Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மட்டக்களப்பில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அலுவலகம் மீத

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அலுவலகம் மீது கைக்குண்டு வீச்சு

இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் மீது நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் நடத்தப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

இத்தாக்குதலில் அலுவலகம் முன்பாக நிறுத்தி வைக்கப்படடிருந்த 3 வாகனங்களில் ஒரு வாகனம் முற்றாகச் சேதமடைந்துள்ளது. அலுவலகத்தின் ஜன்னல்இ கதவுகளும் குண்டுவெடித்து சிதறியதில் சேதமடைந்துள்ளது.

மட்டக்களப்பு நகரில் உயர் பாதுகாப்பு வலயம் என கருதப்படும் லேக் வீதியில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது. 3 சோதனைச் சாவடிகள் அமைந்துள்ள இந்த வீதியிலேயே ஈ.பி.ஆர்.எல்.எஃப். வரதர் அணியின் அலுவலகம் அமைந்துள்ளதோடு போர் நிறுத்த கண்கானிப்புக் குழு அலுவலகத்திற்கு அருகாமையில் அதாவது 10 மீற்றருக்குள் ராசிக் குழுவின் முகாமும் அமைந்துள்ளது.

துணை ஆயுதக் குழுக்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் அளித்து வரும் முக்கியத்துவம் குறித்து நேற்று போர் நிறுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைமையகம் கடுமையான அறிக்கையொன்றை வெளியிட்டு 24 மணி நேரத்திற்குள் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு கருணா குழுவைச் சேர்ந்தவர்களினால் மாவட்ட கண்காணிப்பாளர் சிலருக்கு பெயர் குறிப்பிட்டு விடுக்கப்பட்ட எச்சரிக்கையையடுத்து அவர்கள் மாவட்டத்திற்கு வெளியே மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
It is important to emphasise that the current situation also stems from the fact that alternative armed elements have been able to operate freely in the East in Government controlled areas. These forces have destabilised the ceasefire and are one of the major reasons for increased tension between the Parties
- SLMM Press Release - January 13, 2006

தேவை அரசினதே

ஈழநாதம் நாளேட்டில் 16.01.06 வெளிவந்த ஆசிரியர் தலையங்கம்

மட்டக்களப்பு மாவட்டக் கண்காணிப்புக் குழு அலுவலக வளாகத்திற்குள் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலானது மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்காணிப்புக் குழுவினரின் நடவடிக்கைகளை முடக்குவதற்கெனத் திட்டமிட்ட hPதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பதில் சந்தேகத்திற்கோ, கேள்விக்கோ இடமில்லை. இத்தாக்குதலுக்கு யார் பொறுப்பு? என்ற கேள்வியையும் ஆராய்வது தேவையற்றது. ஏனெனில், இத்தாக்குதலை மேற்கொள்ள வேண்டிய தேவையும,; அதற்கான சாத்தியப்பாட்டையும், சிறிலங்கா ஆயுதப்படைத்தரப்பும்- அதனுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக் குழுக்களுமே கொண்டுள்ளன.

இத்தாக்குதலானது, மட்டக்களப்பு மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில், அதிலும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. இப்பகுதியில் சிறிலங்கா ஆயுதப்படைத்தரப்பைத் தவிர தாக்குதல் நடத்துவதென்பது மிக மிகக் கடினமான தொன்றாகும்.

அத்தோடு, சிறிலங்கா ஆயுதப்படைத்தரப்போ அன்றி அதனுடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுக்களோ தவிர வேறு யாராவது இத்தாக்குதலுக்கு திட்டமிட்டிருப்பின் இத்திட்டம் வெளிப்படும் இடத்து அதனால் விளையும் பாதகங்களையும் அவர்கள் புரிந்து கொண்டவர்களாகவே இருப்பர். அத்தகையதொரு பழியை ஏற்க அவர்கள் தயாராகமாட்டார்கள். ஆகையினால், இக்குண்டு வெடிப்பை சிறிலங்கா ஆயுதப் படைத்தரப்போ அன்றி அதனுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுவினரோதான் நிச்சயமாக நடத்தியிருத்தல் வேண்டும்.

கண்காணிப்புக்குழு மீதான இத்தாக்குதலானது அவர்களின் செயற்பாட்டை முடக்குவதற்கான நடவடிக்கை என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை

.....

