Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரிய பதவி தருவோம் என கூறி அரசாங்கம் ஏமாற்றிவிட்டது: தங்கேஸ்வரி புலம்பல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Monday, June 27, 2011, 14:34சிறீலங்கா

ஒட்டுக்குழு டக்ளஸ் தேவானந்தாவின் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் தேசிய இணைப்பாளராகத் தான் நியமிக்கப்பட்டமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தங்கேஸ்வரி கதிராமன் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

புதிய பதவி கிடைத்தமை தொடர்பில் தனக்கு வேண்டிய முக்கிய அரசியல்வாதி ஒருவரிடம் அவர் தனது மனக்குறையைத் திட்டித் தீர்த்துள்ளார். தான் பொறுப்புமிக்கதொரு பதவியையே சிறிலங்கா அரசிடமிருந்து எதிர்பார்த்ததாகவும் ஆனால், கிடைத்த பதவி ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவித்த அவர், தனக்கு வழங்கப்படவுள்ள பதவி தொடர்பில் ஏலவே தெரிவிக்கப்பட்டிருந்தால் அதனை ஏற்றுக் கொண்டிருக்கமாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

என்ன பதவி தனக்கு வழங்கப்படவுள்ளது என அவர்கள் முன்னராகத் தனக்குத் தெரிவிக்கவில்லை. ஒரு முக்கிய பதவி உங்களுக்காகக் காத்துக் கிடக்கிறது. நீங்கள் கொழும்புக்கு வந்து கடிதத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று மட்டுமே தன்னிடம் தெரிவிக்கப்பட்டது எனக் கூறியுள்ளார்.

இவ்வாறான கௌரவப் பதவிகளால் தனிப்பட்ட முறையில் தனக்கு எவ்வித இலாபமும் இல்லை. மக்களுக்கும் எதனையும் செய்ய முடியாது எனவும் சலித்துக் கொண்ட அவர், அரசுடன் சேர்ந்து கொள்வோர் அனைவருக்கும் இவ்வாறான பதவிகள்தான் வழஙகப்படுகின்றனவே எனவும்; தெரிவித்துள்ளார்.

பஸில் ராஜபக்ஷ தனக்கு மிகப் பொறுப்புமிக்க பதவியைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி வழங்கியிருந்தும்; தன்னை ஏமாற்றிவிட்டார் எனவும் அவர் தனது வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தன்னுடன் விலகிய முன்னாள் எம்.பி. கிஷோருக்கு ஜனாதிபதியின் ஆலோசகர் பதவி கிடைத்துள்ளது. அவ்வாறானதொரு பதவி தனக்குக் கிடைத்திருந்தாலும் மகிழ்சிப்பட்டிருப்பேன். என அவர் அந்த அரசியல்வாதியிடம் தனது மன்குறையைக் கொட்டித் தீர்த்துள்ளார்

http://www.tamilthai.com/?p=20375

ஆக பதவிக்காக கட்சி மாறியதை ஒப்புக் கொள்கிறீர்கள். அன்பும், மணியும் பாவம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.