Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தாபயவுக்கு ஜேர்மனி தூதுவர் கடுந்தொனியில் எச்சரிக்கை – வெடிக்கிறது மற்றொரு இராஜதந்திர மோதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாபயவுக்கு ஜேர்மனி தூதுவர் கடுந்தொனியில் எச்சரிக்கை – வெடிக்கிறது மற்றொரு இராஜதந்திர மோதல்

வெள்ளி, 03 ஜூன் 2011 06:21

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீது சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக, சிறிலங்காவுக்கான ஜேர்மனி தூதுவர் ஜீன்ஸ் புளொட்னர் கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு, எச்சரிக்கை விடுக்கும் வகையில்- கடும் தொனியிலான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இதன் பிரதி ஒன்றை சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில், மிகையான பலத்தை தொழிலாளர்கள் மீது பிரயோகிக்கக் கூடாது என்று பாதுகாப்புச் செயலரை எச்சரித்துள்ள ஜேர்மனி தூதுவர் ஜீன்ஸ் புளொட்னர், சிறிலங்கா காவல்துறையினர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் எல்லைமீறி நடந்து கொண்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இது சிறிலங்காவில் ஜேர்மனியின் தற்போதைய மற்றும் எதிர்கால முதலீடுகளில் எதிர்மறையான பாரிய தாக்கத்தை ஏற்படக் கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள பல ஜேர்மனி நிறுவனங்கள் சிறிலங்கா காவல்துறையினரின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறப்பு அதிரடிப் படையினர் கூட ஜேர்மனி நாட்டு நிறுவனங்களின் கட்டங்களுக்குள் புகுந்து தொழிலாளர்களைத் தாக்கியதாகவும், அவர் தனது கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் உடனடியாக விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

ஆனால் இதுபற்றிக் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அரசின் மூத்த அதிகாரி ஒருவர், ஜேர்மனி தூதுவர் புளொட்னர், இந்த விவகாரம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கே கடிதம் எழுதியிருக்க வேண்டும் என்றும், பாதுகாப்புச் செயலருக்கு அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஜேர்மனித் தூதுவர் விடுத்துள்ள இந்த எச்சரிக்கை கோத்தாபய ராஜபக்சவை பெரிதும் எரிச்சலடைய வைத்துள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, வழக்கத்துக்கு மாறாக- ஜேர்மனித் தூதுவர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எழுதியுள்ள கடிதம், கட்டுநாயக்க தாக்குதல்களால் சிறிலங்காவில் முதலீடு செய்துள்ள நாடுகள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்துவதாக கொழும்பு இராஜதந்திரி ஒருவர் கூறியுள்ளார்.

tamilenn

இந்த மண்.... ..கட்டி தூதுவர்களுக்கு சிங்களவர் சிங்களவர்க்கு அடித்தால்தான் மனிதாபிமானம் சிங்களவர் தமிழர்க்கு அடித்தால் அது பயங்கரவாதம் ?

தமிழர்க்கு இவ்வளவு அட்டூளியம் இப்போதும் கூடத்தான் நடக்கின்றது. அப்போது கோத்தபாயவுடன் ஏன் கதைக்கவில்லை. எல்லோரும் பொ.பொ. தான்.

Edited by உமை

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன் முதலீடு செய்யாவிட்டால் என்ன,இந்தியாவும் சீனாவும் முதலீடு செய்யும் கட்டுநாயக்காவில்,தொழிலாளர் போராட்டம் வந்தால் இந்தியாவின் காவல் படையினர் அவர்களை அடக்குவார்கள். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

Posted by குணா on 03/06/2011 in செய்தி.

சுதந்திர வர்த்தக வலயத்தில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது இடம்பெற்ற பொலிஸ் தாக்குதல்கள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு இலங்கைக்கான ஜொ்மன் தூதுவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனியார் துறை ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக கட்டுநாயக்கவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது பொலிசார் வரம்பு மீறி நடந்து கொண்டுள்ளதுடன், பொலிஸார் அளவுக்கதிமான முறையில் அங்கு குவிக்கப்பட்டிருந்ததாகவும் ஜொ்மனியத் தூதுவர் ஜென்ஸ் ப்ளொட்னர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கலகங்களை அடக்குவதில் உலகெங்கும் பொலிசார் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகின்ற போதிலும், இலங்கையில் அவ்வாறான விடயங்களின் போது அளவுக்கதிகமான முறையில் பொலிசாரின் அதிகாரங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் சுதந்திர வர்த்தக வலயத்தினுள் அமைந்திருக்கும் நிறுவனங்களின் உட்புறம் அத்துமீறிப் பிரவேசித்து விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட எச்சரிக்கை விடுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் என்பன குறித்தும் அவர் கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார்.

source:Eelam press.

Edited by tamil arasu

சிங்கள நாட்டின் பொருளாதார முதுகெலும்பாக உள்ளது இந்த வர்த்தக வலயம். இங்கே ஏற்பட்டுள்ள இந்த நிலைமை சிங்கள நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்ககூடும்.

ஐரோப்பாவின் ஜி.எஸ்.பி.பிளஸ் நிறுத்தப்பட்ட பின்னரும், அந்த நாடுகளுக்கு வரிச்சலுகை இல்லாமல் ஏற்றுமதி நடக்கின்றது. அமெரிக்காவுக்கும் ஜி.எஸ்.பி.. சலுகை உள்ளது. இவை இந்த மனித உரிமைஐத்தல் மீறல்கள், போர்க்குற்றங்கள் அடிப்படையில் நிறுத்தப்பட (வைக்க) வேண்டும்.

Hon. Jens Plötner

Grman Ambassador to Sri Lanka

to : info@colombo.diplo.de

Subject : Labor rights in Sri Lanka

Thanks for the German Ambassador for standing the rights of working people and voicing against elements in the government of Sri Lanka.

The labour rights in Sri Lanka have witnessed another set back. The rightful protesters have faced live ammunitions; one life has also been taken away. Very little justice has been done to the victim and more importantly people’s rights have been threatened. We have to strike the right balance in between commerce and people's rights, so that at the end of the day people's life can be better. And we thank Germany for just doing that.

Sincerely,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.