Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத் தமிழர் மீது அக்கறை கொள்ளும் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளுக்கு – அவசர வேண்டுகோள் : அஜித்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர் மீது அக்கறை கொள்ளும் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளுக்கு – அவசர வேண்டுகோள் : அஜித்

“நான் தமிழ் நாட்டிற்குச் சென்றிருக்கிறேன். பிரதான அரசியல் வாதிகள் தமது அரசியல் ஈழத் தமிழர் குறித்துப் பேசியே தம்மை அரசியலில் நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர். நான் ஈழத் தமிழ் அகதிகள் வாழும் முகாம்களுக்குச் சென்றிருக்கிறேன். அவர்கள் மிருகங்களைப் போல நடத்தப்படுகிறார்கள். சிறைக் கைதிகளைப் போல நடத்தப்படுகிறார்கள். பலர் அங்கேயே பிறந்து வளர்ந்து பெரியவர்களாகியிருக்கிறார்கள். அவர்கள் சுதந்திரமாக பதிவின்றி வெளியே சென்றுவர முடியாது. வேலை செய்யமுடியாது.

இதை எல்லாம் பார்த்துக்கொண்டு தமிழ் பிரதான அரசியல் வாதிகள் என்ன செய்கிறார்கள்? பலர் செய்வது போல, தமிழ் அடையாளம், தேசியம் என்பவற்றை உருவாக்கி அதனை மூலதனமாக்கிக் கொள்கிறார்கள்.அவர்களுக்கு உண்மையிலேயே ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருந்திருக்குமானால் அந்த அக்கறை முதலில் முகாம்களில் அடைக்கப்ப்படுள்ள மக்கள் மீதே செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.”

இதை யாரும் புலி எதிர்ப்புப் பன்னாடை சொல்லவில்லை. லண்டனில் புலி ஆதரவு அமைப்புக்கள் ஒன்றிணைந்து அருந்ததி ராயை பேச அழைத்த போது அவர் கூறிய விடயங்கள்.

தமிழ் நாட்டிலே உங்களது முற்றத்திலே விலங்குகளாக நடத்தப்படும் உங்கள் “தொப்புள் கொடி உறவுகள்” என்ன தவறு செய்தார்கள்? இன்று நேற்றல்ல கடந்த 25 வருடங்களாக தஞ்சம் தேடிச் சென்ற இடத்தில் அதிகார வர்க்கத்தால் சிறை வைக்கப்படிருக்கிறார்கள். நீங்கள் புல்லரித்துப் புளகாங்கிதமடையும் “அன்னை ஜெயலலிதா” வின் தமிழுணர்வும், இதுவரை நீங்கள் தமிழர் தலைவனாக வேடம் கட்டியிருந்த “இரத்ததின் இரத்தம்” கருணாநிதியும் காலாகாலமாக ஆண்டு மகிழ்ந்த மாநிலத்தில் தான் இந்த மனித அவலமும் நடக்கிறது.

இதெல்லாம் உங்களுக்குத் தெரியாது என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். உங்களோடு நீண்ட தொலைவிலிருக்கின்ற அருந்ததிக்குத் தெரிகின்றதென்றால் “விலங்குப் பண்ணையை” சுற்றிக் குறுக்கும் மறுக்குமாக நடந்து திரியும் உங்களுக்கு இதெல்லாம் அக்குவேறு ஆணி வேறாகத் தெரிந்திருக்கும்.

தேசியம் அடையாளம் என்பவற்றை நீங்கள் உங்களை வளர்த்துக் கொள்வதற்கான முதலீடாகப் ப்யன்படுத்திக் கொள்கிறீர்களா இல்லையா என்பது தான் இங்கு வினா. இதற்கு ஆயிரம் பேசுக்களில் நீங்கள் பதில் சொல்லலாம். நரம்பு புடைக்க உணர்ச்சிவயப்படும் சீமானைப் பார்த்திருக்கிறோம். சினிமாவில் வந்த வீரபாண்டியக் கட்டப்பொம்மனுக்கு மறு அவதாரம் கொடுப்பது போல் பேசும் வை.கோபாலசாமியைக் கண்டிருக்கிறோம். தமிழ் நாட்டில் முதிர்ந்த “தேசியத் தலைவராகும்” நெடுமாறனைப் பார்த்திருக்கிறோம். ஈழப் பிரச்சனை, ரியல் எஸ்டேட் பிரச்சனை என்பவற்றோடு தலித் ‘பிளேவரையும்’ கலந்து தேசிய உணர்விற்குச் சாம்பார் படைக்கும் தொல்.திருமாவளவனைக் கேட்டிருக்கிறோம்.

