Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி! -கனிமொழி இரகசிய வாக்குமூலம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி குடும்பத்தில் நாளுக்கு நாள் மோதல் வலுத்துக் கொண்டே போகிறது. ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி எடுத்த நடவடிக்கையால் மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

சட்டமன்றத் தோல்விக்குப் பின்னர் தி.மு.க.வின் பொதுக்குழு வரும் 23, 24 ஆகிய தேதிகளில் கோவையில் நடக்கவுள்ளது. இந்தக் கூட்டத்திற்கான அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. அதனுடன் ஒரு கருத்துக் கேட்பு படிவமும் இணைக்கப்பட்டு இருந்தது. அதில், ‘நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிச் செயலாளர்கள் நியமிக்கலாமா?’ என்று கேட்கப்பட்டு இருந்தது.

நாடாளுமன்றத் தொகுதிச் செயலாளர் நியமனம் செய்ய மூத்த மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவானது. இதைத் தொடர்ந்து கருணாநிதி தொகுதிச் செயலாளர் நியமனத்தை நிறுத்தி வைக்கலாமா என்று ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்தினார். ஆனால் ஸ்டாலின் இதற்கு உடன்படவில்லை. இதைத் தொடர்ந்து இருவ ருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் அல்லது செயல் தலைவர் பதவியைப் பிடித்துவிட வேண்டும் என்று ஸ்டாலின் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். ‘கட்சியில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் பதவி விலகச் சொல்லுங்கள். அவர்களால்தான் தேர்தலில் தோற்றோம். கனிமொழி ஜெயிலில் இருக்கிறார். தயாநிதி ஜெயிலுக்குப் போகப்போகிறார். அழகிரி மத்திய அமைச்சராக இருந்து கட்சிக்கு கெட்ட பெயர்தான் சம்பாதித்துக் கொடுத்து இருக்கிறார். எனவே அவரையும் ராஜினாமா செய்யச் சொல்லுங்கள். ஆறே மாதத்தில் நான் கட்சியை எழுச்சி அடைய வைக்கிறேன். அப்படி முடியாமல் போனால் நான் கட்சியை விட்டுப் போய்விடுகிறேன்’ என்று கருணாநிதிக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருகிறாராம். ஆனால் இது பற்றி கருணாநிதியிடம் யாரும் சொல்லவில்லையாம்.

மேலும் பொதுக்குழுவில் யார் யார் பேச வேண்டும்? என்ன பேச வேண்டும் என்பதை ஸ்டாலின்தான் தயாரித்து வருகிறாராம். பொதுக்குழுவில் பேச இருப்பவர்கள் ‘கு டும்ப அரசியலால் தோற்றோம்’ என்று பேச வேண்டும் என்று சொல்லி வருகிறாராம், ஸ்டாலின்.

இந்த விவகாரங்கள் அழகிரிக்குத் தெரிய வந்ததும் கடும் கோபமானாராம். சமீபத்தில் கனிமொழியை சிறையில் சந்தித்த அவர், ‘நீ ஏன் சிறையில் இருந்து கஷ்டப்பட வேண்டும். கோர்ட்டில் உண்மையை சொல்லிவிட்டு வந்துவிட வேண்டியதுதானே...’ என்று சொன்னாராம். இதை கனிமொழி, கருணாநிதிக்கு சொல்லியனுப்ப... இது பெரிய மோதலுக்குக் காரணமானது என்று சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் கடந்த 14-ம் தேதி கோபாலபுரத்தில் பெரிய பிரச்னையாக உருவெடுத்ததாம்.

அன்று காலை கோபாலபுரத்திற்குச் சென்ற ஸ்டாலின் தனது தாயார் தயாளு அம்மாவிடம், ‘உன் பெரிய பையன் செய்த காரியத்தைப் பார்த்தாயா... என்னைச் சிறைக்கு அனுப்பி விட்டு அவன் சந்தோஷமாக இருக்கத் துடிக்கிறான்’ என்று கோபமாக பேசியுள்ளார். அப்போது கருணாநிதி, ‘என்ன பிரச்னை’ என்று கேட்டுள்ளார்.

