Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சேனல் 4 வீடியோ விவகாரம் எதிரொலி.. எதுவும் நடக்கலாம் இலங்கையில்… பயத்தில் ராஜபக்ஷே

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகளின் முப்பது ஆண்டுகால ஆயுதப் போராட்டம் இலங்கை அரசை ஆட்டிப் படைத்ததோ இல்லையோ, புலிகளுடன் நடந்த இறுதி யுத்தத்தின் விளைவுகள் இலங்கை அரசை இப்போது மீள முடியாத மிகப்பெரும் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டிருக்கிறது.

புலிகளின் கதை முடிந்தது’ என்று கொக்கரித்த மஹிந்த ராஜபக்ஷேவை ‘சேனல் -4’ வடிவத்தில் இப்போது புலிகளின் ஆவி வந்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.

வன்னியில் 2009 ம் ஆண்டு மே மாதம் பெரிய முள்ளிவாய்க்காலுடன் விவகாரத்தை முற்றிலும் தீர்த்தாகி விட்டது என்று பெருமூச்சு விட்ட இலங்கை ஆட்சிப் பீடத்துக்கு இப்போதுதான் உண்மையான சோதனைக் களம் திறந்திருக்கின்றது.

இலங்கை போர்க்குற்றம் புரிந்திருக்கிறது என்ற ஐ.நாவின் அறிக்கை ஒருபுறம், இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக சட்டமன்றத்தின் தீர்மானம் ஒரு புறம், மனித உரிமை அமைப்புகளும், ஈழ ஆதரவாளர்களும் கொடுத்து வரும் நெருக்கடிகள் மறுபுறம் என்று ராஜபக்ஷே நெருக்கடியின் உச்சத்தில் இருக்கும் இந்நேரத்தில், ‘ஸ்ரீலங்காவின் கொலைக் களங்கள்’ என்ற ‘சேனல்- 4’ நிறுவனம் வெளியிட்ட, நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ காட்சிகள் இன்னும் நெருக்கடியில் ராஜபக்ஷேவைத் தவிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

‘ஸ்ரீலங்காவின் கொலைக் களங்கள்’ என்ற 47 நிமிட வீடியோக் காட்சியை கடந்த மாதம் 14 ம் தேதி ‘சேனல் 4’ தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பிய அன்றே அதனை பிரிட்டனில் மட்டும் பத்து லட்சம் பேர் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயினர் என்று சில புள்ளி விவரத் தகவல்கள் கூறுகின்றன. இதே நிலையேதான் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளிலும் கூட.

இந்தியாவிலும் இந்தத் தொலைக்காட்சிக் காணொளி பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என்பது தெரிந்ததுதான்.

ஆனால், ‘சேனல் 4’ அம்பலப்படுத்திய உண்மைகளும், ஐ.நா. செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு புட்டு வைத்த நிஜங்களும் இலங்கையில் குறிப்பாகத் தென்னிலங்கை சிங்கள மக்களிடையேயும், பௌத்த- சிங்கள ஆட்சிப் பீடத்தின் மத்தியிலும், பாதுகாப்புப் படைத்தரப்பினருக்குள்ளேயும் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்பது தனியாகக் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விஷயமாகும்.

தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுள்ள எந்த ஊடகத்தைப் பார்த்தாலும்- அது தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்களாகட்டும்.. பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்ற அச்சு ஊடகங்களாகட்டும் எதை நோக்கினாலும் ‘சேனல் 4’ தொலைக்காட்சி அம்பலப்படுத்தியவை முற்றிலும் பொய்யானவை என முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் எத்தனமே முழு வீச்சில் -முழு மூச்சில் முன்னெடுக்கப்படுவதைக் காணலாம்.

‘யுத்தக்குற்றங்கள்’, ‘மனிதகுலத்துக்கு எதிரான கொடூரங்கள்’, ‘மோசமான மனித உரிமைமீறல்கள்’ போன்ற குற்றச்சாட்டுகள் இலங்கை அரசுத் தலைமைக்கும் படைத்தரப்புக்கும் எதிராக சர்வதேச ரீதியில் பெரும் சுனாமியாகச் சீற்றங் கொண்டு எழுவதற்கான முகாந்திரங்கள் வெளிப்படையாகவே தென்படுகின்றன என்ற யதார்த்தத்தை மஹிந்த ராஜபக்ஷே அரசின் பிற மூத்த தலைவர்கள் நன்குணர்ந்துள்ளனர். காதும் காதும் வைத்தாற்போல தங்களுக்குள் அவர்கள் இது பற்றி சீரியஸாகப் பேசிக் கொண்டாலும் அதிபர் மஹிந்த ராஜபக்ஷேவிடமோ அல்லது அரசில் அதிகாரம்மிக்கவர்களாக இருக்கும் அவரது சகோதரர்ளான பஸில், கோத்தபய போன்றவர்களிடமோ இது பற்றி முணுமுணுக்கவோ மூச்சுவிடவோ அவர்கள் அஞ்சுகின்றனர். உண்மையைக் கூறப்போய், யதார்த்தத்தை எடுத்தரைக்கப்போய், ராஜபக்ஷே அதிகார பீடத்திடம் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டுமா என்ற பயம் அவர்களுக்கு.

