Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடுத்து ப. சிதம்பரம் ?

Featured Replies

2G scam: Operation Save P Chidambaram

With the exit of DMK leader Dayanidhi Maran from the Cabinet, the Opposition has now trained its guns on P Chidambaram, Union home minister who was also Union finance minister. And while the Opposition guns the Congress appears to be going all out in support of its own.

The government on Friday deputed two heavyweights, finance minister Pranab Mukherjee and telecom minister Kapil Sibal, to come to the defence of Chidambaram. Chidambaram has been criticised for not keeping records of his meetings with jailed former telecom minister A. Raja on the 2G pricing in 2008.

http://www.dnaindia.com/india/report_2g-scam-government-on-mission-save-p-chidambaram_1563913

BJP seeks Chidambaram's ouster over 2G scam

"The 2-G spectrum scandal is no longer only an `ally affair'. The revelations in the JPC, looking into the scandal, and those coming out in the media show that there is a Congress overtone to this," BJP spokesperson Nirmala Sitharaman said.

http://timesofindia.indiatimes.com/india/BJP-seeks-Chidambarams-ouster-over-2G-scam/articleshow/9156019.cms

ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் தொடர்பாக ப.சிதம்பரத்தின் யோசனையை நிராகரித்த தயாநிதி மாறன்

2006ம் ஆண்டு நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைக்கான விலை நிர்ணயத்தை அமைச்சர்கள் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் கூறியபோது, அதை நிராகரித்து அவருடன் தயாநிதி மாறன் மோதினார் என்று நாடாளுமன்ற கூட்டுக் குழுத் தலைவர் பி.சி.சாக்கோ கூறியுள்ளார்.

நேற்று நடந்த ஜேபிசி கூட்டத்தில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது அவருக்கும், அப்போது தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறனுக்கும் மோதல் ஏற்பட்ட விவகாரம் விவாதத்திற்கு வந்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜேபிசி தலைவர் பி.சி.சாக்கோ கூறுகையில், கடந்த 2006ம் ஆண்டு நிதியமைச்சகத்திற்கும், தொலைத் தொடர்புத்துறை அமைச்சகத்திற்கும் இடையே ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைக்கு விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.

அப்போது நிதியமைச்சகம் கூடுதல் அலைக்கற்றையை ஒதுக்குவது குறித்து தங்களுக்குள் விவாதித்து பின்னர் அமைச்சர்கள் குழுவின் பரிந்துரைக்கு அதை அனுப்பி வைக்குமாறு செயலாளர்கள் கமிட்டியைக் கேட்டுக் கொண்டது.

மேலும் அமைச்சர்கள் குழுவே ஸ்பெக்ட்ரத்திற்கான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் நிதியமைச்சகம் விரும்பியது. ஆனால் அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. அது தங்களது அமைச்சகத்தின் உரி்மை என்று தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கருதியதால் அதை அமைச்சர்கள் குழுவிடம் ஒப்படைக்க அவர் முன்வரவில்லை.

இதையடுத்து கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக மட்டும் அமைச்சர்கள் குழு, மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரைத்தது. விலை நிர்ணயத்தை அது விட்டு விட்டது என்றார் சாக்கோ..

2006ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம், தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவர் தயாநிதி மாறன் என்பது குறிப்பிடத்தக்கது.

http://thatstamil.oneindia.in/news/2011/07/08/dayanidhi-clashed-with-p-chidambaram-on-pricingspectrum-aid0091.html

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி... அமைச்சராக இருந்த தமிழன் எல்லாம்... கொள்ளை அடிப்பதில் தான்... கண்ணும் கருத்தாய் இருந்தார்களே தவிர,

தமது பதவியையும், செல்வாக்கையும் பாவித்து... தமிழனுக்கு நன்மை செய்யாமல், தீமையே.... செய்து கொண்டிருந்தார்கள்.

சிதம்பரம் என்பவன் தேர்தலில் மோசடி செய்து, வெற்றி பெற்றதாக ஜெயலலிதா குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

இவங்கள் எல்லாரின் சொத்தையும் பறித்து, கோவணத்தோடை விட்டால் தான்..... இவங்கள் திருந்துவாங்கள்.

  • தொடங்கியவர்

காங்கிரஸ் அரசில் சீட்டுக்கட்டாக விழும் அமைச்சர்கள் ;அடுத்தக்குறி கபில்சிபல் ; பதவியை பறிக்க போர்க்குரல்

மத்தியில் ஆளும் அரசாக திகழும் காங்கிரசில் வரிசையாக பல அமைச்சர்கள் தங்களுடைய பதவியை இழந்து வருகின்றனர். ஸ்பெக்டரம் என்ற ரூபத்தில் மத்திய அரசை ஆட்டி படைத்து வரும் சர்ச்சையில் இருந்து காங்கிரஸ் மீள முடியாமல் திணறி வருகிறது.

ராஜா பதவி விலகியதும் அந்த பதவியை கூடுதலாக வகிக்கும் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விதிக்கப்பட வேண்டிய, 650 கோடி ரூபாய் அபராதத்தை, வெறும், ஐந்து கோடியாக குறைத்து சலுகை காட்டியுள்ளார். ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ., கபில் சிபலையும், வாகன்வதியையும் விசாரிக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, வரும் 11ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இந்த வழக்கை லோக்பால் வரைவு மசோதா கமிட்டியில் இடம்பெற்றுள்ள சாந்திபூஷண் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இது தொடர்பான விஷயத்தில் சட்டமீறல்கள் நடக்கவில்லை. மேலும் ரிலையன்சுக்கு சலுகை காட்டவில்லை என்றும் கூறியுள்ளார். தம் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் உள்நோக்கம் கொண்டவை என்றும் இன்று நிருபர்களிடம் பேசிய கபில்சிபல் கூறினார். இதற்கிடையில் இவர் மீது கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இவர் பதவியில் நீடிக்க தகுதி கிடையாது என பா.ஜ., உள்ளிட்ட எதிர்கட்சிகள் வரிந்து கட்டியுள்ளன. இவர் ராஜினாமா செய்ய வேண்டும் இல்லையேல் பிரதமர் இவரை நீக்க வேண்டும் என்று கோரியுள்ளன. வரும் 11 ம் தேதி சுப்ரீம் கோர்ட் பிறப்பிக்கும் உத்தரவை பொறுத்து இவரது பதவி தப்புமா என்பதற்கு விடை தெரியும்.

http://tamil.yahoo.com/க-ங்க-ரஸ்-அரச-ல்-ச-ட்ட-க்கட்ட-113200888.html

வடக்கு பயங்கரவாதிகளுக்கு கொடி பிடித்த தென் பகுதிப் பயங்கரவாதிகள் ஒவ்வொருவராக கழட்டிவிடப் படுகின்றனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.