அதற்கு ஸ்டாலின், ‘உங்களுக்குத் தெரியாதா... நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா?’ என்று குத்தலாகப் பேசிவிட்டு, ‘திகார் ஜெயிலில் கனிமொழியைச் சந்தித்தபோது நீயேம்மா ஜெயில்ல கெடந்து கஷ்டப்படுற? எல்லாமே கட்சிக்கு நான்தான் செஞ்சேன் என்று சொல்லிக் கொண்டு அலைகிறானே அவனெல்லாம் பணத்தை அனுபவிச்சி ட்டு சொகுசாத்தான் இருக்கான். நீ 164 சட்ட விதியின்படி கோர்ட்டில் வாக்குமூலம் கொடுத்து விடு’ என்று என்னை மனதில் வைத்துக் கூறியுள்ளார். எனக்கு எதிராக சதி செய்து என்னைச் சிறைக்கு அனுப்பி விட்டு கட்சியைக் கைப்பற்ற அவன் திட்டமிடுகிறானா?’ என்றெல்லாம் ஸ்டாலின் பேச, தயாளு அம்மாளே அதிர்ந்து போனாராம்.

ஆனால் கருணாநிதியோ, ‘அழகிரி அப்படியெல்லாம் சொல்லியிருக்க மாட்டான்’ என்று ஆணித்தரமாக மறுத்துள்ளார். இதனால் ஏற்கெனவே கருணாநிதி மீது வருத்தத்தில் இருந்த ஸ்டாலின், அழகிரிக்கு ஆதரவாக தந்தை பேசியதால் உச்சகட்ட கோபம் அடைந்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

மாலையில் அறிவாலயம் வந்த கருணாநிதி, துரைமுருகனை அழைத்து ‘கனிமொழியைச் சந்தித்தபோது அழகிரி 164 வது சட்டப்பிரிவின் படி ஸ்டாலினுக்கு எதிராக கனிமொழியை வாக்குமூலம் கொடுக்கச் சொன்னாரா?’ என்று கேட்டுள்ளார். அப்போது ஸ்டாலினும் இருந்துள்ளார். துரைமுருகனோ, ‘அப்படியொரு வார்த்தையை அழகிரி சொல்லாமலா வக்கீல் சண்முகசுந்தரம் உங்களிடம் கூறியிருப்பார்’ என்று துரைமுருகன் பதிலளித்துள்ளார்.

உடன் கோபமான கருணாநிதி, ‘என் குடும்பத்தைப் பிரிக்கப் பார்க்கிறாயா?’ என்று கேட்டுள்ளார். துரைமுருகன் விக்கித்துப் போய் நின்றிருக்கிறார். சிறிது நேர மவுனத் திற்குப் பிறகு கலங்கிய கண்களுடன், ‘என்னை நீங்கள் எத்தனையோ முறை திட்டியுள்ளீர்கள். அப்போதெல்லாம் நான் வருத்தப்பட்டதில்லை. என்னைப் பார்த்து இப்படியொரு கேள்வியைக் கேட்டு விட்டீர்கள். உங்களுக்குப் பின்னால் தலைவராக ஸ்டாலினைத்தான் மக்கள் விரும்புகின்றனர். நானும் ஆசைப்படுகிறேன். அதற்காக அழகிரிக்கு எதிரானவன் அல்ல. ஆனால் அழகிரிதான் அப்படிக் கூறியுள்ளார். இது அவர் தம்பிக்கு செய்யும் துரோகம் மட்டும் அல்ல, கட்சிக்கு எதிரான செயல். நீங்கள் என்னை சந்தேகப்பட்டீர்கள் என்றால் இனியும் நான் உங்களுடன் இருப்பதில் அர்த்தமில்லை. நான் வருகிறேன். அதற்காக நான் மாற்றுக் கட்சிக்கு செல்வேன் என்று எண்ண வேண்டாம். அரசியலை விட்டுத்தான் செல்கிறேன்’’ என்று அங்கிருந்து விறுவிறு என்று புறப்பட்டுச் சென்று விட்டார். ஸ்டாலினும் அவருக்குப் பின் னாலேயே சென்று எவ்வளவோ சமாதானப்படுத்தினார். மறுநாள் காலையில் சென்றும் சமாதானப் பேச்சு வார்த்தை தொடர்ந்தார். ஆனால் துரைமுருகனோ, ‘தான் எடுத்த முடிவில் மாற்றம் இல்லை’ என்று இந்தோனேஷியா புறப்பட்டுச் சென்று விட்டார்.

