Jump to content

தமிழ் ஈழமும் காஸ்மீரமும் - ஒரு ஒப்பீடு


Recommended Posts

பதியப்பட்டது

இன்று விடுதலை வேண்டிப் போராடுகின்ற இனக்குழுமங்களாக ஈழத் தமிழ் மக்களும் காஸ்மீர மக்களும் இனம் காணப் பட்டிருக்கின்றனர். சுதந்திர இந்தியாவின் இறையாண்மைக்குள் அடங்கிவிட ஒப்பாத எழுச்சியுடன் போராடுகின்ற பல இனக்குழுமங்களுள் காஸ்மீரம் நீண்ட கால வரலாறும் தொடர்ச்சியான வெளிப்பாடும் கொண்டது. அதே போல இலங்கையின் இறையாண்மைக்குள் அடங்கிவிட ஒப்பாத எழுச்சியுடன் போராடுகின்ற வரலாறு ஈழத்தமிழ் மக்களுக்கும் உண்டு.

காஸ்மீரத்தின் சுதந்திரம் , பாகிஸ்தானிய படைகள் காஸ்மீரத்துள் புகுந்தபோதும் மன்னனின் சூழ்நிலை இந்தியாவை வலிந்து அழைக்கவேண்டியதாகிப் போனபோதும் பறிபோயிற்று. இன்று வரை தொடரும் போராட்டம் இரத்தமும் சதையுமாக குதறிப் போடும் அவலங்களுடன் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

தமிழ் ஈழத்தின் சுதந்திரம் 1505 இல் போத்துக்கேயர் கடற்கரையோரம் கால் வைத்தபோது பறிபோயிற்று. காலனித்துவ ஆட்சியாளர்களின் ஆட்சி முறை வசதிக்காக ஒன்று சேர்ந்து இலங்கையானபோது அதன் எல்லைகளும் காணாமற்போயிற்று. தொடர்ந்து ஐந்து நூற்றாண்டு கால காலனித்துவ ஆட்சியின் முடிவிலும் அரசியல் தொலைநோக்கற்ற தமிழ் அரசியல் வாதிகளின் முடிவுகளால் சிங்களப் பேரின வாதிகளின் கால்களுக்கிடையில் சிதைந்து கொண்டிருக்கின்றது.

இன்றளவும் உலக வல்லரசுகளினதும் பிராந்திய வல்லரசுகளினதும் விருப்பு வெறுப்புக்கேற்ப பந்தாடப் பட்டுக் கொண்டிருக்கின்றது.

காஸ்மீரத்தில் இன்று பாதுகாப்பிற்கெனச் சென்ற இந்தியப் படைகள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் ? ஒருவேளை காஸ்மீரம் இந்தியாவின் உதவியை நாடியிராவிட்டால் பாகிஸ்தானின் பஞ்சாப் போன்றோ இல்லை பலூசிஸ்தான் போன்றோ பாகிஸ்தானின் ஒரு பகுதியாக வறுமையில் வாடிக்கொண்டிருக்கக் கூடும் என்று கருத்துக் கூறுபவர்களும் இருக்கின்றார்கள். ஆனாலும் இப்பொழுதும் அதைவிடச் சிறந்த முறையில் தானா அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் ?

சிங்களப் பேரினவாதத்தின் கொடுமையில் இருந்து தங்களை காத்தருளும் இரட்சகர்கள் என எதிர்பார்த்திருந்த தமிழ் ஈழ மக்களுக்கு இந்திய இராணுவம் கொடுத்த பரிசுதான் என்ன ? அவர்கள் இராணுவ வாகனங்களின் சங்கிலிப் பாதங்களுள் அரைபட்டு இரத்தமும் சதையுமாக சிதைந்து போனதைவிட வேறு என்ன பரிசு கிடைத்தது.

இந்தியா என்பதையும் விட தாய்வழிப் பந்தம் வேரடி மண் என்று காலாதி காலம் நம்பியிருந்த தமிழக மக்களும் தலைவர்களும் கூட மெளனமாகிப் போயிருந்தார்களே ? இன்று வரை தனது பிராந்திய நன்மைகள் என்ற குறுகிய வட்டத்துள் நின்றே ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தைப் பார்ப்பதைத் தவிர இந்தியா என்ன செய்து கொண்டிருக்கின்றது ?

ஆறரைகோடி தமிழ் நாட்டவர்களின் உறவுகளில் ஏற்படாத கரிசனை சிங்களவர்களின் பால் ஏற்படுவதற்கு இந்தியா இதைவிட வலுவான என்ன காரணத்தைக் கூறுக்கூடும்.

முன்னை நாள் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தியின் மரணம் தான் காரணம் என்று கூறிக்கொள்ள முனையலாம். அப்படி என்றால் சமாதானப் படைகள் ஈழத் தமிழ் மக்களை வகைதொகையின்றிக் கொன்று குவித்ததற்கு என்ன காரணம் இருக்கமுடியும்.

இரண்டு பெரும் போர்களையும் தீவிரவாதத்திதின் தாக்குதல்களையும் இந்தியாவிற்குப் பரிசளித்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தானுடன் எப்படி நேசக் கரம் நீட்டுகின்றார்கள். தீவிரவாதம் என்னும் பாஷை யில் பேசிக்கொண்டிருக்கும் பா கிஸ்தா னை விட தமிழ் ஈழம் எப்படி இந்தியாவிற்கு ஆபத்தானதாய் இருக்கமுடியும். இலங்கயின் தேயிலைத்தோட்டங்களில் வேலை செய்யும் இந்திய நேரடி வாரிசுகளின் குடியுரிமையைப் பறித்ததிலிருந்து இரஜீவ் காந்தியை சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தானபின் துப்பாக்கியால் அடித்தது வரை செய்தது சிங்களவர்கள் அல்லவா ? அவர்களுடன் வராத கோபம் ஈழத்தமிழ் மக்கள் மேல் வருவதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும். இந்தியப் பகிஷ்கரிப்பு என்ற பெயரில் இந்தியப் பொருட்களைத் தீயிலிட்டு எரித்த கட்சிகளுடன் கூடிக் குலவுவதில் இந்தியாவிற்கும் அதன் அரசியல் கட்சிகளுக்கும் எந்த வெட்கமுமில்லை.

