Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தன், அமிர்தலிங்கம்,மாவை போன்றவர்கள் தமது பிள்ளைகளை ஆயுத போராட்டத்திற்கு அனுப்பவில்லை. வெளிநாடுகளுக்கு கல்விகற்கவே அனுப்பினார்கள் வடக்கு, கிழக்கை இணைக்கக் கோருவது தமிழீழக் கோரிக்கைக்கு ஒப்பானது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன், அமிர்தலிங்கம்,மாவை போன்றவர்கள் தமது பிள்ளைகளை ஆயுத போராட்டத்திற்கு அனுப்பவில்லை. வெளிநாடுகளுக்கு கல்விகற்கவே அனுப்பினார்கள் வடக்கு, கிழக்கை இணைக்கக் கோருவது தமிழீழக் கோரிக்கைக்கு ஒப்பானது

[Tuesday, 2011-07-12 08:22:45]

வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கக் கோருவது தமிbழக் கோரிக்கைக்கு ஒப்பானது என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கடந்தகாலத்தில் தமிழ்த் தலைவர்கள் எடுத்த பிழையான முடிவுகளே தமிழ் மக்களின் கணிசமானவர்கள் அழிவதற்குக் காரணமாக அமைந்தது என்றும் கூறினார்.

மட்டக்களப்பு முறக்கொட்டாஞ் சேனையில் 25 இலட்சம் ரூபா நிதியில் அமைக்கப் படவுள்ள பொதுச் சந்தைக்கான அடிக்கல் நாட்டும் விழா கடந்த சனிக்கிழமை நடந்தது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வாழைச்சேனை (கோரளைப் பற்று) பிரதேச சபைத் தவிசாளர் தா. உதயஜீவதாஸ் தலைமையில் ஆலய முன்றலில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் முதலமைச்சர் தொடர் ந்து பேசுகையில்; வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அரசியல் ரீதியிலான முன்னெடுப்புகளிலும் அழிய வேண்டியேற் பட்டது. அதேபோன்று ஆயுதப் போராட்டத்தாலும் சகோதர இனப்படுகொலை மற்றும் எதிர்த்தரப்புக் கொலை என உயிரிழந்த வரலாறு உண்டு.

தமிழ்த் தலைவர்கள் ஒன்றுகூடி வட்டுக் கோட்டை பிரகடனம் என தமிbழத்தை பிரகடனப்படுத்தியதால் தமிழ் வாலிபர்கள் உசுப்பேற்றிவிடப்பட்டனர். இத்தீர்மானத்தை கிழக்கு தமிழ் தலைவர்கள் பிரேரிக்கவு மில்லை. ஆமோதிக்கவுமில்லை. ஆனால் பின்னர் இடம்பெற்ற ஆயுதப் போராட்டத்தில் மட்டக்களப்பு தமிழ் வாலிபர்களே யுத்தத்தில் மடிந்தார்கள்.

சம்பந்தன் ஐயா அமிர்தலிங்கம் ஐயா, மாவை சேனாதிராஜா போன்றவர்கள் தமது பிள்ளைகளை ஆயுத போராட்டத்திற்கு வழங்கவில்லை. வெளிநாடுகளுக்கு கல்விகற்க அனுப்பினார்கள். இதேநேரம், ஆயுத குழுக்களாக இருந்தவேளை ஈ.பி.டி.பி., டெலோ, ரீ.எம்.வி.பி. என அடையாளங்காணப்பட்டு சகோதர இனப்படுகொலைகளும் நடைபெற்றன. இராணுவத்தினராலும் அழிக் கப்பட்டோம்.

எனவே நாம் தற்போது ஏற்பட்டுள்ள சுமுகமான சூழலைப் பயன்படுத்தி எமது பொருளாதாரத்தை மீளக் கட்டி யெழுப்ப வேண்டும். அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே அபிவிருத்திகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுவே யதார்த்தமாகும்.

வடக்கு, கிழக்கு இணைக்கப்படும்போது தமிழர் பெரும்பான்மை என்பது தனிப்பட்ட முறையில் எனக்கும் விருப்பமானதுதான். ஆனால் நடைமுறைச் சாத்தியமற்ற கோரிக்கைளுக்குப் பின்னால் சென்று மீண்டும் அழிய முடியாது.

வடக்கு, கிழக்கு சட்டரீதியாக இணைக்கப்பட வேண்டுமாயின் கிழக்கில் வாக் கெடுப்பு நடத்தப்படும்.

அவ்வேளையில் முஸ்லிம்களும் சிங்களவர்களும் மாகாண இணைப்பிற்கு எதிரான வாக்களிக்கும் பட்சத்தில் தமிழர்கள் தோல்வியுற்று எதிர்க் கட்சியில் இருந்து கொண்டு தற்போது கிடைக்கின்றன. அபிவிருத்தி சலுகைகளைக்கூட இழக்க வேண்டியவரும்.

