Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்திருப்பதற்கான முக்கிய காரணங்கள்

Featured Replies

அரசுடன் பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்திருப்பதற்கான முக்கிய காரணங்கள் விளக்குகிறார் - சம்பந்தன்

திருகோணமலை நிருபர் : தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சர்வதேச சமூகம் அங்கீகரித்துள்ள நிலையில், பேச்சுவார்த்தை மேசையில் கூட்டமைப்பு அமர்ந்திருக்க வேண்டிய கட்டாயநிலை ஏற்பட்டிருப்பதாக அக்கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் திருமலை மாவட்ட எம்.பி.யுமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ்க் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடாவிடின் தனது சார்பு தமிழ் அமைப்புகளை பேச்சுக்கு அரசாங்கம் பயன்படுத்தும் நிலைமை உருவாகும் எனவும் அதற்கு இடமளிக்கக்ககூடாது என்றும் சம்பந்தன் கூறினார். "1983 ஆம் ஆண்டில் தமிழ் மக்கள் இருந்த நிலையிலும் பார்க்கக் கடினமான சூழ்நிலையில் இன்று வாழ்ந்து வருகின்றார்கள். இதனைத் தாண்டவேண்டும், தாண்டுவோம் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு' என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை தனது திருகோணமலை வாசஸ்தலத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்குபற்றிப் பேசும் போது அவர் இக்கருத்தை வெளியிட்டார். எதிர்வரும் மாதம் 23 ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் குச்சவெளி, சேருவில, திருகோணமலைப் பட்டினமும் சூழலும் ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தல்களில் போட்டியிடும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் நிர்வாகிகள், ஆர்வலர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர். சம்பந்தன் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் நடத்திவரும் பேச்சுவார்த்தை பற்றிக் கருத்து வெளியிட்டார். "இப்பேச்சுவார்த்தை பற்றி தமிழ் வட்டாரங்களில் பல கருத்துகள் நிலவுகின்றன. இப்பேச்சுவார்த்தையால் ஒரு பலனும் கிடைக்கப் போவதில்லை என்றும் பேசவேண்டிய தேவை இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர். பேசுவதற்கு இது அல்ல தருணம் என்றும் பொறுத்திருந்து பார்த்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என்றும் இன்னும் சிலர் கூறுகின்றனர். இவர்களின் கருத்துகளில் நியாயமில்லாமல் இல்லை' என்று சம்பந்தன் கூறினார்.

"கடந்த வருடம் ஜூன் மாதம் புதுடில்லிக்கு இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சென்றிருந்தார். அடுத்த மாதம் இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குழு புதுடில்லி சென்றது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் முக்கிய அமைச்சர்கள் மற்றும் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரதமர் மன்மோகன் சிங் அப்போது தெளிவாகச் சொன்னார். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கு இந்தியா தயாராக இருப்பதாக மன்மோகன் சிங் அப்போது உறுதியாகக் கூறினார்.

இலங்கை அரசாங்கத்திற்கு அதன் பின்னர் நாம் அறிவித்தோம். பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். ஆக்கபூர்வமாக நாம் ஈடுபடத்தயார் என்று கூறினோம். சில மாதங்கள் கழித்து ஜனாதிபதி அழைத்தார். நாம் அப்போது அவருடன் ஒளிவுமறைவின்றி பேசினோம். அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை எமக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் தான் தேவைப்படுகின்றது. ஜனநாயக, மனித உரிமை, மனிதாபிமான மீறல்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டுள்ளீர்கள், காலப்போக்கில் இந்த நிலைவரம் மோசமடையக்கூடும். பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தி தீர்வுகாணுவதன் மூலமே சர்வதேச சமூகத்தின் அழுத்தத்திலிருந்து விடுபட முடியும்.