இதற்கிடையில் வியாழன் இரவு அறிவாலயத்தில் இப்படியொரு சம்பவத்தை சந்தித்து விட்டுச் சென்ற கருணாநிதிக்கு கோபாலபுரத்தில் ஒரு அதிர்ச்சி காந்திருந்தது. இரவு உணவு அருந்தி விட்டு தூங்கச் செல்வதற்கு முன்பு அவரது மகள் செல்வி வந்தார். ‘நீங்கள் தயாநிதிமாறனுக்கு ஆதரவாக எதையும் செய்யவில்லை என்றால் பரவாயி ல்லை. தயாநிதிக்கு எதிராக சிவசங்கரனை கொம்பு சீவி விடும் வேலையை அழகிரியை நிறுத்தச் சொல்லுங்கள்’ என்றும், ‘ஸ்டாலினுக்கு எதிராகவும் சதி செய்கிறார் போல் தெரிகிறது’ என்றும் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

அதனால் அன்று இரவு து£க்கமில்லாமல் படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருந்த கருணாநிதி மறுநாள் காலை (வெள்ளிக்கிழமை) தனிமையைத் தேடி மகாபலிபுரம் சென்றார். துரைமுருகன், எ.வ. வேலு, பொன்முடி, வைரமுத்து உள்ளிட்டோரை உடன் அழைத்துச் செல்வது கருணாநிதியின் வழக்கம். ஆனால் இம்முறை உதவியாளர் சண்முகநாதனைத் தவிர வேறு யாரையும் அழைத்துச் செல்லவில்லை. அங்கிருந்தபடியே துரைமுருகனிடம் பேசி சமாதானப்படுத்தியுள்ளார். இதன் பின்னரே அவர் பொதுக்குழுவில் கலந்து கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்.

மகாபலிபுரத்தில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து சண்முகநாதனுக்கு சில குறிப்புகளைக் கொடுத்துள்ளார். மாலை வீடு திரும்பியவர், சனி, ஞாயிறு கூட அறிவாலயம் பக்கம் வரவில்லை. கோபாலபுரம் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார்.

கனிமொழியை வாக்குமூலம் கொடுக்க வைத்து கட்சியைக் கைப்பற்ற அழகிரி நினைக்கிறார். அதே நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் நிறைய பேர் கட்சிப் பொறுப்புக்கு வந் தால், தான் கட்சித் தலைவர் ஆக முடியாது என்பதால் அனைவரையும் பதவி விலகச் சொல்லி, தான் மட்டுமே கட்சி என்பதை நிலை நிறுத்த நினைக்கிறார் ஸ்டாலின். இவர்களின் சண்டை பொதுக்குழுவில் எதிரொலிக்கும் என்கிறார்கள், உடன் பிறப்புகள்.

பயப்படுவது ஏன்?

கனிமொழி தரப்பில் விசாரித்த போது, கனிமொழி அழகிரி, ஸ்டாலின் ஆகியோரில் யாரை ஆதரித்துச் செல்வது என்பதை காட்டிலும் யாரையும் பகைத்துக்கொள்ளும் மனநிலையில் இல்லை. மாறாக, அவர் குற்றமே செய்யவில்லை என்று வாதிடும் போது, 164 வது சட்டவிதியின்படி எப்படி வாக்குமுலம் கொடுப்பார். அப்படி அவர் வாக்குமுலம் கொடுத்தால் செய்த தண்டனையை ஒப்புக்கொண்டதாகும் என்கின்றனர். மேலும், ஸ்டாலின் பயப்படுவதற்குக் காரணம், கலைஞர் டி.வி.தொடர்பாக பாவ்லாவை 2 முறை சந்தித்தது, பரிவர்த்தனைகளை மேற்கொண்டது ஸ்டாலின்தான். எனவே, அவர் பயப்படுவதில் அர்த்தம் இருக்கிறது என்று தெரிவித்தனர்.

இரா.முருகேசன்

- குமுதம் ரிப்போட்டர்

க(கொ)லைழர் குடும்பமும் மகிந்தர் குடும்பமும் தமக்குள்ளேயே ஆளையாள் காட்டிக்கொடுத்து சிறைவாசங்கள் அனுபவிக்கவேண்டும். இந்த இரண்டு தலைகளும் உருளும் பொழுது இவர்கள் உறவுகளே இவர்களை விட்டு ஓடிவிடுவார்கள்.

அந்த நாட்களை உலகத்தமிழினம் விரைவில் சந்திக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.