ஆனால் தமிழ்நாட்டிலிருந்து ஒரு சில தமிழ் உணர்வாளர்கள் ஈழத்தமிழ் ழ் மக்கள் சார்பாக கருத்து சொல்வதை மட்டும் கொச்சைப் படுத்துவதில் வரிந்து கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் வசதியான வாழ்வுடையவர்கள். மலையகத்தமிழர்கள் தான் இந்தியாவுடன் தொடர்புள்ளவர்கள் என்ற கருத்தும் முன் வைக்கப் படுகின்றது. அப்படி ஸ்மாட் ஆக சிந்திக்கும் படியும் கருத்து விதைக்கப் படுகின்றது. தமிழ் ஈழத்தின் சுதந்திரப் போராட்டம் முன்னர் எப்படியிருந்த போதும் இப்போது அனைத்துத் தமிழ் பேசும் மக்களுக்கான பொதுவான போராட்டமாக பரிணமித்துள்ளதை இவர்கள் வசதியாக மறந்துவிடுகிறார்கள். போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் தவறுகள் ஏற்படுவதும் பின்னர் திருத்தப் படுவதும் இயல்பானதே.

இதற்காகவே சொல்லி வைத்ததுபோல் போராட்டத்தின் முன்னோடிகளாக இருந்து கருத்து மோதல்களால் மரணித்த பத்மநாபா, சிறீசபாரட்ணம் போன்றோரின் மரணங்கள் சுட்டிக் காட்டப் படுகின்றன. மிகவும் துக்கரமான தவறுகள் இவை என்றாலும் போராட்டத்தின் ஆரம்பகால தவறுகள் இவை என்பதற்கப்பால் தமிழகத்தமிழர்களின் உணர்வுகளை வேறு எவ்வாறு பாதிக்கக் கூடும்.

நாளாந்தம் பறிக்கப்படும் உயிர்களும் சித்திரவதை செய்யப் பட்டு சீரழிக்கப் படும் அபலைகளும் உங்களுக்கு முக்கியமாகப் படவில்லையா?

இவையெல்லாம் இந்திய மேலாண்மை அரசின் போக்கை கேள்வி கேட்கவோ எதிர்ப்புக் காட்டவோ தமிழக மக்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் போதுமான காரணங்களாக இல்லையா? ஈழத்தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டதி ற்கான எதிர்ப்பிற்கு இந்தியாவின் பிராந்திய வல்லரசுப் பார்வை தவிர்ந்த வேறு ஏதாவது காரணங்கள் இருக்க முடியுமா ?

இன்று உலக நாடுகளுடன் இந்தியாவும் ஈழத்தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டத்தின் போக்கை பல நோக்கங்களுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். தங்களின் அபிலாசைகளின் போக்கில் வளைத்தெடுக்கும் நோக்கிலேயே என்பதை ஒவ்வொரு ஈழத்தமிழ் மகனும் நன்கு புரிந்தே இருக்கின்றார்கள். உலக நாடுகள் எவற்றையும் விட இந்தியாவை குறிப்பாக தமிழ் நாட்டு மக்களின் ஆதரவையும் அனுசரணையையும் பெரிதாக எதிர்பார்க்கின்றார்கள். காரணம் பாரம்பரிய தொப்பூழ்கொடியுறவு தவிர வேறு எதுவாக இருக்கமுடியும்.

ஈழத்தமிழ் மக்களைப் போலவே காஸ்மீர மக்களும் இந்தியாவினதும் பாகிஸ்தானதும் உலக வல்லரசுகளினதும் பகடைக் காய்களாக இருப்பதைத் தவிர போராட்ட வடிவத்தில் எந்த ஒற்றுமையும் இல்லை. நோக்கமும் வேற் வேறாகவே காணப்படுகின்றன என்பதைத் தவிர வேறு எதைச் சொல்ல முடியும் ?

நன்றி>

http://ilanthirayan.blogspot.com/2006/01/b...3099560650.html

Posted

காஷ்மீரில் மக்கள் சுதந்திரம் கேட்டுப் போராடுகிறார்களா என்ன?

எனக்கு தெரிந்து அங்கே பாகிஸ்தானின் தீவிரவாத கும்பல் பிரச்சினை செய்கிறார்கள் அவ்வளவு தான்.... அவர்களது கோரிக்கை சுதந்திர காஷ்மீர் அல்ல.... காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்பது தான்....

பிரிவினை வாதத்தையும், சுதந்திரப் போராட்டத்தையும் இக்கட்டுரை எப்படு ஒரே தட்டில் வைத்து ஒப்பிடுகிறது?

Posted

காஷ்மீரில் மக்கள் சுதந்திரம் கேட்டுப் போராடுகிறார்களா என்ன?

எனக்கு தெரிந்து அங்கே பாகிஸ்தானின் தீவிரவாத கும்பல் பிரச்சினை செய்கிறார்கள் அவ்வளவு தான்.... அவர்களது கோரிக்கை சுதந்திர காஷ்மீர் அல்ல.... காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்பது தான்....

பிரிவினை வாதத்தையும், சுதந்திரப் போராட்டத்தையும் இக்கட்டுரை எப்படு ஒரே தட்டில் வைத்து ஒப்பிடுகிறது?

தீவிரவாத கும்பல் பிரச்சினை செய்கிறார்கள் அவ்வளவு தான்

இதைத்தான் இலங்கை அரசும் சொல்கிறது,

பாகிஸ்தான் திவிரவாதிகளைத்தவிர வேறுயாரும் அங்கு இல்லை என்றால், எமது காது பெரிது முடிந்தவரை பூ சுற்றுங்கள். :wink:

Posted

காஷ்மீரில் இருக்கும் எந்த தீவிரவாத அமைப்பை இந்தியன் நடத்துகிறான் என்பதை நண்பர் பிருந்தன் சொல்ல முடியுமா?

