Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Echo என்றால் என்ன என்பது எல்லோருக்கும் தெரியும்

எதிரொலி

அதாவது ஒரு வாக்கியத்தின் கடைசி சில சொற்களை மட்டும் மீண்டும் ஒலிக்கும் ஒரு செயல். இந்த எதிரொலியை ஆங்கிலத்தில் Echo என்று எதற்காக அழைக்கிறார்கள்?

இந்த Echo என்ற வார்த்தைக்கு ஒரு கதை இருக்கிறதாம்.

கிரேக்க புராணத்தில் Echo என்பது ஒரு தேவதையின் பெயர். மிகவும் இனிமையாக பாடவும், இசைக் கருவிகளை இயக்கவும் வல்லமை பெற்றவள் இந்த Echo. இந்த தேவதை Zeus என்ற தலைமை கடவுளின் மனைவி .

Hera என்ற பெண் தெய்வத்தால் சபிக்கபடுகிறாள், அந்த சாபத்தின் விழைவால் Echo என்ற தேவதையால் சுயமாக எதுவும் பேச முடியாமல் போகிறாள் . அவளால் பேச முடிவது ஒன்று மட்டும் தான்.

யாராவது பேசினால் அந்த பேச்சின் முடிவில் வரும் சில சொற்களை மீண்டும் பேசமுடியும், அவ்வளவுதான். இந்த சாபத்தால் மிகவும் கஷ்டப்படுகிறாள், ஓர் அழகான வாலிபனை காதலிக்க முயன்று தோற்கிறாள், அவளது காதலை சொல்லமுடியாமால், தனிமையில் தவித்து கல்லாகி சிதறிப் போகிறாள்.

இந்த சிதறிய கற்களில் உள்ள அவளது ஆன்மாதான் இன்றுவரை எதிரொலியாக ஒலிகின்றதாம்.

இந்த Echo என்ற வார்த்தையை எதிரொலி என்று நேரடியாக அர்த்தம் கொள்ளலாம் அல்லது சித்திக்காமல் சொன்னதை திரும்ப சொல்லும் எதற்கும் சொல்லலாம்.

இந்த Echo வை பற்றி தெரிந்துகொள்ளும்போது அவளது காதலனை பற்றியும் நமக்கு தெரிந்துவிடுகிறது, அந்த அழகான வாலிபன் பெயர் Narcissus , இவன் தனது அழகினால் மிகவும் தலைக்கனம் பிடித்தவனாக இருகிறான், அவனை காதலிக்கும் பல பெண்களை உதாசீனப்படுதுகிறான், Echo வை உதாசீனபடுத்தியது போல.

இப்படியாக வாழ்ந்துவந்த இவன் ஒருநாள் ஒரு ஆற்றின் ஓடும் தண்ணீரை பருக குனிகிறான் .அந்த ஆற்றின் நீரில் தெரியும் தனது பிம்பத்தின் மீது காதல் கொள்கிறான்.அவனை அடைய முயன்று தோற்கிறான், இறந்து விடுகின்றான்.

இந்த Narcissus என்ற பெயரில் இருந்துதான் Narcissam என்ற வார்த்தை வந்தது, இப்போது இந்த Narcissam என்ற சொல் ஒரு தனிநபரோ, அல்லது சமூகமோ சுயபுராணம் பாடிக்கொண்டு, தங்கள் மதம், தங்கள் சாதி, தங்கள் திறமை, தங்கள் கலாச்சாரம், தங்கள் கருத்து, தங்கள் கொள்கை, தங்கள் மொழி என பெருமை மட்டும் கொண்டு வாழ்பவர்களை குறிக்கும் சொல்லாக பயன்படுத்தப்படுகிறது.

இந்த Echo மாதிரி நாமும் பல நேரங்களில் சிந்தனை செய்யமுடியாமல் யாராவது சொன்னதை திரும்ப திரும்ப சொல்லுவோம், இந்த Narcissus போலவும் இருப்போம். இந்த இரு குணங்களின் கோர விளைவு மனித அழிவு.

எங்காவது ஒரு தனிநபரின் / ஒரு சமுகத்தின் நர்சிஸ்ஸ குணத்தால் , மனித படுகொலை நடந்துகொண்டிருக்கும் நாம் Echo மாதிரி " படுகொலை நடக்குதாம், படுகொலை நடக்குதாம்,படுகொலை நடக்குதாம்" என்று இருப்போம் அல்லது நாம் நமது நர்சிஸ்ஸ குணத்தால் மத்தவரை வதைப்போம்...........

பிச்சைக்காரனில் இருந்து

For example, Tamil echo words are formed with a ki(i) sequence overwriting the onset and nucleus of the first syllable of the reduplicant (Keane 2001). ki- with a short vowel is used if the first syllable of the original word or phrase has a short vowel; if the first vowel is long, kii- is used instead. E.g.:

புலி puli "tiger"

புலி கிலி puli kili "tigers and such; tigers and beasts like that"

தும்மி tummi "sneezing"

தும்மி கிம்மி tummi kimmi "sneezing and such; sneezing and other inauspicious noises"

பாம்பு paambu "snake"

பாம்பு கிம்பு paambu kiimbu "snakes and such"

இன்னிக்கி அப்பா வரார்ண்ணு காலாதி innikki appaa varaarṇṇu collaatee "Don't say 'Father's coming today.'"

இன்னிக்கி அப்பா வரார்ண்ணு கிப்பா வரார்ண்ணு காலாதி

http://en.wikipedia.org/wiki/Echo_word

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு புதிய விடயத்தை இன்று அறிந்து கொண்டேன்!

தகவலிற்கு நன்றிகள், நுணா!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.