Jump to content

யூன் 2011 கணக்கறிக்கை

Recommended Posts

பதியப்பட்டது

யூன் 2011 கணக்கறிக்கை

யூன் 2011 கணக்கறிக்கை PDF வடிவில் இணைக்கப்படுகிறது. இணைப்பில் அழுத்தி கணக்கறிக்கையை பாருங்கள்.

யூன் 2011 கணக்கறிக்கை

இம்மாதம் பயன்பெற்ற மாணவர்கள் – 70.

இம்மாதம் பயன்பெற்ற குடும்பங்கள் – 10.

இம்மாதம் பயன்பெற்ற பெற்றோரை இழந்த பிள்ளைகள் – 9.

நேரடிப்பயனாளிகள் தொகை இங்கே சேர்க்கப்படவில்லை. நேரடியாக உதவி வழங்குவோரும் பயனாளிகளும் நேரடித்தொடர்பில் இருக்கிறார்கள்.

இலங்கை ரூபாவில் அனுப்பப்பட்டுள்ள உதவிகள் எமது தொடர்பிலும் உதவுவோரின் தொடர்பிலும் இருப்போருக்கு உதவும் உறவுகளால் வழங்கப்பட்டுள்ளது. எமக்குத் தொகை தெரியப்படுத்தப்பட்டவர்களின் பெயர்களையும் கணக்கறிக்கையில் சேர்த்துள்ளோம்.

உதவிய உறவுகள் அனைவருக்கும் எம் இதயம் நிறைந்த நன்றிகள்.

குறிப்பு :- ஒவ்வொரு மாதமும் 5ம் திகதிக்குள் மாதாந்த கணக்கறிக்கை வெளியிடப்படும்.

- நேசக்கரம் நிருவாகம் -

Posted

நன்றி

இதில் இந்த மாதம் இரண்டு முறை நான் பணம் அனுப்பி உள்ளேன் என்பதை அறிக்கை காட்டுகின்றது. ஆனால் உண்மையில் ஜூன் மாதம் 6 ஆம் திகதி அனுப்பிய பணம் மே மாததுக்கானது. என் பொறுப்பின்மையினால் மே மாதம் காசு அனுப்ப மறந்து பின் மே மாத கணக்கறிக்கையில் ஏன் என் பெயர் இல்லை என்று ஆராய முற்பட்டே "அடடா காசு அனுப்ப மறந்துட்டேன்" என்று உணர்ந்து அனுப்பிய காசு அது. வீட்டில் விஸ்கி இருப்பு குறைந்தால் உடனே உள்ளுணர்வு சொல்லி விடும்; அனால் இரண்டு பிள்ளைகளுக்கு காசு அனுப்ப மறந்ததை ஆராய்ந்து கண்டு பிடிக்கும் அளவுக்கு என் உணர்வு மட்டமாக இருந்ததை எண்ணி உண்மையில் எனக்கே அருவருப்பாக இருந்தது. :(

நிழலி,

ஒருமுறை மறந்து விட்டதற்காய் கவலைப்பட வேண்டாம். அந்த இருபிள்ளைகளும் உங்கள் பிள்ளைகள் அவர்களது எதிர்கால நன்மைக்கான உங்கள் பங்களிப்புத்தான் அவர்களுக்கு இப்போ உள்ள நம்பிக்கை.

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.