Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரதக்கலை தமிழருடையதா அல்லது இரவல் வாங்கியதா?

Featured Replies

சுகுமாரன்,

நீங்கள் தவறான கருத்துக்களை களத்தில் கொடுத்து இருக்கிறீர்கள்... சேர, சோழ, பாண்டிய மன்னர்களை எந்த வகையில் பிராமணர்கள் என்கிறீர்கள்.... இது கண்டிப்பாக வரலாற்றுப் பிழை.... ஆதாரம் தாருங்கள்.... திருவள்ளுவர், அவ்வையார், அதியமான் இவர்களை எந்த வகையில் பிராமணர் என்கிறீர்கள்?

ஆரூரண்ணன் 1930 க்கு முன்னம் பரதநாட்டியம் இருக்கவேயில்லை என எழுதினார்.. பின்பு அவரே 1804 ஆண்டும் அதற்குப்பின்னர் பிறந்த நால்வர் கதகளியையும் பரதநாட்டியத்தயும் இணைச்சு மணிப்புரி உண்டாக்கினர் என எழுதினார்.. அப்படியிருக்கு இவரது விவாதம்..

ஏனைய இந்திய மொழிகளைப்போல தமிழும் சமஸ்கிருதத்துடன் பின்னிப்பிணைந்த மொழியென்று (அபச்சாரம் சுத்த சமஸ்கிருதமென்று) தெரியாத ஆருரண்ணா.. சமஸ்கிருதத்தை பிரிக்கப்போறாராம்..

தலைக்கொண்டைபோட்டு பட்டை பூனுல் அணிபவர் பிராமணர்தான்.. முனிவர் என்று சொல்லுவாங்க..

ஒளவையார் ஆதி பகலன் என்ற பிராமணருக்குப்பிறந்த அருட் குழந்தை.. ஆதி பகலன் முனிவராகி துறவறம் பூண்டநிலையில் சிவகாமி பாணர் என்னும் பிராமணர்களால் வளர்க்கப்பட்டவர்.. சிறுவயதிலிருந்தே விநாயகர் பக்தையான ஒளவை தனது அழகைக்கண்டு திருமணம்செய்ய விரும்பிய பண்ணையாரை திருமணம்செய்ய மறுத்து திருமணத்தன்று விநாயகப்பெருமானிடம் வேன்டி இளமைக்கோலம் துறந்து முதுமைக்கோலம் பெற்றதாக வரலாறு..

மூவேந்தர்கள் அதியமானை சிறையிலடைத்து பாரி மக்களை வற்புறுத்தி திருமணம்செய்ய முற்பட்டவேளை ஒளவையார் தலையிட்டு அறிவுபுகட்டி மூவேந்தது முன்னிலையில் அதியமானுக்கு திருமணம்செய்துவைத்ததாகவும் ஒரு வரலாறு..

சங்க காலத்தில் எல்வோரும் பிராமணர்களே.. சாதாரண மக்களை அந்தணர்கள் என்றும் தீட்சை பெற்றவர்கள் பிராமணரெண்றும் சொன்னார்கள்.. புலவர்கள் பூனூல் பட்டை தரித்த ஏழையாயிருந்;தார்கள்.. சங்கப்புலவர்கள் சங்கத்தலைப்பா அணிந்த வசதிபடைத்தவர்களாக இருத்தார்கள்.. திருவள்ளுவரின் குறளை ஈரடிக்கவிதை சங்க வரையறைக்கு புறம்பானது.. ஏற்றுக்கொள்ள முடியாதென மறுத்தபோது ஒளவையார் வந்து ஏற்றம் செய்யதாக வரலாறு..

இங்கு ஆருரன்கூறிய (பரதநாட்டியத்தை மீட்டெடுக்கவந்த) கிறிஸ்தவர்கள் சங்ககாலத்தில் இருந்ததாக வரலாறில்லை.. இருந்தால் ஆரூரன் தாராளமாக கொண்டுவந்து முன்வைக்கலாம்..

பரதநாட்டியத்தை மீட்டெடுக்கவந்த இவர்கள் எட்டப்பன்காலத்து துரோகிகள்.. வெள்ளைக்கார படையெடுப்பின்போது (இவர் சொல்லும் பிராமணர்கள் பரதநாட்டியம் வடிவமைக்கும்போது) வெள்ளைத்துரைக்கு குடை பிடித்து சாமரம்வீசிய ஒற்றர்கள்.. தற்போது இங்கு வந்து உரிமை கொண்டாடி சதிர் ஆடுகின்றார்கள்..

வாக்குண்டாம்

நல்ல மனமுண்டாம்

மாமலராள் நோக்குண்டாம்

மேனி நுடங்காது..

பூக்கொண்டு துப்பார்

திருமேனி தும்பிக்கையான்பாதம்

தப்பாமற்சார்வார் தமக்கு..

