Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனுக்கு வந்த திமிங்கிலம்

Featured Replies

லண்டனுக்கு வந்த திமிங்கிலம்

தேம்ஸ் நதியூடாக லண்டனின் மத்திய பிரதேசத்திற்குள் 5 மீற்றர் நீளமான திமிங்கிலம் உட்பிரவேசித்துள்ளது. வழக்கமாக வடக்கு அட்லாண்டிக் பகுதியின் ஆழ்கடல் பிரதேசங்களில் சிறு கூட்டமாக காணப்படும் இந்த சிறிய வகை திமிங்கிலம் தேம்ஸ் நதிக்கு வந்தது அதிசயமாக கருதப்படுகின்றது. இந்த அரிய காட்சியை காண தேம்ஸ் நதியருகே நேற்று பெருந்தொகையான மக்கள் கூடியிருந்தனர். இதனை பாதுகாப்பான முறையில் மீண்டும் கடலுக்கு அழைத்து செல்வதற்காக முயற்சியில் கடல் வாழ் உயிரினங்களை காக்கும் அமைப்பு ஈடுபட்டுள்ளது.

நேற்று இந்த செய்தியே பிரத்தானிய தொலைக்காட்சிகளில் பரபரப்பான விடயமாக இருந்ததுடன் பல தொலைக்காட்சிகளில் திமிங்கிலம் பயணம் செய்வதை நேரடி ஒளிபரப்பாக காண கூடியதாக இருந்தது.

திமிங்கிலத்தின் பயணத்தின் ஒளிப்பதிவை இந்த இணைப்பில் காணலாம்.

நன்றி - http://news.bbc.co.uk/1/hi/england/london/4633878.stm

சின்ன திமிங்கலமோ? அது தான் பயம் இல்லமால் பக்கத்தில் நின்று பார்க்கின்றார்கள்.

நன்றி இனைப்புக்கு மதன்

  • தொடங்கியவர்

41238716whaleap4163cr.jpg

தேம்ஸ் நதியூடாக லண்டன் மத்திய பிரதேசத்துக்கு வந்த திமிங்கிலம் அங்கிருந்த வெற்று படகொன்றில் மோதி இலேசான இரத்த கசிவுக்கு உள்ளாகியிருப்பதை படத்தில் காணலாம்.

41238124gallerybridge1gy.jpg

திமிங்கிலத்தை பார்வையிடுவதற்காக தேம்ஸ் நதி பாலமொன்றில் கூடியிருக்கும் மக்கள். படம் - Rob Fenwick

41238126galleryparliament1tu.jpg

பிரித்தானிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அருகே காணப்படும் திமிங்கிலம்

_41238128_gallery_police.jpg

இந்த திமிங்கிலத்தை போலிஸ் மற்றும் கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் அமைப்பை சேர்ந்த படகுகள் பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

படங்கள் நன்றி - பிபிசி இணையம்

வடிவாப் பாருங்கோப்பா அது திமிங்கலமோ அல்லது சின்ன நீர்ழூள்கி கப்பலோ தெரியாது தாடிக்காரன் திரும்பவும் அல்பம் விட்டிருக்கிறதாக ரிவியள்ளபேச்சு!!!

  • தொடங்கியவர்

சின்ன திமிங்கலமோ? அது தான் பயம் இல்லமால் பக்கத்தில் நின்று பார்க்கின்றார்கள்.

திமிங்கில வகைகளில் northern bottle-nosed whale என்று அழைக்கப்படும் இது சிறியது தான். இது குறித்த மேலதிக தகவல்களையும் மற்றய திமிங்கில வகைகளுடனான ஒப்பீட்டையும் இந்த படத்தில் காணலாம்.