இவற்றையெல்லாம் மீறி, நாட்டின் எதிர்கால நலனையும் தாம் உட்பட்ட ஆட்சித் தரப்பினரின் எதிர்காலப் பாதுகாப்பையும் கரத்தில் கொண்ட மூத்த அமைச்சர் ஒருவர், சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிராகக் கிளர்ந்து வரும் எதிர்ப்புணர்வுகள் மற்றும் அவற்றின் மோசமான விளைவுகள் குறித்து அதிபர் மஹிந்த ராஜபக்ஷேவுக்கு வெளிப்படையாக உணர்த்தப்போய், சிங்களத்தில் மிகக் கெட்ட தூஷணை வார்த்தைகளினால் அதிபரிடம் அர்ச்சனை வாங்கிக் கட்டிக்கொண்டு வாயை மூடிக்கொண்டு மௌனியாகத் திரும்பினார் என்கிறது அரசுத்தரப்பு தகவல் ஒன்று.

ஆனால், இந்தப் பிரச்னை பாதுகாப்புப் படை வட்டாரங்களில் மிக மோசமான, மிக ஆபத்தான நிலைமைகளை ஏற்படுத்தி விட்டிருக்கின்றன என்பதுதான் இப்போது வெளியாகிவரும் அதிர்ச்சித் தகவலாகும்.

புலிகளை அழிப்பதற்கு இலங்கை இராணுவத்தின் தளபதியாக இருந்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷேவின் அழிப்பு வேலைகளுக்கான பிரதான ஏஜெனண்டாகச் செயற்பட்டவர் ஜெனரல் சரத்பொன்சேகா. ‘மனிதாபிமான நடவடிக்கை’ என்ற பெயரில் புலிகளோடு சேர்ந்து பல்லாயிரம் அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களையும் கொன்றொழிக்கும் அந்த அழிப்பு வேலை பூர்த்தியானதும் பொன்சேகாவை பாதுகாப்புக் கட்டமைப்பில் இருந்தே நெட்டித் தள்ளி வெளியேற்றும் அரசியல் சாணக்கியத்தை ‘ராஜபக்ஷே அண்ட் பிரதர்ஸ் கம்பெனி’ ஆரம்பிக்க, அந்த குரூப்புக்கு எதிராளியாக அரசியலில் களமிறங்கினார் பொன்சேகா.

யுத்தகளத்தில் தமிழர் அழிப்புப் பணியை கனகச்சிதமாக மேற்கொள்ள பொன்சேகாவுக்கு வாய்ப்பு, வசதி, ஒத்துழைப்புக்களை வழங்கி முழு அளவில் ஊக்கவித்த ராஜபக்ஷே பிரதர்ஸ், அரசியல் களத்தில் அவரைத் தமக்கு எதிராக சற்றும் கூட முன்னேற விடாமல் தடுத்து, சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் நிரந்தரமாக முடக்கினர்.

புலிகளுக்கு எதிரான ‘வெற்றிப்போரின்’(?) இராணுவத் தளபதி, அந்தக் கையோடு ஓய்வுபெற்று, அரசுத்தலைமைக்கு சவால்விடும் அரசியல் எதிரியாக மாறியபோது அதன் தாக்கம் அரச பாதுகாப்புக் கட்டமைப்பிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்த தவறவில்லைதான்.

ஆனாலும், அப்போது பரபரப்பாகவும் வெளிப்படையாகவும் பேசப்பட்ட அந்த அதிர்வலைகளை விட, இப்போது ‘சேனல்- 4’ வீடியோ காட்சி மற்றும் ஐ.நா. நிபுணர் குழுவின் உண்மை விளம்பும் அறிக்கை போன்றவை சத்தம் சந்தடியின்றி இலங்கைப் பாதுகாப்புக் கட்டமைப்பின் மையத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கமும் அதிர்வும் மிகமோசமானவை என்கின்றன உள்வீட்டுத் தகவல்கள்.

பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து அச்சத்திலும் பீதியிலும் உறைந்து போயிருக்கின்றனர் ராஜபக்ஷே சகோதரர்கள்.

சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் மனித உரிமை மீறல்கள், யுத்தக் கொடூரங்கள், மனித குலத்துக்கு எதிரான நாசகாரக் கொலைகள் போன்ற குற்றச்சாட்டுக்கள் இலங்கை ஆட்சித் தலைமைக்கு எதிராகவே பிரதானமாக முன்வைக்கப்பட்டாலும் அவை படைத்தரப்பின் மூத்த அதிகாரிகளையும் சும்மா விட்டு வைக்கப் போவதில்லை என்று சொல்லப்படுகிறது.