கார்கிலில் பாகிஸ்தான் ஊடுருவி உதை வாங்கி கொண்டு போனது எல்லாம் தெரியுமா? தெரியாதா?

பாகிஸ்தான் வசம் கொஞ்சம் காஷ்மீர் இருக்குறது.... அதாவது தெரியுமா?

காஷ்மீருடன் ஒப்பிட்டு ஈழத்தை தான் நீங்கள் கேவலப்படுத்துகிறீர்கள்....

Posted

ஒரு இந்தியனாக சிந்தித்தால் காஸ்மீர் பிரச்சனை புரியாது, ஒருமனிதனாக பார்த்தால் அவர்களது வேதனை புரியும், காஸ்மீர்தீவிரவாதிகள் அனைவருமே பாகிஸ்தான் காரரா? என்ன? மேலும் ஒப்பீடு செய்வது நான் அல்ல. உண்மையில் காஸ்மீர் மக்களுக்கு பிரச்சினை இருக்கிறதா? இல்லையா? மனித நேயத்துடன் சொல்லுங்கள்.

Posted

சரி உலகம் முழுவது நீங்கள் என்ன போலிஸ் காரரா? இது போல் பேசினால் உங்கள் ஈழ போர்ட மதிப்பை நீங்களே கெடுத்து கொள்கிரீர்கள்.

Posted

மனிதம் பற்றி பேசுவது தவறா? அது பொதுவானது, விடுதலை என்பது அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிரானது, உலகத்தில் எங்கு மனிதம் ஒடுக்கப்படுகிறதோ அங்கு தமிழனின் குரல் ஒலிக்கும்.

Posted

சரி மனிதான பார்த்தால் சக மனிதனையே கொலை செய்வது கேவலமான செயல்தான். எதற்காக செய்கிறோம் எனபது மிக முக்கிய மான விழயம்.

என்ன ஈழத்தில் தமிழ் நாட்டில் இருந்து வந்து தமிழ் மக்கள் போர் புரிகிராரா? இல்லை ஆந்திரா மக்கள் ஈழம் வந்து நான்

இலங்கை தமிழ்ன் என்று சொல்லி கூத்தடிக்கின்ர்றா?

Posted

சரி மனிதான பார்த்தால் சக மனிதனையே கொலை செய்வது கேவலமான செயல்தான். எதற்காக செய்கிறோம் எனபது மிக முக்கிய மான விழயம்.

என்ன ஈழத்தில் தமிழ் நாட்டில் இருந்து வந்து தமிழ் மக்கள் போர் புரிகிராரா? இல்லை ஆந்திரா மக்கள் ஈழம் வந்து நான்

இலங்கை தமிழ்ன் என்று சொல்லி கூத்தடிக்கின்ர்றா?

சிங்களவன் வந்து தமிழர் பிரதேசத்தை தனது என்கிறான் அதுதான் பிரச்சனை, தலைப்புக்குள் பேசுவது சாலச்சிறந்தது என்பது என் துனிபு. :wink:

Posted

அதை நான் தவறு என்று சொல்லவில்லையே !! எனக்கு ஈழ பிரச்சனையும் தெரியும் காஷ்மீர் பிரச்சனையும் தெரியும்

இது பாக்கிஸ்தான் புகழ் பெற்ற டான் பத்திகிகயில் அன்மையில் வெளி வந்த ஒரு கடிதம்.(ஆங்கில்த்தில் பதிவு செய்கிரேன், மன்னிக்கவும்)

Pakistan’s status

FOLLOWING Mr Vipal Thakur’s letter of Nov 26, there have been more letters.

Unfortunately, the worst point of the whole story is that we do not realize our weaknesses and that’s why we do not try to remove them. One can cite a few cases of corruption here and there in both Pakistan and India. But this does not mean that we are better than others and so should be left alone. No matter Pakistan is our beloved country and this is the place where we have to live or die, but we would like this country to be on the top of the world so that our future generations can have a comfortable life. In spite of this, the following points are worth mentioning:

1. Since independence, 58 years have passed and during this period for more than half the time we have been under army rule and martial law. No doubt, the fault lies with our leaders and the army is not to be blamed. Our neighbouring country during the last 58 years remained under democracy and that is why it is well respected in the outside world.

2. During this period we have lost more than half of the country as the population of East Pakistan was 56 per cent. We never talk about this and discuss it to find out the cause so that this should not happen in the future.

3. After 1947, we the Indian Muslims are divided into five nations, i.e., Pakistan, Bangladesh, Indian, Azad Kashmir and occupied Kashmir while the Hindus are still Indian and hold one nationality.

India’s father of atomic power is well recognized and now is president of the country while ours is under house arrest. The reason for this is that the former worked in the interest of his nation while our hero worked for self-interest at the cost of the country’s name and fame.

Over the last 58 years we have not decided which way we should go. We are still debating whether to have parliamentary or presidential form of Government, what type of education we should have and what type of economy we should follow. Unless we fix our direction, how can we march forward?

ISHTIAQ AHMED KHAN

Karachi

http://www.dawn.com/2006/01/11/letted.htm

Posted

நான் அந்த கேள்வியேலாம் கேட்டது ஏன் என்றால் காஸ்மீரில் துப்பாக்கி தூக்கிபவர்கள் 75 சதம் பாக்கிஸ்தான் மக்கள். நான் தலைப்புபோடு தான் பேசுகிரேன். ஈழத்தில் உங்கள் மக்கள்தான் போரடுகின்றனர். காஸ்மீர் அப்படி இல்லை.

