Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களை தாக்கிய அரச பயங்கரவாதம் தற்போது தெற்கையும் பதம் பார்க்கின்றது:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

02 ஜூன் 2011

தமிழர்கள் அனுபவித்த அந்த வலியை தெற்கு உணர ஆரம்பித்திருக்கிறது - மனோ கணேசன்

கட்டுநாயக்க இளைஞர் கொலை குறித்து மனோ கணேசன்

வட-கிழக்கிலும், கொழும்பிலும் வாழ்ந்த தமிழர்களை தேடி அழித்த அரச பயங்கரவாதம் இன்று தென்னிலங்கையையும் பதம் பார்க்கின்றது. இதன் அடையாளமே கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள இளைஞனின் மரணமாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க சம்பம் தொடர்பில் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பொலிஸாரின் தாக்குதலினால் படுகாயத்திற்கு உள்ளாகி மருத்துவமனையில் மரணமடைந்துள்ள ரொஸான் சானக்க என்ற இளைஞனின் படுகொலையை ஜனநாயக மக்கள் முன்னணி மிக கடுமையாக கண்டிக்கின்றது.

சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழிற்சங்க உரிமைகளுக்காக போராட்டங்களை முன்னெடுத்த தொழிலாளர்களை, தொழிற்சாலைக்குள் அத்துமீறி புகுந்து பொலிஸார் தாக்கியுள்ளனர். பொலிஸாரை தாக்கும்படி ஏவிவிட்டது எவர் என்பது முழு நாடும் அறிந்த சங்கதியாகும். மிக விரைவில் ஓய்வு பெற இருந்த பொலிஸ் மாஅதிபரை கட்டாய ஓய்வுபெறச் செய்து, இந்த உண்மையை அரசாங்கத்தினால் மூடி மறைத்துவிட முடியாது. அதேபோல் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு அரசியல் சாயம் பூசி உண்மையை திசைத்திருப்பி விடுவதற்கும் இடமளிக்க முடியாது. உழைக்கும் வர்க்கத்தின் ஓய்வூதியத்தை கொள்ளையடிக்கும் கபட திட்டத்தை எதிர்த்தே தொழிலாளர்கள் வீதிக்கு இறங்கினார்கள் என்பதை புத்தியுள்ள எவரும் அறிவார்கள்.

கட்டுநாயக்கவில் மரணமடைந்த மற்றும் காயமடைந்த பெருந்தொகையான சிங்கள இளைஞர்களை பார்க்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவுப்படுத்துகின்றது. வடகிழக்கிலும், இன்று தெற்கிலும் நடைபெறும் படுகொலைகளை நாங்கள் கண்டிக்கின்றோம். ஆனால் அன்று வடகிழக்கிலே தமிழ் மக்கள் அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட பொழுது தென்னிலங்கையின் பெரும்பான்மை அரசியல் கட்சிகள் அவற்றை கண்டிக்கவில்லை. பல கட்சிகள் ஒருபடி மேலே போய் தமிழ் மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்தினார்கள். அதிகபட்ச போர் நடவடிக்கைகளுக்கு கைத்தட்டி ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினார்கள். கொல்லப்பட்ட அனைத்து தமிழர்களையும் பயங்கரவாதிகள் என பட்டம் சூட்டி மகிழ்ந்தார்கள்.

கொழும்பிலே தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட பொழுது, காணாமல் போகடிக்கப்பட்ட பொழுது, பெருந்தொகையில் கைது செய்யப்பட்ட பொழுது, தமிழ்-முஸ்லிம் வர்த்தகர்களிடம் அச்சுறுத்தி கப்பம் வசூலிக்கப்பட்ட பொழுது அவற்றுக்கு எதிராக ஜனநாயக மக்கள் முன்னணியும், மக்கள் கண்காணிப்புக்குழுவும் ஆர்ப்பாட்டம் செய்தப்பொழுது, ஒட்டு மொத்தமான பெரும்பான்மை கட்சிகள் எங்கள் போராட்டங்களை புரிந்துகொள்ள மறுத்தார்கள். என்னை தனிப்பட்ட முறையிலே புலி என்று முத்திரை குத்தி பாராளுமன்றத்திலேயும், நாடு முழுக்க மேடைகளிலும் பிரசாரம் செய்தார்கள். இன்று தமிழர்கள் அனுபவித்த அந்த வலி தெற்கிலே ஆரம்பமாகிவிட்டது. பொலிஸாரினதும், பாதுகாப்பு படையினரதும் அத்துமீறிய செயற்பாடுகள் தென்னிலங்கையிலே கடந்த சிலவாரங்களுக்குள் பல நடந்தேறிவிட்டன.

இவை அரசாங்கத்தின் இராணுவ முனைப்பை படம்பிடித்து காட்டுகின்றது. இதன் மூலம் தமிழ் மக்கள் அனுபவித்த வலி தென்னிலங்கைக்கு தெரியவருகின்றது. இந்த செய்தியையே இச்சந்தர்ப்பத்தில் சிங்கள மொழி மூலமாக, சிங்கள ஊடகங்களுக்கும் நாம் தெரிவித்துக்கொள்கின்றோம்.

source:GTN.

Edited by tamil arasu

.. ஒரு சில சூடுகள் ... சில ரவைகள் ... ஒரே ஒரு கொலை ... இன்று தெற்கே அல்லோலப்படுகிறது!!! ... உடன் விசாரணையாம்!!!சிங்கள பொலிஸ் மா அதிபர் கூட பதவி விலகலாம்!!! அதியுச்ச மருத்துவ சேவையாம்!!! ... தொடர்கிறது!!! ...

... அதற்கு மேல் எதிர்க்கட்சியாம் ... "Who gave orders to use live bullets?-UNP" .... இப்படி வேறு கேள்வி மேல் கேள்வி கேட்டிறது!!!!!!!!!!!!

... ஆனால் ... காலா காலம் தொட்டு இன்று வரை மிருகவதைகள் போல் வடகிழக்கில் ... லட்சக்கணக்கில் ... கேட்பாரற்று ... தொடர்கிறது!!! ... ஒரு விசாரணையாவது??? ஒரு பதவி விலகலாவது??? இல்லை மருத்துவ உதவிகளாவது??? ..........????????

... ஆனால் எம்மில் இருக்கும் கனவான்களோ ... ஒன்றாய் வாழ்வோமாம்!!!!! அவன் வாழ வைப்பானாம்!!!!! பழசுகளை(நடப்பவைகளையும்) மறக்கட்டாம்!!!!

... நீ தமிழனாக இல்லாவிட்டாலும் ... ஒரு மனிதனாகவாவது சிந்தி!!!

Edited by Nellaiyan

IMG_9364-main-600-1.jpg

Lipton2.jpg

katunayaeka3.jpg

katunayaeka4.jpg

katunayaeka6.jpg

... தெற்கில் நடந்த ஒரு கொலைக்கு இத்தனை ஆர்ப்பாட்டங்கள்!!!!!!!!!! .... அங்கு வடகிழக்கில் நடந்த.நடந்து கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான கொலைக்களுக்கு ஒரு ஆர்ப்பாட்டம் அங்குள்ளவர்கள் நடத்த முடியுமா????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலாகாலமாக அடைகாத்துக்கொண்டிருந்த சிங்கள கிறிஸ்தவ சகோதரிகளும் பதாதைகளுடன் வீதிக்கு இறங்கி விட்டார்கள்.ஜெயவேவா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.