Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைகோவின் தொண்டர்கள் நடத்திய போராட்டத்தால் சென்னையில் இருந்து மீண்டும் தப்பியோடிய சிங்களவர்கள் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

vaiko.jpg

Posted by சோபிதா on 17/08/2011 in செய்தி

சென்னையில் சிங்களவருக்குப் பயிற்சி கொடுக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. அது நேற்றைய தினம் ஆரம்பிக்கவிருந்தது. இந் நிலையில் அங்கே வைகோவின் மதிமுக தொண்டர்கள் நடத்திய போராட்டத்தால் 12 சிங்களவர்கள் அங்கே பயிற்சிக்காக வந்திருப்பது வெளியானது. இதனை அடுத்து அவர்களை அனைவரையும் மத்திய அரசு அவசர அவசரமாக பஞ்சாபுக்கு மாற்றியுள்ளது. இது தொடர்பாக வைகோ விடுக்கும் அறிக்கை !

வைகோ அறிக்கை!

சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் உள்ள மத்திய அரசின் பெரம்பூர் இரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில், இலங்கையைச் சேர்ந்த 12 சிங்கள அதிகாரிகளுக்கு உயர் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதற்காக, இந்திய – இலங்கை அரசுகளுக்கிடையே ஒப்பந்தம் போடப்பட்டு, இரண்டு வார பயிற்சி 16.8.2011 முதல் அளிப்பதாக இருந்ததை அறிந்து மிகுந்த வேதானையும்,

அதிர்ச்சியும் அடைந்தேன். மத்திய காங்கிரஸ் அரசு தொடர்ந்து தமிழர்களுக்குத் துரோகம் செய்வதையே தங்கள் அரசின் செயல் திட்டமாக வைத்து இருக்கிறது என்பது இதன்மூலம் தெளிவாகிறது. இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை நடவடிக்கை எடுத்திட மத்திய அரசை வலியுறுத்தி தமிழக

சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் இயற்றப்பட்டும், தமிழ் இனக் கொலை செய்த இலங்கையின் சிங்கள அரசு மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று

ஐ.நா. மன்றப் பொதுச் செயலாளர் பான்-கீ-மூன் அமைத்த புகழ்பெற்ற மனித உரிமைக் காவலர்கள் மூவர் குழு சர்வதேச குழுமத்திற்கு வேண்டுகோள் விடுத்தும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், செவிடன் காதில் ஊதிய சங்கு போல் தொடர்ந்து தமிழர்களின் உணர்வுக்கு எதிராகவே இந்திய அரசு செயல்பட்டு

வருவது கண்டனத்துக்கு உரியது.

எனவே, மத்திய அரசின் இரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலையில் சிங்களவர்களுக்குப் பயிற்சி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தி, ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமையில், நூற்றுக்கணக்கான மறுமலர்ச்சி தி.மு.கழகத் தோழர்கள் நேற்று (16.8.2011) காலையில், ஐ.சி.எப். தொழிற்சாலையை முற்றுகையிட்டுக் கண்டனப் போராட்டம்

நடத்தினர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். நேற்று பிற்பகலிலேயே, சிங்கள அதிகாரிகளுக்கு சென்னையில் இருந்து பஞ்சாப் மாநிலம், கபுர்தலாவில் உள்ள மத்திய அரசின் இரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் பயிற்சி அளிக்க மாறுதல் செய்து உள்ளனர்.

மறுமலர்ச்சி தி.மு.க.வின் கண்டன ஆர்ப்பாட்டத்தின் காரணமாக, பெரம்பூர் மத்திய இரயில் பெட்டித் தொழிற்சாலையில் கால் வைக்க முடியாமலே சிங்களவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இருப்பினும், 7 கோடி தமிழர்கள் குடிமக்களாக இருக்கும் இந்தியாவின் எந்த மூலையிலும் சிங்களவர்களுக்கு எந்தவிதமான பயிற்சியும் அளிக்கக் கூடாது என்பதோடு, அவர்களை உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

http://www.eelampres.../2011/08/33513/

Edited by தமிழ் அரசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனி சிங்களவன் ஓட ........ஓட ..... துரத்தும் காலம் இனி உனக்கு நின்மதி கிடையாது தமிழன் என்ன கிள்ளுக்கீரையா ....?

புல்லரிக்குது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புல்லரிக்குது.

கவனம் அர்ஜுன் மாடு மேய்ந்து போடும் .......... :D :D :D:icon_mrgreen:

Edited by தமிழ் அரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.