Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது – கல்கிசை நீதிமன்றத்தில் கோத்தாபய சாட்சியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Goata0315_02_77757_200-11.jpg

பிரசுரித்தவர்: admin August 17, 2011

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் இருந்த நெருக்கமான ஒத்துழைப்பின் மூலமே நாட்டில் இருந்து தீவிரவாதத்தை முற்றாக அழிக்க முடிந்தது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மிக் விமானக்கொள்வனவு ஊழல் குறித்து செய்தி வெளியிட்ட சண்டேலீடர் நிறுவனத்துக்கு எதிராக, 1000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி கல்கிசை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் சாட்சியமளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நேற்று இந்த வழக்கில் சுமார் 2 மணி நேரம் கோத்தாபய ராஜபக்ச சாட்சியமளித்திருந்தார்.

அவர் தனது சாட்சியத்தில், சிறிலங்காவில் போரின் போது என்ன நடக்கிறது என்பது பற்றி தகவல்களை இந்திய அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக வழங்கி வந்தாகவும் கூறியுள்ளார்.

1980களில் வடமராட்சியை கைப்பற்றும் நடவடிக்கையை நிறுத்துவதற்கு இந்தியாவுடனான தவறான புரிதல்களை காரணம் என்று கூறிய அவர், அப்போது இந்தியா தலையிட்டிருக்காது போயிருந்தால் 25 ஆண்டுகளுக்கு முன்னரே தீவிரவாதத்தை முற்றாக அழித்திருப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவுக்கு மிக நெருக்கமாக உள்ள இந்தியா மட்டுமே இராணுவ ரீதியாகத் தலையிடக் கூடிய நிலையில் இருந்ததாவும் கூறியுள்ள கோத்தாபய ராஜபக்ச, இந்தியாவின் சரியான ஒத்துழைப்பு இருந்திருந்தால் 25 ஆண்டுகளுக்கு முன்னரே போர் முடிவுக்கு வந்திருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, மேஜர் ஜெனரல் விஜய விமலரட்ண ஆகியோரின் வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்ட வடமராட்சி நடவடிக்கையை கைவிட நேரிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச போர் பற்றிய தகவல்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கு உயர்மட்டக் குழுவொன்றை நியமித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போரின் போது பத்திரிகைகளில் வெளியாகும் போர் பற்றிய ஆய்வுகளை மக்கள் நம்புகின்ற நிலை இருந்ததாகவும் கூறிய கோத்தாபய ராஜபக்ச, அவர்கள் எழுதுகின்ற கட்டுரைகளில் காயமடைந்த படையினர் பற்றிய எண்ணிக்கை எப்போதுமே மிகைப்படுத்தப்பட்டிருக்கும் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதன்காரணமாக படையினரின் உளவுரண் பாதிக்கப்பட்டதாகவும் கூறிய சிறிலங்கா பாதுகாப்புச் செயலர், போர்முனையில் என்ன நடக்கிறது, இழப்புகள் பற்றிய சரியான எண்ணிக்கை என்ன என்ற விபரங்கள் பொதுமக்களுக்குத் தேவைப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாகவே பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தை தொடங்கியதாகவும், போரின் இறுதிக்கட்டத்தில் 40 மில்லியனுக்கும் அதிகமானோர் அதனைப் பார்வையிட்டதாகவும் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

தான் பாதுகாப்பு செயலராக பொறுப்பேற்ற போது தீவிரவாதத்தை தோற்கடிக்க முடியாது என்றே வெளிநாடுகளும், பொதுமக்களும் நம்பியிருந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்ற பின்னர் ஆயுதப்படைகளைப் பலப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுத்ததாகவும், அவர் கூறியுள்ளார்.

கிராமமக்களை பாதுகாப்பதற்கு குடிமக்கள் தொண்டர்படையை பலப்படுத்தியாகவும், அதன் ஆட்பலத்தை 19,000இல் இருந்த 42,000 ஆக அதிகரித்ததாகவும் கூறிய கோத்தாபய ராஜபக்ச, அவர்களில் 5000 பேர் இறுதிக்கட்டப் போரில் பங்குபற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 120,000 ஆக இருந்த இராணுவத்தின் ஆட்பலத்தை 220,000 ஆக அதிகரிப்பதற்கான அனுமதியை சிறிலங்கா அதிபர் தனக்கு வழங்கியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாம் சிறிலங்கா படையினரின் உளவுரணை அதிகரிக்கும் திட்டங்கள் பலவற்றை வகுத்தே அவர்களை போருக்குத் தயார்படுத்தியதாகவும் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

பாதுகாப்பு பிரிவில் என்ன நடக்கிறது என்பதை ஒவ்வொரு நாளும் எந்தநேரத்திலும் எடுத்துக் கூறுவதற்கு சிறிலங்கா அதிபர் வாய்ப்பளித்திருந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் நடவடிக்கைப் பணிப்பாளர் தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட ஆயுதம் ஒன்றின் வெடிபொருட்கள் தீர்ந்து போய் அவற்றை பயன்பாட்டில் இருந்து ஒதுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியதாகவும், அதுபற்றி தான் சிறிலங்கா அதிபரிடம் கூறிய போது, அவர் சீனத் தலைவருடன் தொடர்பு கொண்டு தேவையான ஆயுதங்களை கொள்வனவு செய்து கொடுத்ததாகவும் கோத்தாபய ராஜபக்ச தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளின் போது ஆயுதங்கள் கிடைப்பது சிரமமாக இருந்த போதே சிறிலங்கா அதிபர் அவ்வாறு ஆயுதங்களை பெற்றுக் கொடுத்ததாக கூறிய அவர், அவசர தேவையென்றின் போது தான் நேரடியாகவே பாகிஸ்தானில் இருந்து வெடிபொருட்களை வாங்கியதாகவும் கூறியுள்ளார்.

http://mykathiravan....a-news/?p=13492

Edited by தமிழ் அரசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அஹா ........ஆஹா ...... தனக்கு மூக்கு போனாலும் பரவாயில்லை மற்றவருக்கு இரண்டு கண்ணும் போகவேண்டும் என்பது கோத்தாவின் கொள்கையோ ...?!

