்படியான பிரச்சனைக்கும் நீங்களே "அட்வைஸ்" கொடுக்கிறனீங்கள். நல்ல தொழில்தான் செய்யுங்கோ " என்று நக்கலாகப் பதில் கொடுத்தான் துசி.

அதற்கு சங்கர்.. டேய் துசி உனக்கு பெண்களைப் பிடிக்காது. அதால அலட்சியமாப் பேசுறா.. அதுகளுக்கு எத்தினை பிரச்சனைகள் தெரியுமே சமூகத்தில.

அதற்கும் துசி.." அப்படியே, தேவையில்லாம கண்டவையோடும் பழகிறது.. பழகிட்டு பழகினவையில, சமூகத்தில குறை சொல்லுங்கோ. சரி ஏதோ பிரச்சனை எண்டா... அப்படி என்னதான் பிரச்சனை சொல்லன்." என்று கூறி முடித்தான்.

அதற்கு சங்கர்.. இல்லையடாப்பா.. மதி கொஞ்சம் "மொடேன்". தெரியும் தானே. அவள் இன்ரநெற் சற்றிங் அது இதென்று ஜாலியான பெண். இவன் கபிலன் இருக்கிறான் எல்லோ அவன் தான் இப்ப அவளோட நெருக்கம்.

இதனைக் கேட்ட துசி சங்கரை இடைமறித்து.. " அட இவன் கபிலனே.. அடப்பாவி அவனும் தொடங்கிட்டானே " என்று சொல்ல..

அதற்கு சங்கர்.. பின்ன எல்லாரும் உன்னை மாதிரி சாமியாரோடாப்பா என்ற.. உடனே துசி குறுக்கிட்டு" சங்கர் சும்மா கடிக்காம விசயத்தைச் சொல்லு எனக்கு வகுப்பு இருக்கு" என்றான்.

சரி சொல்லுறன் கேள்.. என்று சங்கர் மீதி விடயத்தை சொல்லத் தொடங்கினான். இவள் மதி சற்றிங் என்று போறவள். அங்க பலரோடும் அவள் வஞ்சகமில்லாம கதைப்பாள்.

உடனே மீண்டும் துசி குறுக்கிட்டு " அதுசரி அவள் வஞ்சகம் இல்லாமல் தான் கதைக்கிறாள் என்றது எப்படி உனக்கு தெரியும். ஏதாவது கருவி வைச்சிருக்கிறியா கண்டுபிடிக்க"

அதுக்கு சங்கர்.. எல்லாம் பழகிப் பார்த்து வந்த ஒரு நம்பிக்கையிலதான். நான் சீரியஸாக் கதைச்சிட்டு இருக்கிறன் நீ நக்கலடிச்சுக் கொண்டே இருக்கிறா.

" இல்லையடாப்பா நீங்களா தான் எல்லாம் சொல்லுறிங்கள் வஞ்சம், சூதுவாது, நல்லவன், கெட்டவன் என்று அதுதான் எப்படி அறியுறிங்கள் என்று கேட்டன்".

சரி அதைவிட்டிட்டு விசயத்தைக் கேளன்.

அதற்கு துசி "ம் சொல்லு கேட்பம்" என்றான்.

அவள் சற்றிங் போற "இன்ரநெட் சற் கிளப்புக்கு" ஒரு நாள் எதேச்சையா கபிலனும் போயிருக்கிறான். அங்க ஒரே கூத்தும் கும்மாளமுமாம். ஆண்களும் பெண்களும் விடிய விடிய ஏதோ கதைக்கினமாம்.

துசி மீண்டும் குறுக்கிட்டு " என்னடாப்பா சங்கர்.. விடிய விடிய அப்படி என்னதான் கதைக்கினம். உலக அரசியலோ.. இல்ல விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் பற்றியோ.. இல்ல கதாப்பிரசங்கமோ வைக்கினம்" என்ற..

சங்கர் பதிலுக்கு.. பாத்தியே மீண்டும் நக்கல் உனக்கு. அதுகள் சின்னஞ்சிறுசுகள் பலதும் பத்தும் கதைக்குங்கள் என்றான்.

அதைக் கேட்டுவிட்டு துசி.. " ஏண்டா.. சின்னஞ்சிறுசுகள் என்றா.. பலதும் பத்தும் கதைக்குங்கள் என்றா, அப்ப அங்க வில்லங்கம் இருக்குது போல. சமீபத்தில கேள்விப்பட்டன் சற்றிங்கில ஒரு பெண் தன்னை நடிகை அசின் என்று சொல்லி ஒருத்தனை ஏமாத்தினதா. அப்படி ஏதும் ஏடாகூடமா நடந்திட்டோ".

