Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் 2006

Featured Replies

  • தொடங்கியவர்

ஏற்கனவே 3 முறை குற்றம்சாட்டப்பட்டு ஐ.சி.சி யினால் பரிசோதனைக்கு உட்படுத்தி தவறில்லை என்று தீர்ப்பு கூறிய பின் மீண்டும் இந்தியா பயிற்சியாளர் புகார் கூறியிருப்பது மீண்டு பாகிஸ்த்தான் இந்திய அணிகளிடயே சர்ச்சயை உருவாக்கி உள்ளது

3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடையும் போதுதான் அந்த தவறுகள் அவைகளின் கண்களுக்கு தெரிகிறது போல கிடக்கு முதலில் மற்றவனில் பிழைபிடிப்பதை விட்டு விட்டு தாம் நேற்றதுக்கு என்ன காரணம் என அதை நிவர்த்திசெய்ய ஏன் பயிற்சியாளர் முயற்சிக்கவில்லை

இதே காரணம்தான் அவுஸ்ரேலியாவும் இலங்கையிடம் வாங்கிக்கட்டிய போதுதான் ரசிகர்களிடமிருந்த தப்புவதற்காகபழியினை முரளிமீது போட்டார்கள் கடைசியில் என்ன நடந்தது

  • Replies 53
  • Views 10.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

1வது ODI போட்டி - Monday 2006

பாகிஸ்தான் 7 ஓட்டங்களால் (D/L Method)வெற்றி

நேற்று Arbab Niaz Stadium, Peshawarல் நடந்து முடிந்த பாகிஸ்தான் இந்தியா அணிகளுக்கிடையிலான 1வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 7ஓட்டங்களினால் (D/L Method) முறையில் அதாவது போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டு விளையாடி முடித்த 47ஓவர்களில் யார் அதிகம் ஓட்டம் பெற்றவர்கள் என பார்த்து வெற்றி அறிவிக்கப்பட்டது அதன் வகையில் பாகிஸ்தான் 47ஓவர் முடிவில் இந்தியாவை விட 7ஓட்டங்கள் அதிகமாகப் பெற்றிருந்தது

உண்மையில் இந்தியாவுக்கு காலநிலையும் கை குடுக்கவில்லை என்பது கவலைதான் இவ்வளவு திறமையாக விளையாடிய அவர்களால் வெற்றியைப் பெற முடியவில்லையே நேற்றைய ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி இந்தியாவை முதலில் துடுப்பெடுதாட பணித்தது அதன்படி இந்தியாவும் 49.4ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 328ஓட்டங்களைப் பெற்றது ஒருநிலையில் 4விக்கட் இழப்புக்கு 304ஓட்டங்களை எடுத்திருந்த போதும் மிகுதி 6 விக்கட்டுகளையும் 23ஓட்டங்களுக்கு இழக்க வேண்டி ஏற்பட்டது அணிக்கு வலுவுட்டினவர்கள்

Sr.Tendulkar - 100runs

Ik. Pathan - 65runs

Dhoni - 68runs

ஓவருக்கு 6.89ஒட்டங்கள் எடுக்கவேண்டிய நிலையில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடியது ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் திறமையாக தமது பணியைச் செய்தார்கள் இறுதியாக 47வது ஓவரில் 7 விக்கட்டுகளை இழந்து 311ஓட்டங்களை எடுத்திருந்த வேளை போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டு (D/L Method) முறையில் 7ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது என அறிவிக்கப்பட்டது ஆட்டம் முழுமையாக நடைபெற்றிருந்தால் சிலவேளைகளில் முடிவும் கூட மாறியிருக்கலாம் பாகிஸ்தான் அணி சார்பாக

Salman Butt - 101runs

Shoaib malik - 90runs

ஸ்கோர் விபரம்

இந்தியா - 328 ஓட்டங்கள் (49.4ஓவர்கள்)

இந்தியா - 304 ஓட்டங்கள் (47 ஓவர்கள்)