கோத்தா நினைக்கிறார் இந்தியாவை இறுக்கி மாட்டினால்த்தான் இந்தியா போர்குற்ற விசாரணையை முன்னெடுக்கவிடாமல் பாதுகாக்குமென்று. அதுவரைக்கும் அவர் சரி. ஆனால் அரசியலிலும், மனித வாழ்க்கையிலும் எதுவும் நிலையானவை இல்லை. சோனியா காந்தி இபோது உணருவா மனித வாழ்கை என்பது எவ்வளவு நொய்மையானது என்று. காங்கிரஸ் திரும்பி பதவிக்கு வந்தாலுமே பிரணாப்முகரியி போன்றோர் உட்பூசல்லால், மனமோகன்சிங், சிதம்பரம் ஆகியோரை போட்டு தள்ளவே பார்த்து கொண்டிருக்குகிறார்கள். எனினும் கோத்தா இப்போது அள்ளிக்கொட்டும் மண் மனமோகன்சிங்இன் தலைபாகை மீது மட்டுமே விழுகிற ஒரு சந்தர்பமும் இருக்கிறது. ஆனால் கட்டாயமாக சுத்தி திரும்பி வந்து கோத்தாவின் தலை மீது விழும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த தமிழர்கள் vs போர் குற்றம் vs காங்கிரஸ் vs சர்வதேசம்vs இலங்கை vs தமிழ்நாடு கணக்கை கூட்டி கழித்து பார்த்தால் எனக்கு தெரிந்து .. இங்க போலவே அங்கயும் இலவ்ச டீவி பொட்டியும் பசுமாடும் கிந்தியா சார்பில் வழங்கி சமாதானபடுத்தவே பார்ப்பார்கள் :( :(

புலம்பெயர்ந்த தமிழர்கள் vs போர் குற்றம் vs காங்கிரஸ் vs சர்வதேசம்vs இலங்கை vs தமிழ்நாடு கணக்கை கூட்டி கழித்து பார்த்தால் எனக்கு தெரிந்து .. இங்க போலவே அங்கயும் இலவ்ச டீவி பொட்டியும் பசுமாடும் கிந்தியா சார்பில் வழங்கி சமாதானபடுத்தவே பார்ப்பார்கள் :( :(

புரட்சி:எல்லாமே மனித வாழ்க்கைதான். இந்த நிலையிலிருந்து உழைத்துதான் ஈழத்தவர் விடுதலை வாங்க வேணும்.

டிஸ்கி: தயவு செய்து காங்கிரசிடம் சொல்லிவிடவும், சாதாரண டிவி தமிழ்நாட்டுக்கு ஓ கே. நமக்கு டேப் பண்ணிய பேத்டே பாட்டியை போட்டு பார்க்க 50 இஞ்ச் திறி டீயாய் ஒண்ணு பார்த்து குடுத்துவிடுமாறு.

Edited by மல்லையூரான்

கொலைக்குற்றங்களில் முதலாம் தர குற்றம், இரண்டாம் தர குற்றம் என உள்ளது. கொலைக்குற்றவாளிகளிலும் முதலாம் தர குற்றவாளி , இரண்டாம் தர குற்றவாளி என உள்ளது.

அந்தவகையில் சிங்களவன் தான் முதலாம் தர குற்றவாளி. சீனா, இந்தியா உட்பட்ட அனைவரும் இரண்டாம் தர குற்றவாளிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

எப்பா சாமி .. இன்றே போர்குற்ற சிக்கல் அதிகமானால் நாளை இதோ தமிழீழம் என்பான் காங்கிரஸ்காரன்.. எவனும் படை இறக்க போவது இல்லை.. லாஜிக்கு ஈசி.. நீங்களே ச்ண்டை போட்டுகிட்டாலோ அல்லது மூட்டி விட்டு மேலும் குளிர் காயவோ வருவான் ஏனெனில் வரைபடம் அப்புடி அப்படியே இந்தியாக்காரன் தமிழீழம் என்றிட்டாலும் அதற்கு முன்பே பலபேரை எதிராக உலக நாடுகளை திருப்பிவிட்டு இருப்பான்..

டிஸ்கி:

நல்லா சூதானமா புரிஞ்சகிங்கப்பூ.. போர்குற்றத்திற்கான மதிப்பீடு சமரசம் என்றால் தமிழீழமாகத்தான் இருக்கவேணும்.. ஆயா விட்ட சுயாட்சி குயாட்சி என்றால் சிங்களவன் எல்லாத்தினையும் கொடுப்பான் எல்லாம் வாய் வழியாகவே(குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சா போச்சு)அப்படியும் சுயாட்ட்சி அது இது என்றால் சர்வதேச கண்காணிப்பு இல்லையென்றால் வாயேலே வண்டி ஒட்டி விட்டு போய்விடுவார்கள்..

பயங்கரவாதிகளின் மரண வாக்குமூலம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதிகளின் மரண வாக்குமூலம்!

இந்த வாக்கு மூலத்தை தமிழர்களாகிய நாம் சரியான முறையில் பயன் படுத்தினால் பயன்னுண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.