Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கேணல் ரமேஸின் படுகொலை நியாயமானது

Featured Replies

கேணல் ரமேஸின் படுகொலை நியாயமானது: கோத்தபாயவின் குழப்பமான கருத்துக்களால் படையதிகாரிகளுக்கு நெருக்கடி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் ரமேஸ் கைது செய்யப்பட்ட பின்னரே கொல்லப்பட்டதாக நுகேகொடவில் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் தலைவராக கேணல் ரமேஸ் செயற்பட்டவர் என்றும், அங்கு இடம்பெற்ற பெருமளவு கொலைகளுக்கு அவர் பின்னணியில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச, அவ்வகையில் அவரின் படுகொலை நியாயமானது எனக் கூறியுள்ளார்.

சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் போலியானது எனவும், பயிற்சி பெற்ற நடிகர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது எனவும் கோத்தபாய ராஜபக்ச கூறியிருந்த நிலையில், அவர் தற்போது இவ்வாறு கூறியிருப்பது வெளிநாடுகளில் பணியாற்றும் சிறிலங்காவின் படையதிகாரிகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் கடந்த 14ஆம் திகதி இரவு ஒளிபரப்பான 'இலங்கையின் கொலைக்களம்' எனும் ஆவணப்படத்தில் காண்பிக்கப்படும் காட்சிகள் வன்னிப் போர்முனையில் எடுக்கப்பட்டவை அல்ல எனவும், இக்காட்சிகளில் காண்பிக்கப்படுபவர்கள் விடுதலைப் புலிகளின் போராளிகள் அல்ல எனவும் ஐரோப்பிய நாடுகளுக்கு விளக்கம் அளிக்குமாறு வெளிநாடுகளுக்கான சிறிலங்காவின் தூதரகங்களில் பாதுகாப்பு ஆலோசகர்களாகப் பணியாற்றும் படையதிகாரிகளுக்கு சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து, அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதரகத்தில் பணிபுரியும் சிறிலங்கா படைத்தரப்பின் எட்டாவது அதிரடிப்படைப் பிரிவின் தளபதியாகப் பணியாற்றிய பிரிகேடியர் ரவிப்பிரிய இதுகுறித்து அமெரிக்கா அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறியுள்ளார்.

அதேபோன்று சிறிலங்கா படைத்தரப்பின் 55வது மற்றும் 59வது படைப்பிரிவுகளின் தளபதிகளாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா பிரித்தானிய அதிகாரிகளுக்கும், 57வது படைப்பிரிவின் தளபதியாகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் ஜேர்மனி மற்றும் சுவிஸ் அதிகாரிகளுக்கும் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளனர்.

'இலங்கையின் கொலைக்களம்' எனும் ஆவணப்படத்தில் காண்பிக்கப்படும் காட்சிகள் களமுனைக் காட்சிகள்

அல்ல என்று இவர்கள் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

இதேபோன்ற கருத்தை சிறிலங்கா படைத்தரப்பின் 58வது படைப்பிரிவின் தளபதியாக முன்னர் பணியாற்றியவரும், தற்போது நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் பிரதி வதிவிடப் பிரதிநிதியாக செயலாற்றி வருபவருமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவும் சர்வதேச இராஜதந்திரிகளுக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்திய படைத்துறைக் கல்லூரியில் தற்போது உயர் பட்டப் படிப்பை மேற்கொண்டுவரும் சிறிலங்கா படைத்தரப்பின் 53வது படைப்பிரிவின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவும் இந்த ஆவணப்படம் போலியானது என இந்திய படையதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் புகைப்படக் கருவிகளைக் கொண்டு பயிற்சி பெற்ற நடிகர்கள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் படையதிகாரிகள் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

