Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசு ஒருபோதும் ஒத்துழைக்காது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted by சோபிதா on 26/06/2011 in செய்தி

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டமீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் இலங்கை அரசின் மீது இறுக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

அண்மையில் சனல் 4 தொலைக்காட்சி தயாரித்து வெளியிட்ட “இலங்கையின் கொலைக்களங்கள்“ என்ற ஆவணப்படம் இலங்கை அரசுக்கு சர்வதேச அளவில் பெரும் நெருக்கடியைக் கொடுக்கும் ஒன்றாக மாறியுள்ளது,

இந்தக் குற்றச்சாட்டுகள் மீது சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று மேற்குலக நாடுகள் பலவும் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன.

சுதந்திரமானதும், நீதியானதுமான விசாரணைகளை நடத்தும் உள்ளகப் பொறிமுறை ஒன்றை அமைக்கத் தவறினால், சர்வதேச விசாரணை நெருக்கடிகளிலிருந்து இலங்கை தப்பித்துக் கொள்ள முடியாது என்று ஏற்கனவே பலமுறை எச்சரிக்கப்பட்டும் உள்ளது.

ஆனால், இலங்கை அரசாங்கமோ இவையெல்லாம் பொய்யானவை, போர்க்குற்றங்கள் நடந்ததாகக் கூறப்படும் தகவல்களும், அதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களும் போலியானவை என்று முரண்டு பிடித்துக் கொண்டு நிற்கிறது.

ஆனால், போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முறியடித்தல் என்ற விடயத்தில் இலங்கை அரசாங்கம் பிரச்சினைகளை அதிகரித்துக் கொண்டு போகிறதே தவிர குறைப்பதாகத் தெரியவில்லை.

ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் போர்க்குற்ற விசாரணைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போது அதை அரசாங்கம் நிராகரித்திருந்தது.

போர்க்குற்றங்கள் ஏதும் நடக்கவேயில்லை என்று அடித்துக் கூறும் அரசாங்கம் அது பற்றிய சர்வதேச அளவிலான சுதந்திரமான விசாரணைகளையோ அல்லது சொந்தமான உள்ளக விசாரணைகளையோ நடத்துவதற்கு மட்டும் தயாராக இல்லை.

நம்பகமான விசாரணைகளின் மூலம் குற்றச்சாட்டுகள் பொய்யானது என்று நிரூபிப்பதற்கு இலங்கை அரசு முனையவில்லை.

போர்க்குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதற்குப் பதிலாக அதன் வழியிலேயே சென்று அதை முறியடித்தல் முக்கியமானதொன்று. ஆனால், அரசாங்கம் அதற்குத் தயாராக இருக்கவில்லை.

போர்க்குற்றங்கள் ஏதும் நடக்கவில்லை என்று மறுத்துள்ளதுடன், அதுபற்றிய எந்த விசாரணைகளுக்கும் அனுமதிக்க முடியாது என்றும் அடித்துச் சொல்லி விட்டது.

அதுபோதாதென்று இலங்கை அரசு போரின் இறுதிக்கட்டத்தில் புலிகள் தான் போர்க்குற்றங்களைப் புரிந்ததாகவும் பிரசாரம் செய்து வந்தது.

சர்வதேச சமூகத்தின் போர்க்குற்றச்சாட்டுகள் அரசதரப்புக்கும், புலிகளுக்கும் பொதுப்படையானவையாக இருந்தனவே தவிர, ஒருபக்கம் சார்ந்ததாக இருக்கவில்லை.

எனவே, ஆரம்பத்தில் புலிகள் தான் போர்க்குற்றங்கள் செய்ததாகக் கூறி பிரசாரம் செய்த அரசாங்கம், அதன் மூலம் தமக்குத் தாமே குழியையும் வெட்டிக் கொண்டது. ஏனென்றால், இப்போது புலிகள் மீது போர்க்குற்றங்களைச் சுமத்துவதாலோ, அதுபற்றி விசாரிப்பதாலோ ஆகப்போவது ஒன்றுமில்லை.

அவர்கள் போர்க்குற்றம் செய்ததை இலங்கை அரசு உறுதி செய்துள்ள நிலையில், அதுபற்றிய விசாரணைகளை சர்வதேச சமூகம் முன்னெடுக்க முயன்றால் கூட, அது இலங்கை அரசுக்கு ஆபத்தாகவே முடியலாம்.

இதைக் கருத்தில் கொள்ளாமல் தான், போர்க்குற்றச்சாட்டுகளை முறியடிக்கின்ற தவறான பிரசாரத்தை அரசாங்கம் முன்னெடுத்தது.

அப்போது தொடங்கிய தவறுகள் இன்று வரை தொடர்வதைக் காணமுடிகிறது.

இப்போது சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் மூலம் எழுந்துள்ள குற்றச்சாட்டை நிராகரிப்பதற்கும் அரசாங்கம் சர்ச்சைக்குரிய முறைகளைக் கடைப்பிடித்து வருகிறது.

முதலில் இந்த ஆவணப்படம் உண்மையானது அல்ல என்றும், தேர்ச்சி பெற்ற நடிகர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது என்றும் அரசாங்கம் கூறியது.

இந்தக் கருத்தையே பல்வேறு நாடுகளுக்கும் அரசாங்கம் கூறியுள்ளது.

