Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாவம் அவை விட்டுவிடுங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் அவை விட்டுவிடுங்கள் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து வைரவநாதர்:-

வரலாறு ரீதியாகவும், மத ரீதியாகவும் தமிழர்களுக்கும் நாய்களுக்கும் ஆயிரமாயிரம் வருடங்களாக தொடர்புகளுள்ளதாக மூத்தவர்கள் கூறுகின்றனர். மகா பாரதத்தில்; கூட தருமர் தனது இறுதிப்பயணத்தில் பின் தொடர்ந்து வந்த நாயை தன் கூட மோட்சத்திற்கு அழைத்துச் செல்ல உரிமைக்குரல் கொடுத்ததாக வரலாறு உண்டு. இந்துக்கள் வைரவரை வாகனமாக்கி, கோவில் கட்டி வழிபடுவது, நாய்களை கௌரவிக்கும் பாரம்பரியமொன்றே, வீதிகள், சந்திகளெங்கும் வைரவர் நாய்கள் சகிதம் வரம் பாலித்துக்கொண்டே தான் இப்போதும் இருக்கின்றார்.

ஆனாலும் யாழ்ப்பாணத்தில் நாய்களுக்கு இப்போது கஸ்டகாலம் தொடங்கியுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடனும், தலைகள் துண்டிக்கப்பட்டு; என நாய்கள் வீசப்படுவதாகக் கூறுகின்றனர். வழமை போன்றே தேவைகருதி, நன்றி மறந்து அவைகளை மனிதர்கள் கொன்று விடுகின்றார்கள்.

ஜனாதிபதியின் மகிந்த சிந்தனையில், நாய்களுக்கு கூடிய கௌரவம் வழங்கப்பட்டேயுள்ளது. தெருநாய்களை கண்மூடித்தனமாக கொல்வதை மகிந்த சிந்தனை தடை செய்துள்ளது. பெரும்பாலான உள்ளுராட்சி சபைகள் தெருநாய்களை கொல்வதற்கு, கடந்த காலங்களில் வௌ;வேறு உத்திகளைப் பயன்படுத்தி வந்தன. நீரில் மூழ்கடித்துக் கொல்வது, விஸ உணவை வைத்துக் கொல்வது, ஏன் சில வேளைகளில் விஸ ஊசி ஏற்றிக் கொல்வதென பல உத்திகள் இருந்தன. ஆனால் மகிந்த சிந்தனை அதை முற்றாக தடுத்தே விட்டது. தேவையானால் குடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சைக்கு சிபாரிசும் செய்துள்ளது.

விளைவு குடாநாட்டில் தெரு நாய்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காது போய்விட்டது. பெரும்பாலும் முகாம் சூழல்களில் குடும்ப சகிதம் இன்றுவரை நாய்களே கோலோச்சிக் கொண்டிருக்கின்றன. அதிகாலை வேளைகளில், முகாம்களுக்கு அருகாக செல்லும் வீதிகளில்

நாய்களது ஆக்ரோஸத் துரத்தலுக்கஞ்சி சைக்கிள்களை போட்டுவிட்டுத் தப்பியோடிய அனுபவங்கள் என்னைப்போல உங்களுக்குமிருக்கலாம். தப்பியோட முனைந்து நாயுடன் மோதி, காயத்துடன் வைத்தியசாலை சென்ற அனுபவங்களும் இப்போது பலருக்குண்டு.

தெரு நாய்களை பிடிக்கச்சொல்லி பொதுமக்களிடமிருந்து வரும் முறைப்பாடுகளை, உள்ளுராட்சி சபைகள் குப்பைத்தொட்டியுள்ளேயே வீசிவருகின்றன. அவை மகிந்த சிந்தனைகளை கடுமையாக அமுல்படுத்த நினைக்கின்றன. முகாம்களில் செல்லப்பிள்ளையாக வளரும் நாய்களை பிடிக்கப்போய், அடி உதை வாங்கிய கதைகள் கூட அவர்களிடமுண்டு. வாகனத்தால் மோதிக்கொன்றதற்காக, அடி, உதை வாங்கி மண்டையுடைந்துபோன சாரதிகள் எண்ணிக்கை இதுவரை கணக்கில்லை.

