Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹசாரே போராட்டத்திற்கு அனுமதி ரத்து: டில்லி போலீசார் அதிரடி: அடுத்து என்ன நடக்கும் ?

Featured Replies

ஹசாரேயின் போராட்டம் காந்தீய போராட்டமல்ல. உண்ணாவிரதமிருந்தால் காந்தியாகிவிட முடியாது: நடிகை நமீதா

அண்ணா ஹசாரேவின் போராட்டத்தால் எந்தப் பலனும் இல்லை என்று நடிகை நமீதா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

அன்னா ஹசாரேவின் போராட்டம் பரபரப்பு செய்திக்குதான் இன்று உதவிக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. நாட்டில் இன்றைக்கு முக்கியப் பிரச்சினை தீவிரவாதம்தான். அதை ஒழிக்கத்தான் நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

ஊழல் ஏதோ இன்று நேற்று வந்துவிடவில்லை. பல நூறு ஆண்டுகளாக இந்த நாட்டில் வேரூன்றிப் போன ஒன்று. அதை இந்த மாதிரி திடீர் போராட்டங்களால் ஒழிக்க முடியாது. ஹசாரே அரசியலமைப்புடன் சண்டை போட்டுக் கொண்டிருப்பது தவறு. லஞ்சம் தரக்கூடாது என்ற உணர்வை முதலில் மக்களிடம் உண்டாக்க ஹசாரே போன்றவர்கள் முயற்சிக்க வேண்டும்.

கொடுப்பதை நிறுத்தினால் வாங்குவதும் நின்று போகும். குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரிய மனிதர்கள் காரியம் சாதிக்க லஞ்சம் கொடுப்பதை நிறுத்தட்டும்.

நான் குஜராத் மாநிலத்தில் பிறந்தவள். காந்தி பிறந்த மண்ணில் பிறந்த எனக்கு காந்தீய போராட்டத்தின் அடிப்படை தெரியும். ஹஸாரேயின் போராட்டம் காந்தீய போராட்டமல்ல. உண்ணாவிரதமிருந்தால் காந்தியாகிவிட முடியாது. காந்தியுடன் மக்கள் இருந்தார்கள். 100 சதவீத வெற்றி அவருக்குக் கிடைத்தது. ஹசாரே போராட்டம் சிலரால் திட்டமிடப்பட்டதாக தெரிகிறது. இதற்கு 20 சதவீத பலன் கூட இருக்காது என நமீதா தெரிவித்துள்ளார்.

Edited by அலைஅரசி

  • கருத்துக்கள உறவுகள்

போராடத்தைப் பற்றி நடிகைகளினது கருத்தை கேட்டு போடுமளவிற்கு இணையத் தளத்திற்கு செய்திக்கு பஞ்சம் :lol:

பி கு;அலைமகள் எங்கேயிருந்து செய்தியை சுட்டாரோ தெரியவில்லை

பிரதமர் அல்லது ராகுலிடம் மட்டுமே பேச்சுவார்த்தை: ஹசாரே அறிவிப்பு

பிரதமர் மன்மோகன் சிங் அல்லது காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி ஆகியோரிடம் மட்டுமே லோக்பால் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவேன் என அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அல்லது தொலைத்தொடர்பு அமைச்சர் கபில்சிபல் உள்ளிட்ட வேறு எந்த மத்தியஸ்தருடனும் பேச்சுவார்த்தை நடத்தமாட்டேன் என அண்ணா ஹசாரே குறிப்பிட்டார்.

லோக்பால் மசோதா பேச்சுவார்த்தைகள் அரசு அல்லாத மத்தியஸ்தருடன் நடைபெறாது. பிரதமர் அலுவலகம் அல்லது ராகுல் ஆகியோருடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெறும் என ஹசாரே தெரிவித்தார். மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாணுடன் பேசுவதற்கும் தயாராக இருக்கிறேன் என்றார் அவர்.

அதிகாரப்பூர்வ மத்தியஸ்தர் யாரும் இதுவரை தன்னையோ, தனது சகாக்களையோ அணுகவில்லை என அவர் தெரிவித்தார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட லோக்பால் மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அந்த மசோதா வலுவானது அல்ல. அதனால் ஊழலை எதிர்க்க முடியாது என ஹசாரே குறிப்பிட்டார்.