வேளமுகத்து விநாயகனைத்தெழ

வாழ்வு மிகுத்துவரும்..

வெற்றிமுகத்து வேலனைத்தொழ

முத்தி மிகுத்துவரும்

  • Replies 177
  • Views 21k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

¯í¸Ç ¦¸¡ýºõ Å¢ð¼¡ø ¦Àâ¡Õ째 ¿¡Áõ §À¡ðÎ À¡÷ôÀ¡ñ ±ýÀ£í¸!

¯í¸Ç ¦¸¡ýºõ Å¢ð¼¡ø ¦Àâ¡Õ째 ¿¡Áõ §À¡ðÎ À¡÷ôÀ¡ñ ±ýÀ£í¸!

அண்ணா.. நீங்கள் எங்கள் தோள்மேல் ஏறியிருந்து எங்கள் தலையை மொட்டையடிக்கலாம்.. நான் உண்மையை வட்டம்போட்டு காட்டினால்தான் தப்போ?

பெரியார்பற்றி வேறு தலைப்பில் பேசலாம் மற்றவர்களுக்கு இடமொதுக்குகிறேன்.. அவர்கள் வந்து ஆதாரங்களைத்தந்து கருத்தை முன்வைக்கட்டும்.. பின்னர் உங்களுக்கான பெரியார் திமுக பற்றிய கருத்துக்களை முன்வைக்கிறேன்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக் குருவியின் நோக்கமெல்லாம் பரதநாட்டியம் தமிழர்களதில்லையென்பது தான், பார்ப்பனீயப் பரதநாட்டியமென்று ஒன்றில்லை, இது இவரின் கண்டு பிடிப்பு. தான் இந்தத் தளத்தில் 10,082 க்கு மேல் தான் குப்பை கொட்டிய வரலாறிருக்க, சும்மா தானாக நிறுத்துவது பெரிய மானப்பிரச்சனை மாதிரி நினைத்துக் கொண்டோ என்னமோ அரைத்த மாவைத் திருப்பித் திருப்பி அரைக்கிறது குருவி. தலைப்பை மறந்து இவர் உளறிக்கொட்டுவதற்குப் பதிலளிக்க வேண்டிய தலைவிதி எனக்கு

ஐயா.ஆரூரன் அவர்களே...எங்கள் டன் இன்னோர் இடத்தில் சொன்ன பின்னர்தான் உங்கள் பின்புலம் பற்றி அறிய முடிந்தது. நீங்கள் இருண்ட உலகத்துக்குள் விளக்குப் பிடிக்கப் போய் இப்போ கண்டதெல்லாம் பேய் என்ற நிலையில் சிந்திக்கத் தலைப்பட்டிருக்கிறீர்கள்.

அசட்டுக் குருவியே! "உங்கள் டன்" என்றால் டன் என்றவரும் தமிழனில்லையா. அவர் சொன்னது தான் என்னுடைய பின்புலமென்றால், எள்ளுக்குள் கிடந்த எலிப்புழுக்கை மாதிரி, எந்த நேரமும் யாழ் களத்திற்குள் ஒழித்திருந்து, எப்படா தமிழன் ஏதாவது சொல்வான், அது உண்மையோ, பொய்யோ, தெரியுதோ. தெரியேல்லையோ, சும்மா தெரிஞ்ச மாதிரி உளறித் தள்ளித் தமிழனின் முதுகில் குத்தித் திருப்திப்படுவது தான் உம்முடைய பின்புலம் என்று பல பேர் என்னிடமும் சொன்னார்கள். இதெப்படியிருக்கு :lol::lol:

"என்ன சதிராட்டம் போடுறா"..இச்சொல்லை தற்போதும் புலம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழ் பெற்றோர்கள் உச்சரிப்பதை கண்முன்னாலே கண்டு காதாலும் கேட்டிருக்கின்றோம். நீங்கள் அப்படி இல்லை என்று சாதிக்க நிக்கிறீர்கள். இப்படித்தான் நீங்களா புருடா விட்டுத்திரிகிறீர்கள். ஆய்வுகளின் வகைகளில் கருத்துக்கணிப்பும் ஒன்று. உங்களால் முடிந்தால் ஈழத்தமிழர்களில் எத்தனை பேருக்கு பரதநாட்டியத்தின் உண்மை வரலாறு தெரியும் என்று கணிப்பிட்டுச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

நன்றி குருவி! இந்தப் பேச்சு வழக்கு இன்னும் தமிழரிடம் இருப்பதொன்றே சதிராட்டம் தமிழருடையது என்பதைத் தெள்ளத் தெளிவாக்கிறது. அந்தச் சதிராட்டம் தான் இன்றைய பரதநாட்டியத்தின் அடிப்படை என்பது எல்லோருக்கும் தெரியும், ஏன் உமக்குக் கூடத் தெரியும். அந்ததமிழரின் சதிர் பரதமுனிவரால் ஆக்கப் பட்டதல்ல, அதன் வேர்கள் தமிழரின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது என்பது தான் தமிழறிஞர் வி. கல்யாணசுந்தரனார், மறைமலையடிகளாலும் இன்னும் பல ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை.

