Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னியில் நடைபெற்ற உலகத்தமிழர் பேரவைக்கு நிதி சேகரிக்க நடைபெற்ற 'The Tribute' நிகழ்வு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

<_< உங்கள் தகவலுக்கு நன்றி கந்தப்பு.

இவர்களை நாம் ஓரம்கட்ட வேண்டும். வெறும் பனத்திற்காக மட்டுமல்ல, இவர்களது சரணாகதி அரசியலுக்கும் சேர்த்துத்தான். இனி இவர்கள் சிங்களவர்களுக்காக இசை வேள்வி நடத்தட்டும், யார் வேண்டாம் என்கிறார்??

பலமுறை கீதாஞ்சலி நிகழ்விற்குப் போயிருக்கிறேன், ஆனால் ஒவ்வொருமுறையும் இந்த இசையமைப்பாளரை மேடையில் பார்க்கும்போது எரிச்சல்தான் வரும். ஏதோ மேலைத்தேய இசையையும், கீழத்தேய இசையையும் கலக்கிறேன் பேர்வழி என்று ஆளாளுக்கு ரகுமான் பாணியில் வேறு சடை வளர்த்துக்கொன்டு திரிகிறார்கள்.

கீதாஞ்சலி அல்ல கீதவாணி

Edited by கந்தப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

<_< உங்கள் தகவலுக்கு நன்றி கந்தப்பு.

இவர்களை நாம் ஓரம்கட்ட வேண்டும். வெறும் பனத்திற்காக மட்டுமல்ல, இவர்களது சரணாகதி அரசியலுக்கும் சேர்த்துத்தான். இனி இவர்கள் சிங்களவர்களுக்காக இசை வேள்வி நடத்தட்டும், யார் வேண்டாம் என்கிறார்??

பலமுறை கீதாஞ்சலி நிகழ்விற்குப் போயிருக்கிறேன், ஆனால் ஒவ்வொருமுறையும் இந்த இசையமைப்பாளரை மேடையில் பார்க்கும்போது எரிச்சல்தான் வரும். ஏதோ மேலைத்தேய இசையையும், கீழத்தேய இசையையும் கலக்கிறேன் பேர்வழி என்று ஆளாளுக்கு ரகுமான் பாணியில் வேறு சடை வளர்த்துக்கொன்டு திரிகிறார்கள்.

நான் ஒரு முறையும் யாழ் இந்து பழைய மாணவர் சங்க நிகழ்வுக்கு சென்றதில்லை. ஆனால் தாயகத்தில் மருத்துவ தேவைக்காக நடாத்தப்படும் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு செல்வதுண்டு. அதில் ஒரு முறை இவரின் இசை நிகழ்ச்சி நடந்தது. தானே இயற்றிப் பாடிய பாடலைப் பாடியபின்பு நான் ஒரு சிறிலங்கன் என்பதில் பெருமையடைகிறேன் என்று சொன்னார்.

இதுல சிங்களவன் பக்கம் என்ன தவறு இருந்திருக்கிறது? சரியோ பிழையோ பல்சமூகம் ஒரு குழுமமாக எல்லோரும் சேர்ந்து எமது நலனுக்காக , நடாத்திய நிகழ்வில்,கொலைக்களம் நிகழ்வை ஒளிபரப்பியது தவறு!, அவர்களை மட்டுமல்ல , ஒரு களியாட்ட நிகழ்வில் திடீரென காட்டப்பட்ட இந்த ஒளியூட்டம், வெறுமனே கூடவந்தவர்களை சீண்டிப்பார்க்க செய்யப்பட்ட விடயமாகவே கொள்ளலாமேயன்றி, தேசிய உணர்வு சம்பந்தப்பட்டதாகாது!

  • கருத்துக்கள உறவுகள்

இதுல சிங்களவன் பக்கம் என்ன தவறு இருந்திருக்கிறது? சரியோ பிழையோ பல்சமூகம் ஒரு குழுமமாக எல்லோரும் சேர்ந்து எமது நலனுக்காக , நடாத்திய நிகழ்வில்,கொலைக்களம் நிகழ்வை ஒளிபரப்பியது தவறு!, அவர்களை மட்டுமல்ல , ஒரு களியாட்ட நிகழ்வில் திடீரென காட்டப்பட்ட இந்த ஒளியூட்டம், வெறுமனே கூடவந்தவர்களை சீண்டிப்பார்க்க செய்யப்பட்ட விடயமாகவே கொள்ளலாமேயன்றி, தேசிய உணர்வு சம்பந்தப்பட்டதாகாது!