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=465205&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=

  • கருத்துக்கள உறவுகள்

உண்ணாவிரதம் வாபஸ் பெற ஹசாரே நிபந்தனை

மத்திய அரசு தூதர் பிரணாப் முகர்ஜியுடன் அன்னா ஹசாரே குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பேச்சுவார்த்தை குறித்து அரவிந்த் கெஜ்ரிவால், கிரண் பெடி, பிரசாந்த் பூஷண் ஆகியோர் செய்தியாளர்களுக்கு தெரிவித்தனர்.

அப்போது, ‘’பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. புதன்கிழமையும் (நாளை) பேச்சுவார்த்தை தொடரும். முதலில், அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசு கேட்கிறது. ஆனால், அதற்கு அன்னா ஹசாரேவை சம்மதிக்க வைப்பது மிகவும் கடினம்.

தனது கோரிக்கைகள் தொடர்பான மத்திய அரசின் உறுதிமொழிகள் எழுத்து பூர்வமாக தரப்பட வேண்டும் என்று அன்னா ஹசாரே கேட்கிறார்.

அதுவரை அவர் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற மாட்டார்’’ என்று தெரிவித்தனர்.

http://www.nakkheera...ws.aspx?N=60037

Edited by தமிழ் அரசு

பிரதமர் வீட்டை மாலை 5 மணிக்கு முற்றுகையிடுங்கள்- அன்னா குழு அழைப்பு

ஜன் லோக்பால் விவகாரம் மேலும் பெரிதாகிறது. இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் உள்ள பிரதமர் மன்மோகன் சிங்கின் அதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிட வருமாறு அன்னா குழு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் பரபரப்பும் பதட்டமும் அதிகரித்துள்ளது.

இன்று முற்பகல் தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் ஆதரவாளர்களிடையே அன்னா பேசினார். அப்போது அவர் கூறுகையில், கடந்த சில நாட்களில் எனது எடை வெகுவாக குறைந்துள்ளது. ஆனால் நான் கவலைப்படவில்லை. இப்படியே இன்னும் சில நாட்கள் என்னால் உண்ணாவிரதம் இருக்க முடியும்.

இந்த அரசு ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும். அது முடியும் வரை நான் சாக மாட்டேன். ஜன் லோக்பால் மசோதா நிறைவேறுவதைப் பார்க்காமல் நான் சாக மாட்டேன். எனவே யாரும் கவலைப்பட வேண்டாம்.

எனக்குப் பின்னால் கடவுள் இருக்கிறார். எனக்கு முன்னாள் இந்த தேசமே இருக்கிறது. இது போதும் என்றார் அன்னா.

பின்னர் பேசிய அன்னா குழுவினர், இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங்கின் அதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த வருமாறு அன்னா ஆதரவாளர்களுக்கும், பொது மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்தனர்.

ஏற்கனவே எம்.பிக்கள், அமைச்சர்கள் வீடுகளை ஊழல் ஒழிப்பு இயக்கத்தினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அஸ்ஸாமில் உள்ள பிரதமரின் இல்லத்தையும் அவர்கள் முற்றுகையிட்டனர். இந்த நிலையில் டெல்லியில் உள்ள வீட்டைமுற்றுகையிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

http://www.alaikal.com/news/?p=80184

அன்னா ஹசாரே ஆதரவாளர் தீக்குளித்துத் தற்கொலை

ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்கள் ஒருவர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

பிகாரைச் சேர்ந்த தினேஷ் குமார் யாதவ், டெல்லி ராஜ்காட்டில் 80 சதவீத தீக்காயங்களுடன் கிடந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அவருக்கு மனைவி, 5 குழந்தைகள், மற்றும் வயதான பெற்றோர் உள்ளனர். டெல்லியில் வாட்ச் மெக்கானிக்காக தினேஷ் வேலைபார்த்து வந்தார்.

http://thatstamil.oneindia.in/news/2011/08/26/anna-supporter-commits-suicide-aid0090.html

ராகுல் காந்தி வீடு முற்றுகை

புது தில்லி, ஆக. 26: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி வீட்டை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்ட அண்ணா ஹசாரே ஆதரவாளர்கள் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீண்ட நாள்களுக்குப் பின்னர் லோக்பால் மசோதா குறித்து ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தனது கருத்தை தெரிவித்தார். ஹசாரே நடத்தி வரும் போராட்டம் ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என்றும் அவர் கூறினார்.

இதை அடுத்து வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி ஹசாரேவின் ஆதரவாளர்கள் வெள்ளிக்கிழமை மாலை அவரது வீட்டை முற்றுகையிட்டனர். இதனால் ராகுல் காந்தி வீடு அமைந்துள்ள துக்ளக் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. சுமார் 40 பேர் ராகுல் வீட்டை முற்றுகையிட்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீஸôர் கைது செய்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களை அப்புறப்படுத்த சுமார் அரை மணி ஆனது. இதன் காரணமாக அப்பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது.