அரசுத் தலைமையைப் பொறுத்தவரை தாம் உயிருடன் இருக்கும் வரை இலங்கையின் ஆட்சிப் பிடியைத் தமது கையில் வைத்திருப்பதற்கான சட்ட மற்றும் அரசமைப்பு மாற்றங்களையும் முன்னேற்பாட்டு முஸ்தீபுகளையும் அதிபர் ராஜபக்ஷே செய்து கொண்டு விட்டதால், ஆட்சிக் கடிவாளம் என்ற பாதுகாப்பைத் தங்கள் வசம் வைத்துக் கொண்டு அவரும் அவரது ஆட்சிப் பீடத்தினரும் தங்களைக் காத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளனர் என்பது மூத்த படை அதிகாரிகளுக்கு நன்கு தெரியும்.

ஆனால், படை அதிகாரிகளைப் பொறுத்தவரை நிலைமை அதுவல்ல. ஐம்பத்தி ஐந்து வயதுக்கு முன்பாக அவர்கள் ஓய்வு பெற்றதும் வீட்டுக்குச் செல்லவேண்டியதுதான். அதன் பின்னர் தமக்கு ஏதும் நேரலாம் என அவர்கள் அஞ்சுகின்றனர். யுத்தக் குற்றப் பிசாசு தங்களைக் கடித்துக் குதறிவிடும் என்ற பீதி அவர்கள் மத்தியில் வலுவாக உருவெடுத்து வருகிறது. ஓய்வு காலத்தின் பின்னர் வெளிநாடுகளுக்கு -குறிப்பாக மேற்கு நாடுகளுக்கு -செல்ல முடியாமல் நாட்டுக்குள்ளேயே முடங்க வேண்டிய அவலமும் தங்களுக்கு நேரும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.

அதோடு, இராணுவ அடக்குமுறை ஆட்சிப் போக்கில் ராஜபக்ஷே குடும்பம் முன்னெடுத்து வரும் அடாவடித்தன செயற்பாடுகளும் படைத்தரப்புக்குள் பெரும் புகைச்சலைக் கிளப்பியிருக்கின்றன என்ற உளவுத் தகவல்களும் கூட ஆட்சித் தலைமைக்குச் சென்றிருக்கின்றன.

இத்தகைய பின்புலத்தில், படைத்தரப்பிலிருந்து தங்களது அதிகாரக் கட்டமைப்புக்கு எதிரான சதிச்செயல் எத்தனங்கள் எச்சமயத்திலும் முன்னெடுக்கப்பட அதிக வாய்ப்புக்கள் உண்டு என்று ராஜபக்ஷே பிரதர்ஸ் அஞ்சுகின்றனர் எனவும் கூறப்படுகின்றது.

போதாக்குறைக்கு, எந்த அரசியல் நகர்விலும் ஜாதக ஆரூடங்களை அதிகம் நம்பி, அதில் தங்கியிருக்கும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் மத்தியில், சில முக்கிய சிங்கள சோதிடர்கள் கூறியிருக்கும் ஆரூடங்களும் ராஜபக்ஷே ஆடசிப் பீடத்தின் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டிருக்கின்றன எனக் கூறப்படுகின்றது.

சில பிரபலமான சிங்கள சோதிடர்கள் ராஜபக்ஷே சகோதரர்களின் காதில் இரண்டு விஷயங்களைப் போட்டு வைத்திருக்கின்றார்களாம்.

ஒன்று, -முன்னாள் எகிப்திய அதிபர் அன்வர் சதாத்தின் கிரக நிலைகளை ஒத்தனவாக இப்போது மஹிந்த ராஜபக்ஷேவின் கிரக நிலைகள் உள்ளன.

மற்றொன்று, -இலங்கையின் முன்னாள் பிரதமரும், பின்னர் ‘திடீர்’ ஜனாதிபதியாக மாறியவருமான டிங்கிரி பண்டா விஜேதுங்காவின் கிரகநிலைகளும் இப்போது பிரதமராக இருக்கும் டி.எம்.ஜயரத்னவின் கிரக நிலைகளும் ஒத்தவையாக உள்ளன.

இந்தத் தகவலை ராஜபக்ஷே பிரதர்ஸைப் பெரும் பீதிக்குள் ஆழ்த்தியிருக்கின்றன.

ஆட்சியிலும், அதிகாரப்பிடியிலும் வலுவாகவும், நாட்டுக்குள் மிகப் பெரும் அரசியல் செல்வாக்குடனும் விளங்கிய எகிப்திய அதிபர் அன்வர் சதாத் தமது படைத்தரப்பு வீரர் ஒருவரால் சுட்டுக் கொள்ளப்பட்டார். ஒரே நாளில் அதிகாரம் கைமாறும் நிலைமை ஏற்பட்டது.