பாகிஸ்தான் - 311/7 ஓட்டங்கள்

http://usa.cricinfo.com/db/ARCHIVE/2005-06..._06FEB2006.html

ஆட்ட நாயகன் : Salman Butt - 101runs

58828.jpg

Salman Butt celebrates his century

நடுவர்கள் முடிவு அறிவிப்பதற்கு முன்னாலேயே பாகிஸ்தான் வீரர்கள் ஸ்டேடியத்தை விட்டு வெளியேறி அவர்களது ஒழுங்கீனத்தை பறைசாற்றினார்கள்.... 18 பந்தில் 18 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் கோழைத்தனமாக வெளியேறினார்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணிக்கு எங்கள் வாழ்த்துக்கள்!! இப்படி தொடர்ந்து வெல்லவேண்டும் என வாழ்த்துகின்றோம்

  • தொடங்கியவர்

கிரிக்கெட் விதிமுறையில் துடுப்பெடுத்தாடுபவர்களே (Bad light)வெளிச்சமில்லை என்று நடுவரிடம் முறையிட முடியும் ஆனபடியால் அவர்கள் அதன்அடிப்படையில் வெளியேறியிருக்கலாம் இதை ஒழுங்கீனம் என்று சொல்வதுக்கில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ஒரு அணி கூட மரண அடி வாங்கி கொண்டிருக்கிறதாமே? திரும்பி வரும் போது குற்றுயிரும், குலை உயிருமாக தான் வரும் என்று பேசிக் கொள்கிறார்களே?

உங்களைப்போல ஆட்களுக்கு என்னத்தை எதனுடன் ஒப்பிடுவதென்றே தெரியாது. உமது படிப்பின் திறமையை இதிலிருந்தே அறியக்கூடியதாகவுள்ளது அறிவாளி. உங்களுக்கெல்லாம் என்னத்துக்கு எங்களது இணையத்தளங்கள் தேவைப்படுகிறது. உங்களுக்காகத்தானே நிறைய ஆட்கள் இருக்கிறார்கள் எங்களைப்பற்றி நையாண்டிபண்ண..போய்பண்ணவேண்டி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிரிக்கெட் விதிமுறையில் துடுப்பெடுத்தாடுபவர்களே (Bad light)வெளிச்சமில்லை என்று நடுவரிடம் முறையிட முடியும் ஆனபடியால் அவர்கள் அதன்அடிப்படையில் வெளியேறியிருக்கலாம் இதை ஒழுங்கீனம் என்று சொல்வதுக்கில்லை

இதையே இந்தியர்கள் செய்திருந்தால் கதையையே அப்படியே மாற்றியிருப்பார்கள்

முகத்தார் அவர்களே....

துடுப்பாட்டக்காரர்கள் அம்பயரிடம் இது குறித்து தெரிவித்து அவர்கள் முடிவெடுக்கும் வரை களத்தில் நிற்கவாவது செய்யலாம்... அதை விடுத்து எதுவும் தெரிவிக்காமல் நேரே பெவிலியனுக்கு திரும்பிய முறையை தான் ஒழுங்கீனம் என்றேன்.....

பாண்டியன் ரொம்ப நாளா காணோம்... ஏதாவது முக்கிய வேலையோ?

தூயவன்,

வாழ்த்தி விட்டீர்களா போச்சு.... இனி பாக்.குக்கு இருண்ட காலம் தான்... உங்க ராசி அப்படியாச்சே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாண்டியன் ரொம்ப நாளா காணோம்... ஏதாவது முக்கிய வேலையோ?

இல்ல லக்கிலுக், நான் அனேகமாக ஒரு பார்வையாளராகத்தன் இருப்பேன் ஆனால் சில சமயங்களில் சிலர் எழுவதற்கு மட்டும் பதிலளிப்பேன் அதற்கு வேலைப்பழுவும் ஒரு காரணம்தான்.