நீங்கள் “விலங்கு கூடங்கள்” குறித்து என்ன செய்யப் போகிறீர்கள். வழமை போலவே ஒளிந்திருக்கும் “தேசியத் தலைவர் பிரபாகரன்” நாளை வந்து தமிழ் நாட்டின் அகதிகளையும் சேர்த்து விடுவிப்பார் என்றா சொல்லப் போகிறீர்கள்? இன்றைய திகதியில் பிரபாகரன் வருவார் என்று ஜெனீவாவில் வை.கோ அதிர்ந்ததையே கோமளித் தனமாகத் தான் புலம்பெயர் தமிழர்களே நோக்கினார்கள்.

அருந்ததி ராய் இன் கூற்றைக் கண்டு அஞ்சிவிடாதிர்கள் அதனை சவாலாக எடுத்துக் கொள்ளுங்கள். கருணாநிதி ஈழம் பெற்றுத்தரும், அமரிக்க வரும், ஐரோப்பா கடைகண் திறக்கிறது என்று மக்களை நம்பவைத்தே நீங்கள் நன்றாக முதலிட்டிருக்கிறீர்கள். இப்போது ஜெயலலிதா பெற்றுத் தருவார் என்று இன்னொரு கதையை பரப்பியிருக்கிறீர்கள்.

இனிமேல் அதிகமாக மக்கள் உங்களை நம்பத் தயாரில்லை. இந்த நூற்றாண்டின் அறிவு சார் சமூகத்தில் தகவல்கள் காட்டுத் தீ வேகத்தில் பரவி விடுகின்றன. ஆயிரம் வியாபாரிகள் உங்கள் “தேசிய” முதலீட்டுகளுக்கு ஆதரமாக நின்றாலும் எங்காவது, ஏதாவது ஒரு சந்தில் சமூகப் பற்றுள்ள குரல் ஒலிக்கும்.

ஆக, அருந்ததி ராய் கூறியதை சவாலாக எடுத்துக் கொள்ளுங்கள். இன்று முதல்.. .

சீமான், நெடுமாறன், வை.கோபாலசாமி, திருமா, தா.பாண்டியன் போன்ற இன்னோரன்ன தமிழினவாத அரசியல் வாதிகளுக்கு இது பகிரங்க வேண்டுகொள் மட்டுமல்ல சவாலும் கூட.

- விலங்குக் கூடங்களில் சிறை வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை விடுதலை செய்யப் போராடுங்கள்.

- அவர்களின் சுதந்திர நடமாட்டத்தை உறுதி செய்யுங்கள்.

-விரும்பியவர்களுக்குப் பிரஜா உரிமை பெற்றுக் கொடுக்க பரிந்துரை செய்யுங்கள், மறுத்தால் தெருவிலே போராடுங்கள்.

-அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கான திட்டத்தை முன்வையுங்கள்.

-இந்தியாவில் பிறந்து ஈழப் போராட்டத்தின் வரலாற்றோடு வளர்ந்து பெரியவர்களாகியிருக்கும் விலங்குக் கூடங்களின் குழந்தைகளின் கல்வியை உறுதிசெய்யுங்கள்.

-ஈழத்திற்குத் திரும்பிச் செல்ல விரும்புகின்றவர்களின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய அரசியல் போராட்டங்களை முன்னெடுங்கள்.

-இந்த அவலங்களை உலக மக்களிடம் பிரச்சாரம் செய்யுங்கள்.

இதற்கெல்லாம் உங்கள் சொந்தப் பணத்தில் ஒரு பைசா கூடத் தர வேண்டாம். இப்போது தான் சடுதியாகத் தமிழ் உணர்வு மேலெழுந்து தேசியக் கூத்தாடும் அன்னை இருக்கிறாரே. அவர் பெரும் பண முதலைகளிடம் பெட்டி வாங்கும் போது அகதிகளுக்கும் சேர்த்து வாங்கச் சொல்லுங்கள். அப்படி வாங்காவிட்டால் அம்பலப்படுத்துங்கள்.