Posted

மனிதம் பற்றி பேசுவது தவறா? அது பொதுவானது, விடுதலை என்பது அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிரானது, உலகத்தில் எங்கு மனிதம் ஒடுக்கப்படுகிறதோ அங்கு தமிழனின் குரல் ஒலிக்கும்

இப்படியேல்லாம் பேசினால் உள்ளுர் விழயம் எல்லாம் இழுக்கபடும். உமக்கு தேவைஇல்லாத வேலை ஏன் எல்லா தமிழரையும் இதில் இழுகிறீர்கள்.எதை பேசினாலும் அந்த விழயம் தெரிந்து பேச வேண்டும்.[/

பள்ளியில் படிக்கும் பொழுது இந்திய வரைபடம் மிக அழகாக இருப்பதாக எனக்கு தோன்றும். இதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் தலைப்பகுதி தான் என்று நினைப்பேன். மிக அழகாக நெளிந்து செல்லும் அந்த வரைபடத்தில் இருக்கும் அழகான காஷ்மீருக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. ஆனால் அந்த அழகிய தலைப்பகுதியில் பெரும் பகுதி உண்மையில் நம்மிடம் இல்லை, வரைபடத்தில் மட்டும் அந்த பகுதியை சேர்த்து கொண்டு உரிமை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம் என்று தெரிந்த பொழுது கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது.

நம் இந்திய வரைபடத்தின் தலைப்பகுதியில் ஒரு பகுதி பாக்கிஸ்தானிடமும், மற்றொரு பகுதி சீனாவிடமும் இருக்க எஞ்சிய காஷ்மீர் சர்சைக்குரிய பகுதியாக இந்தியாவிடம் இருக்கிறது. தீவிரவாதிகளுக்கும், இராணுவத்திற்கும் நடக்கும் சண்டையில் அந்தப் பகுதி ரத்த பூமியாக மாறி அடக்குமுறை, விசாரணைகள், மனித உரிமை மீறல்கள் இவற்றுக்கிடையே காஷ்மீர் மக்கள் கடந்த 15 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவும், பாக்கிஸ்தானும் கிரிக்கெட் விளையாடி தங்கள் நல்லுறவை மேம்படுத்த நினைக்க இந்த இரு நாடுகளின் உறவில் பகடை காய்களாக இருப்பது காஷ்மீர் மக்கள் தான். அவர்களின் கோரிக்கை தான் என்ன ? அவர்கள் இந்தியாவுடன் இருக்க நினைக்கிறார்களா, பாக்கிஸ்தானுடன் இணைய விரும்புகிறார்களா அல்லது சுதந்திர காஷ்மீர் வேண்டும் என்று நினைக்கிறார்களா ?

இது பற்றி யாருக்கும் கவலையில்லை. தில்லியில் இருந்து கொண்டு நாம் காஷ்மீர் எங்களுடையது என்றும், லாகூரில் இருந்து அவர்கள் காஷ்மீர் அவர்களுடையது என்றும் கூறிக் கொண்டிருக்கிறோம். நாம் காஷ்மீர் இந்தியாவை விட்டு பிரிவதை விரும்பவில்லை. பாக்கிஸ்தானும் காஷ்மீர் சுதந்திரம் அடைவதை விரும்பவில்லை. தன் நாட்டின் ஒரு பகுதியாகத் தான் காஷ்மீர் இருக்க வேண்டும் என்று நினைக்கிறது.

நம்மிடம் உள்ள காஷ்மீரே சர்ச்சைக்குரிய பகுதியாக இருக்க பாக்கிஸ்தானிடம் இருக்கும் காஷ்மீரும் எங்களுடையது தான் அதனை கைப்பற்றியே தீருவோம் என்ற வீரவசனத்தை சங்பரிவார் கும்பல் வீரதுறவிகள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். நடைமுறையில் சாத்தியம் இல்லாதது.

உண்மையில் காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமானது தானா ? இது பற்றி படிக்க தொடங்கிய பொழுது காஷ்மீர் பிரச்சனையை இந்தியா கையாண்ட விதம், ஒரு இந்தியனான என்னாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லை. சுருக்கமாக கூறினால் காஷ்மீர் பிரிட்டிஷாரின் பிடியில் இருந்து விடுதலை பெற்று இந்தியாவின் பிடியில் சிக்கிக் கொண்டது என்பது தான் உண்மை. இந்தப் பிரச்சனையின் உண்மை நிலையை இந்தியா அரசு இயந்திரமும், ஊடகங்களும் மூடி மறைக்கவே நினைக்கின்றன. பொய்ச் செய்திகளும் திட்டமிட்டு பரப்ப படுகின்றன.

1947ல் இந்தியா விடுதலையான பொழுது இந்தியா, பாக்கிஸ்தான் என்ற இரு நாடுகளுடன் சேராமல் காஷ்மீர் தனி நாடாக இருந்தது. காஷ்மீர் மன்னர் ஹரி சிங் ஹிந்து. ஆனால் பெரும்பான்மை மக்கள் முஸ்லீம். அதனால் தனி நாடாக இருப்பது அவருக்கு வசதியாக இருந்தது. பிரச்சனையும் இல்லை. காஷ்மீர் மற்றும் பாக்கிஸ்தான் இடையேயான சாலைகள், வர்த்தகம் போன்றவற்றை இருக்கும் நிலையில் அப்படியே பராமரிக்க பாக்கிஸ்தானுடன் ஒரு ஒப்பந்தமும் செய்து கொண்டார் (standstill agreement ). ஆனால் இந்தியாவுடன் அவர் இது போன்ற ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்ள வில்லை.

இந்தியா காஷ்மீரை தன்னுடன் இணைத்துக் கொள்ள நினைத்தது. அதனால் இத்தகைய ஒரு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள வில்லை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

1947ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாக்கிஸ்தானின் பஸ்தூன் பழங்குடிகள் காஷ்மீர் மீது படையெடுத்த பொழுது, ஸ்ரீநகரில் இருந்து தப்பி ஜம்மு வந்து இந்தியாவின் உதவியை நாடிய ஹிரி சிங் இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்க ஒரு ஒப்பந்தத்தை 1947ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி செய்து கொண்டார் (Instrument of Accession). இந்த இணைப்பு ஒப்பந்தத்தின்படி காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ந்தாலும், பாதுகாப்பு, வெளியுறவு, போன்ற துறைகள் மட்டும் தான் மைய அரசிடம் இருக்கும். எஞ்சிய துறைகள் காஷ்மீர் அரசின் வசம் இருக்கும்.