பெரும்பாலும் அரசர்கள் இரவிலோ, பகலிலோ வீதி உலா புறப்படும்வேளைகளில், கூடவே நாய்ப்படைகளும் (?) புறப்பட்டே விடுகின்றன. ரோந்து போகின்றார்களோ அல்லது வீட்டிற்கு முன்பதாக நிற்கின்றார்களாவென்றெல்லாம் நாய்களது குரைப்பே காட்டித் தந்துவிடுகின்றது. நாய்களின் குரைப்பினை வைத்து இரவினில் நடப்பதை அக்கு வேறு ஆணி வேறாக கூறிவிடுவார்கள் யாழ்ப்பாணத்தவர்கள். இருண்ட நாட்கள் தந்த அனுபவம் அப்படி.

கடத்தப்பட்டு காணாமல் போன தமது குடும்பத்தவர்கள் பற்றிய மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலக முறைப்பாடுகள் எல்லாவற்றிலும் கட்டாயம் நாய்களுக்கும் இடம் உண்டு. நாய்கள் கடுமையாக குரைத்தன. எங்கள் நாயை ஒருவன் சுட்டுக் கொல்ல மற்றவர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர் என்றெல்லாம் வெள்ளை வான் வருவதற்கு முன்னதான வருணனைகள் இருக்கின்றன. அரசர்களது ரோந்தைப் பார்த்து குரைத்ததற்காக கொல்லப்பட்ட வீட்டு நாய்கள் கூட உண்டு.எசமானை எச்சரிக்க துப்பாக்கிச் சூட்க்குப் பலியான நாய்களும் பலவுண்டு.

ஆனால் இப்போதெல்லாம் கதைகள் மாறியுள்ளது. பார்வதியம்மாவின் சிதையின் மீது வீசப்பட்ட மூன்று அப்பாவி நாய்களுடன் புதிய அத்தியாயம் ஆரம்பமாகியுள்ளது. இன்று வரை சுட்டுக்கொல்லப்பட்ட அந்த மூன்று நாய்களும் அடையாளங் காணப்பட்டிருக்கவில்லை. வழமை போன்றே தெருவோரம் கிடக்கும் அடையாளந் தெரியாத மனிதப்பிணங்கள் போல அவையும் எரிக்கப்பட்டுவிட்டன. அமெரிக்கா மற்றும் ஜ.நா உள்ளிட்ட எந்தவொரு தரப்பும் வாயில்லாத அந்த சீவன்களுக்காக இதுவரை கண்டனம் கூட எழுப்பியிருக்கவில்லை. வழமை போன்று இரண்டு மூன்று வருடங்களின் பின் விசாரணை அறிக்கைகள் வரலாம்.

சொன்னதைக்கூட ஒன்றுக்கு பத்து முறை யோசித்து, திருத்தச் சொல்லும் பேராசிரியர் வீட்டின் கிணற்றுக்குள்ளும் நாயின் உடலம் கிடந்தது. வெற்று கோணிப்பையினுள் பொதி செய்யப்பட்டிருந்த அந்த நாயின் கதையினை வெளியே சொல்ல வேண்டாமென அவர் சொன்ன போதும் செய்திகள் வெளியே வந்து வீழ்ந்திருந்தன. அப்போதும் கூட கிணற்றுத் தண்ணீர் பழுதடைந்தது பற்றியே எல்லோரும் பேசிய போதும், அந்த அடையாளம் தெரியாத நாய் பற்றி அலட்டிக் கொண்டிருக்கவில்லை.

கடைசியாக கொல்லப்பட்ட மானிப்பாய் நாயின் நிலையோ மிகவும் பரிதாபகரமானது. சிரச்சேதம் செய்யப்பட்ட அந்நாயின் தலை தனித்தும், உடலம் புறம்பாகவும் வீசப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தினில் மனிதர்களது தலைகள் துண்டாடப்பட்டு தனியே வீசப்படுவது சாதாரணமானதென்ற போதும், நாயொன்றின் கழுத்து துண்டாடப்படுவது அண்மையில் இதுவே முதல் தடவையாகும். ஆனாலும் யாழ் நகரில் தலையும், நெல்லியடியில் உடலமும் வீசப்பட்ட மனிதப் படுகொலையுடன் ஒப்பிடுகையில் இந்நாயின் மரணம் பரவாயில்லை. ஆனாலும் கூட்டமைப்பின் வேட்பாளர் வீட்டில் வீசப்பட்ட நாயும், கொல்லப்பட்ட பின்னர்தான் சிரச்சேதம் செய்யப்பட்டதாவென்பது உறுதியாக தெரியவில்லை.

