Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூறாண்டுகளாக பேய் காட்டுவதே தூதரின் இலக்கணம் - அதையும் தாண்டி இது நம்முடைய செயல் கணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நூறாண்டுகளாக பேய்காட்டுவதே தூதரின் இலக்கணம் - அதையும் தாண்டி இது நம்முடைய செயல் கணம்

Jun_09_b.jpg

இது எதிர்பார்த்ததுதான்.. என்றாலும் இதில் மேனனுடைய ஆளுமையை கொஞ்சம் சீர் தூக்கி பார்ப்போம்.

அதாவது பழையபடி புலிகளுடைய பாணியில் எடுத்தியம்புகிறார் தமிழர் சிக்கலுக்கான தீர்வு தமிழர்களால் தான் தீர்க்கமுடியும். என்று கூறுகிறார் . அதாவது இவர்கள் ஏற்படுத்திய மாகாண சபைக்கான தீர்வை கூட இப்போது குறைந்த பட்ச தீர்வாக அதட்டி சொல்லமுடியாத நிலைமை.. போக கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இதில் உள்ள ராஜதந்திரம் தெளிவாக விளங்கும்.அதாவது தீர்வு தீர்வு என கூவி கொண்டே இழுத்தடித்து தொடர்ந்து தமிழர் தரப்பை தனக்கு பகடை காய்களாக பயன்படுத்துவது. இதை பயன்படுத்தி தொடர்ந்து சிங்களத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவது.இதில் மேனனுக்கு தமிழர் விரும்பும் தீர்வை சிங்களம் கட்டாயம் தராது என தெரியும் இருந்தாலும் கூவிக்கொண்டே தனது இருப்பை வியாபாரத்தினை நிலைநிறுத்தி கொள்வதானதந்திரமே ஒழிய வேறு ஒன்றும் இல்லை

http://www.youtube.com/watch?v=ZLSjQ3FPhVM

இழுத்தடிப்பு உத்தியின் இலக்கணம் உணர்ந்த புலிகள்

கிந்திய அரசியல்

-------------------------------

தேசிய கட்சிகளின் பார்வைக்கு வருவோம்.. தமிழ்நாட்டில் காங்கிரஸை ஒழித்தாகிவிட்டது.அவர்கள் பாடம் படித்து இருப்பார்கள் என்று நீங்கள் நினைப்பீர்கள் ஆனால் நீங்கள் ஒரு வெத்து வெட்டு. காசு கொடுத்து மக்களை வாங்க முடியவில்லை போகட்டும் அந்த மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட 240 கோடிகொடுத்து ஒரு எம்.பிய வாங்க முடியுமா?முடியாதா?போக ஜனநாய்கம் என்பது மணமேடை என்றால் ஒன்று செவிடியை திருமணம் செய் அல்லது குருடியை திருமணம் செய் என்பதாகும்.இதில் ஆழமான புரிதல் வேண்டும்.காங்கிரஸ்க்கு மாற்று பாஜாக அல்ல..என்று ஆதரவாக கூவுபவர்கள் நாளை ஆட்சிக்கு வந்தால் மறுபடியும் பழைய குருடி கதவை திறடி கதைதான். போக அப்படியே ஆட்சிக்கு வந்தாலும் எதிர்ப்பு நிலை எடுக்காவிட்டாலும் சிக்கலை ஆறப்போடுவது, காலத்தினை கடத்துவது என்றுதான் இருக்கும். நிர்ணயக்கபட்ட அஜண்டா ஒன்று பல்வேறு மலையாளிகளால் தயாரிக்கபட்டு சவுத் பிளாக்கில் அச்சடித்து பிரதமருக்கு கொடுக்கபட்டு பிரைன் வாஸ் செய்யபடும் அல்லவா?அந்த அஜண்டாவின் படிதான் செயல்பட வேண்டும்.

அஜண்டாவின் முக்கிய அம்சம் .. சீனா காலூன்றிவிடும் பாகிஸ்தான் பாய்விரித்துடும் என்பதுதான். இப்போது மட்டும் என்ன நடக்கிறது என்று யாரும் கேட்கபாடாது! ஏனெனில் சீனா பாய்விரித்தது ஈழத்தில் தானே தவிர இந்தியாவில்.. அல்ல.. போக தமிழ்நாட்டுக்கே வந்து சீனன் டேரா போட்டாலும் கிந்திய அரசு அப்படியே வீர சூரமாக போரிட்டு விடும் என்று மனப்பால் குடிக்கபடாது.. அப்போதும் அதே பஞ்ச் டயலாக் தான் வெளியிடுவார்கள் " பேசி தீர்க்கலாம்"..