தமிழ் அடையாளக் கனவில் மூழ்கிய நேரம் போக மிகுதியானவற்றில், சிறைவைக்கப்படிருக்கும் அகதிகளிடம் பேசிப் பார்த்தாலே இன்னும் கோரிக்கைகளைக் கண்டறியலாம்.

இனிமேலும் பிரபாகரன் வருவார் என்பதை மட்டும் முன்வைத்து அரசியல் நாடகம் போட முடியாது. நேர்மையாக மக்கள் பற்றிருந்தால் இந்த எரியும் பிரச்சனையை அதுவும் 25 வருடங்களாக தீபந்தம் போல எரியும் பிரச்சனையை முன்வைத்துப் போராடுங்கள். உங்கள் முற்றத்தில் நிகழும் அவலம் அல்லவா?

பிரபாகரன் வந்தால் வரட்டும். அதுவரைக் கான இடைக் காலத்தில் நீங்கள் சாதித்ததாக இவை அமையட்டுமே?

http://inioru.com/?p=21937

“நான் தமிழ் நாட்டிற்குச் சென்றிருக்கிறேன். பிரதான அரசியல் வாதிகள் தமது அரசியல் ஈழத் தமிழர் குறித்துப் பேசியே தம்மை அரசியலில் நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர். நான் ஈழத் தமிழ் அகதிகள் வாழும் முகாம்களுக்குச் சென்றிருக்கிறேன். அவர்கள் மிருகங்களைப் போல நடத்தப்படுகிறார்கள். சிறைக் கைதிகளைப் போல நடத்தப்படுகிறார்கள். பலர் அங்கேயே பிறந்து வளர்ந்து பெரியவர்களாகியிருக்கிறார்கள். அவர்கள் சுதந்திரமாக பதிவின்றி வெளியே சென்றுவர முடியாது. வேலை செய்யமுடியாது.

இதை எல்லாம் பார்த்துக்கொண்டு தமிழ் பிரதான அரசியல் வாதிகள் என்ன செய்கிறார்கள்? பலர் செய்வது போல, தமிழ் அடையாளம், தேசியம் என்பவற்றை உருவாக்கி அதனை மூலதனமாக்கிக் கொள்கிறார்கள்.அவர்களுக்கு உண்மையிலேயே ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருந்திருக்குமானால் அந்த அக்கறை முதலில் முகாம்களில் அடைக்கப்ப்படுள்ள மக்கள் மீதே செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.”

இதை நானும் நீங்களும் சொல்லி ஒரு மட்டையையும் கோப்பையில் பார்க்க ஏலா....

உ+ம்......

பாடகி மாயா..... அன்னை ஜெயாவிடம் பகீரங்க கேள்வியெளுப்பினா...... தமிழ்நாட்டில் நாயிலும் கீழாக நடத்தப்படும் எங்கட சனத்துக்கு ஏதாவது விமோசனம் கிடைக்கும்...

.

.

  • கருத்துக்கள உறவுகள்

tamilnadu.jpg

ஈழ தமிழர் விடயம் வாக்கு வங்கியில் பாதிப்பை ஏற்படுத்துமானால் வைக்கோ என்றோ முதல்வராக வந்திருக்க வேண்டும்..இன்றும் எம்பியாக வந்திருக்க வேண்டியவர். மே 27க்கு பின் ஒரு இரக்கம் பிறந்துள்ளதன் காரணம். முன்பு ஈழமா தலைவர் பிரபாகரன் அங்க இருக்கார் அவர் பார்ப்பார் என்பதுதான்.இன்று ஏற்பட்டுள்ள பேரனர்த்தந்தங்களுக்கும் துரோகத்திற்க்கும் பிறகே சில மாற்றங்கள் தெரிய ஆரம்பித்துள்ளன.. இதனை சரியான ஊடக வசதிகளோடு முன்னரே மாற்றத்தினை ஏற்படுத்தி இருக்கலாம்..

