Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவுக்கு அழுத்தத்தைக் கொடுக்கும் பிரிட்டனின் சனல்4 காணொளி (video in)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு அழுத்தத்தைக் கொடுக்கும் பிரிட்டனின் சனல்4 காணொளி (video in)

Sunday, July 10, 2011, 11:38

இந்தியா, உலகம், சிறீலங்கா, முதன்மைச்செய்திகள்

பிரிட்டனின் சனல்4 காணொளியின் பயங்கரமான படுகொலைக் காட்சிகள் இந்தியத் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படுகின்றமை இலங்கையிலுள்ள சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குவது தொடர்பாக இந்திய அரசாங்கம் உறுதியாக செயற்படவேண்டுமென்ற அழுத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக டெக்கான் குரோனிக்கிள் பத்திரிகை தெரிவித்துள்ளது.

குறிப்பாக, சென்னையில் செய்தி அலைவரிசைகளில் இந்தக் காட்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. பிரபல்யமானவர்கள் இந்தக் காட்சிகள் தொடர்பாக தமது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

http://www.youtube.com/watch?v=C-IYFBXccXg&feature=player_embedded#t=68s

அதேவேளை, இந்த ஒளிநாடாவானது போலியானதென கொழும்பிலிருந்து செய்மதித் தொடர்பு மூலம் இலங்கையின் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல கூறியுள்ளார்.

கொலைக்களங்கள் ஒளிநாடாவை நான் பார்த்தேன். பொது மக்கள் மீது மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் கட்டவிழ்த்து விடப்பட்டமையை கூறுவதற்கு அதிர்ச்சியாக உள்ளது.

http://www.youtube.com/watch?v=A7HIBWCh9dQ&feature=player_embedded#t=0s

ஐ.நா.வும் ஏனைய சர்வதேச முகவரமைப்புகளும் அவதானித்துக் கொண்டிருந்தமைக்கு அப்பால் என்ன செய்து கொண்டிருந்தன? எனக்குத் தெரிந்த காரணத்தை இறந்த ஆன்மாக்கள் அறியவேண்டுமென நான் விரும்பியிருந்தேன்.

இது குறைந்தளவில் அவர்களுக்காக என்னால் செய்ய முடிந்தது என்று ஜோதி என்பவர் கூறியுள்ளார்.

அங்கு யாவுமே விட்டுவிடப்படுமா? ஏதோ ஒரு வழியில் இலங்கையால் செய்யப்படுவதற்கு ஏதாவது செய்யப்படுமா? இந்த மாதிரியான கொடுமைகள் இடம்பெற்றதென்ற உண்மையை எனது வாழ்வில் நான் பெற்றுக்கொள்ள முடியாது என்று சென்னையிலுள்ள சிரேஷ்ட கல்வி ஆலோசகர் ஸ்வரூப் கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை இரவு தொலைக்காட்சியை பார்த்த ஆயிரக்கணக்கான மனங்களை பிரதிபலிப்பதாக அவரின் கருத்து அமைந்திருந்தது. உலகின் பல நகரங்களில் ஒரே நேரத்தில் ஒளிநாடா காண்பிக்கப்பட்டிருந்தது.

ஐ.நா.மீதும் முன்னணி நாடுகள் மீதும் இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணையை ஆரம்பிப்பதற்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக புலம்பெயர்ந்த தமிழர்கள் இதனை மேற்கொண்டிருந்தனர்.

பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலி நிலையங்கள் இந்த கொடூரமான ஒளிநாடா தொடர்பான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றன என்று அவுஸ்திரேலியாவிலுள்ள இன்பத்தமிழன் வானொலியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் கூறியுள்ளார். கேள்விகள் உரத்தும் தெளிவாகவும் கேட்கப்படுகின்றன. இப்போது சர்வதேச சமூகம் என்ன செய்யப்போகின்றது என்று அவர் கூறியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக உள்ளோம். இந்த விடயத்தை வலுவாக கவனத்திற்கு எடுத்து இலங்கைத் தமிழர்களுக்கு உதவுமாறு டில்லியை அவர் வலியுறுத்துவதையிட்டு நாம் நன்றியுடையவர்களாக இருக்கிறோம்.

உங்கள் சட்டசபையில் அவர் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார். அத்துடன் இந்தியாவினால் பொருளாதாரத்தடை விதிக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையிலுள்ள தமிழர்கள் சம உரிமைகளை பெற்றுக்கொள்ளும் வரை போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரையும் பொருளாதாரத்தடை விதிக்குமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார் என்று உலகத் தமிழர் பேரவையின் சார்ள்ஸ் அன்டனி தாஸ் கூறியுள்ளார்.

லண்டனில் ஜூலை 5 இல் உலகத் தமிழர் பேரவை மாநாடு இடம்பெற்றது. அங்கு உயர்மட்ட பிரிட்டிஷ் எம்.பி.க்கள் ஆதரவளிப்பதாக உறுதியளித்திருந்தனர்.