ம்.. நீ விசயத்துக்கு கிட்ட வந்திட்டா துசி.. மீதிக் கதையை கேளன்.. கபிலன் சற்றிங் போன இடத்துக்கு மதியும் வழமை போல போயிருக்கிறாள். கபிலன் வேற பெயரில போனவனாம். மதியும் வேற பெயரில தானாம் இருந்தவள். இரண்டு பேரும் நல்லா கதைச்சிருக்கினம். கபிலன் படம் காட்டச் சொல்லி கேட்டிருக்கிறான். பெயர் விபரம் ரெலிபோன் நம்பர் எல்லாம் கேட்டிருக்கிறான். மதியும் எல்லாம் கொடுத்திருக்கிறாள். படமும் காட்டி இருக்கிறாள். உடன கபிலன் திகைச்சுப் போய் மதி நீயா என்று கேட்டு தான் கபிலன் என்று சொல்லி இருக்கிறான். சுமார் 4 - 5 மணி நேரம் சற்றிங்காம், அதிகாலை வரை. தான் சற் பண்ணினது கபிலன் என்று அறிஞ்ச உடன மதி சற்றிங்க "கட்" பண்ணியிருக்கிறாள். இப்ப அதுதான் அவைக்க பிரச்சனையாப் போச்சடாப்பா.

பாத்தியோ சங்கர், இணையம் என்றது பனிப்போர் காலத்தில அமெரிக்க இராணுவ தகவல் பரிமாற்றத்துக்கு என்றிருந்தது. சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு அதை தகவல் பரிமாற்றத்துக்கு என்று உலக வலைப் பின்னலாக வர்த்தக நோக்கத்துக்குப் பயன்படுத்த தொடங்கியதும் பல நன்மைகளோட தீமைகளும் வந்திருக்கு. அதிலும் இந்த சற்றிங் பல மணித்தியாலங்களை வீணே விழுங்கிறதோட சின்னஞ்சிறுசுகளில இருந்து தாத்தாக்கள் வரை நல்ல விசயங்களை பகர மட்டுமன்றி பெருமளவில வேண்டாத அலட்டல்களிலும் ஈடுபடவும் தூண்டுது. குறிப்பாக இளம் பெண்களும், ஆண்களும் இப்ப சற்றிங்கிலதான் அதிக நேரம் செலவிடினம். அதிகம் அறியாதவையோட வெளிப்படையாகவும் ரகசியமாகவும் பேசிக் கொள்ளினம். அவை என்ன பேசினாலும் வெளி உலகுக்கு தெரியாது என்பதால எதுவும் அங்க பேசப்படலாம். அவை அவர்களை உளவியல் ரீதியில் பாதிக்கவல்லனவாகக் கூட இருக்கலாம். அதால பல தீமைகளும் நடந்தேற வாய்ப்பிருக்கு... என்று சங்கருக்கு விரிவாக பதிலளித்துக் கொண்டிருந்த துசி.. சங்கர் தனது கருத்தைக் கூர்ந்து கேட்பதை கவனித்துவிட்டு.. மீண்டும் தொடர்ந்தான்..

இது இப்படியே கட்டுப்பாடில்லாமல் கவனிப்பாரற்று தொடர்ந்தால் பெரிய சமூகத் தாக்கம் ஒன்றை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். மேற்குலகத்தைப் பொறுத்தவரை அவைக்கு இது ஒன்றும் புதிதல்ல. ஆனால் நாங்கள் இந்தச் "சுதந்திர சற்றிங்" கருத்துப் பரிமாற்றம் பற்றி கவனமாக இருக்க வேண்டும். குறிப்பா சிறுவர், சிறுமியர், இளம் ஆண்கள், பெண்கள் தொடர்பில் இந்த சற்றிங்கில யாரோட என்ன கருத்தப் பரிமாற்றம் செய்யினம் என்றதிலை குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் மற்றும் பொறுப்புவாய்ந்தவர்கள் கூடிய கவனம் எடுக்க வேண்டும். இல்லாட்டி கபிலன் - மதிக் கிடையில் தோன்றியது போல சின்னச்சின்ன பிரச்சனைகளில இருந்து பெரிய குழப்பங்கள் வரை குடும்பத்தில சமூகத்தில நாட்டில வர வாய்ப்பிருக்கு.