1947, அக்டோபர் 27ம் தேதி இந்திய படைகள் ஸ்ரீநகரில் நுழைந்தன. காஷ்மீர் இந்தியா வசம் வந்தது. காஷ்மீரின் நிலப்பரப்பில் 3ல் 2 பங்கு இந்தியாவிடமும், பாக்கிஸ்தான் கைப்பற்றிய 1 பங்கு ஆஸாத் காஷ்மீர் என்று பாக்கிஸ்தானிடமும் உள்ளது.

காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்ததை பாக்கிஸ்தானும், காஷ்மீரின் பெருவாரியான முஸ்லீம் மக்களும் ஏற்கவில்லை. தன்னிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்ட நிலையில் மன்னர் ஹரி சிங்கிற்கு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க எந்த அதிகாரமும் இல்லை என்று பாக்கிஸ்தான் வாதிட்டது. மேலும் பெருவாரியான காஷ்மீர் முஸ்லீம்கள் பாக்கிஸ்தானுடன் இணையவே விரும்பியதும், பாக்கிஸ்தானின் வாதத்திற்கு வலுசேர்த்தது.

அப்பொழுது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டன் இந்த இணைப்பு தற்காலிகமானது தான் என்றும், காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கேற்ப இந்தியாவுடனோ, பாக்கிஸ்தானுடனோ அவர்கள் இணைந்து கொள்ள ஒரு ஓட்டெடுப்பு நடத்தி காஷ்மீரின் மக்களின் விருப்பத்திற்கேற்ப சுயநிர்ணயம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்தார். இதனை காந்தி, நேரு போன்ற தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

1948ம் ஆண்டு இந்தியா இந்தப் பிரச்சனையை ஐ.நா. சபையிடம் முறையிட்டது. காஷ்மீரில் ஒட்டெடுப்பு நடத்தப்பட்டு அம் மக்களின் விருப்பத்திற்கேற்ப காஷ்மீர் இந்தியாவுடனோ, பாக்கிஸ்தானுடனோ இணையலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதனை இந்தியாவும், பாக்கிஸ்தானும் ஒப்புக் கொண்டனர். இன்று வரை அந்த ஓட்டெடுப்பு - Plebiscite நடத்தப்படவே இல்லை.

இடைக்கால ஏற்பாடாக மார்ச் 5, 1948ம் ஆண்டு, சேஷக் அப்துல்லா காஷ்மீரின் "பிரதமராக" நியமிக்கப்பட்டார். ஆம்...ஆரம்ப காலங்களில் காஷ்மீரின் முதல்வரை பிரதமர் என்று அழைப்பது தான் வழக்கம். இந்தியாவிற்கு தனி அரசியல் சாசனம், காஷ்மீருக்கு தனி அரசியல் சாசனம் என்பதும் வழக்கில் இருந்தது. அதாவது இந்தியாவின் பாதுகாப்பில் காஷ்மீர் "தனி நாடாக" சுயாட்சியுடன் இருந்தது. மற்ற மாநிலங்கள் போல இல்லாமல் காஷ்மீருக்கு என்று தனி அரசியல் சாசனம் இருக்க வாய்ப்பளிக்கும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து தரும் 370ம் சட்டப்பிரிவும் உருவாக்கப்பட்டது.

1951ம் ஆண்டு காஷ்மீரின் முதல் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலை தான் இந்தியா, ஒட்டெடுப்புக்கு இணையாக கூறிக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் இந்தியாவின் ஆதரவு பெற்ற சேஷக் அப்துல்லா வெற்றி பெற்றார். மொத்தமுள்ள 75 இடங்களிலும் சேஷக் அப்துல்லா வெற்றி பெற்றார். இதில் 73 இடங்களில் சேஷக் அப்துல்லாவின் ஆதரவாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். எஞ்சிய இரு தொகுதிகளிலும் அப்துல்லாவின் எதிர் போட்டியாளர்கள் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார்கள். அதனால் மொத்தமுள்ள அனைத்து தொகுதிகளிலும் சேஷக் அப்துல்லா வாகை சூடிக் கொண்டார்.

ஆனால் உண்மையில் காஷ்மீர் மக்கள் இந்த தேர்தலில் கலந்து கொள்ளவில்லை. தேர்தலை புறக்கணித்தனர். அது மட்டுமில்லாமல் தேர்தலும் முறையாக நடக்க வில்லை. மைய அரசின் உதவியுடன் சேஷக் அப்துல்லாவின் எதிர்ப்பாளர்களாக கருதப்பட்டவர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மொத்தத்தில் சேஷக் அப்துல்லாவின் வெற்றிக்கு காஷ்மீர் மக்களின் ஆதரவை விட மைய அரசின் அதரவு தான் முக்கிய பங்கு வகித்தது. இதற்கு முழு காரணம் அப்போதைய இந்திய பிரதமர் ஜவகர் லால் நேரு.

காஷ்மீரின் பிரதமராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பின்பு, இந்தியாவுடனான இணைப்பிற்கு எதிராகவும் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என்றும் சேஷக் அப்துல்லா தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். அது குறித்தும் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் தீர்மானத்தை காஷ்மீரின் சட்டசபையில் நிறைவேற்ற மறுத்தார். இதனால் 1953ம் ஆண்டு சேஷக் அப்துல்லா கைது செய்யப்பட்டார். நேருவின் நெருங்கிய நண்பராக இருந்த அப்துல்லா, நேருவாலேயே கைது செய்யப்பட்டார்.

சேஷக் அப்துல்லாவிற்கு பிறகு காஷ்மீரின் பிரதமராக பக்ஷி குலாம் முகம்மது என்பவர் இந்திய அரசால் நியமிக்கப்பட்டார். காஷ்மீரின் சட்டசபையும் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இதன் பிறகு சாதிக் என்பவர் பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர் பிரதமராக இருந்த பொழுது காஷ்மீரின் பிரதமர், ஜனாதிபதி என்று அழைக்கும் வழக்கம் மாறி முதலமைச்சர், கவர்னர் என்று அழைக்கும் முறை அமலுக்கு வந்தது. இவ்வாறு காஷ்மீர் படிப்படியாக இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற்றப்பட்டது. இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் ஜவகர்லால் நேரு தான்.

