Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராணுவமயமாதல் உலகம் எங்கிலும் இருப்பதுதான் - இன்னும் யுத்தத்தின் பகுதி விளைவாகவும் இது இருக்கிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

28 ஜூன் 2011

வாசுதேவ நாணயக்கார GTBC.FM ன் விழுதுகள் நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வி

http://youtu.be/3AOeQ7OmB50

இலங்கையில் நடப்பது ஜனநாயக ஆட்சியா? அல்லது ராணுவ சர்வாதிகாரமா? விசேட கலந்துரையாடல் -

25.06.2011 சனிக்கிழமை www.gtbc.fm விழுதுகள் நிகழ்ச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் 2

Kuruparan

1.what do you think about, the militarisation of the civil affairs of the whole society in the north east?

2.the military is more and more, invloving in politcs.military attacking and disturbing, election meetings.

the defence minister, making political decisions. how is it, going to end?

3. minister, vasudeva nanayakara you said, there is anti-tamil section, with in the military. is it not a threat, for a functioning democracy?

Vaasudeva Naanayakara

விடுதலைப் புலிகளின் மேலாண்மைக்கு எதிராக மேலாண்மை பெறவேண்டிய அவசியம் ராணுவத்துக்கு இருக்கிறது. இது எந்த உக்கிரமான யுத்தத்திலும் எதிர்பார்க்கப்படுவதுதான். யுத்தத்தில் ராணுவ இயந்திரம் என்பது உலகின் எல்லா இடங்களிலும் காணப்படுவதுதான். விடுதலைப் புலிகளிடமிருந்து வடக்கு கிழக்கை ராணுவம் எடுத்துக் கொண்டது, அதன் விளைவாக அவர்கள் வடக்குக் கிழக்கைக் கட்டுப்படுத்துகிறார்கள். அதிலிருந்துதான் அவர்கள் சிவில் நிர்வாகத்தையும் சாதாரண நிர்வாகத்தையும் கட்டுப்படுத்துகிறார்கள்.

இன்னும் ஒரு வருடத்தில் அல்லது அதற்குப் பின் ராணுவமயநீக்கம் என்பது நிகழ ஆரம்பிக்கலாம். இந்தப் பிரதேசங்களில் ராணுவத்தினர் நியமிக்கப்பட்டிருப்பதற்கு இன்னொரு காரணம் அரச நிர்வாகத்தினர் பெருமளவில் தெற்கிலும் செயல்பட வேண்டியிருக்கிறது. சிவில் நிர்வாகம் என்பது முற்றிலும் சீர்குலைந்து போயுள்ள நிலைமையில் யுத்தத்தில் ஏற்கனவே அனுபவம்பெற்ற சிலரை இந்த நிர்வாகங்களை எடுத்தக்கொள்ளச் செய்ய வேண்டியிருக்கிறது.

முன்னைய பல பாதுகாப்பு வழிமுறைகள் இப்போது போதாததாகிவிட்டது. கடலோரப் பாதுகாப்பு என்பது மேலிருந்தபடி நியமிக்கப்படத்தான் வேண்டும்;. நாட்டின் பாதுகாப்பைக் கருதி சாதாராணமான நிர்வாகம் கூட ராணுவத்திடம் கையளிக்கப்படுவது என்பது தவிர்க்கமுடியாதது. இந்த இடங்களில் ராணுவத்தினர் சாதாரண நிர்வாகிகளின் இடத்தை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இது ஒரு மாறுதல் காலகட்டம். நாங்கள் ராணுவ நிர்வாகத்தலிருந்து சிவில் நிர்வாகத்திற்கு மாறும் காலகட்டம் இதுவாகும். வடக்கு கிழக்கில் இருக்கும் நிலைமை என்பது ஒரு விசேஷ நிலைமையாகும். பாதுகாப்பைக் கருதியாகத்தான் இப்படியான நிலைமை வடக்கு கிழக்கில் நிலவுகிறது.

வடக்கு கிழக்கில் ராணுவத்திற்குள் இருக்கும் தமிழர் விரோத சக்திகள் என்பது பாரதூரமான பிரச்சினைதான். வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகளைத் தாக்கிய சக்திகளை இப்படித்தான் நாங்கள் இனம் கண்டிருக்கிறோம். இவர்கள் தமது சொந்த இலக்குகளையும் நோக்கங்களையும் கொண்டு செயல்படுகிறார்கள். அதே வேளையில் அரசுக்கும் தம்ழ்தேசியக் கூட்டமைப்புக்குமான உறவுகள் என்பதற்கான உரையாடல் வெளியை இது இல்லாததாக்கிவிடக் கூடாது என்பது முக்கியமானதாகும்.

இப்படியான தமிழ் மக்களுக்கு எதிரான செயல்களைச் செய்த சக்திகள்தான் பிரபாகரனது தாயாராது மயானத்திலும் அவமரியாதையை உண்டாக்கினார்கள். அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தையைக் குழப்புகிற இவர்கள் ராணுவத்திற்குள் ஒளிந்திருக்கிறார்கள். நான் அரசுக்கு இது குறித்து ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன்.

பேச்சுவார்த்தைக்கு இவர்கள் ஒரு மிரட்டலாக இருக்கிறார்கள். ராணுவத்துக்குள் இத்தகைய சக்திகள் இருப்பதென்பது நாட்டின் அரசியல் தலைமைக்கும் ஒரு மிரட்டலாகவே இருக்கிறது. இந்த ஆபத்து குறித்து ஜனாதிபதிக்கு நான் ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/63249/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.