துசி சொன்னவற்றை கவனமாக செவிமடுத்து விட்டு.. சங்கர்.. சொன்னான்..

ம்ம்... நீ சொல்லுறது சரி தாண்டா துசி. எப்படித்தான் இதைக் கட்டுப்படுத்த வெளிக்கிட்டாலும் அரட்டைக்கு பழகினவையை கட்டுப்படுத்திறது கொஞ்சம் கஸ்டம் தான்.

துசி குறுக்கிட்டு.. " என்ன சங்கர் அனுபவம் பேசுதோ" என்றான்.

அதற்கு சங்கர்.. இல்லையடா துசி.. இது விடயத்தில கட்டுப்பாடுகளைக் கொண்டு வர, தாங்கள் சுதந்திரமா கதைக்கிறதை தடுக்கினம், தங்கள் நோக்கங்களைச் சந்தேகிக்கினம் என்று வேற வடிவத்தில பிரச்சனை திசை மாறிட வாய்ப்பிருக்கு எல்லோ. எனவே எல்லோரும் அவையா நிலைமைகளைப் புரிந்துணர்ந்து தேவையற்ற சற்றிங்கில ஈடுபடுறதைத் தவிர்த்தா இப்படியான அநாவசிய முரண்பாடுகளை, தனி நபர், குடும்ப, சமூகப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். முன் பின் அறியாத கண்டவையோடும் தனிப்பட்ட முறையில் வீணே கண்டதையும் கதைச்சு, தனிப்பட்ட தகவல்களை பரிமாறப் போய் ஏன் வில்லங்கத்தை வலிய விலைக்கு வாங்க வேணும் சொல்லு பாப்பம்.

" உண்மைதான் சங்கர் நீயே சொல்லிட்டாய், இதில நான் என்ன சொல்ல இருக்கு. சம்பந்தப்பட்டவை கேட்டு அவதானமா நடந்து கொண்டாச் சரி. இப்ப எனக்கு வகுப்புக்கு நேரமாச்சு போயிட்டு வாறன்." என்று கூறி துசி விடைபெற முயல..

சங்கரும்.. எனக்கும் வகுப்பிருக்கடாப்பா.. கதையில மறந்திட்டன்.. என்று சொல்ல.. நண்பர்கள் இருவரும் "சி யு லேற்றர்.. பாய் டா நவ்.. என்று கூறி விடைபெற்றுக்கொண்டனர்..!

ஆக்கம் தேசப்பிரியன்.