ஆரம்ப காலங்களில் காஷ்மீர் மக்களின் சுயநிர்ணயம், காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கேற்ப தங்களை இந்தியாவுடனோ, பாக்கிஸ்தானுடனோ இணைத்துக் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்த ஜவகர்லால் நேரு, பிறகு அதனை மாற்றிக் கொண்டு காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டினார். பிரிட்டிஷாரின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடிய நேரு, காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கெதிராக அவர்களின் நாட்டை எதனால் இந்தியாவுடன் இணைக்க ஆர்வம் காட்டினார் ?

இதற்கு முக்கிய காரணம் காஷ்மீரை சார்ந்த அவருடைய பாரம்பரியம். காஷ்மீரி பண்டிட்களின் பூர்வீகமான காஷ்மீரை பாக்கிஸ்தானுக்கு கொடுக்க அவர் விரும்பவில்லை. தன்னுடைய பூர்வீக பூமியை தன்னுடன் வைத்துக் கொள்ள பெரும்பான்மையான காஷ்மீர் முஸ்லிம்களின் விருப்பத்தை துச்சமாக நினைத்தார். இதற்காக அவர் தேர்தல் முறைகேடு போன்றவற்றையும் கையாண்டார். 1951 தேர்தல் தொடங்கி இன்று வரை காஷ்மீர் மக்களின் உண்மையான ஆதரவு பெற்ற தலைவர்கள் தேர்தலில் வெற்றி பெற முடிவதில்லை. இந்திய அரசின் ஆதரவு பெற்ற தலைவர்கள் தான் காஷ்மீரில் வெற்றி பெற முடியும்.

இவ்வாறு ஆரம்பித்த காஷ்மீர் பிரச்சனை தான் இன்று காஷ்மீர் இளைஞர்களை ஆயுதம் ஏந்த வழிவகுத்துள்ளது. பாக்கிஸ்தானின் தூண்டுகோள் இருக்கிறது என்றாலும் அவர்களின் போராட்டம் நியாயமற்றது அல்ல.

காஷ்மீர் பிரச்சனைக்கு காரணம் நேருவின் பொறுப்பற்ற, சுயவிருப்பத்தால் எழுந்த தவறு தான். வரலாற்றின் முன் இந்த பிரச்சனையின் குற்றவாளி ஜவகர்லால் நேரு தான். அவர் இந்த பிரச்சனையை கையாண்ட விதம் தான் இன்றைக்கு இது ஒரு மிகப் பெரிய தீவிரவாத பிரச்சனையாக உருவாக காரணம்.

இந்த பிரச்சனையின் காரணமாக இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் நடந்த 4 போர்கள், அதில் மடிந்த உயிர்கள், தினமும் மடியும் மனித உயிர்கள், காஷ்மீர் மக்களின் இன்னல், இந்திய இராணுவத்திற்கு இந்த பிரச்சனையின் காரணமாக செலவிடப்படும் பெரும் தொகை என்று இன்றைக்கும் இந்தப் பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அது மட்டுமில்லாமல் இன்று இது தேசத்தின் கொளரவ பிரச்சனையாகி தீர்வு காண முடியாத சிக்கலான விடையமாகி விட்டது. 1948ல் தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய பிரச்சனை 2005 வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதில் பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் மக்களின் நிலை தான் பரிதாபமானது. அவர்களுக்கு வேண்டியது நிம்மதியான வாழ்க்கை. காஷ்மீர் இரண்டாக துண்டிக்கப்பட்டதால் பக்கத்து ஊர்களில் கால்நடையாக சென்று தங்கள் உறவினர்களை பார்த்து விடக் கூடிய தூரத்தில் இருந்த காஷ்மீர் மக்கள் தூண்டிக்கப்பட்டு விட்டனர். தங்கள் உறவினர்களை இன்று பாஸ்போர்ட், விசா போன்றவற்றை பெற்று தான் பார்க்க வேண்டிய நிலை. அதை பெறுவதற்கு தேவைப்படும் பணம். பெறுவதில் உள்ள சிக்கல். குறைந்தபட்சம் தங்கள் சொந்தங்களை சுலபமாக பார்க்க கூடிய சலுகையையாவது எதிர்பார்க்கின்றனர்.

பாக்கிஸ்தான் அதிபர் முஷ்ரப் இந்த பிரச்சனையை மன்மோகன் சிங் பிரதமராக இருக்கும் பொழுதே தீர்த்து விட வேண்டும் என்று கூறுகிறார். இந்தப் பிரச்சனை தீர்க்க கூடிய பிரச்சனை தானா ? என்ன தீர்வு உள்ளது இந்தப் பிரச்சனைக்கு ?

இவ்வளவு தெரிந்திருந்தால் போதுமா அண்ணா? :wink:

Posted

இந்த கருத்தை திரு வான்ம்பாடி அவர்கள் எற்கனேவே பதிவு செய்ததை நான் பார்த்தேன். உங்கள் கருத்தை கூறவும். அடுத்தவர் கருத்தை சுடுவது அழகா பிருந்தன்?

Posted

இந்த கருத்தை திரு வான்ம்பாடி அவர்கள் எற்கனேவே பதிவு செய்ததை நான் பார்த்தேன். உங்கள் கருத்தை கூறவும். அடுத்தவர் கருத்தை சுடுவது அழகா பிருந்தன்?

ஒரு இந்தியரே கூறுகிறார் யார்பக்கம் பிழை என்று :wink:

இல்லை காஸ்மீர் பற்றி தெரிந்து கதைக்க சொன்னீர் அதுதான் போட்டேன் இவ்வளவு தெரிந்திருந்தால் போதுமா என்று? 8)

Posted

சரி !! வான்ம்பாடி சொன்னதில் பாதி உண்மை !!

இன்றய காஸ்மீர் நிலைமை என்னவென்று தெரியுமா?