ஆனால், இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள கேணல் ரமேசின் கொலை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்புச் செயலர் அவரது கொலையை நியாயப்படுத்தியுள்ளார்.

நுகேகொடவில் நடந்த கூட்டம் ஒன்றிலேயே கேணல் ரமேஸ் கிழக்கில் இடம்பெற்ற பல கொலைகளுக்குப் பொறுப்பான ஒரு முக்கியமான புலித் தலைவர் என்று கூறியுள்ளார்.

புலிகளின் தலைவராகவே அவர் இருந்து விட்டுப் போகட்டும்.

பல கொலைகளுக்கு அவர் பொறுப்பானவராக இருந்ததாலும் கூட, கைது செய்யப்பட்ட பின்னர் அவர் கொல்லப்பட்டதை சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஒருபோதும் ஏற்கப் போவதில்லை.

ஏற்கெனவே வெள்ளைக்கொடி விவகாரம் ஒன்றும் இருக்கிறது.

வெள்ளைக் கொடியுடன் சரணடைய முன்வந்த புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது.

அவ்வாறு வெள்ளைக்கொடியுடன் சரணடைய முன்வந்த புலிகளின் தலைவர்களில் ஒருவரே ரமேஸ்.

அவர் பின்னர் கொல்லப்பட்டு விட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

அவர் எப்படிக் கொல்லப்பட்டார்….?

சரணடைந்த பின்னர் அவரது மரணம் நிகழ்ந்தது எவ்வாறு…? என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில் தான் பாதுகாப்புச் செயலர் அவரது கொலையை நியாயப்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

இசைப்பிரியா என்பவர் ஒரு ஊடகவியலாளர் என்று ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளதை நிராகரித்து பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் இசைப்பிரியா ஒரு ஆயுதப்பயிற்சி பெற்ற சீருடை தரித்த போராளி என்று கூறப்பட்டுள்ளதுடன், அவர் புலிகளின் கிழக்கு மாகாண கடற்படைத் தளபதியாக இருந்த சிறிராமின் மனைவி என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கையானது சர்வதேச சமூகத்திடம் உள்நாட்டிலும் எழுப்ப வைத்துள்ள கேள்வி முக்கியமானது.

விடுதலைப் புலிகள் இயக்கப் போராளியாகவே அவர் இருந்தாலும் கூட, அவர் அவ்வாறு கொல்லப்பட்டது முறையானதா? என்பதே அந்தக் கேள்வியாகும்.

போர்ச்சட்டங்களில் மனிதாபிமானச் செயற்பாடுகள் குறித்து தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

அதாவது, சரணடையும், கைது செய்யப்படும் எதிரிகளின் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், அதற்கு முரணாக, ஆயுதப் போராளியாக இருந்தவர் என்பதால் நீதிக்குப் புறம்பாக படுகொலை செய்யப்படலாம் என்ற வகையில், பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையின் மூலம் உணரப்படும் நிலை உருவாகியுள்ளது.

இது இலங்கை அரசின் தவறான மற்றொரு முன்மாதிரி ஆகியுள்ளது.

போர்க்குற்றச்சாட்டுகளை எவ்வாறு முறியடிப்பது என்பதில் இலங்கை அரசாங்கம் அதிகம் குழம்பிப் போயுள்ளது என்பதை இது காட்டுகிறது.

குற்றச்சாட்டுகளுக்கு இவ்வாறு குழப்பமான பதில்களை அளிப்பதன் மூலம், ஒருபோதும் இலங்கை அரசினால் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவோ அல்லது முறியடிக்கவோ முடியப் போவதில்லை.

இவையெல்லாம் பொய்யானவை, போலியானவை என்று நிரூபிப்பதற்கு சர்வதேச சமூகத்துடன் ஒத்துழைப்பதன் மூலமே அதைச் செய்ய முடியும்.

ஆனால், அதற்கு இலங்கை அரசு தயாராக இல்லை. அவ்வாறான விசாரணைகளுக்கு அனுமதிக்கப்பட்டால், இப்போது இருப்பதை விடவும் புதிய ஆதாரங்கள் சர்வதேச சமூகத்தின் கையில் கிடைத்து விடும் என்ற அச்சம் இலங்கைக்கு இருந்து கொண்டேயிருக்கிறது.

அது மேலும் சிக்கல்களை உருவாக்கி விடும் என்பதால், சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசு ஒருபோதும் ஒத்துழைக்காது.

அதேவேளை, இத்தகைய விசாரணைகளுக்கு ஒத்துழைக்காது போனால், வருங்காலங்களில் இத்தகைய குற்றச்சாட்டுகள் மிக மோசமாக உருவாகும் என்பதை யாராலும் தடுக்க முடியாமல் போய்விடும்.

http://www.eelampress.com/2011/06/28059/

இவ்வளவு காலமும் வெந்த பருப்பு இனி வேகாது என்று தெரியுது போல.

உண்மையைப் பொய்யாக்கப் பொய் இன்னும் நாறிப்போய், கடைசியில் மகாவம்சமும் பிழைத்துவிடும் (மகாபொய்வம்சம் ஆகிவிடும்) என்ற பயம் பிடித்திருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.