Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளுக்கெதிரான யுத்த வெற்றிக் கருத்தரங்கு கொழும்பில் ஆரம்பம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய், 31 மே 2011 12:09

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை அரசு பெற்ற யுத்த வெற்றி அனுபவத்தை பகிர்ந்துகொள்ளும் கருத்தரங்கு இன்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது.

இந்தக் கருத்தரங்கு இன்றுமுதல் ஜூன் மாதம் 2ம் திகதி வரை நடைபெறவுள்ளது. ‘பயங்கரவாத ஒழிப்பு - இலங்கையின் அனுபவம்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெறும் இந்தக் கருத்தரங்கு கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெறுவதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ விசேட உரையாற்றவுள்ளார் என்ற உபய மெதவல தெரிவித்துள்ளார். 46 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு, இராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் யுத்தவெற்றிக் கருத்தரங்கில் பங்குபற்றவுள்ளனர்.

அதேவேளை இலங்கையில் உள்ள வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள், பொலிஸ் மற்றும் பாதுகாப்புப்படையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் சுமார் 300 பேரளவில் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இன்றைய முதல் நாள் கருத்தரங்கு மூன்று பிரதான அமர்வுகளாக பல்வேறு தலைப்புகளில் நடைபெறவுள்ளன. ‘பயங்கரவாத முறியடிப்புக்கான சவால்கள் மற்றும் வாய்ப்புக்கள்’ என்ற தலைப்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், டொக்டர் அஹமட் எஸ். ஹரீம் ஆகியோர் முதல் அமர்வில் உரையாற்றவுள்ளனர்.

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ரொஹான் தலுவத்த தலைமையில் நடைபெறவுள்ள இரண்டாவது அமர்வில் “விடுதலைப்புலிகளின் பரிணாம வளர்ச்சி மற்றும் சர்வதேச வலைப்பின்னல்’ என்ற தலைப்பில் மேஜர் ஜெனரல் ஐ.ஐ.கே.ஜி. ஹெந்த வித்தாரன, லெப்டினன்ட் கேர்ணல் ரி.எஸ். சாலி ஆகியோர் விசேட உரை நிகழ்த்தவுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு விடயங்கள் தொடர்பில் சிரேஷ்ட உயர் அதிகாரிகள் தலைமையில் வெவ்வேறு தலைப்புக்களில் குழுவாக கலந்துரையாடல்கள் இடம் பெறவுள்ளன.

மூன்றாவது அமர்வில் ‘பயங்கரவாத முறியடிப்பு தொடர்பான கண்ணோட்டம்’ என்ற தலைப்பில் சிங்கப்பூரின் நாங்யாங் பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகார மற்றும் பயங்கரவாதத் தடுப்பு தொடர்பான விரிவுரையாளரான ரொஹான் குணரட்ன விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

source:tamilenn.

Edited by tamil arasu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்தரங்கு முடியுறதுக்கு இடையில் ஜநாவில் வைத்து அம்மணமாக்கி போடுவாங்கள் போல இருக்குதே. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka 'anti-terror' summit starts despite boycott

An international seminar in which Sri Lanka aims to share its experience of defeating "terrorism" has begun despite calls for a boycott by rights groups.

Entitled "Defeating Terrorism - Sri Lankan Experience", the event is being attended by 42 countries.

It comes amid allegations of war crimes by the Sri Lankan government in the closing stages of the war in 2009.

Sri Lanka defeated Tamil Tiger rebels fighting for a separate homeland after 26 years of bloody civil war.

Human Rights Watch has said that the three-day event is an attempt at a whitewash. A report commissioned by the UN said there was credible evidence that both sides may have committed war crimes: the Tigers, for instance, by shooting escaping civilians, and the government, for example, by shelling hospitals.

The government has repeatedly denied accusations that thousands of civilians were killed in the latter stages of the war - arguing that it has been unfairly criticised for ending a conflict that claimed an estimated 100,000 lives amid regular suicide bombings of government targets.

'Army expansion'

The seminar is co-sponsored by China and officials say it is being attended by more than 40 nations, including Russia, India and Pakistan.

The US, Britain, Japan, Australia and France are among nations who have decided to stay away from the event.

Defence Secretary Gotabhaya Rajapakse, brother of President Mahinda Rajapakse, told the seminar's opening session on Tuesday that mass army recruitment was key to ending the decades-long civil war.

"We had a large but essential expansion of the army. It grew from 120,000 to 220,000 (between 2005 to 2009)," he said.

He added that he and the president had displayed a strong will to crush the Tigers. Sri Lanka says that the three-day conference could benefit other countries struggling with insurgencies.

The BBC's Charles Haviland in Colombo says that the government and military portray their defeat of Tamil Tiger rebels as a source of pride and a model for others to follow.

They say Sri Lanka is the "only country to defeat terrorism" and that the army rescued hundreds of thousands of civilians, inflicting minimum civilian casualties.

On Monday senior UN officialsaid he believes controversial video footage, circulated on the internet and broadcast by the UK-based Channel 4 News, is authentic.

The video appears to show Sri Lankan soldiers killing captured and unarmed Tamil Tiger rebels at close range.

Sri Lanka denies the accusation, insisting the video is fake and that the UN probe into the video is "biased."

bbc.co.uk

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.