Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தங்கள் இதயங்களையே பொத்தியுள்ள பல புலம்பெயர் உறவுகள்....

Featured Replies

வன்னியிலுள்ள பாடசாலையொன்றில் நடந்த நிகழ்ச்சி இது. ஒரு நண்பர், அந்தப் பாடசாலையில் படிக்கின்ற தாயையும் தந்தையையும் இழந்த பிள்ளைகளுக்கான உதவிக்கென்று 30 ஆயிரம் ரூபாவை அந்தப் பாடசாலையின் அதிபரிடம் கொடுத்திருக்கிறார். இந்தக் காசைப்பெற்றுக் கொண்ட அதிபர், சக ஆசியர்களுடன் கலந்தாலோ சித்து விட்டு,

வகுப்பாசியர்களின் மேற்பார்வையில், அந்தப் பாடசாலையில் படிக்கின்ற பெற்றோரை இழந்த பிள்ளைகளிடம் அந்தக் காசைக் கொடுத்திருக்கிறார். அந்தப் பிள்ளைகள் தாங்கள் விரும்புகின்ற பொருட்களையும் தின்பண்டங்களையும் வாங்கிக் கொள்ளட்டும் என்றே அவர் அப்படிச் செய்தார்.

அன்று அந்தப் பிள்ளைகள் தாங்கள் விரும்பியமாதி ஐஸ் கிறீம் சாப்பிட்டார்கள்.

கேக் வாங்கினார்கள். சிலர் இடியப்பம், இட்லி, தோசை கூட வாங்கிச் சாப்பிட்டார்கள். சிலர் பலூன் போன்ற விளையாட்டுப் பொருட்களை வாங்கினார்கள். சிலபிள்ளைகள் தங்களுக்குத் தேவையான பள்ளி உபகரணங்களை வாங்கினர்.

இவ்வளவு நாளும் அவர்களுடைய மனதில் அடக்கி வைத்திருந்த விருப்பங்கள் அன்று நிறைவேறின. அன்று அவர்களுடைய முகத்தில் மலர்ந்த மகிழ்ச்சியும் அவர்களடைந்த குதூகலம் அளவற்றது என்று சொல்கிறார்கள் ஆசியர்கள். அப்படிச் சொல்லும் போது சில ஆசியர்களின் கண்களில் கண்ணீர் தழும்பியது.

மற்றப் பிள்ளைகளைப் போல பெற்றோரை இழந்திருக்கிற பிள்ளைகளுக்கு வசதிகள் கிட்டுவதில்லை. அவர்கள் ஏனைய பிள்ளைகளைப் பார்த்து, எல்லாவற்றுக்காகவும் தினம் தினம் ஏங்குகிறார்கள்.

ஆகவே, இந்த நிலையில் கிடைத்த காசைப் பகிர்ந்து அந்தப் பிள்ளைகளுக்குக் கொடுத்து அவர்களைச் சந்தோஷப்படுத்துவதற்கு அந்த அதிபர் முயற்சித்திருக்கிறார்.

இந்தக் காசை இப்படிக் கொடுப்பதற்குக் காரணமாக இருந்தவர்கள், நண்பன் பிள்ளைகளே. அவர்கள் தங்களுடன் படிக்கின்ற பெற்றோரை இழந்த பிள்ளைகளைப் பற்றி வீட்டில் வந்து சொல்லும் செய்திகளே நண்பரை இவ்வாறு உதவும்படி செய்திருக்கிறது.

இது ஒரு பாடசாலையின் நிலை அல்ல. அல்லது, வன்னியிலுள்ள ஒரு பிரதேசத்தின் நிலையுமல்ல. முழு வன்னியின் நிலைமையும் இன்னும் இப்படித்தான் இருக்கிறது. அங்கே இந்த மாதிப் பெற்றோரை இழந்த நிலையில் ஒவ்வொரு பாடசாலைக்கும் ஆயிரக்கணக்கான பிள்ளைகள் வருகின்றனர்.

உண்மையில் வாடிய முகங்கள். சோகம் நிரம்பிய ஏக்கத்தையுடைய கண்கள். மெலிந்த உற்சாகம் குறைந்த தோற்றம். நிறைவேறாத ஆசைகள்....