நானும் அப்படித்தான்.... எனக்கு என்னவோ இந்த களம் இன்னும் நெருங்கவே இல்லை....

மற்ற மத வழிபாட்டுத் தலங்களுக்கு போனால் ஏதோ ஒரு மாதிரி அந்நியமாய் இருக்கும்.... இங்கு எனக்கு அது போல் தான் இருக்கிறது......

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன்,

வாழ்த்தி விட்டீர்களா போச்சு.... இனி பாக்.குக்கு இருண்ட காலம் தான்... உங்க ராசி அப்படியாச்சே?

உங்களின் ஆதரவுக் குரலால் இந்திய அணி எப்படி வாங்கிக் கட்டுகின்றதோ, அப்படி பாகிஸ்தானுக்கு இருக்காது என நம்புவோம்.

அதை விடுங்கள். இப்போது என்னைப் பற்றி தகவல்கள் திரட்டிக் கொண்டு திரிகின்றீர்களா? ராசியைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருக்கின்றீர்கள்? :wink:

கிரிக்கெட் விதிமுறையில் துடுப்பெடுத்தாடுபவர்களே (Bad light)வெளிச்சமில்லை என்று நடுவரிடம் முறையிட முடியும் ஆனபடியால் அவர்கள் அதன்அடிப்படையில் வெளியேறியிருக்கலாம் இதை ஒழுங்கீனம் என்று சொல்வதுக்கில்லை

நமக்கு நடந்ததை தொலைக்காட்சியில் பார்க்கக் கிடைக்கவில்லை. பாட் லைட் என்றால் நடுவர்கள் இண்டிகேற்றர் வைச்சு பரிசோதித்து தொடர்ந்து ஆடமுடியாது என்பதை அறிவித்த பிந்தான் வீரர்கள் களத்தை விட்டு வெளியேறலாம்..! :P :idea:

குருவிகள்,

சரியாகச் சொன்னீர்கள்.... நடுவர்கள் முடிவு அறிவிப்பதற்கு முன்னாலேயே பாக். வீரர்கள் பெவிலியன் திரும்பியதை தான் நான் ஒழுங்கீனம் என்றேன்.... அவர்கள் பெவிலியன் போன பின் தான் டக் ஒர்த் லூயிஸ் முறையில் பாக். 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.....

  • தொடங்கியவர்

ஆனால் நேற்று அறிவித்திருந்தார்களே........இந்த

பந்து தாமதமாக வீசுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது... ஆனால் அதுவும் பிழை தான்... டிராவிட்டுக்கு கேப்டன் பொறுப்பில் அவ்வளவு அனுபவம் இல்லாததால் இது நேர்ந்திருக்கிறது.... ஆனால் பாக். வீரர்கள் எப்போதுமே, எல்லா அணியினருடனும் ஒழுங்கீனமாக தான் நடந்து கொள்கிறார்கள்....

  • தொடங்கியவர்

டிராவிட்டுக்கு கேப்டன் பொறுப்பில் அவ்வளவு அனுபவம் இல்லாததால் இது நேர்ந்திருக்கிறது

..

என்னங்க இது அணி வெண்டா மாத்திரம் அணித்தலைவரை புகழ்த்து தள்ளுறீங்கள் தோல்வியடைந்தா அந்த பழியை தூக்கி தலைவரின் தலையில் போட்டுவிடுகிறீயள் இந்த பொறுப்புகளில் இருந்து தப்பிக்கத்தான் சச்சின் தலைமை பதவியை விரும்பவில்லை இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் போட்டு சாத்தேக்கை டிராவிட்டை புகழ்ந்த பத்திரிகைகள் இந்த தோல்விக்கு அவரை வசைபாடுவது கவலைக்குரியது ஏற்கனவே கங்குலியை ஓரங்கட்டிய பின் நல்லதொரு கப்டன் (டிராவிட்) இந்திய அணிக்கு கிடைத்திருக்கிறார் அவரின் மனநிலையை இப்பிடியான விமர்சனங்கள் பாதிக்குமல்லவா.........?????

