Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழக சேனல்கள் போட்டி போட்டு அந்தக் காட்சிகளை வெளியிட அது ஏதாவது சாமியாரின் படுக்கை அறைப் பதிவா என்ன?

Featured Replies

இனவெறியைச் சுமக்கும் தழும்புகள்!

''18 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்தக் காட்சிகளைப் பார்க்காதீர்கள்!’ - இந்த எச்சரிக்கையுடன்தான் அந்தக் காட்சி ஓடியது. ஆனால், 18 வயதைக் கடந்தவர்கள்கூட அந்தக் காட்சியைப் பார்க்கும் தைரியமற்றுக் கடந்துபோனார்கள். 'இலங்கையில் நடந்தது இனப் படுகொலைதான்!’ என்பதை, 49 நிமிடம் 4 நொடிகள் ஓடிய அந்தக் காட்சியின் மூலமாக உலகத்தின் மடியில் போட்டு உடைத்தது 'சேனல் 4’ தொலைக்காட்சி.

போர் ஆரம்பித்தது தொடங்கி முள்ளி வாய்க்கால் வரை நீண்டு, இறுதிக் களத்தில் ரத்தமும் சதையுமாக முடிந்தது வரையிலான இன அழிப்புக்கு அதி முக்கிய சாட்சி... அந்த ஒளிபரப்பு. புலிகளின் கைகளைக் கட்டி குப்புறத் தள்ளி பின்னந் தலையில் சுடுவதும், அலறக்கூட அவகாசம் இல்லாமல் பொத்தெனச் சரியும் உடல்களைக் கண்டு கை கொட்டிச் சிரிப்பதும் சிங்களர்களின் சீரிய குணமாக உலக அரங்கில் ஒளிபரப்பாகியது. செத்துக்கிடக்கும் பெண் போராளிகளின் உறுப்புகளைக் காட்டி கொக்கரித்துச் சிரிக்கிற சிங்களக் கொடூரம் உலகத்தின் மனசாட்சியையே ஒரு கணம் தலை குனியவைத்தது.

''முழுக்கப் பார்க்கிற அளவுக்கு எனக்கு சக்தி இல்லை. இலங்கையில் நடந்தது அப்பட்டமான இனப் படுகொலை என்பதற்கு இதைவிட சாட்சி தேவை இல்லை!'' என அலறுகிறார் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன். ''எங்களின் அதிர்ச்சியை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது, சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியதற்கான ஆதாரங்கள்போல் தெரிகிறது. இவற்றை நிகழ்த்திய இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், சர்வதேச சமூகத்துடன் இணைந்து அனைத்து சாத்தியக்கூறுகளையும் கண்டறிய இங்கிலாந்து அரசு தயாராக இருக்கிறது!'' எனப் பதற்றத்தோடு சொல்கிறார் இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அலிஸ்ட்டர் பர்ட்.

''இன அழிப்பு, போர் மரபு மீறல், பெண்கள் மீதான சித்ரவதை என அத்தனை விதமான அட்டூழியங்களையும் சிங்கள ராணுவத்தினர் அரங்கேற்றி இருக்கிறார்கள். மனிதப் பட்டியலில் சிங்களர்கள் இனியும் நீடிக்க வேண்டுமா என்பதை உலகம் யோசிக்க வேண்டும்!'' என மனித உலக உரிமை அமைப்புகள் கொந்தளிக்கின்றன. ஆனால், எதற்கும் சலனமே காட்டாத சிங்கள அரசு, 'சேனல் 4 ஒளிபரப்பிய காட்சி கள் நம்பும்படியாக இல்லை. புலிகளின் வழக்கமான சித்திரிப்பு வேலைதான் இது!’ எனப் பாதுகாப்பு அமைச்சகம் மூலமாக அறிவித்தது.