எனவே, மாகாண சபைக்கு அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வதுதான் இறுதியான தீர்வாக அமையும். இதற்கு மாகாண சபையும் தமிழ் முதலமைச்சரும் தற்போது கிடைத்திருக்கிறது. இதனூடாக எமது மக்களுக்கான நன்மைகளைப் பெற முன்வர வேண்டும் என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=46336&category=TamilNews&language=tamil

பாராடாப்பா என்ன மாதிரி அரசியல் கதைக்கிறான்.

ஏன் உங்க படிச்சவை எல்லாம் இருக்கிறியள். அவனை பாருங்கோ.

சீ பாவம் எம் தலைவனும் மண்ணுள் வீழந்த வீரர்களும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான் துரோகிதான் ஆனால் அவன் சொல்லும் கருத்து சம்பந்தன், அமிர்தலிங்கம்,மாவை போன்றவர்கள் தமது பிள்ளைகளை ஆயுத போராட்டத்திற்கு அனுப்பவில்லை. வெளிநாடுகளுக்கு கல்விகற்கவே அனுப்பினார்கள் இது உண்மையான கருத்துத்தான்.

எனவே நாம் தற்போது ஏற்பட்டுள்ள சுமுகமான சூழலைப் பயன்படுத்தி எமது பொருளாதாரத்தை மீளக் கட்டி யெழுப்ப வேண்டும். அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே அபிவிருத்திகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுவே யதார்த்தமாகும்.

வடக்கு, கிழக்கு இணைக்கப்படும்போது தமிழர் பெரும்பான்மை என்பது தனிப்பட்ட முறையில் எனக்கும் விருப்பமானதுதான். ஆனால் நடைமுறைச் சாத்தியமற்ற கோரிக்கைளுக்குப் பின்னால் சென்று மீண்டும் அழிய முடியாது.

இணக்க அரசியலின் உச்சம் இந்த கூற்றுக்கள். அடக்குமுறையாளர்களை திருப்திபடுத்த, எந்த வித தூரநோக்கும் இல்லாத தனது மக்களையே விற்று பிழைக்கும் ஈனப்பிறவி.

கடந்தகாலத்தில் தமிழ்த் தலைவர்கள் எடுத்த பிழையான முடிவுகளே தமிழ் மக்களின் கணிசமானவர்கள் அழிவதற்குக் காரணமாக அமைந்தது என்றும் கூறினார்.

மட்டக்களப்பு முறக்கொட்டாஞ் சேனையில் 25 இலட்சம் ரூபா நிதியில் அமைக்கப் படவுள்ள பொதுச் சந்தைக்கான அடிக்கல் நாட்டும் விழா கடந்த சனிக்கிழமை நடந்தது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வாழைச்சேனை (கோரளைப் பற்று) பிரதேச சபைத் தவிசாளர் தா. உதயஜீவதாஸ் தலைமையில் ஆலய முன்றலில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் முதலமைச்சர் தொடர் ந்து பேசுகையில்; வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அரசியல் ரீதியிலான முன்னெடுப்புகளிலும் அழிய வேண்டியேற் பட்டது. 1958ல் அழிவு வர முன்பே தனி நாடு கேட்டிருக்க வேண்டும்- தமிழ் தலைவர்கள் பிள்ளயான் மாதிரி மந்திரி பதவி வாங்கிவிட்டர்கள்அதேபோன்று ஆயுதப் போராட்டத்தாலும் சகோதர இனப்படுகொலை மற்றும் எதிர்த்தரப்புக் கொலை என உயிரிழந்த வரலாறு உண்டு.பிள்ளையானும் கருனாவும் இயக்கத்தை உடைச்சும், பிறகு பிள்ளையான் கருனாவுக்கு எதிராய் போயும் தமிழ் இளைஞர்கள் வீணே இறந்தார்கள்.

தமிழ்த் தலைவர்கள் ஒன்றுகூடி வட்டுக் கோட்டை பிரகடனம் என தமிbழத்தை பிரகடனப்படுத்தியதால் தமிழ் வாலிபர்கள் உசுப்பேற்றிவிடப்பட்டனர். இத்தீர்மானத்தை கிழக்கு தமிழ் தலைவர்கள் பிரேரிக்கவு மில்லை. ஆமோதிக்கவுமில்லை..மக்கள் ஆமோதித்து வாக்களித்தார்கள். ராஜவரோதயம் சம்பந்தன் என்பவர் இரண்டாம் தலைமுறை தமிழ் கட்சித்தலைவர். சம்பந்தரின் குடும்பம் 60 வருடங்களுக்கு மேல் தமிழ் கட்சிகளின் முடிவுகளில் அங்கம் வகிக்கிறார்கள். கிழக்கு மாகாணத்தலைவர்கள் மட்டுமல்ல, மலையகத்தலைவர் தொண்டமானும் அதற்கு உடந்தையாய் இருந்தார்

ஆனால் பின்னர் இடம்பெற்ற ஆயுதப் போராட்டத்தில் மட்டக்களப்பு தமிழ் வாலிபர்களே யுத்தத்தில் மடிந்தார்கள்.