உம்முடைய வாதத்தைத் தான் நொண்டி வாதமென்பார்கள், பல தமிழர்களுக்குச் சிலப்பதிகாரத்தைப் பற்றியோ, இளங்கோவடிகளைப் பற்றியோ தெரியாது, அதற்காக சிலப்பதிகாரம் தமிழருடையடில்லை என்பதா

ஆரூரன் உங்களிடம் ஈழத்தமிழரின் யதார்த்த வாழ்வியல் பற்றிய தெளிவில்லை என்பதை மேல் உள்ள கருத்துக்கள் வகையாகச் சொல்கின்றன. ஈழத்தமிழர்கள் பரதநாட்டியத்தை விட சித்திரம் கர்நாடக சங்கீதம் இவற்றையே அதிகம் படிக்கின்றனர். எதற்கும் ஈழத்தில் அழகியற்பாடம் பற்றிய புள்ளி விபரத்தை நோக்கவும். இன்று புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பரதநாட்டியம் தமிழர்கள் கலை என்று உணர்ந்து படிக்கப்படுவதிலும் சமூகத்தில் போட்டிக்கு என்ர மகளுக்கும் ஆடத்தெரியும் எனக்கும் அரங்கேற்றம் நடத்தத் தெரியும் என்று காட்ட பரதநாட்டியம் பழக்கப்படுகிறதே அன்றி அது தமிழ்கலை என்று அறிந்து அதன் உண்மையான வடிவத்தில் படிக்கப்படவில்லை.

ஒட்டுமொத்தமாக ஈழத்தமிழர்களை முட்டாள்களாக்கும் கருத்துக்களைக் கூறுவது உமக்கு இயல்பான குணம், ஈழத்தமிழர்கள் பரதநாட்டியத்தை தமிழரின் கலையென்று கருதாவிட்டால் அவர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு Balet, குச்சிப்புடி அல்லது மணிப்புரி பழக்கியிருப்பார்கள். புலம் பெயர்ந்த எந்த இனமக்களும் தங்களுடைய பாரம்பரிய கலாச்சாரத்தின் சில அம்சங்களையாவது ஒட்டிப் பிடித்துக் கொள்ளப் பார்ப்பார்கள். அன்னியர்கள் மத்தியில் வாழும் போது, அது அவர்களுக்கொரு மனத்திருப்தியைக் கொடுக்கிறது, இதைப் புலம் பெயர்ந்த உக்ரேனியர்களிடமும், துருக்கியர்களிடமும், போலந்துக்காரர்களிடம் கூடக் காணலாம். இது எங்களையறியாமல் நாங்கள் செய்வது,

பரதநாட்டியத்தைத் தமிழர்களுடைய கலையாக நினைத்துத் தான் ஈழத்தமிழர்கள் கற்கிறார்களே தவிர நீர் சொலவ்து போல் சமூகத்துக்காக மட்டுமல்ல. தங்களுடைய கலை, சமூகத்தினால் மதிக்கப் படும்போது, இயற்கையாகவே அந்தச் சமூகத்துக்கு வரும் பெருமிதம், அந்தப் பெருமிதத்தின் வெளிப்பாடாக வரும் புகழ்ச்சி எல்லாம் இயற்கையானது. அதைத் தமிழரல்லாத உம்மால் புரிந்து கொள்ளமுடியாது.

படிக்கப்படுவதெல்லாம் பாரதமுனிக்குச் சொந்தமான பரதக்கலையே. நாங்களும் தான் பல அரங்கேற்றம் பாத்திருக்கின்றோம்..சிவபெரும

ஆரூரன் பலவிடயங்களை விளக்கமாக எழுதிவருகிறீர்கள். நல்லவிடயம். நீங்கள் சொல்வது போல் பலவிடயங்களை ஆரியரிடம் இருந்து வாங்கியதாக சொல்லி எம்மை நாமே தாழ்த்தி/ பிழையாக வழிநடத்தி எமது பாரம்பரியத்தை இழந்துகொண்டிருக்கிறோம். ஆரியர்/திராவிடர் கலப்பு என்பது 3000 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய துணைக்கண்டத்தில் நடந்துவருவது. கலப்பு நிகழும்போது இரண்டு பக்கத்துவிடயங்களும் எதற்கு எது மூலம் என்று தெரியாத நிலை ஏற்படுவது சாத்தியமே. பல வழிபாட்டு, கலாச்சார நடைமுறைகள் ஆரியரை பெரும்பான்மையாக கொண்ட வட இந்தியரிலும் வேறுபட்டு தான் காணப்படுகிறது. இருந்தாலும் எம்மவர்களில் பலர் எமது நடைமுறைகள் ஆரியரில் இருந்து வந்தவை என சொல்லி சப்பைகட்டு கட்டுவதை பார்க்க வேதனையாக இருக்கும்.