போக கிந்திய அரசியலின் தத்துவம்

வலியவனின் காலில் விழு

எளியவனை நைய புடை

என்பதாகும்.

தமிழக அரசியல்

-----------------------------

அம்மா இப்போது அறிவிக்கை விட்டு ஆறுதலாக இருந்தாலும் டெல்லி அரசியலில் தனது இருப்பை இன்னும் போதிய எம்பிக்கள் இல்லாமையால் இன்னும் உறுதி செய்யமுடியவில்லை.போக ராஜ்ய சபா தேர்தல் வந்தால் மேலவையில் கொஞ்சம் எம்பிக்கள் இருப்பை உறுதி செய்யலாம்..இவரையும் முழுமையாக நம்ப இயலாது தனது ஆளுமைய நிலைநிறுத்த எந்த லெவலுக்கும் போக கூடியவர். எழுந்திருக்கவே முடியாத சென்னாரெட்டி என் புடவையை உருவினார் .. என்று அளந்தவர்.. போக தமிழக மக்கள் நிலமையும் தமிழக அரசியல் நிலைமையும் ஒன்றே. தமிழக மக்கள் எவ்வாறு திமுக மற்றும் அதிமுகா என்று இரண்டில் ஒரு கொள்ளி கட்டைய மாற்றி மாற்றி சொறிபவர்களாக இருக்கிறார்க்ளோ அவ்வாறே தமிழக அரசியல் வாதிகளும் தேசிய அரசியலில் இரண்டு கட்சிகளோடு சேர்ந்தே ஆகவேண்டிய கடப்பாட்டில் உள்ளார்கள்.. காரணிகள் ஆட்சிகளைக்கபடும் இர்ண்டு பதவி ஆசை.

மக்களின் மனதறிந்து அதன் வழியில் நடப்பவர்கள் அல்ல இங்குள்ளவர்கள். தமது மனதறிந்து நடந்துவிட்டு பிறகு மக்களுக்கு சால்ஜாப்பு சொல்பவர்கள்.. இன்னும் பிரியலயா? புலிகளை அழிக்கபடாது தமிழிழீழம் அடையவேண்டும் என்பது தமிழ்நாட்டில் 98% மக்களது எண்ணம்.இந்த 2% பிறமொழி மாநிலத்தவர்கள் மற்றும் டெல்லி குடும்பத்தின் வம்சாவளிகள்(காங்கிரஸ்காரர்கள்). ஆனால் என்ன நடந்தது? அனைத்தும் முடிந்துவிட்டது.. இப்போது கூட கருநாவை கோபாலபுரத்தில் தட்டி எழுப்பி ஏன் இப்படி நடந்து கொண்டிரீர்கள் என கேளுங்கள்... அர்த்தராத்த்ரியிலும் சொல்லுவார்.. அது சகோதர சண்டையப்பா! நான் 199999999999999999 முதற்கொண்டு கூவிகொண்டிருக்கென் உனக்கு தெரியுமா என்பார்..

மாற்று அரசியல் தமிழ்நாட்டில் எப்படி இருக்கது என்றால் ஒரே குப்பை கூளம்.. அனைவராலும் ஒரு நேர் கோட்டில் வரமுடியாது... மார்ஸ்சிட்டு இவர்கள் நேரடியாக மார்ஸ்ட்ட்டின் வம்சாவளிகள் இவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களாவர். சிபிஐ இவர்கள் ரஸ்யாவில் இருந்து நேரடியாக வ்ந்தவர்களாவர். இது போக கட்டாயம் முஸ்லீம்கள் பற்றி சொல்லியே ஆகவேண்டும்.. தேர்தல் பிரச்சாரத்தின் போது ஈழசிக்கல் பற்றி பேசினால் .. இங்குள்ளவர்கள்(செஞ்சி) செத்தவன் செத்தான் அதையே ஏண்டா இங்கு இன்னும் சொல்லி கொண்டு இருக்கிறீர்கள்.. என... நம்ம அவ்வை சண்முகி படத்தில் டெல்லி கணேசுக்கு ஊத்தி விட்டு அடிப்பது போல. நன்றாக ஊத்திவிட்டு கும்மாகுத்து குத்து குத்தி விளக்கியபிறகுதான் நம்து நிலைப்பாட்டை ஏற்று கொண்டார்..