இது ஒரு களியாட்ட நிகழ்வு அல்ல,தேசிய உணர்வுடன் சம்பந்தப்பட்ட நிகழ்வு,மேலும் இதை நடத்தியவர்கள் ,உலகத்தமிழர் பேரவையினர்.நிச்சயமாக அந்த சிங்களவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் இது ஒரு தமிழர் அரசியலுடன் சம்பந்தப்பட்டவிடயம் என்று.லண்டனில் மகிந்தாவை வெளியேற்றிய ஒரு அமைப்பு சிட்னியில் சிங்களவரை அரவணைக்கும் என்று அந்த சிங்களவர் எண்ணியிருந்தால் அது அவரின் முட்டாள்தனம்.என்னை பொருத்தவரையில் இது ஒரு திட்டமிட்ட செயல் போல தெரிகிறது. இதன் பின்னனி என்ன என்று காலம்தான் பதில் சொல்ல வேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு உடையில் கிட்டார் வாசிப்பவர்தான் அந்தச் சிங்களவர். (Dinesh Ekanayake (Bass guitar))

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

யார் சொன்னது இது களியாட்ட விழாவென்று ? உலகத் தமிழர் அமைப்பினரால் ஒழுங்குசெய்யப்பட்ட நிதி சேகரிக்கும் நிகழ்ச்சிதான் இது. இது பல்குழும சமூகத்துக்காக நடத்தப்பட்ட களியாட நிகழ்வும் அல்ல. முழுக்க முழுக்க தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கும் மக்களால் நடத்தப்பட்ட நிகழ்வு. உம்முடைய உபதேசத்தைப் போய் மகிந்தவிட்டைச் சொல்லிப்பாரும், ஏன் பல்சமூகம் இருக்கிற நாட்டின்ர தேசியக்கொடியில் வாளேந்திய சிங்கமும், அரச மர இலையும் இருக்குதெண்டு?? சிலவேளை உமக்குப் புரிகிற மாதிரிச் சொல்லுவான்.

எல்லோரும் சேர்ந்து எமது நலனோ ?? ஆற்ற நலன் ?? அதார் அந்த எல்லோரும்?? சிங்களவரும் தமிழருமோ?? முள்ளிவாய்க்கால் கொலைக்களங்கள் பாக்கேல்லையே?? நேரமிருந்தால் பாரும். பிறகு உம்முடைய சகோதரங்களோட எப்படி நாங்கள் ஒண்டா இருந்து கும்மியடிக்கிறதெண்டு சொல்லும்.

இதென்ன கரைச்சலாக் கிடக்கு?? நமோ நமோ பாடுறதுகள் இதுக்குள்ளேயும் வந்துவிட்டுதுக <_< ளோ??

யாரையும் சீண்டிப்பார்க்க வேண்டிய அவசியமில்லை. பற்றுச்சீட்டு வங்கும்போதே உலகத் தமிழர் அமைப்பு என்று வாசித்துத்தான் எல்லாரும் வாங்கினோம். நீர் நினைக்கிற மாதிரி உலகத்தமிழர் அமைப்பு நமோ நமோ பாடிக்கொண்டு பல சமூக குழுமங்களின்ர ஒற்றுமையைப் போதிக்கிற சந்நியாசிகளின் மடம் எண்டு நினைத்தால் அது எமது தவறல்ல!! ஏலுமெண்டால் சிங்களவன் நடத்துகிற இசை நிகழ்ச்சியில போய் அவன் செய்யுற பிரச்சாரத்தை நிப்பாட்டச் சொல்லிப் போதிச்சுப் போட்டு வாரும், பிறகு சிட்னி நிகழ்ச்சியில "சீண்டிற " விளையாட்டைப் பற்றிக் கதைப்பம்/

சரணாகதி அரசியலும், சமரச அடிமைத்தனமும் இருக்கும்வரை எம்மை யார் வந்தாலும் நிமித்தமுடியாது. அடிமை வாழ்வுக்கு ஆசைப்படும் இனமொன்று இருக்குமானால் அது நாமாகத்தான் இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

<_< அகோதா,

நீங்கள் சொல்கிற மறுபக்கம் யார்?? சிங்களவர்களா அல்லது இசைக் குழுவா?? சிங்களவர்கலென்றால் நீங்கள் சொல்லுவதைக் கேட்கும் நிலையில் நாங்கள் இல்லை. அது இசைக் குழுவென்றால், அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமென்றால் கூறுங்கள்??

