Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழராய் பிறந்தது தவறா? ஓர் உண்மைச் சம்பவம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பிலுள்ள பிரபலமான கணக்காய்வு நிறுவனத்தில் பணிபுரியும் தமிழர் ஒருவருக்கு நேர்ந்த கதி இது.

கணக்காய்வு நிறுவனங்கள் பிற நிறுவனங்களின் நிதியிடல் அறிக்கைகளையும் கணக்காய்வுகளையும் மேற்கொள்கின்றன. அந்த வகையில் இந்தப் பிரபலமான நிறுவனத்துக்கு துறைமுகத்திலுள்ள ஏற்றுமதி இறக்குமதியுடன் தொடர்புடைய நிறுவனமொன்றின் கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒப்பந்தம் கிடைத்துள்ளது.

அதன்பிரகாரம் துறைமுகத்துக்குள் அமைந்துள்ள அந்த நிறுவனத்துக்குச் சென்று கணக்காய்வுகளை மேற்கொள்ள பிரபல நிறுவனத்தின் சார்பாக நால்வர் நியமிக்கப்பட்டனர். அவர்களில் இந்தத் தமிழ் இளைஞரும் ஒருவர்.

ஆர்வத்துடன் பணியாற்றக் காத்திருந்த இவருக்கு இறுதியில் மிஞ்சியது ஏமாற்றம் மாத்திரமே. தமிழர் என்பதற்காக துறைமுகத்துக்கு உள்ளே செல்வதற்கு அனுமதியளிக்கப்படவில்லை என்பதே உண்மையாகும்.

துறைமுகத்துக்கு உள்ளே செல்வதாயின் அனுமதி அட்டை 'பாஸ்' பெறவேண்டிய நடைமுறை உண்டு. சிங்களவர் மூவருக்கு எந்தத் தடையுமின்றி அனுமதி அட்டை கிடைத்துள்ளது. எனினும் தமிழர் என்பதால் இவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.

இதுபற்றி அந்த இளைஞர் தனது உயரதிகாரியிடம் கேட்டபோது அவர் அளித்த பதில் இதுதான்.

"நான் என்ன செய்வது? நமது நாட்டின் நிலை இப்படிக் காணப்படுகிறது. தமிழருக்கு எந்த வகையிலும் சந்தர்ப்பம் அளிக்கக் கூடாது என நினைக்கிறார்கள். திறமையைப் பற்றி மூன்றாம் தரப்பினர் கவலைப்படுவதில்லை. இது என்னுடைய தவறில்லை. உங்களை வேறொரு நிறுவனத்துக்கு கணக்காய்வு செய்வதற்கு நியமிக்கிறேன்".

இந்த நாட்டில் தமிழராய் பிறந்தது எமது குற்றமில்லையே. அப்படியென்றால் கடவுளைத்தான் தண்டிக்க வேண்டும் என்கிறார் பாதிக்கப்பட்டவர்.

ஜனநாயகம், சுதந்திரம், நடுநிலை என அரசியல்தலைவர்கள் எவ்வளவுதான் பேசினாலும் இவ்வாறான அடிப்படை விடயங்களைத் திருத்தாவிடின் இனத்துவேசம் எங்கோ ஒரு மூலையில் நீறு பூத்த நெருப்பாக உயிர் கொண்டிருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32964

Edited by Muhil

இதுபற்றி அந்த இளைஞர் தனது உயரதிகாரியிடம் கேட்டபோது அவர் அளித்த பதில் இதுதான்.

"நான் என்ன செய்வது? நமது நாட்டின் நிலை இப்படிக் காணப்படுகிறது. தமிழருக்கு எந்த வகையிலும் சந்தர்ப்பம் அளிக்கக் கூடாது என நினைக்கிறார்கள். திறமையைப் பற்றி மூன்றாம் தரப்பினர் கவலைப்படுவதில்லை. இது என்னுடைய தவறில்லை. உங்களை வேறொரு நிறுவனத்துக்கு கணக்காய்வு செய்வதற்கு நியமிக்கிறேன்".

இந்த நாட்டில் தமிழராய் பிறந்தது எமது குற்றமில்லையே. அப்படியென்றால் கடவுளைத்தான் தண்டிக்க வேண்டும் என்கிறார் பாதிக்கப்பட்டவர்.

'தமிழனை கடவுள் தான் காப்பற்ற வேண்டும்' - தந்தை செல்வா

அவர் கூறிய கடவுள் எமக்கு முன்னே தோன்றிய போது, நாம் தான் சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்

'தமிழனை கடவுள் தான் காப்பற்ற வேண்டும்' - தந்தை செல்வா

அவர் கூறிய கடவுள் எமக்கு முன்னே தோன்றிய போது, நாம் தான் சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிட்டோம்.

முற்றிலும் உண்மை.நாமும் எடுக்க வேண்டிய நடவடிக்கை அனைத்தும் எடுத்தோம். ஆனால் பல நாடுகள் சேர்ந்து பழிமுடித்து விட்டார்கள் அதுதான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

முற்றிலும் உண்மை.நாமும் எடுக்க வேண்டிய நடவடிக்கை அனைத்தும் எடுத்தோம். ஆனால் பல நாடுகள் சேர்ந்து பழிமுடித்து விட்டார்கள் அதுதான் உண்மை.

நான் பிரபாகரனைத் தூக்கிப் பிடிக்கவில்லை!

ஆனால், இது பிரபாகரனுக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பே, மிகவும் தெளிவாக விளங்கி விட்டது.

தந்தை செல்வாவிக்குக் கூடச் சாவதத்குச் சற்று முன்பு தான், இது விளங்கியது!!!

  • கருத்துக்கள உறவுகள்

'தமிழனை கடவுள் தான் காப்பற்ற வேண்டும்' - தந்தை செல்வா

அவர் கூறிய கடவுள் எமக்கு முன்னே தோன்றிய போது, நாம் தான் சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிட்டோம்.

காலம் பிந்திதான கன போருக்கு தலைவரின் அருமை புரித்தது, என்ன செய்ய, கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.