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போதும் மிகக் குறுகிய காலத்திற்கே உண்ணாவிரதமிருந்தது போன்ற தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வழிமுறைகளில் சலிப்படைந்தவர்களாக புலம்பெயர்ந்த தமிழர்கள் காணப்படுவதுடன், தற்போது ஜெயலலிதாவுடன் வலுவான நேசஅணியைக் கொண்டிருப்பது தொடர்பாக எதிர்பார்ப்புகளுடன் உள்ளார்கள்.

இலங்கையில் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு துரிதமான புனர்வாழ்வை அளிக்கவேண்டுமென்ற சர்வதேசத்தின் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு புதுடில்லி மீது அழுத்தம் கொடுப்பதற்காக ஜெயலலிதா மீது புதிய எதிர்பார்ப்பை அவர்கள் கொண்டுள்ளனர்.

விரைவில் தமிழக முதலமைச்சரை சந்தித்து அவருக்கு நன்றி செலுத்த நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம் என்று அன்டனி தாஸ் டெக்கான் குரோனிக்கிளுக்குக் கூறியுள்ளார்.

http://www.youtube.com/watch?v=T3sKks43LZ8&feature=player_embedded#t=0s

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=oZffhzmsiPU#t=0s

http://www.tamilthai.com/?p=21410

சனல் நாலின் ஆவணப்படம், இந்தியாவில் தான் கூடுதல் தாக்கத்தை உருவாக்க வைக்கவேண்டும்: மக்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், மனித ஆர்வலர்கள் என பலதரப்பு சமூகத்தையும் சென்றடைய வைக்கவேண்டும்.

ஹெட்லைன்ஸ் பிரதம ஆசிரியருக்கு குறுஞ்செய்தியை அனுப்புங்கள். தெரிவுசெய்யப்பட்ட சில செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்

It will be good to TWEET Rahulkanwal ( Chief editor / Channel Head of Headlines Today )

www.twitter.com/rahulkanwal

சில மாதிரி செய்திகள்

* Punishment of LankanWarcrimes -Rajapakse

* Economic Embargo

* Conduct Free International Investigations

* Conduct Free International Referendum similiar to South Sudan

* This is the worst Genocide the world have faced in 21st Century

* It is sad to see 1,40,000 Tamil Civilians killed in Eelam War

* Tamils have voted for 1977 Vaddukottai Resolution for Tamil Eelam

* On seeing the Video , it is clear that Tamils cannot live under sinhala governement

* Why Lanka is so much unhumane and uncivilised ?

என்ன நடந்தது என உலகுக்கு அறிவித்துவிட்டது சனல் 4. என்ன செய்ய வேண்டும் என்பதைச் சர்வதேசம் தீர்மானிக்கும். ஆனால் இந்த இந்தியா மட்டும் ஏன்னிப்படி? சீனாவிற்குப் பயந்தா? அல்லது இலங்கைக்கு மேலும் உதவுவதற்காகவா?

பிரித்தானிய சனல்-4 தொலைக்காட்சியின் ‘இலங்கையின் படுகொலைக்களம்’ நிகழ்ச்சியை கடந்த மூன்று நாட்களாக (வியாழன், வெள்ளி, சனி) ஒளிபரப்பிய இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ரூடே (Headlines Today) தொலைக்காட்சி, இது பற்றிய நடத்திய விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

வீடியோ......

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=2251:headlines-today-&catid=1:latest-news&Itemid=18

மக்கள் மத்தியில் நடைபெற்ற இந்த தொலைக்காட்சி விவாதத்தில் தமிழ்நாட்டின் ஆளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் தம்பித்துரை, தமிழ் எழுத்தாளரான கலாநிதி. நாகநாதன், மக்கள் சமத்துவக் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான சரத்குமார், இலங்கைப் பிரச்சினையை உற்றுநோக்கிவரும் ராஜேஸ் சுந்தரம், இந்தியப் படைகள் இலங்கையில் இருந்த காலத்தில், அப்படைகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக இருந்த இந்திய முன்னாள் படைத்தளபதியும், ஆய்வாளருமான கேணல் ஹரிஹரன் ஆகியோர் நேரடியாகக் கலந்துகொண்டனர்.

இவர்களுடன், சிறீலங்கா படைத்துறைப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவெல, இந்திய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் யஸ்வந் சிங், பிரித்தானிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் உட்பட பலர் தொலைத்தொடர்புக் காணொளி ஊடாகக் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கருத்துரைத்த மிலிபான்ட், சிறீலங்கா அரசாங்கம் போர்க்குற்றங்கள் இழைத்திருப்பதாகவும், இது பற்றிய விசாரணைக்கு காலக்கெடு விதிக்க வேண்டும் என்றும், பன்னாட்டு சமூகம் இதில் தலையிட சிறீலங்கா அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இவ்விவாதத்தில் இலங்கையின் சார்பாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவலவை இணைத்துக்கொண்டமை குறித்து குறித்து பாதுகாப்பு அமைச்சுக்கும், வெளிவிவகார அமைச்சும் இடையே நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் சிங்கள இணையத் தளத்திற்குத் தெரிவித்தார்.

