Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13-ம் திருத்த சட்டத்திற்கு அப்பால் என்பது என்ன?

Featured Replies

13-ம் திருத்த சட்டத்திற்கு அப்பால் என்பது என்ன? - கேள்வியெழுப்புகிறது ஐ.தே.க.

தமிழ் மக்களுக்கு வழங்கவிருப்பதாகக் கூறப்படும் 13ஆம் திருத்தச் சட்டத்துக்கு அப்பால் தீர்வு என்பது என்ன? என ஐக்கிய தேசிய கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.

கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனை தெரிவித்துள்ளார். 13ஆம் சட்டத்துக்கு அப்பால் சென்று அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு தீர்வு வழங்குமானால் அந்த தீர்வு என்னவென அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.

இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் அழுத்தங்களின் அடிப்படையில் வடக்கு மக்களுக்கு அரசியல் தீர்வை முன்வைப்பதாக அரசாங்கம் கூறிவருகிறது. ஆனால் இதுவரையில் அவ்வாறான எந்தத் தீர்வும் முன்வைக்கப்படவில்லை. இந்த நிலையில் 13ஆம் திருத்தத்துக்கு அப்பால் சென்று அரசியல் தீர்வு ஒன்றை வழங்கவிருப்பதாக அரசாங்கம் கூறிவருகிறது.

அவ்வாறு எனின் அதன் விளக்கம் என்ன என்பதை மக்களுக்கு அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி கோரியுள்ளது.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=20115

  • தொடங்கியவர்

தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக இந்தியத் தரப்பிடமிருந்து பிரயோகிக்கப்படும் அழுத்தத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக இந்தியத் தரப்பிடமிருந்து பிரயோகிக்கப்படும் அழுத்தத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இந்தியாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் ச்சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கு பணிப்புரை விடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச சமூகத்தைத் திருப்திப் படுத்தவும், இந்திய அழுத்தங்களைத் திசைதிருப்பவும், 13வது அரசியல் திருத்த்திற்கு அப்பாற்சென்று தீர்வொன்றை வழங்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்தாலும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அது தயாராகவில்லை.

ஆகவே நாடுதழுவிய ரீதியில் அதிகாரப் பரவலாக்கலுககு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தினால், இந்திய அழுத்தத்தைக் குறைக்க முடியமென, அரசாங்கம் நம்புகின்றது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=8157

  • தொடங்கியவர்

இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 6 மாத காலக்கெடு விதித்தது இந்தியா

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-06-12 08:30:26| யாழ்ப்பாணம்]

ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ஷவின் அரசாங்கத்துக்கு இந்தியா ஆறுமாத கெடுவொன்றை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வொன்றை வழங்குமாறு கோரியே இந்திய அரசாங்கம் பிரஸ்தாப ஆறுமாதக்கெடுவை விதித்துள்ளதாக மேலதிக தகவல்கள் மூலம் தெரியவருகின்றது.

அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த வெளிவிவகார அலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மூலமாக இந்திய அரசாங்கம் தனது ஆறுமாதக் காலகெடு குறித்த தகவலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ஷவிற்கு அனுப்பி வைத்தள்ளது.

விடுதலைப்புலிகளுடனான யுத்தம் முடிபடைந்த பின் ஜனாதிபதி மேற்கொண்ட இந்திய பயணங்களின் போதெல்லாம் 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்று அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள தயாராக இருப்பதாக வலியுறுத்தியிருந்தார். ஆயினும் அவர் வாக்குறுதி அளித்துள்ளதன் பிரகாரம் அதிகாரப்பரவலாக்கலுக்கான எந்தவொரு முயற்சியையும் இதுவரை மேற்கொள்ளவில்லை என்ற நிலையிலேயே இந்தியா கடுப்புடன் நடந்துகொள்ள முயற்சிக்கின்றது.

அத்துடன் இந்தியாவுக்கு எதிராக அமைச்சர்கள் விமல் வீரவன்ச மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோரின் செயற்பாடுகள் குறித்தும் இந்திய அரசாங்கம் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=20123

  • கருத்துக்கள உறவுகள்

13-ம் திருத்த சட்டத்திற்கு அப்பால் என்பது என்ன?

13ஆம் சட்டதிருத்தத்திற்க்கு பின்பு 14 ஆவது சட்டம் உருவாக்கி அதில் தமிழர்களுக்கு உரிமைகள் கொடுக்கப்படாது என்று எழுதி வைப்பாங்கள் ...இந்தியாவிடம் சொல்லுவினம் 13வதுக்கு அப்பால் அதாவது 14வது ...14 வதில் தமிழருக்கு உரிமையில்லை

  • கருத்துக்கள உறவுகள்

13ஆம் சட்டதிருத்தத்திற்க்கு பின்பு 14 ஆவது சட்டம் உருவாக்கி அதில் தமிழர்களுக்கு உரிமைகள் கொடுக்கப்படாது என்று எழுதி வைப்பாங்கள் ...இந்தியாவிடம் சொல்லுவினம் 13வதுக்கு அப்பால் அதாவது 14வது ...14 வதில் தமிழருக்கு உரிமையில்லை

:):D

  • கருத்துக்கள உறவுகள்

13-ம் திருத்த சட்டத்திற்கு அப்பால் என்பது என்ன?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.