தாம் செய்தது சரியென்கிறார்களா அல்லது தவறென்கிறார்களா?? தேசியத்தின் பேரால் நடத்தப்பட்ட நிகழ்வில் அதே தேசியத்திற்கு எதிராக நடந்த இனக்கொலையைக் காட்டுவதில் என்ன தவறிருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?? அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் எழுந்து போகவேன்டியதுதானே?? எதற்கு நிகழ்வை நிறுத்தினார்கள்??

நீங்கள் இசைக்குழுவைக் காப்பற்ற அவர்கள் செய்ததை நியாயப்படுத்துகிறீர்கள். இறுதியில் சமரசம் ஏற்பட்டதாக எழுதியிருக்கிறீர்கள், அந்த சமரசம் என்னவென்பதையும் எழுதியிருக்கலாமே?? எது, இனித் தேசிய நிகழ்வுகளில் சிங்கள மக்களைப் பாதிக்கும் வகையில் ஒளிப்படங்களை போடவேண்டாம் என்றா??

களியாட்ட சினிமாவின் பிரபலங்களான இளையராஜா& ஏ.ஆர்.ரஹ்மான் பாட்டும், பட்டையை கெளப்புற ஒரு நிகழ்வு ,களியாட்ட நிகழ்வில்லாம ,மாரியாத்தா கோயில்ல கஞ்சி ஊத்துற நிகழ்வா?...............................முழுக்க முழுக்க தமிழ்தேசியத்தை ஆதரிக்கும் மக்களின் நிகழ்வுக்கு எதுக்கு சிங்களவனை கிட்டார் வாசிக்க விட்டீங்க?..................எதுக்கு அவன் குழப்பிட்டான் என்று அப்புறம் கோவபடுறீங்க?..................புலம்பெயர் தேசத்தில்...சிங்களவன் நடத்துற நிகழ்ச்சிக்கு தமிழனை அழைக்கவே மாட்டான்...அழைத்தாலும் ,அவன் நிகழ்ச்சிக்கு போறவன் புலி ஆதரவாளனா இருக்க அவன் விடமாட்டான்!.................ஆகமொத்தம் இது யாரால் நடத்தப்படும் நிகழ்வு என்று தெரிந்தும் ஒரு சிங்களவன் வந்திருக்கான் , ஊதியம் கருதியோ வேறு எதனாலுமோ!...நாளை அந்த நிகழ்வில் கலந்து கலந்து கொண்டதினால்..காட்டுமிராண்டி சிங்கள ஒரு சில கூட்டத்தினால் அவன் எதிர் நோக்கப்போகும் ...தன் சமூகம் சார்ந்த புறக்கணிப்பை துடைக்க மிஸ்டர்.ரகுனாதன் முதல் ஆளாய் அங்கு நிற்பாரா?...............அப்புறம் என்ன? ஆங்.....அடிமை வாழ்வுக்கு ஆசை படுறாங்களா?...........அது சரி ..! ரகுனாதனுக்கு எப்போ சுதந்திரம் கெடைச்சிச்சு?...................................மிஸ்டர்.ரகுனாதன்........நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்............................உண்ர்ச்சிகளின்மீதானாதும்.........எம்மில் பெரும்பாலானவர்கள் ஓரணியில் நின்றதுமான அரசியல்.......முள்ளிவாய்க்காலுடன் முடிந்து போய்விட்டது...........இப்போ நம்முன்னால் உள்ள ஒரேவழி "Flexible and Usable Policies" !....................தலைவர் செய்த மிகப்பெரிய தவறுகளில் ஒன்று...தமிழனுக்காய் தன்னை அழித்தது மட்டுமல்ல..............தனக்குப்பின்னால் ....................இந்த இனத்திற்க்காய் ஒருமித்த குரலில் போராட ....ஒரு சமூக கூட்டத்தை உருவாக்காமல்போனதும் தான்!

<_< அகோதா,

நீங்கள் சொல்கிற மறுபக்கம் யார்?? சிங்களவர்களா அல்லது இசைக் குழுவா?? சிங்களவர்கலென்றால் நீங்கள் சொல்லுவதைக் கேட்கும் நிலையில் நாங்கள் இல்லை. அது இசைக் குழுவென்றால், அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமென்றால் கூறுங்கள்??