இந்தியாவின் ஹெட்லைன் டுடே தொலைக்காட்சி கொலைக்களம் ஆவணப்படத்தை அடிப்படையாக வைத்து சென்னையில் இருந்து நேரடி நிகழ்ச்சி யொன்றைத் தொகுத்து வழங்கியதுடன், இந்த நிகழ்ச்சியில் இலங்கையின் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவலவை செய்மதி ஊடாக இணைத்துக் கொண்டு கருத்துக்களைக் கேட்டிருந்தது.

இவ்வாறு இராணுவப் பேச்சாளர் நேரடியாக இணைத்துக்கொள்ளப்பட்டு எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்கு அவர் மௌனம் சாதித்ததாகவும், சில கேள்விகளுக்கு உரிய முறையில் பதிலளிக்கவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சு குற்றஞ் சுமத்தியுள்ளது.

செனல் 4 தொலைக்காட்சியின் கொலைக்களம் ஆவணப்படத்தை அடிப்படையாக வைத்து ஹெட்லைன் டுடே தயாரித்த இந்த நிகழ்ச்சியில் இலங்கை சார்பாக இராணுவப் பேச்சாளர் இணைத்துக்கொள்ளப்பட்டதன் மூலம் அந்த நிகழ்ச்சி பக்கசார்பற்ற அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், இதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியமை இலங்கைத் தரப்பினரால் இழைக்கப்பட்ட மிகப்பெரிய தவறு எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் இராணுவத் தரப்பிலிருந்து பதிலளிக்கப்பட வேண்டும் என வெளிவிவகார அமைச்சே அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது. இந்த நிகழ்ச்சி குறித்து முழுமையாக ஆராயாமல், இராணுவப் பேச்சாளரை இதில் கலந்துகொள்ள வைப்பதற்காக ஜனாதிபதி ஊடாக வெளிவிவகார அமைச்சு மேற்கொண்ட நடவடிக்கை பாதகமான விளைவுகளை தற்போது ஏற்படுத்தியுள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஸ குற்றஞ்சுமத்தியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடந்தது என உலகுக்கு அறிவித்துவிட்டது சனல் 4. என்ன செய்ய வேண்டும் என்பதைச் சர்வதேசம் தீர்மானிக்கும். ஆனால் இந்த இந்தியா மட்டும் ஏன்னிப்படி? சீனாவிற்குப் பயந்தா? அல்லது இலங்கைக்கு மேலும் உதவுவதற்காகவா?

இந்தியா மடியில் நெருப்பைக் கட்டி வைத்துக் கொண்டு இருக்கின்றது!

அதன் காந்தீய முகமூடி கிழிவதை அது விரும்பவில்லை! அதற்காக அமைதி காக்க வேண்டியுள்ளது!

ஒரு போர்க்குற்றவாளி தேசம் , இன்னொரு போர்க்குற்றவாளியைப் பாதுகாக்க முன்னிற்கின்றது!

புத்தைத் திறக்கும் வரை தான் பிரச்சனை!

திறந்து விட்டால், எல்லா ஈசல்களும் வெளி வந்து தான் ஆக வேண்டும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழின விரோத பயங்கரவாதிகள் நிறைந்த வட ஹிந்தியர் இதைப் பார்த்து அமைதி காத்தால், அவர்கள் காட்டுமிராண்டிகள் எனவும், மனிதத் தன்மை அவர்களிடம் இல்லை என்பதும் மீண்டும் ஒருதடவை நிரூபிக்கப்படும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Lanka war crimes: No comments, says Foreign Secretary Nirupama Rao

The Indian government has had nothing to say for the last four days on the gross violation of human rights in Sri Lanka.

Four days after Headlines Today aired chilling evidence of Sri Lankan army's atrocities against Tamils, India has maintained a defeaning silence. Meanwhile, Colombo claims the atrocities were committed by the LTTE fighters.

Chilling evidence of crimes against humanity was aired by Headlines Today on Thursday night. The Channel 4 documentary, Sri Lanka's Killing Fields, presents perhaps the most disturbing images ever shown on any TV channel.

The images clearly proved that war crimes of the worst kind were committed against the Tamil rebels in Sri Lanka by its armed forces in the culmination of the civil war two years ago.

However, despite the glaring evidence, India's Ministry of External Affairs has avoided reacting to it.

When asked for her reaction on the video footage, Foreign Secretary Nirupama Rao said, "I will not comment on this matter."

Asked if the Indian government has failed in its response, former external affairs minister Jaswant Singh had told Headlines Today on Friday, "The government must act constitutionally and politically. No government can afford to sit on the fence."

The UN report on Sri Lanka had recommended an international investigation, but the Sri Lankan government has done nothing.

Former UK foreign secretary David Miliband had also said that the report was shocking and that Sri Lanka must allow international probe into the war crimes. "There is a need to give Lanka a deadline to look into the war crimes and see to it that the deadline is fulfilled," Miliband told Headlines Today on Friday.

Lankan military spokesperson Maj Gen Ubaya Medawale maintained there was "no need for international probe".

"The video, done by individuals who come from the ranks of refugees spread over different parts of Lanka seeking international assistance, is fake," Medawale had said on Friday.

http://indiatoday.intoday.in/site/story/india-stays-mum-on-lanka-war-crimes/1/144419.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.