Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயர் பொருளாதார வளர்ச்சி இலங்கையில் சாத்தியம் இல்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உயர் பொருளாதார வளர்ச்சி இலங்கையில் சாத்தியம் இல்லை _

வீரகேசரி இணையம் 6/12/2011 1:42:31 PM Share

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பாக இலங்கை அரசு எதிர்பார்த்திருந்த உயர் பொருளாதார வளர்ச்சி வீதத்தினை அடைவது சாத்தியம் இல்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை கடந்த ஆண்டில் எட்டு சதவீத பொருளாதார வளர்ச்சியினை கண்டது. இதனை 2011, 2016இல் முறையே 8.5வீதம், 9.5 வீதம் மூலமாக அதிகரித்து, சராசரியாக எட்டு சதவீதத்திற்கும் மேலான வளர்ச்சி வீதத்தினை பதிவு செய்ய இலங்கை அரசு எதிர்பார்த்திருந்தது.

எனினும் இது 2011, 2012, 2013இல் முறையே 7.5வீதம், 6.8வீதம், 6.4வீதம் என எட்டு சதவீதத்திற்கும் குறைவான வளர்ச்சியி னையே இலங்கையால் பதிவு செய்ய முடியும் என உலகவங்கி கடந்த வாரம் வெளியிட்ட (Global Economic Prospects 2011) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறிப்பாக உயர்வான பணவீக்கம், உயர் வான வரவு செலவு திட்டப் பற்றாக்குறை மற்றும் உயர்ந்தளவான பொதுப் படுகடன்கள் போன்றவை தனியார் முதலீடுகளை வெளி யேற்றுகின்றன. இதனால் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலான வளர்ச்சி வீதம் சரிவடையும் என உலக வங்கி எச்சரித் துள்ளது.

இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளிலும் பணவீக்கம் உயர்வாக உள்ளன. ஆனால் இவை வட்டி வீதங்களை உயர்த்தி பணவீக்க அழுத்தங்களை சமாளிக்கின்றன. எனினும் இத்தகைய தீர்மானத்தினை இலங்கை இதுவரை மேற்கொள்ளவில்லை. இதனால் தொடர்ந்தும் இலங்கைப் பொருளாதாரம் பணவீக்க அழுத்தங்களிற்குள்ளேயே காணப்படுகின்றது.

இதன் விளைவாகவும் வரவு செலவுதிட்ட பற்றாக் குறைகள் உயர்வடைவதுடன் இதுவே கடந்த ஆண்டில் மாலைதீவு, இந்தியா, இலங்கை ஆகியவற்றில் முறையே 20.7வீதம், 8.8வீதம், 7.9வீதம் என ஒப்பீட்டளவில் இலங் கையில் குறைவாக காணப்பட்டாலும் வருந்தத் தக்க நிலையிலேயே இலங்கையும் உள்ளது என உலக வங்கி தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.

இதேவேளை, அமெரிக்காவினைத் தளமாக கொண்டியங்கும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நோக்கம், செயற்பாடு மற்றும் அறிக்கைகள் தொடர்பாக ஆசிய நாடுகள் அதிருப்தி அடைந்து இருப்பதோடு இவற்றுக்கு எதிராக பல விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. _

Edited by கறுப்பி

பொருளாதார பலம் குறையும் பொழுது அது அரசியல் தீர்வுக்கு வழிகோலலாம் !

சட்டசபை தீர்மானம்; இதற்கு வலுச்சேர்க்க முன்னிற்கும் தமிழக உறவுகள்;

இவற்றுடன் புலம்பெயர் தமிழர்கள் முழுமூச்சுடன் தாமும் சிங்கள பொருட்களை, அந்த நாட்டின் சேவைகளை புறக்கணிக்க வேண்டும்.

பில்லியன்களை கொடுத்த சர்வதேச நாணய நிதி அமைப்பும் சிங்கள ரூபாயை திறந்த சந்தையில் வேண்ட / விற்க விடச்சொல்லி கோரியுள்ளது. அதாவது, இதை செய்தால் சிங்கள ரூபாயின் பெறுமதி விழும்.

மூன்றாவது இடத்தில் உள்ள பிரித்தனிய உல்லாச பிரயாணத்துறை மேலும் சரியும் சந்தர்ப்பங்கள் உள்ளன. முதலாவது இடத்தில் உள்ள இந்தியாவின் வருகையும் குறையலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு வருமானம் எங்கிருந்து வருகிறது?? :unsure:

இவ்வளவு நாறிப்போயுள்ள நிலையிலும் வளர்ச்சி என்கிறார்களே..! :blink: நான் சிங்கையில் இருந்தபோது ஒரு பொருளாதார வீழ்ச்சி வந்தது. அப்போது ஒரு வருடம் வளர்ச்சியே இல்லாத நிலை இருந்தது (Negative Growth என்று ஏதோ கதையளந்தார்கள்.) சிங்கப்பூருக்கே இந்த நிலை. இலங்கையில் எப்படி சாதகமான வளர்ச்சி எண்கள் சாத்தியமாகின்றன? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமையின்றேல் வீழ்ச்சி தவிர்க்கமுடியாதது

தமிழரை அரவணைத்து போகும் நிலைவரும்வரை இது தொடரும். தமிழரும் இதைக்கருத்தில்கொண்டு முடிந்தவரை முடிந்த எல்லாவழிகளிலும் குழிபறிக்கணும்.

உயர் பொருளாதார வளர்ச்சி இலங்கையில் சாத்தியம் இல்லை
கேள்வி; [தமிழ்சூரியன்] மாண்புமிகு என்று சொல்லப்படும்? ஜனாதிபதி அவர்களே தமிழர் பிரச்சனையைத்தீர்த்து அவர்களுக்குரிய உரிமையை வழங்கினால் உங்கள் நாடு அதி உயர் பொருளாதார வளர்ச்சியை அடையும் என்று பொருளியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்களே. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?பதில்;[மகிந்த ராஜபக்ச] மண்ணாங்கட்டிப்பொருளாதாரம்....எம் இனப்பெண்களை விபச்சாரத்தில் விடுவேனேயொழிய..... என் வாலிபரை பிச்சை எடுக்க விடுவேனே தவிர தமிழர் பிரச்சனையைத்தீர்த்து அவர்களுக்கு உரிமை எதயும் கொடுக்கவே கொடுக்க மாட்டேன்........ [இது எனது கற்பனை உண்மையான செவ்வி அல்ல]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.