கூடவே, அதி முக்கிய விளக்கமாக, 'சேனல் 4 இசைப்பிரியா என்பவரை ஊடகவியலாளர் என்று மட்டுமே சொல்கிறது. ஆனால், இசைப்பிரியா புலிகள் அமைப்பில் லெப்டி னென்ட் கர்னலாக இருந்தவர்!’ என்கிறது இலங்கை அரசு. இசைப்பிரியா வுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகளைப்பற்றி வாய் திறக்கும் வல்லமை இலங்கைக்கு இல்லை. இனப் படுகொலையின் ஆவணப்படத்தைத் தயாரித்தவரான இயக்குநர் கெலம் மெக்ரே, ''போர் நடந்தபோது தமிழர்கள் வாழும் பகுதியில் எடுக்கப்பட்டவை தனியாகவும், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்கள் தனியாகவும், எங்களுக்குக் கிடைத்தன. நிராயுத பாணியாக இருப்பவர்கள் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகளும், சித்ரவதை செய்யப்பட்ட நிர்வாணக் காட்சிகளும் சிங்கள ராணுவத்தினராலேயே எடுக்கப்பட்டவை. அந்தக் காட்சிகள் எந்த வகையான செல்போனில் எடுக்கப்பட்டவை, என்ன தேதியில் எடுக்கப்பட்டவை என்பதைக்கூட எங்களால் உறுதியாகச் சொல்ல முடியும். காயங்களின் தன்மை, துப்பாக்கிச் சூட்டின் தாக்கம் ஆகியவற்றை வல்லுநர்கள் மூலமாக ஆராய்ந்து உண்மை என உறுதிப்படுத்திய பிறகுதான் வெளியிட் டோம். நாங்கள் ஒளிபரப்பிய காட்சிகளை எங்களாலேயே கண்கொண்டு பார்க்க முடிய வில்லை என்பதுதான் உண்மை!'' என்கிறார் வருத்தமாக.

கொக்கரித்துச் சிரிப்பதற்கும் கூடிப் பேசி ரசிப்பதற்கும், போர்க்களத்தில் சிங்கள வீரர் களால் செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளே, இனப் படுகொலையின் சாட்சியாக உலகை வலம் வருவதுதான் வேதனையான வேடிக்கை.

இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை வலியுறுத்தி உலகத் தமிழர் பேரவையின் செய்தித் தொடர்பாளர் சுரேன் சுரேந்திரகுமார், '' 'சேனல் 4’ ஒளிபரப்பியகாட்சி கள் உலகத்தின் கவனத்தை இரக் கத்தோடு திருப்பி இருக்கின்றன. தமிழக முதல்வராகப் பொறுப்பு ஏற்றிருக்கும் ஜெயலலிதா, இலங்கை அரசின் போர்க் குற்றங் களைக் கண்டித்தும் பொருளா தாரத் தடை விதிக்கக் கோரியும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி இருப்பது உலகளாவிய தமிழர்களுக்கு நம்பிக்கையை உண்டாக்கி இருக்கிறது. 'சேனல் 4’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கொடூரங்கள் குறித்தும் தமிழக முதல்வர் உலக அரங்கில் கேள்வி எழுப்ப வேண்டும். 'சேனல் 4’ ஒளிபரப்பிய காட்சிகளைக் காட்டிலும், இதயம் கனக்கச் செய்யக்கூடிய போர்க் குற்ற ஆதாரங்கள் எங்களிடம் நிறைய இருக்கின்றன. உடல் முழுக்க சிங்கள அரசின் கொடூரங்களைத் தாங்கியபடி தப்பித்து வந்த உயிர் சாட்சியங்கள் பலர் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இனச் சித்ரவதைக்கு ஆதாரமாகக் காயங்களைச் சுமந்திருக்கும் அந்த உயிர் சாட்சிகளை உலக அரங்கில் நிறுத்த நாங்கள் தயாராக இருக் கிறோம். முதுகைப் பிளந்தது, ஆணியால் எழுதியது, ஸ்ரீ என்கிற சிங்கள எழுத்துகளை சிகரெட் நெருப்பால் எழுதியது எனத் தழும்புகளையே சிங்கள வெறியின் சாட்சியங் களாகச் சுமந்து திரிபவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இன வெறிக் கொடூரங்கள் குறித்து அவர்கள் வாய் திறந்தால், இந்த உலகத்தால் தாங்க முடியுமா எனத் தெரியாது. பிரிட்டனில் உள்ள அனைத்துக் கட்சியினரும் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை ஒப்புக்கொள் கிறார்கள். 13 நாடுகளில் விரவி இருக்கும் எங்கள் அமைப்பு, அனைத்துக் கட்சிகளையும் ஒருசேர எங்களுக்கான தீர்வுக்காக வலியுறுத்தி வருகிறது. 'சுவாமி ரவிசங்கர்ஜி காட்டிய காணொளிகளைப் பார்த்த பிறகுதான், ஈழத்தில் நடக்கும் கொடூரங்கள் எனக்குத் தெரிந்தன’ என முன்பே சொன்னார் ஜெயலலிதா. உயிர் சாட்சியங்களின் குரல் களைப் பதிவு செய்து அவருக்குக் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழர்களுக்கு என்று இருக்கும் ஓர் அரசு இலங்கை மீதான நடவடிக்கையை வலியுறுத்தினால், அந்த வார்த்தைகளுக்கான வல்லமை வலுவாக இருக்கும்!'' என்கிறார் எதிர்பார்ப்புடன்.

உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார், ''ஹிட்லர் காலத்தில் இன அழிப்பு நடந்தபோது, அதனை உரக்கச் சொல்ல ஊடக வசதி இல்லை. ஆனால், இன்றைக்கும் ஜெர்மனியில் இன அழிப்பு சம்பந்தமான புகைப்படங்களை ஆராய்ச்சி செய்து ஆவணமாக்கி வருகிறார் கள். இன வெறிக் கொடூரங்கள் உலக அரங் கில் ஒருபோதும் ஊக்குவிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தவே அத்தகைய ஆவணங் கள் தேடப்படுகின்றன. ஆனால், இன்றைக்கு கண் முன்னரே நடந்திருக்கும் இன வெறிக் கொடூரத்தை உலகம் மிகுந்த தயக்கத்தோடு ஒப்புக்கொள்ளும் சூழல் உருவாகி இருக்கிறது. காரணம், இலங்கை அரசுக்கு 20-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆயுத மற்றும் பண உதவிகளைச் செய்தன. ஆனால், இலங்கை அரசின் இன வெறிப் போக்கை, உதவிசெய்த அந்த நாடுகளால்கூட நியாயப்படுத்த முடியாது. 'சேனல் 4’ ஒளிபரப்பிய காட்சி களைக் கண்டு சர்வதேசமும் பொங்கி வெடிக்கிறது. சிங்கள அரசின் இன வெறிக் கொடூரங்கள் அம்பலமாக்கப்படும் இன்றைய சூழலிலும், அங்கே வதை முகாம்களில், பசி, பட்டினிக்கு தமிழர்கள் ஆளாக்கப்படுவதுதான் பெரும் துயரம்.

இலங்கையின் இன வெறிப் போக்கை மறுக்க முடியாத உலக நாடுகள், தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வலியுறுத்தி னால் மட்டுமே, அங்கே நடந்த - இன்றைக்கும் நடக்கும் கொடூரங்களுக்குத் தீர்வாக இருக்கும்!'' என்கிறார் ஆதங்கமாக.

லண்டனில் வாழும் சுதா என்கிற நிர்வாகி, ''இன வெறிக் கொடூரங்களாக 'சேனல் 4’ காட்டிய காட்சிகளை மனசாட்சிகொண்ட யாராலும் மறுக்க முடியாது. மனித உரிமை அமைப்புகளுடன் பெண் சித்ரவதைகளுக்கு எதிரான அமைப்புகளும் இந்த விவகாரத்தில் கைகோக்க வேண்டும். தாய்த் தமிழீழ உறவுகள் கைகொடுத்திருக்கும் இந்தச் சூழலில் உலகளாவிய மீடியாக்களும் உரக்கக் குரல் எழுப்பி, உலகின் மனசாட்சியை உலுக்க வேண்டும்!'' என்கிறார் ஏக்கத்துடன்.

எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் நிகழும் புரட்சி, போர் ஆகியவற்றை அதிமுக்கியத்துடன் காட்டிய ஊடகங்கள், 'சேனல் 4’ காட்டிய காட்சிகளை மறந்தும் காண்பிக்கவில்லை. தொப்புள் கொடி உறவாகத் துடித்திருக்க வேண்டிய தமிழக சேனல்களும் மருந்துக்குக்கூட அந்தத் துயரங்களைக் காட்டவில்லை.

தமிழக சேனல்கள் போட்டி போட்டு அந்தக் காட்சிகளை வெளியிட அது ஏதாவது சாமியாரின் படுக்கை அறைப் பதிவா என்ன?

thanz... vikadan.com

http://new.vikatan.com/news.php?nid=2462

Edited by வீணா

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் எம்மவர் சன் டிவி, கலைஞர் டிவி, சந்தா செலுத்தி எடுப்பதை நிப்பாட்ட வேண்டும்.

