Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தமிழர்களை எளிதாக அடக்கி விட முடியும்: விமல் வீரவன்ச!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் விடுதலைப் புலிகளுக்கு சொல்லிக் கொள்ளும்படியான ஆற்றல் எதுவும் இல்லையென்றும் அவர்களை எளிதாக அடக்கிவிட முடியும் என்றும் அமைச்சர் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியொன்றிலேயே அமைச்சர் விமல் வீரவங்ச புலம்பெயர் விடுதலைப் புலிகள் மற்றும் விடுதலைப் புலிகளின் சார்பு நிலை அமைப்புகள் குறித்து மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் நாடுகளில் செயற்படும் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் மிகமிகக் குறைந்த அதிகாரம் மற்றும் ஆற்றல்களையே கொண்டிருப்பதாகவும், அதனையும் படிப்படியாக இல்லாதொழித்து விட முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் அமெரிக்காவின் ஐ.நா. முன்றலில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் நடாத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மிகக்குறைவானவர்களே கலந்து கொண்டனர். அவர்களும் கனடாவில் இருந்து கொண்டுவரப்பட்டவர்கள்.

கனடாவில் இருந்து விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை ஏற்றிக் கொண்டு வர அறுபது பஸ்கள் தயார் செய்யப்பட்டிருந்த போதும் அவற்றில் ஐம்பது பஸ்களுக்கு ஆட்களே வரவில்லை. அதன் காரணமாக அந்த பஸ்களின் பயணம் கைவிடப்பட்டது. எஞ்சிய பஸ்களிலும் மிகக் குறைவானவர்களே கொண்டு வரப்பட்டனர்.

இவையெல்லாம் புலம்பெயர் தேசங்களில் விடுதலைப்புலிகளின் சக்தி குறைந்து கொண்டு போவதையே எடுத்துக் காட்டுகின்றது. அதன் காரணமாக அவர்களை இலகுவாக அடக்கி விடலாம் என்பதை உறுதியாகக் கூற முடியும் என்றும் அவர் தன் பேட்டியின் போது குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே அமைச்சர் விமல் வீரவங்ச அமெரிக்கா சென்றிருந்த சமயம் அவர் தலைமையில் இலங்கைக்கு ஆதரவாக நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் விமல் வீரவங்ச மற்றும் ஐ.நா.வு க்கான இலங்கைத் தூதுவர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரின் பாதுகாவலர்களையும் சோ்த்து மொத்தமே இருபதுக்கும் குறைவானவர்கள் மட்டுமே ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதைப் பற்றி அமைச்சர் எதுவும் குறிப்பிடாமல் வசதியாக மறந்து விட்டார்.

பதிவு.

Edited by tamil arasu

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

.

போனகிழமை, இரண்டு மில்லியன் செலவழித்து....கனடாவிற்க்கு போராட்டம் நடத்த, விமலுக்கு கூடிய சனம் 20 பேர்.

அதுக்குள்ளை இவனின், துவேச கதைக்கு குறைச்சலில்லை.

மானமுள்ள தமிழன், இருக்கும் வரையிலும்..... ஆயிரம் பிரபாகரன்கள் தோன்றிக் கொண்டே.... இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சுருக்கமாகச் சொல்லப் போவதானால், இது ஒரு கழிசடை!!!

ரோகண விஜயவீராவின் பணத்தைச் சுருட்டிக் கொண்டு லண்டனுக்குப் போய், அங்கு கொஞ்ச காலம் ஒளித்திருந்து விட்டு, திரும்பவும் இனவாதம் பாடுவதற்காகவே இலங்கைக்குத் திரும்பியது இது!!!

புலம்பெயர் தமிழர்களை எளிதாக அடக்கி விட முடியும்
... இச்சிந்தனைக்கு அமைவாக முன் ஒட்டுகுழுக்களை புலத்தில் இறக்கி விட்டு தோல்வி கண்ட சிங்களம் ... இன்று புலிச்சாயம் பூசி முதலைக்கண்ணீர் வடித்தபடி கேபிக்களை இறக்கி விட்டிருக்கிறது ... பார்ப்போம், காலம் பதில் சொல்லும் தானே??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.