வல்லவன்/ ஆளும் இடத்தில் இருப்பவன் எல்லாம் தனதே என வகுத்தது போல் எமது விடயங்களும் ஆரிய சாயம் பூசப்பட்டிருக்கலாம். ஏன் எனில் அவர்கள் அரசியலை தீர்மானிக்கும் இடத்தில் இருந்தார்கள்/இருக்கிறார்கள்.

உங்கள் கட்டுரைக்கு ஒரு சம்பந்தமில்லவிட்டாலும் எமது வாழ்நாள் உதாரணம் ஒன்றை சுட்டிகாட்டுவது நல்லதாக இருக்கும்.

கதிர்காமம் முருகன் ஆலயம் திருப்புகழில்?? சுட்டப்பட்ட ஆலயம். இன்று முழுக்கமுழுக்க சிங்களமயப்பட்டு போன ஆலயமாக இருப்பது மட்டுமல்ல முருகன் தங்கள் இனப்பெண்ணான வள்ளியை தான் மணம் முடித்தார் என கதை சொல்லும் அளவுக்கு சிங்களவர்களின் கருத்து திணிப்பு இருக்கிறது.

அதே போன்று பலவிடயங்கள் கடந்த காலத்திலும் நடந்திருக்கும் சாத்தியப்பட்டை மறுபதற்கு இல்லை.

தவறுக்கு வருந்துகிறேன். ஆரூரன் எனும் பெயரை அரவிந்தன் என குறிப்பிட்டுவிட்டேன். அதை திருத்தம் செய்துள்ளேன்.

கதிர்காமத்தில் அதுமட்டுமல்ல சூரன்கோட்டை என்னும் பகுதி இன்று ஒரு பெளத்த விகாரையாக மாற்றப்பட்டுள்ளது. கதிர்காமம் திட்டமிட்டு ஒரு பெளத்த பூமியாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. அங்கு சென்று பார்க்கும் போது தெரியும். அங்கு பெளத்தை எப்படி முன்னிலைப்படுத்துகிறார்கள் என்று.

சைவத்தையும் தமிழையும் தமிழர்களையும் பிரிக்க நினைத்தால்..உங்களுக்கு என்று எதுவும் இருக்காது...அதுதான் நாவலர் அன்றே சொல்லிட்டார் சைவமும் தமிழும் தமிழரின் இரு கண்கள் என்று...! :P :idea:

பைபிளை முதன்முதல் தமிழில் மொழிபெயர்த்து தமிழர்கள் தமிழ்மொழியில் பைபிளை அறியவைத்தவரும் நாவலர் என்பது நீங்கள் அறிந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.

இதெல்லாம் சுத்த வீராப்பு வாதங்கள். ஈழத்தமிழர்கள் என்பவர்கள் தமிழ்நாட்டோடு மட்டுமல்ல தென்னிந்தியத் தொடர்பு உள்ளவர்கள். ஈழத்தமிழர்களிடம் கேரளத் தொடர்பும் இருக்கிறது. குறிப்பாக உணவுப்பழக்க வழக்கம் கேரளா சார்ந்து இருக்கிறது. அதுமட்டுமன்றி ஈழத்தமிழர்கள் பேசும் மொழி கொண்டு அனைத்தும் தென்னிந்திய திராவிடர் (தமிழர்கள் உள்ளடங்கலாக) வழிவந்ததுதான். ஈழத்தமிழர்களின் வேர் அங்குதான் ஆரம்பம். இல்லை ஈழத்தமிழர்கள் இலங்கையின் பூர்வகுடிகள் என்றால்.. ஈழத்தமிழர்களுக்கான மொழி மற்றும் வாழ்வுக்கான தொல்பியல் சான்றுகள் ஏதேனும் விசேடமாக இருக்கிறதா..??! இலங்கையில் சிங்களவர்கள் வரமுன்னர் தமிழர்கள் குடியேறி இருக்கலாம்...அதற்காக அவர்கள் தான் பூர்வகுடிகள் என்று சொல்ல சான்றுகள் இல்லை. எனவே தற்போதைய நிலவரப்படி ஈழத்தமிழர்களின் கலை கலாசார பண்பாட்டு மூலவேர் தென்னிந்தியா சார்ந்துதான் உள்ளது. அங்குதான் பல ஆதாரங்களும் பொதிந்து கிடக்கிறது. ஈழத்தமிழர்களின் தற்கால ஆய்வுகள் பார்ப்பர்ணியக் கண்ணோட்டத்தில் அமையாமல் புவியியல் ரீதியான பாரம்பரிய தொடர்புகள் இணைப்புக்கள் சார்ந்து ஆழமாக தமிழகத்தோடு ஒன்றித்து செய்யப்பட வேண்டிய ஒன்று..! அப்போதுதான் ஈழத்தமிழர்களின் உண்மை இருப்புக்கான ஆதாரங்கள் வெளிப்படும். இல்லை வெறும் கட்டுரைகளை எழுதி அடாத்தாக அது ஈழத்தமிழன் சொந்தம் என்று பிதட்டித்திரிய வேண்டியதுதான். உலகம் ஏன் தமிழகமே அதைக் கண்டு கொள்ளாது. :P :idea:

ஈழத்தமிழரின் பழக்கவழக்கங்கள் கேரள மக்களிடம் இருப்பது என்னவோ உண்மைதான். கேரளத்தின் தோற்றத்தினை அல்லது அப்பகுதியின் மொழி தமிழ்மொழியில் இருந்து பிரிந்து உருவாகியது என்ற விடயமும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவ்வாறு இருக்கும் போது பூர்வீகமாக ஈழத்தில் இருக்கும் தமிழர்பற்றி குதர்க்கமாக கேட்கிறீர்களே. இன்னும் கொஞ்சம் என்றால் உலகில் மனிதன் தோன்றினானா அல்லது வேறு இடத்திலிருந்து பூமியில் குடியேறினானா என்று கேட்டு ஆதாரம் கேட்பீர்கள் போல் உள்ளதே. :roll: :roll:

  • கருத்துக்கள உறவுகள்

பைபிளை முதன்முதல் தமிழில் மொழிபெயர்த்து தமிழர்கள் தமிழ்மொழியில் பைபிளை அறியவைத்தவரும் நாவலர் என்பது நீங்கள் அறிந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.

யார் அதை மறுத்தது. சைவத்தை எப்படி மதித்தாரோ, அவ்வாறே பிறரின் மதங்களையும் நாவலர் மதித்தார். அவர் வெறுத்தது என்னவென்றால் அக்காலப்பகுதியில் தொழிலுக்காகவும், பணத்துக்காகவும் கடவுளை விலை கொடுத்து வாங்குவதை. கடவுளை பின்பற்றுவர்களை விலை கொடுத்து வாங்கலாம் என்றால் கடவுள் என்ற சொல்லில் ஒரு அர்த்தமும் இல்லையே!

அண்ணா தவறு என்னுடையது தான். மேற்கோள் போடும் போது முழுமையாகப் போட்டிருக்கவேண்டும். முழுமையையும் வாசித்தபின் நான் கூறியதை வாசியுங்கள் புரியும், என்ன சொல்ல வந்தோன் என்று.

இதோ... உங்கள் ஒருதலைப்படசமான சுத்துமாத்துக் கருத்துக்களை, கட்டுரைகளை முறியடிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ள ஆக்கங்கள்..! இவற்றையும் படிச்சு தெளிஞ்சு அவற்றை வெல்லத்தக்க வகையில் உங்கள் கலையை உங்களது என்று நிறுவுங்கள் பார்க்கலாம்...முடிந்தால்..! :P :idea:

சும்மா பார்ப்பர்ணியம்..பர்ப்பர்ணியன

  • கருத்துக்கள உறவுகள்

யார் அதை மறுத்தது. சைவத்தை எப்படி மதித்தாரோ, அவ்வாறே பிறரின் மதங்களையும் நாவலர் மதித்தார். அவர் வெறுத்தது என்னவென்றால் அக்காலப்பகுதியில் தொழிலுக்காகவும், பணத்துக்காகவும் கடவுளை விலை கொடுத்து வாங்குவதை. கடவுளை பின்பற்றுவர்களை விலை கொடுத்து வாங்கலாம் என்றால் கடவுள் என்ற சொல்லில் ஒரு அர்த்தமும் இல்லையே!