போக சில கைத்தடிக்களுக்கு உள்ளூர்காரன் எவனும் கேள்விகேட்கமாட்டான் அல்லது திபெத்து அகதிகளோடு ஒப்பிட்டு பேசுவதல் ஆகாது.. திபெத்துக்காரனை ஊட்டியில் தனியாக ஒரு கம்பிளி கண்காட்சி தெருவை நிறுவி சொர்டர்.. சால்வை .. விற்க இந்தியாகரன் விட்டிருக்கான்.. அவனுக்கு சென்ட்ரல் கவர்மென்ட் சப்போர்ட் இருக்கு.. ஈழ தமிழர்களை சுண்ணாம்பு அடித்தல் வயல் வேலை செய்தல்.. ஆட்டோ ஓட்டுதல் போன்றது.. இலங்கை தமிழர்களை போலவே இங்கு குடிசையிலும் பிளாட்பாரத்திலும் குந்தியிருப்ப்வர்கள் ஏராளம்.

ஆனால் இந்த ஒவ்வொவாத கையெழுத்து போடுதல் மற்றும் அடைத்து வைத்தல் (ரெண்டும் ஒன்னுதான்)போக +2 வரை மட்டுமே கல்வி அளித்தல் ஆகியவற்றில் உடன்பாடு இல்லை..

டிஸ்கி:

மாற்று கருத்து மாணிக்கங்களின் முதல் டார்கெட்ட் ...அதாவது சமாந்திரமாக எதையும் முன்னெடுக்கபடாது...முதலில் உங்க குண்டிய கழுவுங்க (அதாவது இந்தமாதிரி ஏழைகள் சிக்கல்கள் ) அதற்கு பிறகு இங்க ஈழ சிக்கல் வரலாம் என்பதுதான்(அம்பானி ரிலேசன் ஆகிடலாம்) .. எடுக்காமல் விட்டாலும் சிக்கல்.. ஆட்டுமந்தை ... அண்டார்டிக்க மந்தை!! என சிக்கல் வரும்....ஈழ சிக்கல் இந்த சிக்கலை முன்னெடுத்தால் ஜெயிலில் களியும் புண்ணாக்குமே கிடைக்கும் என்பது ஏனோ இந்த .... தெரியல்லா... இவனுங்க ஏதோ புருனே சுல்தான் போலவும் .. வெளிநாட்டில் இருந்து காசு அனுப்பிறமாதிரி செய்யறவணையும் கெடுக்க பில்டப்பு வேறு!!!

காசு இருக்கவன் வெளிநாடு போறான் இல்லாதவன் இங்க வாரான் .. இதில் ஒளிவு மறைவு ஏதும் இல்லை...

ஆயிரம் கிருஸ்டீன் டிரஸ்டு மற்றும் அன்னை தெரசா டிரஸ்ட் இருக்கிறது அதன் வழி இந்த வாய்சமால் வீரர்கள் தாயகத்தில் இருக்கும் தமிழர்களையும் தமிழ்நாட்டில் இருக்கும் அகதிகளையும் சமமாக பாவித்து வாழவைக்க அதன் வழி நடவடிக்கை எடுக்கவேண்டும் ...

அரசியல் வாதிகளை விடுத்து, எல்லையோர மக்கள் விட்டு, மிகுதி அனைவரும் கரிசனையோடு இருக்கிறார்கள் என்பதே எனது கருத்து...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்


tamilnadu.jpg

ஈழ தமிழர் விடயம் வாக்கு வங்கியில் பாதிப்பை ஏற்படுத்துமானால் வைக்கோ என்றோ முதல்வராக வந்திருக்க வேண்டும்..இன்றும் எம்பியாக வந்திருக்க வேண்டியவர். மே 27க்கு பின் ஒரு இரக்கம் பிறந்துள்ளதன் காரணம். முன்பு ஈழமா தலைவர் பிரபாகரன் அங்க இருக்கார் அவர் பார்ப்பார் என்பதுதான்.இன்று ஏற்பட்டுள்ள பேரனர்த்தந்தங்களுக்கும் துரோகத்திற்க்கும் பிறகே சில மாற்றங்கள் தெரிய ஆரம்பித்துள்ளன.. இதனை சரியான ஊடக வசதிகளோடு முன்னரே மாற்றத்தினை ஏற்படுத்தி இருக்கலாம்..

போக சில கைத்தடிக்களுக்கு உள்ளூர்காரன் எவனும் கேள்விகேட்கமாட்டான் அல்லது திபெத்து அகதிகளோடு ஒப்பிட்டு பேசுவதல் ஆகாது.. இலங்கை தமிழர்களை போலவே இங்கு குடிசையிலும் பிளாட்பாரத்திலும் குந்தியிருப்ப்வர்கள் ஏராளம்.