சம்பந்தன் ஐயா அமிர்தலிங்கம் ஐயா, மாவை சேனாதிராஜா போன்றவர்கள் தமது பிள்ளைகளை ஆயுத போராட்டத்திற்கு வழங்கவில்லை. வெளிநாடுகளுக்கு கல்விகற்க அனுப்பினார்கள்.இவளவும் புகட்டிய இவனின் எஜமானார் நாமலைத்தான் எப்படி படிப்பித்தார் என்று இவனுக்கு சொல்வதில்லை. பிள்ளையானைப்போல் பிள்ளைகளைப்பெற்றுக்கொள்ளாத பெற்றோர் ஒருதடவை தம் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி பார்க்க முயல்வதுண்டு. பிள்ளையானை போன்றவையை பெற்றவர்கள், பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்துவிட்டது என்று விட்டுவிடுவார்கள். அரசியல் தலைவர்கள் போரடத்தில் ஈடுபடவில்லை. தேசிய தலைவருக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் போராட்ட முறைகளில் சமாந்தரம் காணப்படவில்லை. ஏனவே அவர்களின் பிள்ளைகள் போராட்டத்தை ஆதரிக்காததை இந்த இடத்தில் கூறிவது பிள்ளையானின் அறிவுக்கு மட்டும் உகந்தது. உண்மையான ஆற்றல் இன்றி பெற்றோரை பார்த்து(நாமல் மாதிரி) அரசியலில் ஈடுபடுவதை "royalty" என்று மேலை நாடுகளில் நகைப்பார்கள். திரும்பவும் சொல்கிறேன், ராஜவரோதயம் சம்பந்தன் என்பவர் இரண்டாம் தலைமுறை தமிழ் கட்சித்தலைவர். தேசிய போராட்டத்தின் போது குடும்பத்தில் ஒருவரையே கேட்டார்கள் என்பது பிள்ளையானுக்கு நினைவில்லை.தலைவரின் பிள்ளையும் படித்துவிட்டுத்தான் வந்தார்.பிள்ளையானைத்தவிர தமிழர் எல்லோரும் படிக்க வேண்டும்.ஆனால் பிள்ளையான் படித்தால் மிகவும் ஆபத்து

இதேநேரம், ஆயுத குழுக்களாக இருந்தவேளை ஈ.பி.டி.பி., டெலோ, ரீ.எம்.வி.பி. என அடையாளங்காணப்பட்டு சகோதர இனப்படுகொலைகளும் நடைபெற்றன. இராணுவத்தினராலும் அழிக் கப்பட்டோம்..இவ்விடத்தில் பிள்ளையான் ஐ.நா வில் சாட்சியம் கொடுக்க இருக்கிறன். இந்த பேச்சை பாதுகாத்து கொள்ளுங்கள்- இராணுவம் எங்களை அழித்தது.

எனவே நாம் தற்போது ஏற்பட்டுள்ள சுமுகமான சூழலைப் பயன்படுத்தி எமது பொருளாதாரத்தை மீளக் கட்டி யெழுப்ப வேண்டும். அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே அபிவிருத்திகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுவே யதார்த்தமாகும்.

வடக்கு, கிழக்கு இணைக்கப்படும்போது தமிழர் பெரும்பான்மை என்பது தனிப்பட்ட முறையில் எனக்கும் விருப்பமானதுதான். ஆனால் நடைமுறைச் சாத்தியமற்ற கோரிக்கைளுக்குப் பின்னால் சென்று மீண்டும் அழிய முடியாது.

வடக்கு, கிழக்கு சட்டரீதியாக இணைக்கப்பட வேண்டுமாயின் கிழக்கில் வாக் கெடுப்பு நடத்தப்படும்.

அவ்வேளையில் முஸ்லிம்களும் சிங்களவர்களும் மாகாண இணைப்பிற்கு எதிரான வாக்களிக்கும் பட்சத்தில் தமிழர்கள் தோல்வியுற்று எதிர்க் கட்சியில் இருந்து கொண்டு தற்போது கிடைக்கின்றன. அபிவிருத்தி சலுகைகளைக்கூட இழக்க வேண்டியவரும்.பிள்ளையான் இப்போ எதோ ஆளும் தமிழ்கட்சியில் இருக்கிறன் போலை. மேலும் தேவை ஏற்பட்டால் கட்சி மாறுவது தானே

எனவே, மாகாண சபைக்கு அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வதுதான் இறுதியான தீர்வாக அமையும். இதற்கு மாகாண சபையும் தமிழ் முதலமைச்சரும் தற்போது கிடைத்திருக்கிறது. இதனூடாக எமது மக்களுக்கான நன்மைகளைப் பெற முன்வர வேண்டும் என்றார்.செய்கிறது தானே. யார் மறிக்கிறார்கள்

http://www.seithy.com/breifNews.php?newsID=46336&category=TamilNews&language=tamil

Edited by மல்லையூரான்

களத்தில் இருக்கும் அரசியல்வாதிகளோ, போராளிகளோ - அவர்களது பிள்ளைகளும் களத்தில் இறங்க வேண்டும் என எதிர்பார்க்கும் மனோபாவம் கீழ்த்தரமானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.