Posted

சரி !! வான்ம்பாடி சொன்னதில் பாதி உண்மை !!  

இன்றய காஸ்மீர் நிலைமை என்னவென்று தெரியுமா?

இதுக்கெல்லாம் போய் பார்கவாமுடியும்? இலங்கையில் இந்தியராணுவம் செய்ததை காஸ்மீரில் செய்யும், அப்பாவிகள் துண்புறுத்தப்படுவார்கள், பெண்கள் கற்பழிக்கப்படுவார்கள், மண்ணின் மைந்தர்கள் கொலைசெய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்படுவார்கள். :wink:

Posted

இதுக்கெல்லாம் போய் பார்கவாமுடியும்? இலங்கையில் இந்தியராணுவம் செய்ததை காஸ்மீரில் செய்யும், அப்பாவிகள் துண்புறுத்தப்படுவார்கள், பெண்கள் கற்பழிக்கப்படுவார்கள், மண்ணின் மைந்தர்கள் கொலைசெய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்படுவார்கள்

சரி இதெற்க்ல்லாம் ஆதாரம் உண்டா? உங்கள் சார்பு இண்யத்தில் இருந்து சுட வேண்டாம்.

Posted

இது எனது இன்னோரு கருத்து பாகிஸ்த்தான் டான் பத்த்ரிக்கையில் இருந்து

There are lot of opinion polls which shows the majority of J&K people want to live with India than with pakistan. Moreover the people of J&K are enjoying democracy compared to the people on the other side of the fence. Even in the recently concluded poll for J&K assembly the people voted with much enthusiasm and the voting % was comparable to the rest of India except in some places in srinagar.

Converting the LOC into international border is the best bet.

There can be no plebiscite because the original status quo for calling plebiscite no longer exists.

For plebiscite to be called for the whole of J&K,POK and akshin chin should again be together which no longer is possible.

The best thing is recogonise LOC as international border.

Only small pockets of some cities like srinagar ,Doda are infested with pro-pak sentiment people. They are in minority when compared to the other regions even in the valley.

Remember J&K is just not the valley we have Hindu majority Jammu region and Buddhist majority Ladakh region. Even people in the valley except few pockets want to live in India.

The terrorists are loosing their game there because of that frustration they are trying to target the rest of India.

Posted

காஸ்மிரின் இன்றையநிலை என்ன என்பதை அந்த நாட்டு மக்களின் இன்றை விருப்பம் என்னவென்பதை அறிய அங்கு முன்பே இந்திய காஸ்மீர் இணைப்பு சட்டத்தின்படி (370 வது உறுப்புரையின்படி)காஸ் மீரத்தில் இந்திய இராணுவம் அகற்றபட்டு காஸ் மீரத்து மக்கள் பாகிஸ் தானுடன் இணைய போகிறார்களா?? அல்லது இந்தியாவுடன் இணைய போகிறார்களா?இ அல்லது தனி நாடாக பிரிந்து போக போகிறார்களா?? எண்று சுதந்திரமான் ஒரு தேர்தல் நடத்தபட வேண்டும் அது நடந்தால் தான் இண்றைய காஸ் மீரத்து மக்களின் உண்மை நிலை அறிய முடியும் இந்த தேர்தல் இன்;றுவரை நடத்தபடவில்லை. காரணம் 1990ல் மாசி மாதம் சுமார் நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஊர்வலமாக போய் தாங்கள் இந்தியவுடனோ பாகிஸ்தானுடனோ சேர விரும்பவில்லை தங்களிற்கு தனி சுதந்திரம் வேண்டுமென்று ஜ னா சபை கண்காணிப்பு குழு தலைவரிடம் ஒரு மனுவை குடுத்தனர் அங்கு சுதந்திரமான் வாக்கெடுப்பு நடந்தால் அது இந்தியவிற்கு மட்டுமல்ல காஸமீர் கனவுகளில் மிதக்கும் பாகிஸதானுக்கும்தான் பேரிடியாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை

Posted

பிருந்தன் இது போல விழயம் தெரியாமல் விடும் கதைகள் உங்கள் ஈழ போர்த்தின் உணர்வை கொச்சை படுத்தி விடும்.

Posted

இதுக்கெல்லாம் போய் பார்கவாமுடியும்? இலங்கையில் இந்தியராணுவம் செய்ததை காஸ்மீரில் செய்யும், அப்பாவிகள் துண்புறுத்தப்படுவார்கள், பெண்கள் கற்பழிக்கப்படுவார்கள், மண்ணின் மைந்தர்கள் கொலைசெய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்படுவார்கள்

சரி இதெற்க்ல்லாம் ஆதாரம் உண்டா? உங்கள் சார்பு இண்யத்தில் இருந்து சுட வேண்டாம்.

கைப்புண்ணை பார்க்க கண்ணாடி எதற்க்கு? அடக்குமுறை ராணுவம் வேறு என்னத்தை செய்யும், காஸ்மீரில் ஒரு பெண்ணும் கற்பழிக்கபடவில்லை என்றும்,காஷ்மீர் பிரயை இந்திய ராணுவத்தால் கொலை செய்யப்படவில்லை என்றும் உங்களால், உறுதிப்படுத்தமுடியுமா? :wink:

Posted

அதுபோல எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் இலங்கையில் தேர்தல் நடத்த தயாரா?

இலங்கை என்றபெயர் இப்போ பாவனையில் இல்லை ஆனால் சிறீ லங்காவில் அண்மையில் வாக்கெடுப்பு நடந்து அந்த நாட்டின் சனாதிபதியாய மகிந்த ராயபக்ச என்பவர் அந்த நாட்டுமக்களால் தேர்ந்தெடுக்க பட்டிருக்கிறார் என்று செய்திகளில் படித்தேன்

:P :P

Posted

அனத்த்து நண்பர்களுக்கும் இன்றய நிலைமை பத்தி பேசவும். ராஜ ராஜ சோழன் காலத்திக்கு எல்லாம் போக வேண்டாம். இன்று காஸ்மீர் மக்கள் இந்திய அரசாங்கத்தின் பிரஜைகள். இந்திய அரசில் அவர்கள் பங்கும் உண்டு. அவர்கள் மக்களால் தேர்ந்து எடுக்க பட்ட அரசின் கீழ் வாழ்கிறார்கள். மக்களவை மற்றும் மாநில் அரசு 2க்கும் மான தேர்த்ல் அங்கு நடந்து மக்கள் அதில் பங்கு பெற்று இந்தியாவோடு தன் உறவை பல முறை உற்தி படுத்தி விட்டார்கள்

Posted

பிருந்தன் வாதத்துக்கு எதிர்வாதம் இங்கே தானே வைக்க முடியும்....