நான் கங்குலி ஆதரவாளன் என்பதால் திராவிட்டை பற்றி இதுபோல் நினைக்க தோன்றுகிறது.... நீங்கள் கிரிக்கெட் விளையாட்டைப் பற்றி நிறையத் தெரிந்தவர் என்பதால் நீங்கள் சொல்வது தான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.....

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் இப்பொழுது நல்லாக விளையாடுகிறது. 80 இறுதிகளில் விளையாடிய அணி போலப்பலமாக உள்ளது. ஐ.சி.சி உலகத்தர டெஸ்ட் போட்டியில் இப்பொழுது 4ம் இடத்தில் உள்ளது. பலம்பொருந்திய இந்தியா,இங்கிலாந்து அணிகளினை வீழ்த்தி 108 புள்ளிகளை பெற்றுள்ளது. இங்கிலாந்து 113, இந்தியா 111 புள்ளிகளுடன் முறையே 2ம்,3ம் இடத்தினைப் பெற்றுள்ளார்கள். அடுத்து பாகிஸ்தான் அணி மார்ச் மாதம் இலங்கை செல்கிறது.

_41321094_yuvraj.jpg

இந்திய - பாகிஸ்தான் ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் நிர்ணயித்த 265 ஓட்டங்கள் என்ற இலக்கை இந்திய அணி மூன்று விக்கற்றுக்களை ( இலக்குகம்புகள் வெற்றி பெற்றுள்ளது..! இதில் யுவராஜ் சிங் சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காது 82 ஓட்டங்களை அணிக்காகப் பெற்றுக் கொடுத்துள்ளார்..!

போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்..! சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்த சிங்குக்கும் பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..!

(விக்கற்றுக்கான தமிழ் பதம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..!)

தகவல் மூலம் - பிபிசி.கொம்

  • தொடங்கியவர்

2வது ODI போட்டி -Saturday 2006

இந்தியா 7 விக்கட்டுகளால் வெற்றி

இன்று Rawalpindiல் நடந்து முடிந்த பாகிஸ்தான் இந்தியா அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா 7 விக்கட்டுகளால் வெற்றி

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுதாடியது ஆரம்பத்தில் 75ஓட்டங்களுக்கு 4விக்கட்டுகளை இழந்தாலும் 5வது விக்கட்டுக்கு ஜோடி Shoaib malik (95) Yonus Khan (81) இணைப்பாட்டத்தின்(102runs) மூலம் பாகிஸ்தான் 49.2ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 265 ஓட்டங்களைப் பெற முடிந்தது பாகிஸ்தான் அணியில் 4வீரர்கள் ரண் அவுட் முறையில் அட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது அணிக்காக

Shoaib Malik - 95runs

Youns Khan - 81runs

அடுத்து களம் இறங்கிய இந்திய அணி அதிரடி ஆட்டம் போட்டதெண்டே சொல்லவேணும் ஆரம்ப துடுப்பாட்டக்காரர் தொடக்கம் சகலரும் மிகவும் திறமையாக விளையாடினார்கள் 7ஓவர்கள் மிகுதியாக இருக்கவே இந்த இலக்கை(266) வெறும் 3விக்கட்டுகளை மாத்திரம் இழந்து பெற்றுக் கொண்டது இந்திய அணி சார்பாக

Shaweg - 64 runs

Tendulkar - 42runs

*R Dravid -56 runs

Youva raj - 82runs

ஸ்கோர் விபரம்

பாகிஸ்தான் - 265 ஓட்டங்கள் (49.2 ஓவர்கள்)