அங்கே போரின் காயங்கள் இன்னும் ஆறவில்லை. அங்கே இருக்கின்ற தேவைகள் ஏராளம். போனால், வீட்டின் கூரையிலிருந்து படுக்கின்ற பாய் வரை எல்லாவற்றையும் இழந்த மக்கள் அவர்களல்லவா! ஆகவே அவர்களுக்கு ஆயிரமாயிரம் தேவைகளிருக்கின்றன. ஆனால், இந்தத் தேவைகளை ஈடுசெய்வதற் கேற்றவாறு அங்கே எந்த உதவிகளும் கிட்டவில்லை. அரசாங்கம் படிப்படியாகச் சில அடிப்படை உதவிகளைச் செய்து வருகிறது. அதைத்தவிர்த்து குறிப்பிடும்படியான பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட தேவைக்கேற்ற உதவிகள் அங்கே இன்னும் கிட்டவில்லை.

இதற்கு என்ன காரணம்? யார் காரணம்?

அல்லது யாரெல்லாம் காரணம்?

இதற்கு அரசியலே காரணம்.

அவரவர்களுக்கான அரசியல். அவரவர் நலன் சார்ந்த அரசியல். தங்களுடைய அரசியலுக்காக பாதிக்கப்பட்ட மக்களைப் பணயம் வைக்கின்றன இந்தத் தரப்புகள்.

ஆகவே அனைவருமே பொறுப்பாளிகள்.

1. இலங்கை அரசாங்கத்தின் அரசியல் நிலைப்பாடுகள் சர்வதேச உதவிகளை மட்டுப்படுத்தியிருக்கின்றன. குறிப்பாக, போருக்குப் பின்னர் நிறைவு செய்யப்படவேண்டிய தேவைகளுக்கான நிதியைப் பெறக்கூடிய மூலவளங்களை இன்றைய கொழும்புத் தலைமை அடைத்திருக்கிறது.

இதனால், வேண்டிய உதவிகளையும் பாதிப்புகளையும் ஈடுசெய்ய முடியாமற் தடுமாறுகிறது கொழும்பு. அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் நெகிழ்ச்சியற்ற தன்மையும் இனப்பிரச்சினை தொடர்பாக ஏற்படுத்தப்படாத முன்னேற்றம் புலம்பெயர் தமிழர்களிடத்திலும் உதவும் உளநிலையை உருவாக்கத் தவறியுள்ளது.

2. ஐரோப்பிய ஒன்றியம், இணைத்தலைமை நாடுகள், மற்றும் மேற்குலகு ஆகியவை தமது நிதியுதவிகளை இடை நிறுத்தியுள்ளன. இலங்கை அரசாங்கத்தைத் தமது கால்களுக்குக் கீழே கொண்டுவரும்வரை தாம் நிதி வழங்குவதில்லை என இந்த நாடுகள் தீர்மானித்துள்ளன. தமது உதவிகளை நிறுத்துவதன் மூலம் இலங்கையைப் பணிய வைக்க இந்தத் தரப்புகள் முயற்சிக்கின்றன. போருக்குப் பின்னர் பொறுப்புடன் உதவியிருக்க வேண்டிய இந்த அமைப்புகள் தங்கள் அரசியற் தேவைகளுக்காக கட்டாயமாகச் செய்திருக்க வேண்டிய உதவிகளை நிறுத்தியுள்ளன. இது கண்டிக்கத்தக்க ஒரு விடயம். போர்க்காலத்தில் பல தடவைகள் இலங்கையுடன் கைகோர்த்து தமது உதவிகளை வழங்கிக் கொண்டிருந்த இந்த அமைப்புகளும் இந்த நாடுகளும் இப்போது தூர நிற்கின்றன. உண்மையில் இந்த அமைப்புகளினதும் இந்த அமைப்புகளில் இணைந்திருக்கும் அரசுகளினதும் உண்மை முகத்தை நாம் இந்தச் சந்தர்ப்பத்தில் புரிந்து கொள்ளலாம்.

3. அடுத்தது, புலம்பெயர் தமிழ்மக்களின் உதவிகள். நிச்சயமாக இந்தத்தரப்பினர் இந்தச் சந்தர்ப்பத்தில் உதவியிருக்க வேண்டும். ஏனைய தரப்புகள் செய்வதைப் போல இந்தத் தரப்பு அரசியல் செய்ய முற்பட்டிருக்கக் கூடாது. ஏனைய தரப்புகள் அந்நியமானவை.