அது என்னமோ தெரியல.. இந்த மொட்டு சு காரன்களுக்கு மட்டும் ஏனோ அப்படியே வளைகுடாவில் இருந்து நேராக செஞ்சிக்கு லேண்டாகிட்டதா நெனப்பு. அங்குள்ளவர்களுக்கு எதாவது என்றால் கூட்டமென்ன ஆர்பாட்டமென்ன? இவன் அவன கண்டுகிற அளவுக்கு கூட அவனுக்கு இவனுங்க்ள தெரியுமா என்றால் தெரியாது! பெரும்பாலான கைத்தடிகள் இவ்வாறுதான் உள்ளர்கள் காரணம் லாஜிக் ஈசி.. என்னுடைய ஊர் செஞ்சிதான் அனைத்து என ... சார்ந்த மக்களுக்கும் புனிதமான இடமாகும் .அனைவரும் வந்து இங்கு ஒரு முறையாவது செல்லவேண்டும் .. தீர்ந்தது சிக்கல்..

உலக அரசியல்:

---------------

உலக அரசியலும் நான் முன்னர் குறிப்பிட்டது போல இருகோட்டு தத்துவத்தின் படியே தங்களது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தமக்கு சார்பானவர்களை இரண்டில் ஒன்றினை தேர்வு செய்து பயணக்கின்றன. அதில் தெளிவான புரிதல் வேண்டும். சரி ராஜபக்சேவை கூண்டில் ஏற்றியாகி போட்டுது அடுத்தது இவர்(ரணில்) எதாவது செய்வார் என்று கைகாட்டுவார்களே ஒழிய எதாவது செய்வார்கள் என்று எண்ண்படாது.. அதும் இப்போது உள்ள சூழ்நிலையில்!! உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு தலையெழுத்தில்லை.. சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஏதாவது கிடைக்குமா என்று குழப்பிய குட்டையில் மீன் பிடிக்க வல்ல்வர்கள்..

கடபாடுகள்:

-------------------

பன்னாட்டு நிறுவனங்களின் முகமைத்துவர்களாக மாறி ஈழத்தில் வரையறுக்கப்பட்டுள்ள நிலங்களில் வேரூன்ற செய்தல்

என்ன ஏது என்று தெரியாமலே சுயநிர்ணயம் அது இது என்று அளந்து போடாமல் ஏற்கனவே இவை நடைமுறைபடுத்தபட்ட நாடுகள் ஒன்றின் மாதிரி முறைமைய வலியுறுத்த்தல்.

சர்வதேச நாடுகளில் தமக்கென ஒரு தொலைகாட்சி மற்றும் வானொலி ஊடாக தம்மை நிலை நிறுத்தி கொள்ளுதல்.

பொது நிதியம் ஒன்றினை உருவாக்கி ஏழை நாடுகள் மற்றும் இயற்கை சீரழிவுகளுட்பட்ட நாடுகளுக்கு 5 10 விட்டெறிதல்..

சிங்களத்திற்கு போட்டியாக துரோக நலவாரியம் தனியாக தொடங்கபட்டு துரொகிகளுக்கு எதிர்வு கூறாமல் இருக்க மாதம் தோறும் தகுந்த கவனிப்புகள்..

இந்த விடயத்தில் கூச்ச நாச்சபட ஒன்றுமே இல்லை. இங்க ஆளுங்கட்சிக்கான வாக்கெடுப்பு என்றால் அதற்கு முந்திய மாதத்திலே ஓட்டல் ரூமில் எம்.பி எம்.எல்.ஏக்களை கூட்டி கொண்டு போய் கூத்தடிப்பது இல்லையா?

புதிய சிங்கள் ஆதரவாளர்களை உருவாக்குதல்.. உங்களுக்கு ஆதரவு என்றால் அவர்க்ளுக்கு துரோகிதானே..?

