Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தின் காலில் வீழ்ந்தது கூட்டமைப்பு! வழக்கினை வாபஸ் பெற்றது கூட்டமைப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தின் காலில் வீழ்ந்தது கூட்டமைப்பு! வழக்கினை வாபஸ் பெற்றது கூட்டமைப்பு!

Tuesday, June 21, 2011, 12:44

சிறீலங்கா

வடமாகாணத்தில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் பதிவு நடவடிக்கைகளை இராணுவம் விலக்கிக்கொள்வதாக அறிவித்ததை அடுத்து சம்பவம் தொடர்பில் தீர விசாரிக்காமல் பதிவு நடவடிக்கைக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த வழக்கில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாபஸ் பெற்றிருப்பதாக தெரியவருகின்றது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வட மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டும் இராணுவ பதிவுகள் நிறுத்தப்பட்டுள்ளது என யாழ் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்ததையடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பினால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது பதிவு நடவடிக்கைகளை இடைநிறுத்துவதாக அவர் வழங்கிய உறுதிமொழியை அடுத்தே குறித்த மனுவை வாபஸ் பெற தீர்மானித்ததாக சிரேஷ்ட சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எஸ்.சிறிதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறுவதாக உயர் நீதிமன்றத்திடம் அறிவித்தனர்.

உயர்நீதிமன்ற நீதியரசர்களான என்.ஜே.அமரதுங்க, பி.ஏ.ரத்நாயக மற்றும் சந்திரா ஏக்கநாயக்க ஆகியோர் முன்னிலையில் கடந்த மார்ச் 3ஆம் திகதி விசாரிக்கப்பட்ட இந்த மனுவில் பிரதிவாதிகளாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, இராணுவ பேச்சாளர் உபய மெதவல மற்றும் யாழ். மாவட்ட செயலாளார் இமெல்டா சுகுமார் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அவர்கள் சார்பில் சட்டமா அதிபர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

பலாத்காரமான முறையில் பொதுமக்கள் பதிவு நடவடிக்கை இடம்பெறுவதுடன் புகைப்படம் பிடிக்கப்படுவதாகவும் இதற்கு மேலதிகமாக கிளிநொச்சி மாவட்ட மக்கள் சிங்கள மொழியில் அச்சடிக்கப்பட்ட பத்திரத்தில் பலவந்தமாக கைச்சாத்திட வைக்கப்படுவதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த பதிவு நடவடிக்கை காரணமாக மக்கள் மத்தியில் ஓர் அச்ச உணர்வு தோன்றியிருப்பதாகவும் இப்படியான நடவடிக்கை தென் பகுதியில் இடம்பெறவில்லை எனவும் இதனால் நாட்டின் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் நேற்றும் நேற்று முன்தினமும் யாழ் நகர், வலிகாமம் மற்றும் வடமராட்சி பகுதியில் இராணுவத்தினர் பொதுமக்களை பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடபட்டிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.tamilthai.com/?p=19934

இந்த விடயத்தில் கூட்டமைப்பை பாராட்டத்தான் வேண்டும். மக்களை மிரட்டி வந்த பதிவு நடவடிக்கையை நிறுத்தியுள்ளனர். அதற்காக இந்த வழக்கை வாபஸ் வேண்டியுள்ளனர்.

அதேவேளை அளவெட்டி விடயம் சம்பந்தமாக அமெரிக்காவுக்கு அறிவித்தது மூலம் அவர்கள் சர்வதேசத்துடன் இணைந்தே சில முடிவுகளை எடுப்பதாக தெரிகின்றது.

பலவிடயங்களை இப்படித்தான் நகர்த்த வேண்டியிருக்கும்.

வழக்கு போடுவதும், வாபஸ் வாங்குவதும் நல்லதல்ல. வாபஸ் வாங்குவதற்கும் முறையுள்ளது.

நீதி மன்றில் சிங்கள ராணுவப் பயங்கரவாதிகள் ஆஜராகி கொடுத்த உறுதிமொழிக்கு அமைய, நீதி மன்றின் பதிவுடன் வாபஸ் வாங்கலாம். இதன் போது தந்த முடிவை நீதிபதியின் கையொப்பத்துடன் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அதை விட்டுவிட்டு அயல்நாட்டு பயங்கரவாதிகளின் ஆலோசனையின்படி, சிங்கள பயங்கரவாதிகளின் முகாமுக்குச் சென்று அவர்கள் ராஜ மரியாதையுடன் வீசிய எலும்புத்துண்டுகளை நக்கிய பின்னர் சுயமாக வாபஸ் வாங்குவது முட்டாள்த் தனமானது. இதில் ஒரு ராஜதந்திரமும் இல்லை. அப்பட்டமான கோழைத்தனம். கூழைக் கும்பிடு போடுவதில், தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை முதலாக்கி சுயநலம் பேணுவதில் கம்பன் கழக ஜெயராஜுக்கு நிகரானவர்கள்.

அரை வேக்காட்டுச் சட்டத்தரணிகளால் நிறைந்த கூட்டமைப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.