இந்தியா - 266/3ஓட்டங்கள்

http://usa.cricinfo.com/db/NEW/LIVE/frames..._11FEB2006.html

58987.jpg

indian Heros

  • தொடங்கியவர்

3வது ODI போட்டி -Monday 2006

இந்தியா 5 விக்கட்டுகளால் வெற்றி

நேற்று Gaddafi Stadium, Lahoreல் நடந்து முடிந்த பாகிஸ்தான் இந்தியா அணிகளுக்கிடையிலான 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா 5 விக்கட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியாஅணி பாகிஸ்தானை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது அதன்படி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கட்டுகளை இழந்தாலும் Shoaib Malik(108) Abdul Razzaq (64)ஆகியோரின் சிறப்பாட்டத்தால் 50ஓவர்கள் முடிவில் 8விக்கட்டுகளை இழந்து 288ஓட்டங்களை பெற முடிந்தது அணிக்காக

Shoaib Malik - 108runs

Abdul Razzaq - 64*runs

அடுத்து களம் இறங்கிய இந்திய அணி நிதானமாக விளையாடியது சச்சின் திரும்பவும் தான் பழைய நிலைக்கு வந்து விட்டதை நிருபித்தார் அடுத்து வந்த டோனியும் யுவராஜ்ம் அணியின் வெற்றிக்கு வழிகோலினர் 14பந்துகள் மிகுதமாக இருக்கவே 292 என்ற ஓட்ட எண்ணிக்கையை எடுத்து 5 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது

SR Tendulkar - 95runs

Yuvraj Singh - 79*runs

+MS Dhoni - 72*runs

ஸ்கோர் விபரம்

பாகிஸ்தான் - 288/8ஓட்டங்கள் (50 ஓவர்கள்)

இந்தியா - 292/5ஓட்டங்கள்

http://usa.cricinfo.com/db/ARCHIVE/2005-06..._13FEB2006.html

ஆட்ட நாயகன் - MS Dhoni

59127.jpg

சச்சின் 10வது முறையாக 90களில் அவுட் ஆகிறார்.... நேற்று 40வது சதம் அடிப்பார் என்று 110 கோடி பேரும் எதிர்பார்த்து ஏமாந்தோம்......

  • தொடங்கியவர்

4வது ODI போட்டி ---- 16 Thursday 2006

இந்தியா அணி 5 விக்கட்டுகளால் வெற்றி

இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 4வது ஓருநாள் போட்டி சென்ற வியாழக்கிழமை Multan Cricket Stadium ல்.பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது முதலில்

துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி மிகவும் பரிதாபமாக அடுத்தடுத்து 4விக்கட்டுகளை 30ஓட்டங்களுக்குள் இழந்தது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான இர்பான் பதான் (3)ம் ஆர்.பி சிங் (4) ம் மிகவும் சிறப்பாக பந்து வீசினர் பாகிஸ்தான் அணி கடும் போராட்டத்தின் மத்தியில் 41.5ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து வெறும் 161ஓட்டங்கள் மாத்திரமே பெற முடிந்தது அணித் தலைவர் இன்சாம் அல் ஹக் மட்டும் 49 ஓட்டங்களைப் பெற்றிருந்தர்

இதுக்கு பதிலளித்தாடிய இந்திய அணி 32.3ஓவர்களில் 5விக்கட்டுகளை மாத்திரமே இழந்து 162ஓட்டங்களை பெற்று மிகவும் இலகுவான வெற்றி ஒன்றை தமதாக்கிக் கொண்டனர் இந்திய அணியில்

R.Dravid - 59runs

Raina - 35runs

ஸ்கோர்

பாகிஸ்தான் -161 ஓட்டங்கள்(41.5ஓவர்)

இந்தியா -162/5ஓட்டங்கள்

http://usa.cricinfo.com/db/ARCHIVE/2005-06..._16FEB2006.html

ஆட்ட நாயகன் - RP Singh 40/4

59240.jpg

Rudra Pratap Singh

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகளை கொண்ட இத் தொடரில் இன்னொரு போட்டி பாக்கியுள்ள நிலையிலும் முடிவடைந்த 4போட்டிகளில் 3 : 1என்ற கணக்கில் வெற்றி பெற்று Hutch 2006 தொடர் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.