இப்பொழுதும் வேறு விதமாக மதம் மாற்றப்படுகிறது. கிழக்குத் தமிழ் ஈழத்தில் கஸ்டப்படும் மக்களின் சிறுவர்களுக்கு வெளினாட்டு சமய அமைப்புக்கள் உணவு, உடைகள் வழங்கியபின் சிறுவர்களிடம் உங்களுக்கு உணவு தந்தது யார்? என்று கேட்க, சிறுவர்கள் ' நீங்கள் தான் தந்தீர்கள்' என, அதற்கு அவ்வமைப்புக்கள் 'இல்லை, (தங்களின் கடவுளின் பெயரினைச் சொல்லி) தந்தது' என்று சொல்லி மதமாற்றங்கள் நடைபெறுகின்றது. பல உதவியமைப்புக்களையும், சிறுவர் பராமரிப்பு நிலையங்களினையும் இச்சமயத்தினர் எடுத்து தங்களின் சமயப் பெயர்களில் நடத்தி வருகிறார்கள். இங்கும் மதமாற்றம் நடைபெறுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக் குருவியின் நோக்கமெல்லாம் பரதநாட்டியம் தமிழர்களதில்லையென்பது தான், பார்ப்பனீயப் பரதநாட்டியமென்று ஒன்றில்லை, இது இவரின் கண்டு பிடிப்பு. தான் இந்தத் தளத்தில் 10,082 க்கு மேல் தான் குப்பை கொட்டிய வரலாறிருக்க, சும்மா தானாக நிறுத்துவது பெரிய மானப்பிரச்சனை மாதிரி நினைத்துக் கொண்டோ என்னமோ அரைத்த மாவைத் திருப்பித் திருப்பி அரைக்கிறது குருவி. தலைப்பை மறந்து இவர் உளறிக்கொட்டுவதற்குப் பதிலளிக்க வேண்டிய தலைவிதி எனக்கு

அசட்டுக் குருவியே! "உங்கள் டன்" என்றால் டன் என்றவரும் தமிழனில்லையா. அவர் சொன்னது தான் என்னுடைய பின்புலமென்றால், எள்ளுக்குள் கிடந்த எலிப்புழுக்கை மாதிரி, எந்த நேரமும் யாழ் களத்திற்குள் ஒழித்திருந்து, எப்படா தமிழன் ஏதாவது சொல்வான், அது உண்மையோ, பொய்யோ, தெரியுதோ. தெரியேல்லையோ, சும்மா தெரிஞ்ச மாதிரி உளறித் தள்ளித் தமிழனின் முதுகில் குத்தித் திருப்திப்படுவது தான் உம்முடைய பின்புலம் என்று பல பேர் என்னிடமும் சொன்னார்கள். இதெப்படியிருக்கு :lol::lol:

நன்றி குருவி! இந்தப் பேச்சு வழக்கு இன்னும் தமிழரிடம் இருப்பதொன்றே சதிராட்டம் தமிழருடையது என்பதைத் தெள்ளத் தெளிவாக்கிறது. அந்தச் சதிராட்டம் தான் இன்றைய பரதநாட்டியத்தின் அடிப்படை என்பது எல்லோருக்கும் தெரியும், ஏன் உமக்குக் கூடத் தெரியும். அந்ததமிழரின் சதிர் பரதமுனிவரால் ஆக்கப் பட்டதல்ல, அதன் வேர்கள் தமிழரின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது என்பது தான் தமிழறிஞர் வி. கல்யாணசுந்தரனார், மறைமலையடிகளாலும் இன்னும் பல ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை.

உம்முடைய வாதத்தைத் தான் நொண்டி வாதமென்பார்கள், பல தமிழர்களுக்குச் சிலப்பதிகாரத்தைப் பற்றியோ, இளங்கோவடிகளைப் பற்றியோ தெரியாது, அதற்காக சிலப்பதிகாரம் தமிழருடையடில்லை என்பதா

ஒட்டுமொத்தமாக ஈழத்தமிழர்களை முட்டாள்களாக்கும் கருத்துக்களைக் கூறுவது உமக்கு இயல்பான குணம், ஈழத்தமிழர்கள் பரதநாட்டியத்தை தமிழரின் கலையென்று கருதாவிட்டால் அவர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு Balet, குச்சிப்புடி அல்லது மணிப்புரி பழக்கியிருப்பார்கள். புலம் பெயர்ந்த எந்த இனமக்களும் தங்களுடைய பாரம்பரிய கலாச்சாரத்தின் சில அம்சங்களையாவது ஒட்டிப் பிடித்துக் கொள்ளப் பார்ப்பார்கள். அன்னியர்கள் மத்தியில் வாழும் போது, அது அவர்களுக்கொரு மனத்திருப்தியைக் கொடுக்கிறது, இதைப் புலம் பெயர்ந்த உக்ரேனியர்களிடமும், துருக்கியர்களிடமும், போலந்துக்காரர்களிடம் கூடக் காணலாம். இது எங்களையறியாமல் நாங்கள் செய்வது,

பரதநாட்டியத்தைத் தமிழர்களுடைய கலையாக நினைத்துத் தான் ஈழத்தமிழர்கள் கற்கிறார்களே தவிர நீர் சொலவ்து போல் சமூகத்துக்காக மட்டுமல்ல. தங்களுடைய கலை, சமூகத்தினால் மதிக்கப் படும்போது, இயற்கையாகவே அந்தச் சமூகத்துக்கு வரும் பெருமிதம், அந்தப் பெருமிதத்தின் வெளிப்பாடாக வரும் புகழ்ச்சி எல்லாம் இயற்கையானது. அதைத் தமிழரல்லாத உம்மால் புரிந்து கொள்ளமுடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுடர்!

