Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பான் கி மூன் சனல்4 காணொளி பார்த்தாரா; இல்லையா?

Featured Replies

பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்ட ஆதார காணொளியை பார்க்க சில நிமிடங்கள் கூட ஒதுக்க முடியாத உலகத்தலைவராக இருக்கின்ரார் பான் கி மூன்.

.

பான் கி மூன் இன்னமும் சனல்4 இன் இலங்கையில் கொலைக்களம் என்கின்ற காணொளியை பார்க்க இல்லையாம். அதே நேரம் இலங்கையில் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் அதனை விசாரிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தின் கடமையே தவிர அது ஐக்கிய நாடுகளின் பொறுப்பு இஒலை எனவும் கூறியுள்ளார் ஐ. நா. பேச்சாளர். இது தொடர்பான மேலதிக தகவல் வருமாறு;

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வது இலங்கையின் சொந்த நடவடிக்கையாகும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது

இந்தநிலையில் இலங்கையின் இந்த விசாரணை நடவடிக்கை, எவ்வாறு முன்னெடுக்கப்படுகிறது என்பதை அவதானிப்பதே ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்பாகும்.

.

இந்தக்கருத்தை ஐக்கிய நாடுகள் சபை செயலாளரின் பேச்சாளர் மார்டின் நெசர்க்கி தெரிவித்தார்.ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் பரிந்துரைகளில் ஒன்றாக, நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு இலங்கையின் பதிலை ஆராய்வதும் உள்ளடங்கியுள்ளதாக நெசர்க்கி தெரிவித்தார்.

.

இது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மார்டின் நெசர்க்கி கூறினார்.குறித்த விடயங்களை ஐக்கிய நாடுகளின் நிர்வாக பிரிவுகளிடம் ஒப்படைப்பது குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

.

இலங்கையின் கொலைக்களங்கள், என்ற செனல் 4 தொலைக்காட்சியின் காணொளியை, ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளரின் சிரேஸ்ட ஆலோசகர்கள் பார்த்துள்ளனர்.

எனினும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் அதனை பார்த்தாரா என்பதை தம்மால் கூறமுடியவில்லை என்றும் நெசர்க்கி தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா ஒரு பெயருக்குத்தான் ஐநா சபை. அமெரிக்கா சார்ந்த மேற்குலகம் நினைக்கிறதுதான் உலகத்தில நடக்கிறது.

அமெரிக்கா நினைச்சா கடாபிக்கு எதிராக எவன் எந்தவகையான பயங்கரவாதத்தைச் செய்தாலும்.. அதை அங்கீகரிக்கும். பிரிட்டனும் அங்கீகரிக்கும். ஆனால்.. மகிந்தவிற்கு எதிராக எவர் என்ன செய்தாலும்.. அது பயங்கரவாதமாகும்.. இன நல்லிணக்கத்தை பாதிக்கும்.

லிபியாவில வன்முறையில் ஈடுபடுகிறவை.. கிளர்ச்சிக்காரர்கள்.. சிறீலங்காவில் பேரினவாத இனப்படுகொலையாளர்களை எதிர்க்கிறவன்.. பயங்கரவாதி.

இந்தக் கொடுமைகளை தாங்க முடியாமல் தான் அவன் ஒருத்தன் நோர்வேயில கொண்டு போய் குண்டை வைச்சான். அவரின் செயல் அமெரிக்காவின் ஜனநாயகக் கொள்கையின் படுதோல்வி. ஏனெனில் நோர்வே தான் உலகில் அதிக ஜனநாயகத் தன்மையை வெளிப்படையாக மக்கள் அனுபவிக்க விட்டுள்ள நாடு. அந்த நாட்டிலையே மக்கள் அதிருப்தியோட இருக்கினம் என்றால்.. தங்கள் கருத்துக்கு ஏற்ப அரசுகள் இல்லை என்று உணரினம் என்றால்.. அது ஜனநாயகத்தின் தோல்வியே தான். இதை அமெரிக்கா.. ஐநா உணர்ந்து.. இரண்டாம் உலகப் போரின் பின்னரான ஜனநாயக முறைமைகள்.. மறுசீரமைக்கப்பட்டு ஐநா மன்றமும் மறு சீரமைக்கப்பட வேண்டும். கொள்கை.. சட்ட அமுலாக்கம்.. என்று பல வகையில் ஐநா மறுசீரமைக்கப்படவில்லை என்றால் ஐநா ஒரு தோல்வி அடைந்த அமைப்பாகவே இந்த உலகில் விளங்கும். மக்களிடம் அதன் மதிப்பு இல்லாமல் போகும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சரியாச் சொன்னீங்க நெடுக்கண்ணை. கடந்தவார பயங்கரவாதத் தாக்குதல் உலகமட்டத்தில் நோர்வேயின் நற்பேருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதால் இதுவரை இறந்தவர் மற்றும் காணமற்போனோர் தொகையை மகிந்த பாணியில் சரிக்கட்டி குறைத்துக்காட்டும் முயற்சிகளை நோர்வே அரசு செய்துள்ளது. நடந்தது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்பதை ஏற்றுக்கொண்டு செய்தி வெளியிட்டுள்ளார்கள் ஆனால் அதைச் செய்தவர் ஒரு பயங்கரவாதி அல்லர் என்பது தான் இன்றுள்ள நிலமை. இதற்கு ஏற்றாற்போல் நோர்வே பத்திரிகைகளும் ரெறறிஸ்ட் அல்லது பயங்கரவாதி என்ற சொற்பதங்களை அண்டர்சுக்கு குறியீடாக இதுவரை பயன்படுத்தவில்லை. இதேசமயம் அவனை ஒரு மனநோயாளி என்று நிறுவும் முயற்சிகளும் நடந்துகொண்டிருக்கின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.