எமக்கும் நல்லது, உங்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது என்று ஜனாதிபதிக்குக் கூறினோம். அரைமணிநேரம் மௌனம் நிலவியது. பின்னர் அடுத்த அறையிலிருந்த அமைச்சர் பீரிஸை அழைத்து, கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தார். அவ்வாறு தான் தற்போதைய அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை ஆரம்பமானது. சர்வதேசத்தில் எழுந்துள்ள மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டமீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பானகுற்றச்சாட்டுகள் குறித்து சரியான பதிலைக் கொடுக்க முடியாமல் கொழும்பு அரசாங்கம் தற்போது திணறிக் கொண்டிருக்கிறது. பதில் சொல்லித்தான் ஆகவேண்டிய நிலை கொழும்பு அராங்கத்துக்கு ஏற்பட்டிருக்கின்றது' என்று சம்பந்தன் தெரிவித்தார்.

ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள், இந்தியா ஆகிய இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் ஒரே ஒரு அரசியல் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அங்கீகரித்துள்ளது. சர்வதேச சமூகம் ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளை ஏற்றுக் கொண்டிருந்தது. தற்போது ஜனநாயக ரீதியில் செயல்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்துகின்றது என்ற நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளித்த ஏகோபித்த ஆதரவு, பின்னர் மார்ச் மாதம் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் மீண்டும் கூட்டமைப்புக்கு அளிக்கப்பட்ட ஆதரவு ஆகியனவே இதற்குக் காரணமாக அமைந்தது. அவற்றை மீண்டும் உறுதிப்படுத்துவதாக எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலிலும் வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமோகமாக வெற்றிபெற வைக்க வேண்டும். வடக்கு,கிழக்கை உள்ளடக்கியதான தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை உள்ளடக்கியதான நிரந்தரமானதும் நியாயமானதுமான அரசியல் தீர்வைப் பெறுவதற்கு வழிசமைப்பதை எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்த வேண்டும்' என்றார் சம்பந்தன்.

சர்வதேச சமூகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக அங்கீகரித்திருப்பதால் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டுள்ளது. அரசின் மீது சர்வதேச சமூகத்தின் அழுத்தம் இறுகிவரும் இந்த நேரத்தில் அமெரிக்கா, ஐ.நா., ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றின் அங்கீகாரம் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இல்லையேல் அரசாங்கம் தனது சார்பு தமிழ் அமைப்புகளை பேச்சுவார்த்தைக்குப் பயன்படுத்தும் நிலை உருவாகும். அதற்கு இடமளிக்கக்கூடாது என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

http://www.thinakkural.com/news/all-news/local/6131-explain.html

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் ஐயா அவர்கட்கு, தமிழருக்கு வடக்கும் கிழக்கும் இணைந்த பகுதிகளாக பண்டைய காலந்தொட்டே ஒரு தாயகப்பிரதேசம் இருந்ததை, தமிழர்கள் ஒரு தேசிய அடையாளங்களை தன்னகத்தேகொண்ட இனக்குழுமம் என்பதை, அவர்கள் அன்னிய ஆடசிக்கு முற்பட்ட காலத்தில் சுயநிர்ணயமான அரசினைக் கொண்டவர்கள் ஆகிய மூன்று விடையங்களையும் உள்ளடக்கிய தாயகம் தேசியம் சுயநிர்ணயம் ஆகிய இவற்றின் அடிப்படையில் தங்கள் பேச்சுவார்த்தை மேசைக்குப் போக முயற்சிக்கவும். சர்வதேச அரங்கில் சிங்களம் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளது இப்பிரச்சனையிலிருந்து விடுபட தமிழர் விரோததேசமாம் இந்தியாவினது ஆலோசனையின் காரணமாக உங்களை அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்து காய்நகர்த்துகிறார்கள். ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் தங்களை தமிழர்களது ஏகப்பிரதிநிதிகளாகக் கருதவில்லை. அப்படிக்கருதுவதாக இந்தியா தங்களுக்கு குழையடிச்சிருக்கு அந்தக் குழையடிப்பில நீங்கள் புளகாங்கிதமடைந்து ஏதேதோ பிதற்றுகிறீர்கள். கூடிய விரைவில தமிழர் விரோததேசமாம் இந்தியாவும் உங்களைக் கைவிட்டிடும். முதலில சொந்த புத்தியில நடக்கப் பழகிக்கொள்ளுங்கோ (அப்படி ஒண்டு இருந்தால்) அட ஒண்மையாச் சொன்னால் தமிழர்களது ஏகப்பிரதிநிதிகள் நீங்கள்தானென அடங்கொப்பரான நானே ஒத்துக்கொள்ளவில்லை அதுக்குப்பிறகு ஆனானப்பட்ட சர்வதேசம்.... சமூகம்.... இவையெல்லாம் ஒத்துக்கொள்ளுமென காமடி பண்ணாதேங்கோ.