அண்மைக் காலங்களில், ஜனநாயகம் மீண்டும் மலர்ந்துவிட்டதாகவே பெரும்பாலும் பலரும் இப்போது சொல்லிக் கொள்கின்றார்கள். ஜனாதிபதி முதல் அவரது அமைச்சர்கள் ஈறாக பயங்கரவாதம் முடிவுக்கு வந்துவிட்டதாக உரையாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் நாய்களை கொல்வதூடாக, குடாநாட்டினில் பலருக்கும், கடந்த கால, மரண நிழலை நினைவூட்டவே உரிய தரப்புகள் முனைப்புக்காட்டிவருகின்றன.

குடாநாடு அரச கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்த பின்னர் காணாமல் போதல்களும், படுகொலைகளும் சாதாரணமாகிப் போயிருந்ததாக சர்வதேச மன்னிப்புச்சபை தொடர்ந்தும் சுட்டிக்காட்டியே வந்திருந்தது. குறிப்பாக 2006ம் ஆண்டின் பின்னரான காலப்பகுதிகளில் வீதியோரங்களில் கொல்லப்பட்டவர்களது சடலங்கள், அநாதரவாக கிடப்பது நாள்தோறும் சாதாரணமாகவே இருந்தது. தெருநாயை சுடுவது போல் சுடப்பட்டிருப்பதாக, அப்போது பலரும் பேசிக்கொண்டார்கள். ஆனால் நான்கு கால் நாய்கள் எவையும் அப்போது கொல்லப்பட்டிருக்க வில்லை. கொல்லப்பட்டவர்கள் மனிதர்களாகவே இருந்தனர்.

ஆனாலும் இப்போது நிலைமை மாறியேயுள்ளது. மனிதர்களை கொல்வதற்கு பலரும் கேள்வி எழுப்புவதால், இப்போது நாய்களைக் கொல்லத் தொடங்கியுள்ளனர். அதற்கு எவரும் குரல் கொடுக்கப போவதில்லையென்பது கூடக் காரணமாக இருக்கும். இறைச்சிக்காக வெட்டப்படப்போகும் ஆடு, மாடுகளுக்காக குரல் கொடுக்கும் மிருகவதைத் தடைச்சட்டம் நாய்களுக்கும் பொதுவானது என்பதை, நம்மூர் காவல்துறை அதிகாரிகள் கூடதெரிந்து கொண்டிருக வாய்பில்லைப் போலும்.

மீண்டும் இருண்ட யுகமொன்று இப்போது பலருக்கும் தேவையாக இருக்கின்றது. அதற்காக மக்களை வீடுகளுள் முடங்கிப்போகச் செய்ய வேண்டிம் இருக்கின்றது. அதற்காக நாய்கள். புலியாக்கப்பட்டுள்ளன. பாவம் நாய்கள் அவற்றையேனும் விட்டுவிடுங்கள்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/64029/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

பார்வதி அம்மாளை எரித்த மயானத்தில் கூட...... நாயை சுட்டுப் போட்ட, நாய்க் கலாச்சாரம் உடையவர்கள்.

உபயோகமில்லாத மனிதனையும், நாயையும் சுட்டால் நடுதெருவில் மட்டும்தான் போடல்லாம். அதனால் அதன் கணக்கு உங்களுக்கு தெரியுது.

ஆடு மாட்டின் கணக்கை யாருக்கு தெரியும்?

பொன்னின் குடமுடைந்தால் பொன்னாகும் என்னாகும் மண்ணின் குடமுடைந்தக் கால்?

கூட இருக்கிற எங்கடை மனிசர்தான் இந்த மனித வேலை பாக்குதுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.