ஒரு தாழ்மையான வேண்டுகோள், நீங்கள் யாரையும் மேற்கோள் (QUOTE) காட்டும்போது,எழுத்துருவை(Fonts) ஐக் குறைத்தீர்கள் என்றால் நீங்கள் சொல்வதை வாசிக்க இலகுவாக இருக்கும்.

மற்றது, நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்களென்று விளங்கவில்லை. இந்த தலைப்பிலுள்ள விடயத்துக்கு உங்களின் கருத்தென்ன

அண்ணா தலைப்பிற்கும் நான் சொன்னதற்கும் தொடர்பில்லை ஆனால் மேற்கோள் இட்டதற்கும் தலைப்பிற்கும் தொடர்பு இருக்கு. தமிழும் சைவமும் தமிழரின் கண்கள் என்றால் பைபிளை தமிழில் மொழிபெயர்த்து அவர்களின் ஒரு கண்ணைக் குற்ற நாவலர் ஏன் முயன்றார். :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

´Õ ¿¡ðÊÂò¾¢ý ÅÊÅò¨¾ ¾£÷Á¡É¢ôÀ¾üÌ ¯¼ø «¨º×¸¨Çò¾¡ý ¸Õò¾¢ø ±Îì¸ §ÅñΧÁ ¾Å¢Ã, «Å÷¸û ¸ñ½ý À¡ðÊüÌ ¬Î¸¢È¡÷¸Ç¡ «øÄÐ ¨Áì¸ø ƒìºý À¡ðÎìÌ ¬Î¸¢È¡÷¸Ç¡ ±ýÀ¾øÄ! «Ð ¿¢ü¸, ¸Õ¨Á ¿¢Èì ¸ñ½ý ¾Á¢Æ÷¸Ç¢üÌ ´ýÚõ «ýÉ¢ÂÁ¡ÉÅý «øÄ! Кè¸ì§¸¡Á¸ý ±ý¦È¡Õ ¾Á¢úô ÒÄÅâý ¦ÀÂ÷ Ӿġõ ºí¸ò¾¢ø ÌÈ¢ôÀ¢¼ô À𼨾 þíÌ ¿¢¨Éçð¼ Å¢ÕõÒ¸¢§Èý!

சுகுமார்,

உங்களுக்கு தனிமடலிலேயே விளக்கம் அளித்திருக்கிறேன்..... முனிவர்கள் எல்லாம் பிராமணர்கள் அல்ல..... அரசர்களை பொறுத்தவரை சத்திரியர்கள் என்றே அழைக்கப்பட்டு வந்தார்கள்....

சங்க காலத்தில் பிராமணர்கள் இருந்தார்களா என்பதைப் பற்றி நிறைய சர்ச்சை உண்டு.....

பொதுவாக புரோகித தொழில் செய்தவர்களே பிராமணர்கள் ஆவார்கள்....

நீங்கள் சங்கத்தமிழ் அரசர்கள் அனைவருக்கும் பூணூல் போட்டுப் பார்க்க ஆசைப்படுகிறீர்கள்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவு செய்து பிரதான தலைப்போடு ஒட்டியிராத துணைவிடயங்களுக்கு பக்கம் பக்கமாக கருத்துக்களை எழுதாது பிரதான தலைபோடு எழுதுங்கள். இறுதியாக இருந்த பல கருத்துக்களை நீக்கி அங்கத்துவர் பகுதிக்கு மாற்றியுள்ளேன்.

பைபிளை முதன்முதல் தமிழில் மொழிபெயர்த்து தமிழர்கள் தமிழ்மொழியில் பைபிளை அறியவைத்தவரும் நாவலர் என்பது நீங்கள் அறிந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.

நாவலர் படித்ததே யாழ் மத்திய கல்லூயில் தானே...! அது ஆங்கிலேயர் உருவாக்கிய கிறிஸ்தவப் பாடசாலைதானே..! அங்கு சைவம் கிறிஸ்தவம் இஸ்லாம் என்ற வேறுபாடுகள் இல்லை. அன்று ஆங்கிலேயர் ஆட்சியில் சைவம் திட்டமிட்டு அழிக்கப்பட்ட போது மற்ற மதங்களை மிதிக்காது மதித்து சைவத்தையும் தமிழையும் கண்களெனப் போற்றி நாவலன் வளர்த்தான்...அவன் தமிழன்..! பார்ப்பர்ணியம்...அதுஇதென்று மற்றவர்களைக் குறை கூறி தம்மை நிலைநிறுத்த முனையும் கேடுகெட்ட தமிழர்கள் போல் அல்ல நாவலன். அவன் தந்த தமிழதான் நாமறிந்த தமிழ்...! :wink: :P :idea:

ஆரூரண்ணா நீங்கள் 1930 க்கு முன்னம் பரதநாட்டியம் இருக்கவேயில்லை என எழுதினீர்கள்.. பின்பு நீங்களே 1804 ஆண்டும் அதற்குப்பின்னம் பிறந்த நால்வர் கதகளியையும் பரதநாட்டியத்தயும் இணைத்து மணிப்புரி உண்டாக்கினர் என எழுதினீர்கள்..