தாம் செய்தது சரியென்கிறார்களா அல்லது தவறென்கிறார்களா?? தேசியத்தின் பேரால் நடத்தப்பட்ட நிகழ்வில் அதே தேசியத்திற்கு எதிராக நடந்த இனக்கொலையைக் காட்டுவதில் என்ன தவறிருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?? அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் எழுந்து போகவேன்டியதுதானே?? எதற்கு நிகழ்வை நிறுத்தினார்கள்??

நீங்கள் இசைக்குழுவைக் காப்பற்ற அவர்கள் செய்ததை நியாயப்படுத்துகிறீர்கள். இறுதியில் சமரசம் ஏற்பட்டதாக எழுதியிருக்கிறீர்கள், அந்த சமரசம் என்னவென்பதையும் எழுதியிருக்கலாமே?? எது, இனித் தேசிய நிகழ்வுகளில் சிங்கள மக்களைப் பாதிக்கும் வகையில் ஒளிப்படங்களை போடவேண்டாம் என்றா??

நான் அளித்த பதிலில் 'மறுபக்கம்' என குறிப்பிட்டது உலகத்தமிழர் பேரவையை.

தவறுகளை பேரவை ஏற்றுள்ளது, இசைக்குழுவும் ஏற்றுள்ளது. இளைய தமிழ்தலைமுறைக்கு தாயக முன்னைய, இன்றைய நிலைமைகளை ஆதாரபூர்வமாக ஏற்பாட்டாளர்கள் விளக்கியதால் புரிந்துணர்வு ஏற்பட்டது என குறிப்பிட்டேன்.

Historic charity dinner raises 1 million Malaysian Ringgit to support humanitarian efforts of Tamil Forum Malaysia (TFM)

16 July 2011, Saturday saw another milestone achieved by the Tamil Diaspora in Malaysia. A charity dinner with a target to raise a million Malaysian ringgit to help fund humanitarian efforts in Sri Lanka's war affected Vanni and Tamil refugees in Malaysia was organised by the members of the Tamil Forum Malaysia (TFM).

A well attended dinner at the prestigious members only Golf Club saw some moving performances exclusively by Tamil refugee children of all ages. It is perhaps these performances helped the donors to be so generous that the second half of the million was raised on the night by some handsome contributions.

Datuk Seri Dr S Samy Vellu, Malaysian Government’s Special Envoy for Infrastructure to South Asia, who has also been a cabinet minister for more than two decades, was the chief guest. Rev. Father S.J. Emmanuel, President of Global Tamil Forum (GTF) was present as guest of honour.

Many other distinguished persons, politicians, academics, business entrepreneurs and well wishers were present among the guests.

Some of the members of Malaysian Parliament and Senate, Mr. Manogaran Marimuthu - Opposition MP (DAP Party), Mr. Ramakrishnan Suppiah - Senator Upper house (DAP Party) and Mr. Johari BIN Abdul - Opposition MP (PKR Party), who went to Sri Lanka under cover recently to see for themselves of the misery of the displaced Tamil people were also present.

A presentation with recent factual data was presented to guests for everyone to realise the scale of the suffering of the Tamil people in the Vanni. Many refugee children, boys and girls of all ages provided light entertainment throughout the evening.

President of the TFM, Dr. Iyngkaran gratefully delivered his welcome speech and provided details of help provided so far by the Malaysian Tamils. Datuk Seri Dr S Samy Vellu, reinstated his personal commitment to helping his brethren in Sri Lanka and the people who have arrived as refugees in Malaysia. He too was very generous on the day and before.

Father S.J.Emmanuel as President of Global Tamil Forum (GTF), praised the humanitarian efforts of the Malaysian country member organisation Tamil Forum Malaysia(TFM) and its members. Mr. Suren Surendiran as spokesperson for the GTF informed the guests of some of the next steps that GTF will be taking globally to bring awareness to the Tamil grievances.

After a five course delicious Malaysian cuisine and some great speeches and entertainment, Mr. Kanagarajah as Chairman of Fund Raising Committee delivered a grateful thank you speech to end a memorable and historic evening

Courtesy: GTF

http://www.tamilcanadian.com/article/6138

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தமிழர் அமைப்பு உட்பட 3 அமைப்புகளுக்கு உதவிசெய்ய நடைபெறும் நிகழ்வு

dancecompthulirpostera5.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.