http://kundumani.blogspot.com/2009/09/blog-post_13.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் விசுவமடு, புதுக்குடியிருப்பு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது 11 MAY, 2024 | 04:29 PM   முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நினைவுகூரப்பட்டு வருகிறது. அந்த வகையில், முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் நினைவாக இன்றைய தினம் (11) முல்லைத்தீவில் விசுவமடு, புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டு கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. விசுவமடு ரெட்பானா சந்தி பகுதியில் சமூக செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டிலும், புதுக்குடியிருப்பு சந்தியை அண்மித்த பகுதியில் மாற்றத்துக்கான இளையோர் அமைப்பின் ஏற்பாட்டிலும் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.  இதன்போது அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.   https://www.virakesari.lk/article/183253
    • சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதம் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி ஆலோசனை 11 MAY, 2024 | 04:38 PM   (எம்.மனோசித்ரா) சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதத்தினை அதிகரிக்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில், தற்போதைய பொருளாதார நிலைமையையும் அடிப்படையாகக் கொண்டு மதிப்பாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்தார். பொருளாதார நெருக்கடிகளுக்கு முன்னர் சிரேஷ்ட பிரஜைகளுக்கான சேமிப்பு வட்டி வீதம் 15 வீதமாகக் காணப்பட்டது. ஆனால், அதன் பின்னர், மத்திய வங்கி வட்டி வீதங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது அது ஓரிலக்கம் வரை குறைக்கப்பட்டது. இந்நிலையிலேயே தற்போது மீண்டும் தமது சேமிப்புக்கான வட்டி வீதத்தை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் சிரேஷ்ட பிரஜைகளால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெளிவுபடுத்துகையில் மேற்கண்டவாறு தெரிவித்த இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், சேமிப்புக் கணக்குகளைப் பேணும் சகல சிரேஷ்ட பிரஜைகளுக்கும் அவர்கள் கோரும் வட்டி வீதத்தை வழங்கினால் வருடத்துக்கு 80 பில்லியன் ரூபாய் தேவைப்படும். இதற்கு முன்னர் செலுத்திய வட்டி வீதத்துக்காக திறைசேரிக்கு 105 பில்லியன் கடன் காணப்படுகிறது. எனவே இந்த கோரிக்கைகள் தொடர்பில் பொறுப்புடன் ஆழமாக மதிப்பாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் எவ்வாறு இவ்விடயம் தொடர்பில் தீர்மானிப்பது என்பது குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். எனவே பல்வேறு வயதினருக்கான வட்டி வீதங்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது என்றார்.  https://www.virakesari.lk/article/183256
    • பூமியை கடும் சூரிய காந்த புயல் தாக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம் தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று (10) இரவு முதல் இன்று (11) இரவு வரை கலிபோர்னியா தெற்கு அலபாமா வரையான பகுதிகளுக்கு சூரிய காந்த புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சூரிய காந்த புயல் காரணமாக பூமியின் வட அரைக்கோளத்தில் பாதிப்பு ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் செயற்கைக் கோள்களின் செயற்பாடுகளும் முடங்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. https://thinakkural.lk/article/301379
    • “சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம்!” - ஜாமீனில் விடுதலையான கேஜ்ரிவால் முழக்கம் 11 MAY, 2024 | 09:29 AM   புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில் விடுதலையான பின்னர், ““சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம்!” என்று தனது கட்சித் தொண்டர்கள் முன்னிலையில் முழங்கினார். திஹார் சிறையின் 4-வது கேட் வழியாக சிறையில் இருந்து அரவிந்த் கேஜ்ரிவால் வெளியே வந்தபோது அவரை ஆம் ஆத்மி தொண்டர்கள் குழு ஒன்று கையில் கொடியுடன் கோஷம் எழுப்பி வரவேற்றனர். அவர்களுடன் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால், ஆம் ஆத்மி மூத்த தலைவர்களான அதிஷி, சவுரப் பரத்வாஜ், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோரும் இருந்தனர். 50 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்னர் வெளியே வந்திருக்கும் டெல்லி முதல்வருக்கு ஆம் ஆத்மி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் ஆம் ஆத்மி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய கேஜ்ரிவால், “உங்கள் அனைவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் உங்களின் ஆசிர்வாதங்களை வழங்கினீர்கள். உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர்களால்தான் நான் இன்று உங்கள் முன்பு நிற்கிறேன். நான் திரும்பி வருவேன் என்று உங்களுக்கு வாக்கு கொடுத்திருந்தேன். இதோ உங்கள் முன்பு நிற்கிறேன். சர்வாதிகாரத்துக்கு எதிராக நாம் அனைவரும் நாட்டைக் காப்பாற்ற வேண்டும். சனிக்கிழமை காலை 11 மணிக்கு கன்னாட் பகுதியில் உள்ள அனுமன் கோயிலுக்குச் சென்று, அதன் பிறகு மதியம் 1 மணிக்கு கட்சி அலுவலகத்தில் நடைபெற இருக்கும் செய்தியாளர்கள் கூட்டத்தில் சந்திப்போம்" என்றார். முன்னதாக, மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கியது. தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில், அவருக்கு வரும் ஜூன் 1-ம் தேதி வரையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 2-ம் தேதி நீதிமன்றத்தில் அவர் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கன்னா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு சில முக்கிய நிபந்தனைகளையும் விதித்து உத்தரவிட்டது. அதன்படி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வருவதற்கு முன்பாக ரூ.50,000-க்கான தனிநபர் பத்திரம் வழங்க வேண்டும். அவர் ஜாமீனில் இருக்கும் காலங்களில் முதல்வர் அலுவலகத்துக்கோ, தலைமைச் செயலகத்துக்கோ செல்லக்கூடாது. அவர் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அனுமதி இல்லாமல் எந்த அலுவலக கோப்புகளிலும் அவர் கையெழுத்திடக் கூடாது. டெல்லி மதுபான கொள்கை வழக்கு பற்றி பேசவோ அல்லது தன் மீதான குற்றச்சாட்டு பற்றி விவாதிக்கவோ கூடாது. இந்த வழக்கில் தொடர்புடைய எந்த சாட்சிகளுடனும் தொடர்பு கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.  https://www.virakesari.lk/article/183209
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.