அப்பூ காசுபணம் கொடுத்து துரோகிய அவனால மட்டுந்தான் உருவாக்க முடியுமா ஏன்? உங்களால முடியாதா? லாஜிக் இடிக்குதே!!அவனுங்கள் எல்லாம் என்ன அரிசந்திரன் எதிர் அப்பார்மென்டில் குடியிருப்பவர்களோ?

sumo.jpg

தமிழ்நாட்டில் ஈழ உணர்வாளர்களுகு உதவுதல் இந்த அம்சம் மிக முக்க்யமானது.. ஏனோ தோழர் தியாகு அவர்கள் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் தமது பிரச்சாரத்திற்கு டாட்டோ சுமோ கேட்டதும் சில பச்சலை புடுங்கிகள் .. எமது மக்கள் அங்கு கஸ்டபடுகிறார்கள்.. உங்க்ளுக்கு என்ன டாட்ட சுமோ என்று கூவியதும் நினைவுக்கு வ்ந்து தொலைக்கிறது.. ஏண்டா டாட்டா சுமோ என்ன ஒன்றை கோடியா விக்குது?? 2 கேண்டில் தட்டி தடவி சால்ரிங்கு வெல்டிங்கு பண்ணினாலும் 1 லட்சைத்தாண்டாது(பழையமாடல்)இன்று காங்கிரசு 5 சீட்டு வந்துத்ட்டான்.. இவரகளை போன்ற்வர்களுக்கு உதவி செய்திருந்தால் குறைத்திருக்கலாம் அல்ல்வா?

போக சிலது என்னால் நம்பமுடியாமல் உள்ளது.. இவரின்ட் மனைவி தாமரை மிகப்பெரிய திரை உலக பாடல் ஆசிரியர். இவரால செகெண்டு டாட்டா சுமோ வாங்கி தரமுடியாதுள்ளது என்பது வியப்பிகுரியது. சிலவேளை லட்சிய புருசனாக இருக்க்கலாம். அவர்கள் குடும்ப விவகாரத்தில் சொல்ல வேண்டாம்...

போக இந்த புரட்சியின் ஆய்வின் படி வெளிநாட்டில் இருந்து தாயக்த்திற்கு உதவவுபவன் சைலைண்டாகத்தான் இருக்கான் இந்த கொள்கை இல்லாத வெத்து வெட்டு கோஸ்டிகதான்.. ரொம்ப ஓவராத்தான் நேரத்திற்கு கேற்ப மாற்றி மாற்றி சவுண்டு விடுகின்றன.. இந்த இனம் இனம் போன்ற கோசங்கள் ஒரளவுக்குதான் அதிஉட்சமாக சில நேரங்களில் எடுபடும். அது காங்கிரசு கருவருக்கப்பட்ட இப்போதை சூழல் இதை தொடர்ந்து தக்கவைக்க பிரச்சாரம் செய்பவர்களுக்கு தகுந்த பொருளாதார உதவிகள் தேவை. இமயம் தொலைகாட்சியில் நியூஸ் சிலாட்ட்டில் வாங்கி வைக்கோ பேசுவதால் ஏதும் ஆக போவது இல்லை... சீமான் ஊர் ஊராக சென்று கத்துவதாலும் பயன் இல்லை.. தொடர்ந்து இவ்வாறே செய்து கொண்டிருக்கபடமாட்டார்கள் .. தக்கவைப்பதற்கு ஆக கூடிய முயற்சிகளை செய்யவேண்டும்..

--- தொடரும்----

ஆக்கம் - புரட்சிகர தமிழ்தேசியன்

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

நன்றிகள் புரட்சி உங்கள் ஆக்கத்திற்கு.

உங்கள் இந்த முயற்சிக்கப்பட வேண்டிய திட்டங்கள் மிகவும் பிடித்துள்ளன:

கடபாடுகள்:

- பன்னாட்டு நிறுவனங்களின் முகமைத்துவர்களாக மாறி ஈழத்தில் வரையறுக்கப்பட்டுள்ள நிலங்களில் வேரூன்ற செய்தல்

- என்ன ஏது என்று தெரியாமலே சுயநிர்ணயம் அது இது என்று அளந்து போடாமல் ஏற்கனவே இவை நடைமுறைபடுத்தபட்ட நாடுகள் ஒன்றின் மாதிரி முறைமைய வலியுறுத்த்தல்.

- சர்வதேச நாடுகளில் தமக்கென ஒரு தொலைகாட்சி மற்றும் வானொலி ஊடாக தம்மை நிலை நிறுத்தி கொள்ளுதல்.

- பொது நிதியம் ஒன்றினை உருவாக்கி ஏழை நாடுகள் மற்றும் இயற்கை சீரழிவுகளுட்பட்ட நாடுகளுக்கு 5 10 விட்டெறிதல்..

- சிங்களத்திற்கு போட்டியாக துரோக நலவாரியம் தனியாக தொடங்கபட்டு துரொகிகளுக்கு எதிர்வு கூறாமல் இருக்க மாதம் தோறும் தகுந்த கவனிப்புகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.