Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதுகாப்புச் செயலர் கூறியதன் உண்மைத்தன்மை என்ன?

Featured Replies

பாதுகாப்புச் செயலர் கூறியதன் உண்மைத்தன்மை என்ன?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அரசுடன் சுமுகமான உறவுகளை ஏற்படுத்த முனைப்புக்காட்டி வருகின்ற போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அதற்குத் தடை செய்வதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்­ஷ கூறியுள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அரசுடன் சுமுகமான உறவை ஏற்படுத்த முனைப்புக் காட்டும்போது, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அதற்குத் தடையாக இருக்கிறார்கள் என்ற பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்­ஷவின் கூற்று தமிழர் தரப்பின் ஒற்றுமைக்கு அவ்வளவு நல்லதல்ல.

பாதுகாப்பு செயலாளர் கூறியதிலிருந்து இரா. சம்பந்தன் அரசின் பக்கம் நிற்கிறார் என்ற ஒரு நிலைமை தோற்றம் பெறுகின்றது. அதற்கு மேலாக கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரச உறவுக்கு தடையாக இருக்கின்றனர் எனில் அவர்கள் மீது அரசு கோபம் கொண்டிருக்கும் என்பது அடுத்த நிலைமை.

அவ்வாறாயின் அரசுடனான சம்பந்தனின் சுமுகமான உறவுகளின் முனைப்பிற்கு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிராக இருக்கின்றார்கள் என்ற தகவலை, அரசிடம் கூறியது யார்? என்ற கேள்வி ஏற்படுவதும், அதனூடாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் ஒற்றுமையில்லையா என்ற வினாவை மக்கள் எழுப்புவதும் தவிர்க்க முடியாததே.

எதுவாயினும் இன்றைய சமகால நிலைமையில் அரசுடனான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் தமிழ் மக்கள் ஏதோவொரு எதிர்பார்ப்புடன் இருக்கின்றார்கள். ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு பிரதிபலிக்கின்றதா என்பது ஐயம் தருவதாகவே உள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை குறைகாண வேண்டும் என்ற தேவை நமக்குக் கிடையாது. ஆனால் அவர்கள் பல இடங்களில் பொறுப்பற்றவர்களாக நடந்து கொள்கின்றனர்.

உதாரணமாக அளவெட்டியில் நடந்த சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக ஜனாதிபதியையோ அல்லது பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்­ஷவையோ சந்தித்திருக்க வேண்டும். அத்தகையதொரு சந்திப்பில் யாழ்.கட்டளைத் தளபதியும் பிரசன்னமாகியிருக்கலாம்.

ஆனால் கூட்டமைப்பின் எம்.பிக்கள் எங்கே எப்படி நடந்துகொள்வதென்பது புரியாமல் நடந்துகொண்டனர். அவர்கள் யாழ்.கட்டளைத் தளபதியுடனான சந்திப்பின்போது படையினரால் தாக்கப்பட்ட மக்களின் மனநிலை பற்றி அறியாதவர்களாக சிரித்து மகிழ்ந்து கதைத்துள்ளனர்.

அவர்களின் சிரிப்புக்கள் அடங்கிய புகைப்படங்களை யாழ்.கட்டளைத் தலைமையகம் மிகச் சாதுரியமாக பிரசாரப்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தாக்கியவர்கள் தொடர்பில் கூட்டமைப்பின் எம்.பிகள் கோமாளித்தனமான கதைகளை செவிமடுத்துள்ளனர். இதனை ‘அளவெட்டியில் தாக்குதல் நடத்தியவர்கள் படையினரே’ என்ற பாதுகாப்புச் செயலர் கோத்தபாயவின் தகவல் உறுதி செய்துள்ளதல்லவா?

நிலைமை இப்படியே சென்றால் கூட்டமைப்புத் தொடர்பான முரண்பாட்டுத் தகவல்கள் பல பக்கங்களிலும் வெளிவருவதை தடுக்க முடியாது போகும்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=20418

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களது நோக்கமும், தொழிலும், எமது போராட்டம் ஒரு தீர்க்கமான நிலையை எட்டும்போது, அதை நீர்த்துப் போகச்செய்வதே!

இதற்காக இவர்களுக்கு வெகுமதிகளும் அழிக்கப் படும்!

இவர்கள் இராணுவத்தினரான புகைப் படங்களில், சிரித்துக் கொண்டிருந்தால், எமது இனம் உரிமையிழந்து தவிக்கின்றது என்று சர்வதேசத்தை, எவ்வாறு நம்பவைப்பது?

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் அரசிய உறுதிப்பாடு அற்றது இவர்கள் நாணல் போன்றவர்கள் பாவம் இந்த தமிழ் சமூகம்.

முன்னர் அமிர்தலிங்கம் ஜே. ஆர். தனது கையால் வழங்கிய ஒரு கோப்பை தேநீரில் மதி மயங்கி தமிழரை, தமிழர் உரிமைகளை க் காவு கொடுத்தார்.

அதேபோல் சிங்கள ராணுவத்தின் உபசாரத்தில் மதிமயங்கி யாழ் கூட்டமைப்பு உறுப்பினரும் முதுகெலும்பில்லாத உயிரனங்களாக இருப்பதை தமிழர் விரும்பவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.