ஆருரன்.. நீங்கள் கூறிய (பரதநாட்டியத்தை மீட்டெடுக்கவந்த)கிறிஸ்;தவர்க

1930ல் பரத நாட்டியம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்று தான் ஆருரான் கூறியதாக எனக்கு ஞாபகம்.....

(குறிப்பு : நான் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி)

1930ல் பரத நாட்டியம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்று தான் ஆருரான் கூறியதாக எனக்கு ஞாபகம்.....

(குறிப்பு : நான் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி)

அண்ணா எங்களுக்குள் வீணான சச்சரவு வேண்டாம்..

நான்கூறியதும் நீங்கள் கூறியதும் ஒன்று..

சனிக்கிழமை சந்திப்போம்..

´Õ ¿¡ðÊÂò¾¢ý ÅÊÅò¨¾ ¾£÷Á¡É¢ôÀ¾üÌ ¯¼ø «¨º×¸¨Çò¾¡ý ¸Õò¾¢ø ±Îì¸ §ÅñΧÁ ¾Å¢Ã' date=' «Å÷¸û ¸ñ½ý À¡ðÊüÌ ¬Î¸¢È¡÷¸Ç¡ «øÄÐ ¨Áì¸ø ƒìºý À¡ðÎìÌ ¬Î¸¢È¡÷¸Ç¡ ±ýÀ¾øÄ! «Ð ¿¢ü¸, ¸Õ¨Á ¿¢Èì ¸ñ½ý ¾Á¢Æ÷¸Ç¢üÌ ´ýÚõ «ýÉ¢ÂÁ¡ÉÅý «øÄ! Кè¸ì§¸¡Á¸ý ±ý¦È¡Õ ¾Á¢úô ÒÄÅâý ¦ÀÂ÷ Ӿġõ ºí¸ò¾¢ø ÌÈ¢ôÀ¢¼ô À𼨾 þíÌ ¿¢¨Éçð¼ Å¢ÕõÒ¸¢§Èý![/color']

இதைத்தாதான் நாங்களும் சொல்லவாறம்.. பார்ப்பர்ணியம் தமிழருக்குள் இரண்டறக் கலந்த ஒன்று..! இப்ப மட்டும் ஏன் துஷ்டமா பார்க்க நிக்கினம். சில பேர்..! ஏதோ தேவை இருக்குப் போல..! :P :wink:

பார்ப்பணீயம் தமிழருக்குள் இரண்டறக் கலந்திருந்தால் சந்தோஷம்......

ஆனால், பார்ப்பணீயர்கள் வடமொழிக்கு கொடி பிடித்து, தமிழை தாழ்த்தும் போது தான் எங்களுக்கு பிரச்சினை.....

பார்ப்பணீயம் தமிழருக்குள் இரண்டறக் கலந்திருந்தால் சந்தோஷம்......

ஆனால், பார்ப்பணீயர்கள் வடமொழிக்கு கொடி பிடித்து, தமிழை தாழ்த்தும் போது தான் எங்களுக்கு பிரச்சினை.....

நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்கள். ஈழத்தில் உள்ள சில மேதாவிகள் பார்ப்பர்ணியமே தமக்குள் இல்லை..எல்லாம் தங்களது என்றெல்லோ சாதிக்க நிக்கினம்..! இதால அவைக்கு தங்கட சொந்த அடையாளம் எது என்பதே தெரியாம இருக்கு..! இப்ப ரூட் தேடுறம் என்று பார்ப்பர்ணியத்தை திட்ட நேரம் செலவு செய்யினமே தவிர உண்மைகளை வெளிக்கொணர மக்களை நம்ப வைக்க நம்பிக்கையைப் பெற முயலவில்லை..! பெரியாரும் அதைத்தான் செய்து இறுதியில் தோற்றவர். இப்ப பிழைப்புக்கும் புகழுக்கும் சிலபேர் அதைக் காவித் திரியினம்..! :wink: :P :idea:

அய்யா,

பெரியார் செய்தது வேறு.... நீங்கள் சொல்வது வேறு.....

பார்ப்பனீயம் சமுதாய ஏற்றத்தாழ்வுக்கு வித்திட்டதால் அதை அவர் எதிர்த்தார்.... இப்போது அந்த அளவு சமூக ஏற்றத்தாழ்வு இல்லை என்பதால் பெரியார் உயிரோடு இருந்திருந்தால் அவரது பார்வையிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.