41238958bottlenosewhale4164aa.gif

நன்றி - பிபிசி இணையம்

சில வருடங்களுக்கு முன்பு திமிங்கிலம் ஒரு கப்பலை ஆட்களுடன் விழுங்கியதாக அறிந்த ஞாபகம். விபரங்கள் ஞாபகம் இல்லை. யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

நன்றி மதன் உங்கள் தகவல்களுக்கு

சில வருடங்களுக்கு முன்பு திமிங்கிலம் ஒரு கப்பலை ஆட்களுடன் விழுங்கியதாக அறிந்த ஞாபகம். விபரங்கள் ஞாபகம் இல்லை. யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

நன்றி மதன் உங்கள் தகவல்களுக்கு

நானும் கேள்விப்பட்டிருக்கிறன் கப்பலோ படகோ தெரியல :roll: :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் நேற்று இரவு ஒரு வேலை நிமிர்த்தமாக சென்றல் லண்டன் சென்றிருந்தேன். அத்திமிங்கிலத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

அதென்ன வல்லிபுரக்கோயில் தீத்தக்கரை மாதிரி சனக் கூட்டம், தேம்ஸ்ஸைச் சுத்தி!!! யாருக்குத் தெரியும், உத்த திமிங்ஸ்ஸும் ஈழ்பதீஸாரை கும்பிடு போட வந்தவரோ???????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில வருடங்களுக்கு முன்பு திமிங்கிலம் ஒரு கப்பலை ஆட்களுடன் விழுங்கியதாக அறிந்த ஞாபகம். விபரங்கள் ஞாபகம் இல்லை. யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

உதிலென்ன ஆச்சரியம் :!: இங்கு முழுக் கோயிலேயே உண்டியலான் விழுங்கும்போது :x :x :evil: :evil: திமிங்கிலம் கப்பலை விழுங்குவதற்கென்ன :lol::lol:

லண்டனுக்கு வந்ததிமிங்களத்தை கையேந்திக்கும்பிடும் ஜெயதேவன்

039386089tr.jpg

039396797zy.jpg

039402012md.jpg

அதென்ன வல்லிபுரக்கோயில் தீத்தக்கரை மாதிரி சனக் கூட்டம், தேம்ஸ்ஸைச் சுத்தி!!! யாருக்குத் தெரியும், உத்த திமிங்ஸ்ஸும் ஈழ்பதீஸாரை கும்பிடு போட வந்தவரோ???????

பாருங்கப்பா சந்தில சிந்து பாடுறதை.......பாத்து உண்டியலை விளுங்கிப் போடும்..... மறக்காம உண்டியலிலயும் காசு போடச் சொல்லுங்கோ... :wink: :P :P

பாவம் அந்த திமிங்கிலக்குட்டி..கழிமுகத்த

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அ"றோ"கரா.......

பார்த்தால் திமிங்ஸை ஈழ்பதீஸ் சிவலிங்கம் போலத்தான் கிடக்குது :lol::lol: ஓம் கரகர கரகர..... :lol::( திரும்ப ஒருக்கால் எல்லோரும் பார்த்திட்டு வந்து உண்டியலையும் நிறையுங்கோ :x :evil:

  • தொடங்கியவர்

41241134thrashgetty1io.jpg

திமிங்கிலத்தை இன்று கைப்பற்றிய மீட்பு பணியாளர்கள்

திமிங்கிலம் ஒரு ஆழ்கடல் வாழ் உயிரினம் இது ஆழம் குறைந்த தேம்ஸ் நதியில் தொடர்ந்து இருந்தால் அது உயிர் பிழைப்பதற்கான சாத்தியங்கள் குறைவு. தேம்ஸ் நதியில் தினமும் பயணிக்கும் படகுகளிலும் அதன் மேல் கட்டப்பட்டுள்ள பாலங்களின் தூண்களிலும் மோதி காயமடைய கூடிய சந்தர்ப்பங்களும் நிறையவே உண்டு. ஏற்கனவே வெற்று படகொன்றில் மோதிய சிறிய அளவிளான இரத்த கசிவுடன் காணப்படும் இந்த திமிங்கிலம் கடலுடன் தொடர்புடைய திசையை நோக்கி பிரயாணம் செய்யாமல் மேன் மேலும் நகரின் உட்பகுதியை நோக்கி சென்று வந்தது. இதனால் தற்போது திமிங்கிலத்தை தேம்ஸ் நதியில் இருந்து மீட்டு மீண்டும் ஆழ்கடலுக்கு கொண்டு செல்லும் பணி நடந்து வருகின்றது.

