Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted by சோபிதா on 04/06/2011

பெலிஜியம் நாட்டின் பிரசெல்ஸிலுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தின் ஐக்கிய இடது/நோடிக் கிறீன் இடது கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாநாட்டில் இலங்கையில் தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதேசமயம், இலங்கையிலுள்ள சகல சிறுபான்மையினரதும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் வட,கிழக்கில் இராணுவம் நிலைகொண்டிருக்கும் தளங்களை அரசாங்கம் மூடிவிட வேண்டுமெனவும் தமிழ் மக்களின் தேசிய ஜனநாயக அபிலாசைகளுக்கு தீர்வு காண்பதற்கான அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமெனவும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக ஆங்கில இணையத்தளமொன்று தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் மனித உரிமைகள் உப குழுவின் தலைவர் கெய்டி ஹோத்தலா முக்கிய உரையை ஆற்றியுள்ளார்.

ஐரோப்பிய ஐக்கிய இடது/நோடிக் கிறீன் இடது கட்சியானது இலங்கைக்கு உண்மையைக் கண்டறியும் குழுவை அனுப்ப வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மற்றும் இலங்கையையும் புலம்பெயர்ந்த நாடுகளையும் சேர்ந்த தமிழ்,சிங்கள அரசியல் பணியாளர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இலங்கையின் மோதலுக்கான மூலங்களும் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையின் முக்கியத்துவம், யுத்தமும் அதன் பின்னரான உடனடி நிலைமையும். இறுதிச் சமாதானத்துக்கான எதிர்பார்ப்புகள் என்ன? என்ற தலைப்பிலான மூன்று அமர்வுகள் மாநாட்டில் இடம்பெற்றுள்ளன.

மாநாட்டில் கலந்துகொண்ட ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களால் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் பெயர் விபரங்களை இலங்கை அரசாங்கம் வெளியிட வேண்டுமென மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆயுதங்கள், இராணுவத் தளபாடங்களை விற்பனை செய்தல், இலங்கைப் படையினருக்குப் பயிற்சியளித்தல், வர்த்தக நிதி ஆதரவை அரசாங்கத்துக்கு வழங்குதல் என்பவற்றுக்கு எதிரான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

source:Eelam press.

Edited by tamil arasu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொடுப்பதெல்லாம் கொடுத்தான் (ஆயுதம்)

ஏதுக்காகக் கொடுத்தான் (தமிழனைக்கொல்ல)

நடந்ததெல்லாம் தெரிந்தும்

தடுக்காமலே பார்த்திருந்தான் (இனப்படுகொலையை)

தமிழனெல்லாம் கொல்லப்பட்டான்

மௌனமாக இருந்தான்

இன்ற போர்க்குற்றம் கையிலெடுத்தான்

ஏன் எடுத்தான் (ராஜபக்ஷ தங்களுக்கு அடிபணியாமல் சீனாவுடன்)

இது என்ன தமிழனின் நலனுக்காகவா?

இல்லை அவர்கள் நலனுக்காகவா?

21ம் நூற்றாண்டில் உலகம் செய்த கொடுமை

இதைவிட ஏதும் இருக்குமா?

இனிமேல் தடை யாருக்கு?

நடத்தவேண்டியதையெல்லாம் நடத்தி முடித்துவிட்டான்

நாங்கள் வாழுந்து கொண்டிருக்கும் உலகம்

பயங்கரவாதிகளின் கைகளில் உள்ள உலகம்

ஆனால் பயங்கரவாதிகள் யார்? நீதி கேட்பவர்கள்

ஆனால் ஆளுபவர்களே பயங்கவாதிகள்

எங்கே நீதி கிடைக்கப்போகின்றது.

ஜ. நா. தன் கடமையைச்செய்யத்தவறி இருக்கின்றது.

பிறகு ஏன் ஜ.நா.?

ஜோர்ச் புஷ் ஜ. நா வை நோக்கி மூத்திரம் பெய்ததது சரிதானோ?

உலகம் இன்று வல்லவன் கையில் சிக்கிய பம்பரம் தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.