1000 வெப்சைட்டுகள் ஈழத்தை எதிர்த்து கருத்துகள் தெரிவிக்கிறது.... அவற்றையெல்லாம் நாங்கல் இங்கே கட் பேஸ்ட் செய்து போடுகிறோமா?

தீவிரவாதத்தால் 50 வருடங்களாக எங்கள் வளர்ச்சி தடைபட்டுக் கொண்டே இருக்கிறது...

எங்கள் உணர்வுகளை கொச்சை படுத்தும் போக்கை இனியாவது நிறுத்திக் கொள்ளுங்கள்....

370வது பிரிவு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கிறது.... கிட்டத்தட்ட் அங்கே ஒரு சுயாட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது... உங்களுக்கு அதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை....

Posted

தயவு செய்து மீண்டு கேட்கிறேன் தலைப்புக்குள் பேசவும்

தலைப்பு " தமிழ் ஈழமும் காஸ்மீரமும் - ஒரு ஒப்பீடு " இதில் தமிழ் ஈழம் பற்றி பேசாமல் எப்ப்டி ஒப்பீடு செய்ய முடியும்?

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முன்னாள் அமைச்சர் ஒருத்தர் தீவுப்பகுதியை சிங்கப்பூராக மாற்றி விட்டார் இந்த அமைச்சர் அனைலதீவை மலேசியாவாக் மாற்றப்போறார் ...ஒரு விகாரையை கட்டி இரண்டு தேனீர் கடை வையுங்கோ  அனைலை தீவு தாய்வான் போல வந்து விடும் .
    • விதண்டாவாதம் செய்வதில் பிரயோசனம் இல்லை..இரண்டு வருடங்களுக்கு முன்பே சிலை வைத்து விட்டார்கள்  தற்போது அதை விகாரையாக்கினார்கள் என்று தான் .நான் கேள்வி பட்டேன்   
    • பகிர்வுக்கு நன்றி @ஏராளன். இதே போன்ற கட்டுரையை ஜெயராஜ் முன்னமும் 2,3 தரம் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். @ரசோதரன் கூறுவது போல் இவருடைய பாணி கதை போல இருந்தாலும், பத்தி எழுத்தாளர்களுக்கு இது பொதுவான தன்மை தான். ஜனரஞ்சக பத்திகள் தகவல்களை மட்டும் கொண்டு இருந்தால் பலருக்கு அலுப்புத் தட்டி விடும் என்பதால் அப்பிடி எழுதுகிறார்கள் போலும்.
    • தொண்டர் ஊழியர்கள் தான் அவ்வாறு  நடந்து கொள்கிறார்கள் என்று எப்படி தெரியும்?...அங்குள்ள பெரும்பான்மை வைத்தியர்களுக்கு தாங்கள் கடவுள் என்ட நினைப்பு ...நான் ஊருக்கு போயிருந்த நேரம் ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு போயிருந்தோம்....அப்பாயின்மென்ட் இத்தனை மணிக்கு என்று தந்தார்கள்...அரை மணித்தியாலம் முன்பே போய் காத்து இருந்தோம்...கண பேர் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட வைத்தியருக்காய் வந்து காத்திருந்தார்கள்...கிட்டத்தட்ட 1 மணித்தியாலம் சென்றது அந்த வைத்தியர் வருவதற்கு ...நாங்கள் எழும்பி காட்டாமல் போய் விட்டோம் .பின் விசாரித்ததில் தெரிந்தது அங்கு 4 மணிக்கு வைத்தியர் வருவார் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையினருக்கு 4 மணிக்கு அப்பாயின்மென்ட் கொடுப்பார்கள் ...அவர் வந்து முதலில் சின்ன பிள்ளைகள் க,ர்ப்பிணிகள்,வயோதிபர் பார்த்து விட்டு  சாதாரண ஆட்களை பார்க்க வரும் மட்டும் மற்றவர் காத்து இருக்க வேண்டும் ...தனியார் வைத்தியசாலைகளிலேயே இந்த நிலைமை என்றால் அரச வைத்தியசாலைகளில் சொல்லி வேலை இல்லை  போதுமான ஊழியர்கள் இல்லாவிடின் அரசுக்கு அறிவித்து போதுமான பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களை பெற வேண்டியது பணிப்பாளரின் கடமையல்லவா ! இருக்கின்ற வளங்களை முறையாக பயன்படுத்துவதில்லை அல்லது பயன்படுத்த தெரியாது. தொடர்ந்தும் ஒருவரை ஒரே பதவியில் வைத்திருந்தால் தன்னை விட்டால் ஆளில்லை என்ற அசண்டையினம் தான் உருவாகும்  அர்ஜுனா போனவுடனே பேட்டி அது ,இது என்று கொடுத்து தன்னை நிரூபிக்க பாடுகிறார்  அவரில் பிழை இல்லை என்றால் எதற்கு பயப்படுறார்   
    • ஒலியின் வேகத்தை விட ஏறத்தாள  ஐந்து(5) மடங்கு அதிகமான வேகத்தில் பயணம் செய்தால் நியோர்க் நகரத்தில் இருந்து இலண்டன் நகரை ஒரு(1) மணி நேரத்தில் அடையலாம். மஸ்க்கின் SpaceX ராக்கட்டை சுரங்கத்துக்குள்ளால் செலுத்தினால்  மேற்குறிப்பிட்ட சுப்பர்சோனிக் வேகம் (Mach 5)  சாத்தியமாகலாம்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.