படம் நன்றி - பிபிசி இணையம்

நன்றி மதன் அண்ணா உங்கள் தகவல்களுக்கும் இணைப்புக்கும்

நானும் கேள்விப்பட்டிருக்கிறன் கப்பலோ படகோ தெரியல :roll: :roll:

இதை ஒரு முறை செய்தியில் நானும் பார்த்தேன் ஆனால் எனக்கும் மேலதிக விபரம் எதுவும் தெரியவில்லை

  • தொடங்கியவர்

திசை தடுமாறி லண்டனுக்குள் உட்பிரவேசித்த திமிங்கிலம் அதனை மீளவும் ஆழ்கடலுக்கு அனுப்பும் மீட்பு நடவடிக்கைகளின் போது உயிரிழந்துவிட்டது.

மேலதிக தகவல்கள் ...

http://news.bbc.co.uk/1/hi/england/london/4635874.stm

திசை தடுமாறி லண்டனுக்குள் உட்பிரவேசித்த திமிங்கிலம் அதனை மீளவும் ஆழ்கடலுக்கு அனுப்பும் மீட்பு நடவடிக்கைகளின் போது உயிரிழந்துவிட்டது.

மேலதிக தகவல்கள் ...

http://news.bbc.co.uk/1/hi/england/london/4635874.stm

சொன்னமில்ல கொன்றிடுவார்கள் என்று..! கடவுளும் கைவிட்டிட்டுட்டான்..!

மனிதர்களால் அநியாயமாக கொல்லப்பட்ட திமிங்கிலத்துக்காக குருவிகளின் அனுதாபங்கள்..! :roll: :shock: :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் அந்த திமிங்கிலக்குட்டி..கழிமுகத்த

காயம்..ஸ்றெஸ் (stress) போதிய சுவாச வாயு இன்மை.. மாசடைந்த சூழல்...இது போன்ற காரணங்களையே அதன் இறப்புக்கு முதன்மையாகக் கூறலாம்..!

குறித்த திமிங்கலம் மீது தேவையற்ற கலவரத்தை அழுத்ததை பிரயோகித்ததன் மூலமே அதன் இயல்பான செயற்பாடு குழப்பட்டு..அதிகம் காயப்படவும்..அதுக்கு போதிய அளவு சுவாச வாயுவை உள்ளெடுக்க சந்தர்ப்பம் அளிக்கவும் இடமளிக்கப்படவில்லை. திமிங்கிலங்கள் மீன்களைப் போலல்லாது மனிதர்களைப் போல சுவாசப்பை கொண்டு வாயுப்பரிமாற்றம் மூலம் சுவாசச்செயன்முறை செய்பவை. அவை இயல்பாக நீரின் மேல் மட்டத்துக்கு வந்து சுவாச வாயுவை பரிமாறிச் செல்ல வேண்டும்..கலவர சூழலில்..இது போதிய சாத்தியமாக இருந்திருக்காது..!

குறித்த திமிங்கல இனமும் எண்டேஞ்ஜர்..அருகிவரும்.. இனங்களில் ஒன்றாக பிரகடனப்படுத்தப்பட்ட இனமாகும்..! :idea: :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட ஊரில மனிதனையே கொல்லுறாங்கள் அதை விட்டுட்டு இதுக்கு கவலைப்பட்டுக் கொண்டு நிக்கிறியள்......

  • தொடங்கியவர்

_41242022_thames_whale_416.gif

தேம்ஸ் நதியூடாக உட்பிரவேசித்த திமிங்கிலம் Greenwich, Tower Bridge, Waterloo Bridge, Westminster Bridge பகுதிகளூடாக சென்று மேன் மேலும் லண்டனின் மத்திய பிரதேசத்துக்கு சென்று கொண்டிருந்தது. இது ஆழ்கடலுக்கு மீளவும் செல்வதற்கு எதிரான திசை என்பதுடன் நெருக்கமான ஆழம் குறைந்த பகுதி. இந்நிலையில் திமிங்கிலத்தை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து அதனை மீளவும் ஆழ்கடல் பகுதிக்கு அனுப்புவதை தவிர வேறு வழியேதும் இருக்கவில்லை. இந்த மீட்பு நடவடிக்கையின் போது திமிங்கிலம் அழுத்ததுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் இருந்தபோதிலும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால் அது தானாவே இறந்திருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.