..........

http://www.tamilnaatham.com/editorial/eela...2006_JAN/16.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்காணிப்புக்குழு அலுவலகத்தின் மீதான தாக்குதலை நடத்தியவர்கள்; விடுதலைப்புலிகளோ, இராணுவமோ இல்லை - ஹெக்லண்ட்

அண்மையில் போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் மட்டக்களப்பு அலுவலகம் மீதான தாக்குதல் நடத்தப்பட்ட பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்படவில்லை. அதேபோல் இந்த தாக்குதல்களுடன் ஸ்ரீ லங்கா இராணுவத்திற்கும் தொடர்புகள் இல்லை என்று கண்காணிப்புக்குழுவின் தலைவர் ஹக்ரூப் ஹெக்லண்ட் பி.பி.சி. செய்திச்சேவைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

அலுவலகம் மீதான தாக்குதல்களை நடத்தியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளோ, அல்லது ஸ்ரீ லங்கா இராணுவமோ அல்லாமல் வேறொரு தரப்பினரே. அவர்கள் யார் அவர்களின் எண்ணம் என்ன என்பது பற்றி எமக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும் இப்போது அது பற்றி நான் எதுவும் கூறிக்கொள்ள விரும்பவில்லை.

போதிய பாதுகாப்பு இருப்பதாக நாம் கருதகினறோம். தற்போது எங்களுடைய பாதுகாப்பினை நாம் மேலும் அதிகரித்தள்ளோம் எனத்தெரிவித்துள்ளார்.

தகவல் மூலம்- சங்கதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்காணிப்புக் குழு அலுவலகம் மீதான தாக்குதலுக்கு நோர்டிக் நாடுகள் கண்டனம்

இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அலுவலகம் மீதான தாக்குதலுக்கு நோர்டிக் நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் நோர்வே வெளிவிவகார அமைச்சு ஓஸ்லோவில் 17 ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை:

இலங்கை மட்டக்களப்பு போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அலுவலகம் மீது கடந்த 13 ஆம் நாளன்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நோர்வே, சுவீடன் ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்த நிறுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கண்காணிக்கும் பாரபட்சமற்ற, பொதுமக்கள் சார் அமைப்பு. இருதரப்பினராலும் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இருதரப்பினர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் முழு ஒத்துழைப்பும் எமது கண்காணிப்புக் குழுவினருக்கு இருந்து வருகிறது.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் அளிக்கப்பட்டிருக்கும் உறுதிமொழிகளுக்கமைய கண்காணிப்புக் குழுவினரது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கண்காணிப்புக் குழுவினர் தமது கடமைகளைச் செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள இருதரப்பினரிடமும் நாம் எதிர்பார்ப்பதாகும்.

மட்டக்களப்பு கண்காணிப்புக் குழு அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் வெடிகுண்டு பொருத்தப்பட்டு வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது. இதில் 4 வாகனங்கள் சேதமடைந்துள்ளன. எவருக்கும் காயமேற்படவில்லை என்று அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தகவல் மூலம்-புதினம்.கொம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்காணிப்புக் குழு அலுவலகம் மீது தாக்குதல்: ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்

மட்டக்களப்பில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அலுவலகம் மீது குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவுக்கான நெதர்லாந்து தூதரகம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்டன அறிக்கை:

இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவலை கொள்கிறது. இலங்கை மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். ஆனால் வன்முறைகளுக்குப் பின்னால் இருப்பவர் பிரச்சனயை விரும்புகிறார்கள். இது யாரின் பெயரால் தாக்குதல்களை மேற்கொள்கிறோம் என்று கூறுகிறார்களோ அவர்கள் உட்பட அனைத்து இலங்கை சமூகத்தினரையும் பாதிக்கும்.

வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருமாறு அனைவரையும் நாம் வேண்டுகிறோம். அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்கு விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையேயான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முழு அளவில் செயற்படுத்த வேண்டியது அவசியமானதாகும்.

கடந்த சனவரி 13 ஆம் நாள் மட்டக்களப்பு நகரில் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஐரோப்பிய ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கிறது. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைச் சீர்குலைக்க வேண்டும் என்று திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் இது.

போர் நிறுத்த கண்காணிப்புக் குழு என்பது ஆயுதமேந்தாத ஒரு அமைப்பு. யுத்த நிறுத்தத்தைக் கண்காணிப்பதற்காக சிறிலங்கா அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளால் அழைக்கப்பட்டிருக்கும் ஒரு அமைப்பு. கண்காணிப்புக் குழுவினரது பணிகளை முழுமையாகச் செயற்படுத்தவும் அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள இருதரப்பினரும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

யுத்த நிறுத்த ஒப்பந்த அமலாக்கம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கப் பிரதிநிதிகளுடன் எதுவித தாமதமும் இன்றி பேச்சுகளை நடத்துமாறு விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக்கொள்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் மூலம்-புதினம்.கொம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.