ஆனால், சிறிலங்காவின் படைத்துறை அமைச்சு வெளியிட்டிருந்த அறிக்கையில் இசைப்பிரியா ஒரு ஆயுதம் தரித்த போராளி எனக் குறிப்பிடப்பட்டதுடன் அவரின் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் கேணல் ரமேஸ் கைது செய்யப்பட்ட பின்னரே கொல்லப்பட்டதாக நுகேகொடவில் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களைக் கூறிவருவது தொடர்பில் வெளிநாடுகளில் பணியாற்றும் படையதிகாரிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கோத்தபாய ராஜபக்சவின் முன்னுக்குப்பின் முரணான தகவல்களால் இனிமேல் தாம் கூறும் உண்மையான தகவல்களை கூட வெளிநாட்டு அதிகாரிகள் நம்புவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளதாக சிறிலங்காவின் பெயர் குறிப்பிட விரும்பாத படையதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆவணப்படத்தின் காட்சிகளில் இடம்பெற்றுள்ள பன்னிரண்டு சிறிலங்கா படைத்தரப்பினர் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தொடர்பில் தற்போது எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் எனவும், அவர்களை நெருக்கமாகக் கண்காணிக்கும்படியும் கோத்தபாய ராஜபக்ச அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட படைத்தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவர்கள் மேலும் பல புதிய ஆதாரங்களை வெளியிடலாம் என கோத்தபாய ராஜபக்ச அச்சம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={85D6137C-CAFF-4E83-98BB-06D3AC56F76B}

கோத்தாவின் இந்த உரையின் ஆங்கில வடிவம் அல்லது காணொளி கிடைக்குமா?

அவன் சிங்களத்தில் உரையாற்றியது ITN இனின் ஒரு நிகழ்ச்சியில் காட்டப்பட்டதாம். முயற்சி செய்தால் எடுத்துக்கொள்ளலாம்.

  • தொடங்கியவர்

கோத்தாவின் இந்த உரையின் ஆங்கில வடிவம் அல்லது காணொளி கிடைக்குமா?

1. Ranaviru Punyanumodana - 2011

http://www.defence.lk/new.asp?fname=20110618_03

2. International Attempts to Belittle Ranaviru Sacrifices Should be Defeated Collectively – Secretary Defence

http://sinhale.wordpress.com/2011/06/18/international-attempts-to-belittle-ranaviru-sacrifices-should-be-defeated-collectively-secretary-defence/

3. DEFENCE SECRETARY GOTABHAYA RAJAPAKSA SAYS THE CHANNEL 4 VIDEO DOES NOT SHOW WHO THIS TERRORIST IS

http://www.onsrilanka.info/?p=5203

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும், விரல் நுனியில் வைத்திருக்கும் அகோதாவை நினைக்க பெருமையாக உள்ளது. :)

  • தொடங்கியவர்

முடிந்தளவுக்கு எல்லா மொழிகளிலும் இந்த சனல் ஆவணத்தை மக்களை, முக்கியமாக மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், மாணவர்கள் என பார்க்க வைக்கவேண்டும்.

ஜெர்மன் மொழியில் (?) Hast du das gesehen? Hat ein paar grausigen Bilder, so seien Sie gewarnt! youtu.be/XADVagA2MUk

கிந்தியில் (?) : क्या तुमने यह देखा? कुछ भीषण छवियों, तो चेतावनी दी हो गया है! : youtu.be/XADVagA2MUk

1. On twitter

Use #killingfields and paste the link youtu.be/XADVagA2MUk also try to follow famous people and local politicians then reply on their tweets with "Have watched this? youtu.be/XADVagA2MUk "

2. On Facebook

On the search type the famous people's name. You will find their fan pages. Then click the "like" button then you will be mostly allowed to post the link on the page wall.

This will simply reach thousands and thousands.For instant I did put on Barack Obama's page where we get more than 2 million fans.

Remember Egypt revolution was made possible by internet , currently all we need is to ensure everybody has atleast once watched this documentary. World will chaane

3. Use google translator to post in different languages [ http://translate.google.com/ ]

Currently people are focusing on Chinese / Hindi /Russian and Iran.These are the allies of Sri Lanka and we need to knock their doors with this video to ensure Sri Lanka is left alone in the world!!

  • கருத்துக்கள உறவுகள்

2 வருடங்களுக்கு முன்பு கோத்தபாய ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.