அதேபோன்று, ஆட்சியிலும், அதிகாரப் பிடியிலும், அரசியல் செல்வாக்கிலும் வலுவாக இருந்த இலங்கையின் முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாஸ, தமக்கு அடுத்த கட்டத்தில் கட்சிக்குள் வலுவான எதிரி ஒருவர் புதிதாகக் கிளம்பாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, செல்வாக்கு இல்லாத டி.பி.விஜேதுங்காவை தமது ‘ரப்பர் ஸ்டாம்ப்’ பிரதமராக வைத்திருந்தார். அதே வழிவகையைப் பின்பற்றி இப்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷேவும் அரசியல் செல்வாக்கோ, அதிகார வலிமையோ, தனித்துவ மிடுக்கோ இல்லாத டி.எம்.ஜனரத்னவை பிரதமராக வைத்திருக்கின்றார்.

ஆனால், பிரேமதாஸ எதிர்பாராதவை நடந்தன. புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் அவர் கொல்லப்பட, அதுவரை வலிமையற்ற ரப்பர் ஸ்டாம்ப் பிரதமராக இருந்த டி.பி.விஜேதுங்க, அடுத்த சில மணி நேரத்தில் அதிகாரத்தின் உச்சிக்கு வந்தார்.

அதே விஜேதுங்கவின் கிரக நிலைமைதான் இன்றைய பிரதமருக்கும். அவரும் ஒரே நாளில் அதிகாரச் செங்கோலை வலுவோடு கைப்பற்றி உறுதியாகும் நிலைமை வரலாம் என்பதே சிங்களச் சோதிடர்கள் எச்சரிக்கும் ஆரூடம் எனக் கூறப்படுகின்றது.

இதனால், கலங்கிப்போயிருக்கும் ராஜபக்ஷே சகோதரங்கள் தங்களில் ஒவ்வொருவருக்குமான பாதுகாப்பைப்- புலிகள் உறுதியாகச் செயற்பட்ட காலத்தை விடவும் இப்போது பல மடங்காக அதிகரித்திருக்கின்றனர் என்று கூறப்படுகின்றது. முப்படைகளின் தளகர்த்தர் என்ற வகையில் நாட்டின் ஜனாதிபதி, இராணுவத்தின் ஒரு பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை அண்மையில் ஏற்றுக் கொள்ளவிருந்தார். கடைசி நேரத்தில் அந்த அணிவகுப்பில் ஈடுபடவிருந்த சகல படையினரது துப்பாக்கிகள் திடீரென வந்திறங்கிய விசேஷ குழுவினரால் அதிரடியாகச் சோதனை யிடப்பட்டன. அந்தத் துப்பாக்கிகளில் எதிலாவது ‘உயிர் ரவைகள்’ இருக்கின்றனவா என்றுதான் துருவித் துருவிப் பார்க்கப்பட்டதாம்.

அந்தளவுக்கு, புலிகள் வலுவாக இல்லாத இந்தக் காலகட்டத்திலும் படுபீதிக்குள் மூழ்கிக் கிடக்கின்றது ராஜபக்ஷேவின் அதிகாரபீடம்.

எந்தப் புற்றுக்குள் இருந்து எந்தப் பாம்பு, எந்தச் சமயத்தில் சீறி எழும் என்பது கூற முடியாத விஷயம்தானே? அந்த நிலைமைதான் இன்று இலங்கைப் படைத்துறைக் கட்டமைப்பிற்குள்ளும்! எதுவும் எந்தநேரமும் நடக்கலாம் என்ற பீதி நிலைமைதான் இலங்கையில் நீடிக்கின்றது!eelamweSite

வாசிப்பதற்கு ஏதோ சந்தோஷமாக இருக்கிறது.அதற்காகத்தான் எழுதப்பட்டதுபோலும் இருக்கிறது. எழுதியவர் எதுவும் நடக்கலாம் என்று எழுதிவிட்டுத் தான் தப்பிக்கொண்டார். :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ஆட்சியில் இருக்கும் வரை எதுவும் நடக்காது.

மகிந்த ஆட்சியில் இருக்கும் வரை எதுவும் நடக்காது.

எங்களுக்கென்ன அவன் எக்கேடு கெட்டால் என்ன.

தமிழருக்கு பாதுகாப்பான ஒரு தீர்வு இதன் மூலம் பெற்றிட வேண்டும். ஈழம் இல்லை என்றவர்கள் சேர்ந்து வாழ உரிமை உள்ள ஒரு தீர்வை பெற்று தர முன் வர வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

விறு விறுப்பான தொடர்கதையை வாசித்தது போல இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.