சம்பந்தன் ஐயா அவர்கட்கு, தமிழருக்கு வடக்கும் கிழக்கும் இணைந்த பகுதிகளாக பண்டைய காலந்தொட்டே ஒரு தாயகப்பிரதேசம் இருந்ததை, தமிழர்கள் ஒரு தேசிய அடையாளங்களை தன்னகத்தேகொண்ட இனக்குழுமம் என்பதை, அவர்கள் அன்னிய ஆடசிக்கு முற்பட்ட காலத்தில் சுயநிர்ணயமான அரசினைக் கொண்டவர்கள் ஆகிய மூன்று விடையங்களையும் உள்ளடக்கிய தாயகம் தேசியம் சுயநிர்ணயம் ஆகிய இவற்றின் அடிப்படையில் தங்கள் பேச்சுவார்த்தை மேசைக்குப் போக முயற்சிக்கவும். சர்வதேச அரங்கில் சிங்களம் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளது இப்பிரச்சனையிலிருந்து விடுபட தமிழர் விரோததேசமாம் இந்தியாவினது ஆலோசனையின் காரணமாக உங்களை அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்து காய்நகர்த்துகிறார்கள். ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் தங்களை தமிழர்களது ஏகப்பிரதிநிதிகளாகக் கருதவில்லை. அப்படிக்கருதுவதாக இந்தியா தங்களுக்கு குழையடிச்சிருக்கு அந்தக் குழையடிப்பில நீங்கள் புளகாங்கிதமடைந்து ஏதேதோ பிதற்றுகிறீர்கள். கூடிய விரைவில தமிழர் விரோததேசமாம் இந்தியாவும் உங்களைக் கைவிட்டிடும். முதலில சொந்த புத்தியில நடக்கப் பழகிக்கொள்ளுங்கோ (அப்படி ஒண்டு இருந்தால்) அட ஒண்மையாச் சொன்னால் தமிழர்களது ஏகப்பிரதிநிதிகள் நீங்கள்தானென அடங்கொப்பரான நானே ஒத்துக்கொள்ளவில்லை அதுக்குப்பிறகு ஆனானப்பட்ட சர்வதேசம்.... சமூகம்.... இவையெல்லாம் ஒத்துக்கொள்ளுமென காமடி பண்ணாதேங்கோ.

என்ன விளையாட்டு இது , சும்மா போய் இருந்து பேசிப் போட்டு வாறதில்லை , இணக்கம் கண்ட விடயங்களை ஒப்பந்தம் செய்து கொள்ள வேணும் , பிறகு அதை மதிச்சு அமுல்படுத்த வேணும் . இது தான் சாதாரண சர்வதேச அரசியல் நடைமுறை . இந்தப் பக்குவங்கள் சிங்களவனட்டை இருக்கோ ? சர்வதேச மத்தியஸ்துடன் செய்த உடன்பாடுகளை அமுல்படுத்திறதுக்கே மீண்டும் மீண்டும் சிங்களவனோட பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிலை நோர்வே , இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏற்பட்டிருந்தது . பிறகு எப்பிடியப்பா நீங்கள் பேசி ஒப்பந்தம் கண்டு தீர்வைக் கொண்டு வரப்போகின்றீர்கள் . இதுகளை , உங்களுக்கு அழுத்தம் தருகிற நாடுகளுக்கு சொன்னால் என்ன ?

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் பேசிக்கொண்டு யாழ்ப்பாணத்தில் இராணுவத்தை வைத்து கூட்டமைப்புக்கு அடி போடுகிறான்.பிறகும் பேச்சுவார்த்தையில் போயமர்ந்து என்ன செய்யப்போகிறீர்கள் சம்பந்தன் ஐயா?.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.