Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகள் தற்போது ஒரு ஆயுதக்குழு அல்ல – தடையை எதிர்த்து வாதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Monday, June 6, 2011, 22:58சிறீலங்கா

விடுதலைப்புலிகள் தற்போது தமது ஆயுத நடவடிக்கைகளை கைவிட்டுள்ளனர் எனவே அவர்கள் மீது தொடரப்படும் தடை அவசியமற்றது என அம்ஸ்ரடாம் நாட்டை தளமாகக் கொண்ட போகெல் சட்டவாளர் குழுவின் சட்டவாளர் விக்டர் கோப் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள தமிழ் மக்கள் சார்பில் விடுதலைப்புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை எதிர்த்து கடந்த வியாழக்கிழமை (02) அவர் மேற்கொண்ட வாதத்தின் போதே இந்த கருத்துக்களை அவர் முன்வைத்துள்ளார்.

முள்ளிவாய்க்காலின் பின்னர் விடுதலைப்புலிகள் தமது ஆயுதச் செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டுள்ளனர். தமிழ் மக்களின் அரசியல் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அரசியல் வழிகளிலும், வன்முறைகள் அற்ற போராட்டங்களிலுமே அவர்கள் ஈடுபடுகின்றனர்.

இந்த உரிமைகள், பேச்சுச்சுதந்திரம், ஒன்று கூடும் சுதந்திரம், அமைப்புக்களை உருவாக்கும் சுதந்திரங்கள் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது. அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட விடுதலைப்புலிகள் அமைப்பு விரும்புகின்றது. ஆனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதற்கான வழிகளை ஏற்படுத்தவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, குருதிஷ் பி.கே.கே என்ற அமைப்பு மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த தடையையும் கோப்பின் நிறுவனமே வாதாடி நீக்கியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழ்த்தாய்.

Edited by தமிழ் அரசு

அம்ஸ்ரடாம் நாட்டை தளமாகக் கொண்ட போகெல் சட்டவாளர் குழுவின் சட்டவாளர் விக்டர் கோப் தெரிவித்துள்ளார்
.

அம்சர்டாம் நகரத்தைத்தளமாகக்கொண்ட நெதெர்லாந்து நாட்டின் போகேல் சட்டவாளர் குழுவின் சட்டவாளர் விக்டர் கோப் நிச்சயமாக இந்த வழக்கில் வெல்லுவார். ஏனெனில் நானும் இந்க நாட்டில் வாழும் ஒர் தமிழன் என்பதனால் அவரைப்பற்றி எனக்கு தெரிந்ததினால்த்தான் இப்படி நான் உறுதியாக எழுதுகிறேன்.

இதனிடையே, குருதிஷ் பி.கே.கே என்ற அமைப்பு மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த தடையையும் கோப்பின் நிறுவனமே வாதாடி நீக்கியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழ்த்தாய்.

அவர்கள் மீது இப்போதும் தடை இருக்கின்றது

http://en.wikipedia.org/wiki/List_of_countries_and_organizations_that_list_the_PKK_as_a_terrorist_group

http://en.wikipedia.org/wiki/Kurdistan_Workers'_Party#cite_note-6

http://en.wikipedia.org/wiki/List_of_designated_terrorist_organizations#cite_note-13

இந்த வழக்கை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் ஏற்றுள்ளது

EU Court of Justice takes up LTTE case

The European Court of Justice, on Tuesday, informed Victor Koppe, the lawyer of the LTTE that the Court has taken up the case “Liberation Tigers of Tamil Eelam (LTTE) vs Council of the European Union” (Case T-208/11-9) for hearing. The Registrar of the General Court informed the lawyer that the case has been assigned to the Court's Second Chamber. On behalf of LTTE Europe, Mr. Victor Koppe, has filed the case against the European Union that its ban of the LTTE was illegal.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=34038

  • கருத்துக்கள உறவுகள்

சகல இடங்களிலும் தடைகள் நீக்கப்பட முயற்சிக்க வேண்டும்.

சகல இடங்களிலும் தடைகள் நீக்கப்பட முயற்சிக்க வேண்டும்
.

நிச்சயம் எங்கும் தடைகள் உடைத்தெறியப்படும் ஏனெனில் நாம் மீண்டும் போராடத்தொடங்கி விட்டோம்.

தமிழரின் கொடியாம் அழகான இந்தக்கொடிக்கு மீண்டும் இந்த உலகம் மதிப்பும் மரியாதையும் தந்து தலை வணங்கும்.

post-7765-0-48469800-1307572114_thumb.pn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.