அத்துடன் அவை தமது நலன் சார்ந்து இயங்குபவை. ஆனால், புலம்பெயர் தமிழர்களைப் பொறுத்தவரை அப்படியல்ல. அவர்கள் எல்லோரும் சொல்வதைப் போல தொப்புள் கொடி உறவினர். ஆகவே தங்கள் சொந்த உறவுகளுக்கு உதவுவதற்கு எந்தக் காரணம் கொண்டும் பின்னின்றிருக்கக் கூடாது. ஆனால், புலம்பெயர் மக்களின் உதவிகள் குறிப்பிட்ட அளவுக்குப் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கவில்லை. போர்க்காலத்தில் போராட்டத்துக்காகத் தாராளமாக உதவிய இந்த மக்கள் இன்று தங்கள் கைகளை இறுகப் பொத்தியுள்ளனர்.

உண்மையில் அவர்கள் கைகளைப் பொத்திக் கொள்ளவில்லை. தங்கள் இதயங்களையே பொத்தியுள்ளனர் என்கிறார் ஒரு நண்பர் துக்கத்தோடு. இது மறுக்க முடியாத உண்மை

தாய் தன் பிள்ளைக்கு உதவுவதற்கும் பிள்ளைகள் தம்டைய பெற்றோருக்கு உதவி செய்வதற்கும் சகோதரர்கள் தங்கள் உடன்பிறப்புகளுக்கு உதவுவதற்கும் யாரும் சொல்ல வேண்டுமா? யாரும் தடுக்க முடியுமா?

4. ஆனால், இதற்குள்ளும் ஊடுருவியிருக்கும் மேற்கு அரசியல் சார்பான சில சக்திகள் பல சாட்டுப் போக்குகளையும் காரணங்களையும் சொல்லி, பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளைத் தடுத்திருக்கின்றன.

போர் என்பது அழிவுகளையே தரும். அது என்னவகையில் நடந்தாலும், எதற்காக நடந்தாலும் அதனால் நேரடியாகவும் அதிகமாகவும் பாதிக்கப்படுகின்றவர்கள் மக்களே!

ஆகவே இந்தச் மக்களுக்கு உதவ வேண்டிய பொறுப்பு சகலருக்கும் உரியது.அரசாங்கத்துக்கு, வெளிநாடுகளுக்கு, இந்தப் போரை ஆதரித்தோருக்கு, மனிதாபிமானப் பணிகளை முன்னெடுப்போருக்கு, பாதிக்கப்பட்ட மக்களின் உறவுகளாக இருக்கும் புலம்பெயர்ந்த மக்களுக்கு, இனவுணர்வை அடிக்கடி நினைவு படுத்திக் கொள்ளும் தமிழகத்தினருக்கு எனச் சகலருக்கும் இந்தப் பொறுப்புண்டு.

ஆனால், இந்தத் தரப்பினர் எவரும் முறையான உதவிகளைச் செய்யவும் இல்லை.அப்படிச் செய்வதற்குத் தயாராகவும் இல்லை. பதிலாக பாதிக்கப்பட்ட மக்களை வைத்தே அரசியல் செய்கின்றன இந்தத் தரப்புகள்.

இது படு கேவலமான ஒரு நிலையாகும். அறிவும் மனிதாபிமானம் முக்கியப் படுத்தப்பட்டுவரும் இன்றைய உலகச் சூழலில் இப்படி அநாதரவாக நிற்கும் மக்களைப் பந்தயப் பொருளாக்குவது மிகக் கேவலமின்றி வேறென்ன?

மீள் குடியேற்றத்துக்காக இதுவரையில் இணைத்தலைமை நாடுகளாலோ உதவி வழங்கும் நாடுகளாலோ ஐரோப்பிய ஒன்றியத்தாலோ சிறப்பான உதவிகள் வழங்கப்பட்டதாக இல்லை.

இந்தியா உறுதியளித்த 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் கூடக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த யதார்த்தத்தில்தான் இன்று பாதிக்கப்பட்ட போர்ப்பிரதேசம் அந்த மக்களும் உள்ளனர்.

இதேவேளை மக்களின் பாதிப்பான வரட்சியான நிலையை வைத்தே அரசியல் செய்யும் தரப்புகளும் உள்ளன. ஆகப் பொதுவில் எல்லோருடைய நலன்களுக்கும் தேவைகளுக் குமாக இந்த மக்கள் சிலுவைகளைச் சுமக்க வேண்டியவர்களாகவே இருக்கிறார்கள்.

இந்த மக்களின் அவலங்களைப் பேசுவதில்லை, இந்தப் பத்தியின் நோக்கம்.