எம்மவர் சிலர் கலைஞர் டிவி மானாட மயில் ஆட பார்க்காமல் இருக்கமாட்டார்கள், சன் டிவியில் தொடர் நாடகம் பார்க்காமல் இருக்கமாட்டார்கள், என்னும் சொல்லப்போனால் எம்மவர்கள் எத்தனை பேயர் யுத்தக்குர்ர ஆவணத்தை பார்த்ததில்லை! இவற்றை பார்க்கும் பொது எமது இனத்தவர்கள் மிகவும் சுயனலமுடையவர்கள் என்பதே உண்மை.

இனவெறியைச் சுமக்கும் தழும்புகள்!

ரத்தமும் சதையுமாக முடிந்தது வரையிலான இன அழிப்புக்கு அதி முக்கிய சாட்சி...

கைகளைக் கட்டி குப்புறத் தள்ளி பின்னந் தலையில் சுடுவதும்,

அலறக்கூட அவகாசம் இல்லாமல் பொத்தெனச் சரியும் உடல்களைக் கண்டு கை கொட்டிச் சிரிப்பதும்

செத்துக்கிடக்கும் பெண் போராளிகளின் உறுப்புகளைக் காட்டி கொக்கரித்துச் சிரிக்கிற சிங்களக் கொடூரம்

- சிங்களர்களின் சீரிய குணமாக உலக அரங்கில் ஒளிபரப்பாகியது.

''முழுக்கப் பார்க்கிற அளவுக்கு எனக்கு சக்தி இல்லை. இலங்கையில் நடந்தது அப்பட்டமான இனப் படுகொலை என்பதற்கு இதைவிட சாட்சி தேவை இல்லை!'' என அலறுகிறார் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன்.

''எங்களின் அதிர்ச்சியை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது, சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியதற்கான ஆதாரங்கள்போல் தெரிகிறது. இவற்றை நிகழ்த்திய இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், சர்வதேச சமூகத்துடன் இணைந்து அனைத்து சாத்தியக்கூறுகளையும் கண்டறிய இங்கிலாந்து அரசு தயாராக இருக்கிறது!'' எனப் பதற்றத்தோடு சொல்கிறார் இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அலிஸ்ட்டர் பர்ட்.

''இன அழிப்பு, போர் மரபு மீறல், பெண்கள் மீதான சித்ரவதை என அத்தனை விதமான அட்டூழியங்களையும் சிங்கள ராணுவத்தினர் அரங்கேற்றி இருக்கிறார்கள். மனிதப் பட்டியலில் சிங்களர்கள் இனியும் நீடிக்க வேண்டுமா என்பதை உலகம் யோசிக்க வேண்டும்!'' என மனித உலக உரிமை அமைப்புகள் கொந்தளிக்கின்றன.

பௌத்த சிங்களவர், அவன் வால்கள் = பொய்யர், நாகரிக மனித வேடம் தாங்கியிருக்கும் அசல் காட்டுமிராண்டிகள், தமிழன் உழைத்துச் சேர்த்த சொத்துக்களை – நிலங்களை - ... - .... பறித்து / அழித்து வாழும் கேவலமானவர்கள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், பயங்கரவாதிகள், போர்க் குற்றவாளிகள், ஏமாற்றிகள், ………….., சிங்களவர் வந்தேறு குடிகள், போலி வரலாறுகளை தயாரித்து மகா பொய்வம்சத்தை உருவாக்கி வருபவர்கள், வெகுமதிகளையும் மதுவகைகளையும் பெண்களையும் வழங்கி சர்வதேச பிரதிநிகளை மடக்கி சர்வதேசத்தை ஏமாற்றும் ஈனர்கள், ......, ……

வட இந்தியர், அவன் வால்கள் = ஜனநாயக வேடம் தாங்கியிருக்கும் அசல் பயங்கரவாதிகள், காட்டுமிராண்டிகள், பொய்யர், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், போர்க் குற்றவாளிகள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ……, ஹிந்தி வெறியர்கள் - வந்தேறு குடிகள், ஊழல் பேர்வழிகள், வெகுமதிகளையும் மதுவகைகளையும் பெண்களையும் பெற்று மனிதப் படுகொலைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குபவர்கள், ....., ......

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக சேனல்கள் போட்டி போட்டு அந்தக் காட்சிகளை வெளியிட அது ஏதாவது சாமியாரின் படுக்கை அறைப் பதிவா என்ன?

ஐஸ்வரியா ராய் கர்ப்பம்...

ரஜினிக்கு குடமுழுக்கு....

ஜலஜாவின் ஜலகிரிடை பார்டு - 2

டிஸ்கி:

அதானே இந்த மாதிரி நியுஸ்தானே இன்றைக்கு பேமஸ் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.