நாடாளுமன்றத்துக்குள் ஆர்ப்பாட்டம்: இதேபோல் ரோத்தக் பகுதியைச் சேர்ந்த மஞ்ஜித் என்பவர் நாடாளுமன்றத்துக்குள் பார்வையாளராக வெள்ளிக்கிழமை சென்றார். நாடாளுமன்ற நுழைவாயிலை அடைந்த உடன் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார். அவர் அணிந்திருந்த சட்டையைக் கழற்றினார். அவருடைய பனியனில் ""நான் அண்ணா'' என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. அவரைப் பாதுகாப்பு படையினர் கைது செய்து நாடாளுமன்றத்துக்கு வெளியே கொண்டு வந்தனர். வரும் வழியில் அவர் அரசுக்கு எதிராக கோஷமிட்டார். இதனால் நாடாளுமன்ற பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

http://www.dinamani....%AE%95%E0%AF%88

Edited by akootha

வென்றார் அன்னா ஹசாரே?! : நாளை உண்ணாவிரதம் முடிவு!

அன்னா ஹசாரே முன்வைத்த மூன்று நிபந்தனைகளுடன் கூடிய லோக்பால் மசோதா, மக்களவையில் (லோக்சபா மற்றும் ராஜ்யசபா இரண்டிலும்) ஏக மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஹசாரே குழுவினரும் வரவேற்பு அளித்ததுடன், ஹசாரே நாளை காலை உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வார் என தெரிவித்துள்ளனர்.

இன்று காலையில் மக்களவை கூடிய போது, நிதியமைச்சர் லோக்பால் மீதான விவாதத்தை தொடக்கினார். ஆளும் தரப்பு பிரதிநிதிகளும், எதிர்க்கட்சிகளும் ஒப்புதல் அளித்ததால், ஹசாரேவின் நிபந்தனைகளுடன் கூடிய லோக்பால் மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. ராஜ்ய சபா, லோக்சபா இரண்டிலும் இந்நடைமுறை மூலம் வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது. இத்தகவலை விலாஸ்ராவ் தேஷ்முக் அண்னா ஹசாரேவிடம் நேரில் சென்று வழங்கியிருந்தார்.

இந்நிலையில் பிந்திக்கிடைத்த தகவல்களின் படி, பிரணாப் முகர்ஜியின் பேச்சுக்கு பிறகு மக்களவையை நாள் முழுவதும் சபாநாயகர் மீராகுமார் திடீரென ஒத்திவைத்தார். திட்டமிட்டபடி குரல் வாக்கெடுப்பு நடக்காததால் மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டதா என மீண்டும் குழப்பம், சந்தேகம் ஏற்பட்டது.

இறுதியில், குரல் வாக்கெடுப்பு இல்லாமலே இந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டதுடன், இந்த தீர்மானத்துக்கு அனைத்து எம்.பி.க்களும் மேஜையில் தட்டி ஆதரவு தெரிவித்தனர்.

ஹசாரே குழுவினரிடம் இத்தகவல் அறிவிக்கப்பட்டதை அடுத்து ஹசாரே மக்கள் முன்னிலையில் உரையாற்றுகையில் 'நாங்கள் இந்த யுத்தத்தில் பாதியே வென்றுள்ளோம். எனினும் இன்று இவ்வெற்றி கிடைத்தமைக்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி கூறுகிறோம். இது எங்கள் வெற்றி அல்ல. உங்கள் வெற்றி. 'எங்கள் வெற்றியை கொண்டாடுங்கள் ஆனால் அமைதியுடன் கொண்டாடுங்கள்' நான் காலை 10.00 மணியளவில் எனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வேன் என தெரிவித்தார்.

இதேவேளை இது ஹசாரே குழுவினருக்கு கிடைத்த உண்மையான வெற்றி தானா? என நியூஸ் எக்ஸ் ஊடகம், ஹசாரே குழுவின் சாந்திபூஷனிடம் கேள்வி எழுப்பிய போது பூஷன் இவ்வாறு பதில் அளித்தார்.

http://www.4tamilmed...-on-lokpal-bill

உண்ணாவிரதத்தை முடித்தார் அன்னா ஹசாரே

இந்தியாவில் ஊழலுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வரும் அன்னா ஹசாரே அவர்கள் இரண்டு வார காலமாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொண்டுள்ளார்.