இது இந்த மக்களுடைய நிலைக்கு மாற்றத்தைக் காண்பது, அதற்கான வழிகளைத் தேடுவது, பொறுப்பானவர்களுக்குய பொறுப்புகளைச் சுட்டிக்காட்டுவது என்றவாறாகவே இந்தப் பத்தி எழுதப்படுகிறது.

வன்னியில் நடைபெற்ற போனால் பாதிக்கப்பட்ட மக்களில் பல வகையான பாதிப்புடையவர்கள் உள்ளனர். கணவனை இழந்தவர்கள். மனைவியை இழந்தவர்கள்.

பெற்றோரை இழந்தவர்கள் சகோதரர்களை இழந்தவர்கள் பிள்ளைகளை இழந்தவர்கள்.

உடமைகளை இழந்தவர்கள். உடல் உறுப்புகளை இழந்தவர்கள். நடமாடவோ உழைக்கவோ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் எனப் பலவகையினர் இருக்கின்றனர்.

இவ்வாறானவர்களாக ஒவ்வொரு தரப்பிலும் எத்தனை பேர் இருக்கின்றார்கள் என்ற போரில் பாதிக்கப்பட்டோன் புள்ளிவிவரங்கள் கூட எவரிடம் இல்லை என்பதுதான் வெட்கக் கேடான செயல். ஏன் இந்தப் புள்ளிவிவரங்கள் திரட்டப்படவில்லை என்றால், ஏற்பட்ட பாதிப்பைப் பற்றியும் அந்தப் பாதிப்பிலே பாதிக்கப்பட்டவர்களைப் பற்றியும் விசுவாசமாக யாரும் சிந்திக்கவில்லை என்பதே உண்மையாகும்.

ஆகவே பாதிக்கப்பட்ட மக்களைப் பந்தயப் பொருளாக்கும் அரசியலும் வியாபாரப் பொருளாக்கும் நடவடிக்கைகளுமே தொடர்ந்து கொண்டிருக்கப் போகின்றன.

இரண்டாம் உலகப் போன் விளைவுகள்தான் அதிகளவான தொண்டர் அமைப்புகளை மேற்கிலே உருவாக்கின. ஆனால், இலங்கையில்?

http://akkinikkunchu.com/new/

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=2089:2011-06-19-15-52-57&catid=315:2011-06-07-15-23-03

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் தமிழ் உறவுகளைத் திட்டுவது, இப்போது பலருக்கு ஒரு பொழுதுபோக்காகி விட்டது!

எத்தனையோ புலம் பெயர் உறவுகள், தனியாகவும், சேர்ந்தும் ஏதோ ஒரு விதத்தில் உதவிக் கொண்டு தான் இருக்கின்றனர்!

ஒரு நாடு தனது குடி மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமையில் இருந்து தவறும் போது, மனிதாபிமான அடிப்படையில் தான் அவர்கள் உதவுகின்றார்கள்!

ஆனால் சிங்களமோ, பிச்சைக்காரன் புரையோடிப் போன புண்ணைக் காட்டிப் பிச்சை எடுப்பது போல, எங்கள் பிரச்சனையைக் காட்டித் தன்னை வளர்த்துக் கொள்கின்றது!

  • தொடங்கியவர்

புலம் பெயர் தமிழ் உறவுகளைத் திட்டுவது, இப்போது பலருக்கு ஒரு பொழுதுபோக்காகி விட்டது!

எத்தனையோ புலம் பெயர் உறவுகள், தனியாகவும், சேர்ந்தும் ஏதோ ஒரு விதத்தில் உதவிக் கொண்டு தான் இருக்கின்றனர்!

ஒரு நாடு தனது குடி மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமையில் இருந்து தவறும் போது, மனிதாபிமான அடிப்படையில் தான் அவர்கள் உதவுகின்றார்கள்!

ஆனால் சிங்களமோ, பிச்சைக்காரன் புரையோடிப் போன புண்ணைக் காட்டிப் பிச்சை எடுப்பது போல, எங்கள் பிரச்சனையைக் காட்டித் தன்னை வளர்த்துக் கொள்கின்றது!

தாய் தன் பிள்ளைக்கு உதவுவதற்கும் பிள்ளைகள் தம்டைய பெற்றோருக்கு உதவி செய்வதற்கும் சகோதரர்கள் தங்கள் உடன்பிறப்புகளுக்கு உதவுவதற்கும் யாரும் சொல்ல வேண்டுமா? யாரும் தடுக்க முடியுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.