ஆனால் இந்த ஒவ்வொவாத கையெழுத்து போடுதல் மற்றும் அடைத்து வைத்தல் (ரெண்டும் ஒன்னுதான்)போக +2 வரை மட்டுமே கல்வி அளித்தல் ஆகியவற்றில் உடன்பாடு இல்லை..

டிஸ்கி:

மாற்று கருத்து மாணிக்கங்களின் முதல் டார்கெட்ட் முதலில் உங்க குண்டிய கழுவுங்க (அதாவது இந்தமாதிரி ஏழைகள் சிக்கல்கள் ) அதற்கு பிறகு இங்க ஈழ சிக்கல் வரலாம் என்பதுதான்.. இந்த சிக்கலை முன்னெடுத்தால் ஜெயிலில் களியும் புண்ணாக்குமே கிடைக்கும் என்பது ஏனோ இந்த .... தெரியல்லா... இவனுங்க ஏதோ வெளிநாட்டில் இருந்து காசு அனுப்பிறமாதிரி செய்யறவணையும் கெடுக்க பில்டப்பு வேறு!!!

ஆயிரம் கிருஸ்டீன் டிரஸ்டு மற்றும் அன்னை தெரசா டிரஸ்ட் இருக்கிறது அதன் வழி இந்த வாய்சமால் வீரர்கள் தாயகத்தில் இருக்கும் தமிழர்களையும் தமிழ்நாட்டில் இருக்கும் அகதிகளையும் சமமாக பாவித்து அதன் வழி நடவடிக்கை எடுக்கவேண்டும் ...

என்ன இருந்தாலும் நீங்க பெரிய ஆளுதான், எப்படி கண்டு பிடிச்சீங்க இது ஒட்டு குழுவோட இணையம் என்று, இந்தகட்டுரை எழுதியவரை கேட்டா அவர் ஜந்து பைசா குடுத்து இருக்கமாட்டார்...................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


என்ன இருந்தாலும் நீங்க பெரிய ஆளுதான், எப்படி கண்டு பிடிச்சீங்க இது ஒட்டு குழுவோட இணையம் என்று, இந்தகட்டுரை எழுதியவரை கேட்டா அவர் ஜந்து பைசா குடுத்து இருக்கமாட்டார்...................

யாருங்க இப்ப ஒட்டாத குழு? எல்லா நாத்தம்பிடித்த பயலுவளும் பசைமாதிரி ஒட்டிக்கினுதான் இப்ப இருக்கானுவ.

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்தவன் உழைப்பில் சுரண்டி வாழப் பிறந்தவர்கள் கூட தானம், தருமம் செய்கின்றவரில் குற்றம் கண்டுபிடிப்பது என்பது அவருடன் கூடப் பிறந்த இயல்பு. காரணம் தனக்கு கொள்ளை அடிப்பதே இயல்பான குணமாய் இருக்கும் போது இவர்களால் இது எப்படி சாத்தியம் என்று ஆராய்கின்ற ஒரு அறிவுதான்.

ஒருவர் தன் முகத்தை வெளிப்படுத்தி ஒன்றை சொல்லும் போது. அந்த முகத்திற்கு உரிய 'சமூக-அந்தஸ்' அவர் முரண்பட்ட கருத்தை அதுவாய் செருப்பால் அடிக்கும். ஆனால் இதுபோன்ற களங்களில்: விபச்சாரம் கூட கற்பென்ற கர்பூரமாய் மணம் கமழ முடியும் போது இவை மட்டும் விதிவிலக்கு ஆகுமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர் மீது அக்கறை கொள்ளும் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளுக்கு – அவசர வேண்டுகோள் : அஜித்

அஜித் என்பவர் யார், என்று யாரவாது சொல்லுங்கப்பா.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அஜித் என்பவர் யார், என்று யாரவாது சொல்லுங்கப்பா.......

மேலே இணைத்த கட்டுரையை எழுதியவர்தான் சிறி அண்ணா :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மேலே இணைத்த கட்டுரையை எழுதியவர்தான் சிறி அண்ணா :lol:

நான்.... சீரியஸாய் கேட்கிறன். நீங்கள் பகிடி விடுறியள் கிருபன். :wub:

அஜித்தின் பின்புலத்தையும், முன் புலத்தையும் கூறுங்கள். :D:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.