ஊழலுக்கு எதிராக தீவிரமான சட்டங்களை இயற்ற வேண்டும் என்ற இவரது கோரிக்கைக்கு இந்திய நாடாளுமன்றம் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆர்ப்பரித்த ஆயிரக்கணக்கான தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றிய அவர், இந்த போராட்டம் உலகத்துக்கே ஒரு பாடம் என்றும், இது இந்திய மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் தெரிவித்தார்.

அன்னா ஹசாரேவின் போராட்டத்துக்கு இந்தியா முழுவதிலும் இருந்து ஆதரவு பெருகியது. இவரது போராட்டத்தை இந்தியா சுதந்திரம் பெறும் முன் காந்தி நடத்திய போராட்டங்களோடும் ஒப்பிடப்பட்டது. இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினரிடம் காணப்படும் கோபத்தின் குரலாக ஹசாரே ஒலித்தார் என்பதில் ஐயமில்லை.

இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது, ஆனால் பொது வாழ்வில் காணப்படும் லஞ்ச லாவண்யம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

அன்னா ஹசாரேவின் போராட்டத்தால் இந்திய நாடாளுமன்ற கட்டமைப்புக்கு பாதிப்பு ஏற்பட்டு விட்டதாகவும் ஒரு சாரார் கவலைபடுகின்றனர். பிரதமர் மற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை இது மிகவும் சோதித்து விட்டதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.

http://www.bbc.co.uk/tamil/india/2011/08/110828_anna.shtml

உண்ணாவிரதத்தை முடித்தார் அன்னா ஹசாரே

இந்தியாவில் ஊழலுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வரும் அன்னா ஹசாரே அவர்கள் இரண்டு வார காலமாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொண்டுள்ளார்.

http://www.bbc.co.uk...0828_anna.shtml

காங்கிரஸ் காரனுகள் சதி செய்து தப்பிவிட்டானுகள். கசாரேயை பற்றி வாய்க்கு வந்தபடி பேசியவர்கள், இப்போது வாகெடுப்பின்றி நிறைவேற்றியிருக்கிறார்கள். 125 கோடி சனத்தை கண்ணை மூடி முழிப்பதற்குள் முட்டள் ஆக்கிவிடாரகள். இது என்ன் சதியென்று தெரியவில்லை. இவர்கள் எதை செய்தும் ராகுலை ஆட்சியில் இருத்தலாம். ஆனால் அங்கே பிரச்சனைகள் இருக்கத்தான் போகுது. காங்கிரஸ் உடஞ்சு சுக்கு நூறாக வேண்டும்.

  • 2 weeks later...

ல‌ஞ்ச‌ம் வா‌ங்கு‌ம் எ‌ம்.பி, எ‌ம்.எ‌ல்.ஏ.‌க்களை தூ‌க்‌கிடவு‌ம்- ஹசாரே

வா‌க்க‌ளி‌க்க லஞ்சம் பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை தூ‌க்‌கி‌ல் போட வே‌ண்டு‌ம் எ‌ன்று அ‌ண்ணா ஹசாரே ஆவேச‌த்துட‌ன் கூ‌றினா‌ர்.

அவரது சொ‌ந்த ஊரான ராலேகான் சித்தியில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், சட்டப் பேரவையிலும், நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கவும் வாக்களிக்கவும் லஞ்சம் பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை கடுமையாகத் தண்டிக்க வேண்டும் எ‌ன்றா‌ர்.

என்னைப் பொருத்தவரை இப்படிப்பட்டவர்களைத் தூக்கிலிட வேண்டும் என்று அ‌ண்ணா ஹசாரே ஆவேச‌த்துட‌ன் கூ‌றினா‌ர்.

ஊழலுக்கு எதிரான வலுவான சட்டத்தைக் கொண்டுவந்தால், இவர்களைப் போன்றவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுக்க முடியும் என்றும் ஹசாரே தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய அரசு நேர்மையாக விசாரணை நடத்தினால், நமது அரசியல் அமைப்பில் உள்ள ஓட்டைகள் தெரியவரும் ‌எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.

எனக்கு எந்தக் கட்சியுடனும், ஆர்எஸ்எஸ் போன்ற எந்த அமைப்புடனும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அ‌ண்ணா ஹசாரே தெ‌ரி‌வி‌த்‌தா‌ர்.

http://www.alaikal.com/news/?p=81584

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.