Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண இராச்சியமும் அதன் வரலாற்று எச்சங்களும்

Featured Replies

கி.பி. 13ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 1620ல் போர்த்துக்கீசரின் ஆட்சியின்கீழ் கொண்டுவரப்படும் வரை யாழ்ப்பாண அரசு நிலவிவந்ததற்கான தெளிவான ஆதாரங்கள் உண்டெனினும், அதன் தோற்றம் பற்றிய வாத எதிர்வாதங்கள் தொடர்ந்தும் நிலவியே வருகின்றன.

எனினும் பல ஆய்வாளர்கள் யாழ்ப்பாண அரசு கி.பி. 13ஆம், 14ஆம் நூற்றாண்டை அண்டிய காலப் பகுதிகளிலேயே தொடங்கியிருக்கக் கூடும் எனக் கருதுகிறார்கள். 11ஆம் நூற்றாண்டில் இராஜேந்திர சோழனின் இலங்கைப் படையெடுப்பு, 13ஆம் நூற்றாண்டில் கலிங்க மாகனின் படையெடுப்பு என்பன யாழ்ப்பாண அரசு உருவாவதற்கான களத்தை அமைத்துக் கொடுத்தன. யாழ்ப்பாண அரசின் தலைநகரமாக இருந்தவையென சிங்கைநகர், நல்லூர் என இரண்டு பெயர்கள் கூறப்படுகின்றன. தற்போதைய யாழ்ப்பாண நகருக்கு அருகேயுள்ள நல்லூர், அரசின் இறுதிக்காலத்தில் தலைநகராயிருந்ததென்பதில் ஐயமெதுவும் இல்லை. சிங்கைநகரென்பது யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குக் கரையிலுள்ள வல்லிபுரப்பகுதியில் அமைந்திருந்ததென்றும், இவ்வரசின் ஆரம்பகாலத் தலைநகரம் இதுவேயென்றும் சிலர் கூற, சிங்கைநகரென்பதும் நல்லூரையே குறிக்குமென்றும், யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரம் நல்லூர் மட்டுமேயென்றும் வரலாற்று ஆய்வாளர்கள் உறுதிபடுத்தியுள்ளார்கள்.

யாழ்ப்பாண இராட்சியத்தின் ஆட்சி எல்லை குடாநாட்டுப் பகுதியைத் தளமாகக் கொண்டு, சமயங்களில் இவ்வரசின் எல்லை, வன்னிப்பகுதி முழுவதையும் உள்ளடக்கி, மேற்குக் கரையில் புத்தளம் வரை கூடப் பரந்து இருந்ததாகக் கூறப்படுகிறது.

16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் போர்த்துக்கீசரின் நடமாட்டம் இலங்கையையண்டிய கடற்பிரதேசங்களில் அதிகரித்து இலங்கை அரசியலிலும் அவர்கள் தலையிடத் துவங்கிய பின்னர், யாழ்ப்பாண இராச்சியத்திலும் அவர்கள் பார்வை விழுந்தது. போர்த்துக்கீசரின் செல்வாக்கால் இப் பிராந்தியத்தில் கத்தோலிக்க மதம் தலையெடுக்க ஆரம்பித்து, யாழ்ப்பாண இராச்சியத்திலும் மதமாற்றங்கள் தொடங்கியபோது, அப்போதைய யாழ்ப்பாண அரசன், தனது ஆளுகைக்குட்பட்ட மன்னாரில் அவ்வாறு மதம் மாறியோரைச் சிரச்சேதம் செய்வித்ததாகச் சொல்லப்படுகிறது.

இதனைச் சாக்காக வைத்துக்கொண்டு, 1560ல் போர்த்துக்கீசத் தளபதி டொம் கொன்சுடன்டீனோ டி பிரகன்சா, யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றினான். எனினும், நாட்டுக்குள்ளேயே போத்துக்கீசருக்குப் போக்குக் காட்டிய யாழ்ப்பாண அரசன், அவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள இணங்கினான். எனினும் போத்துக்கீசரின் கடுமையான நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாமல், யுக்தியினால் அவர்களை நாட்டை விட்டு விரட்டினான். ஆனாலும், போத்துக்கீசர் யாழ்ப்பாண அரசுக்குக் கீழ்ப்பட்ட மன்னார் தீவைத் தாக்கி அதனைக் கைப்பற்றிக் கொண்டனர். தொடர்ந்து 1591 இல் அந்தரே பூர்த்தாடோ (Andre Furtado) என்னும் தளபதி தலைமையில், போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தைத் தாக்கிக் கைப்பற்றிக் கொண்டனர். இப் போரில் யாழ்ப்பாண அரசன் கொல்லப்பட, அவனுடைய மகனுடன் ஒப்பந்தங்களைச் செய்துகொண்டு, அவனை அரசனாக்கி மீண்டனர். இதன் பின்னர் 1620 வரை போர்த்துக்கீசரின் தயவிலேயே யாழ்ப்பாண மன்னர்கள் நாட்டை ஆண்டுவந்தனர். 1620ல் இராச்சியத்திலேற்பட்ட பதவிப் போட்டியைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தை மீண்டும் கைப்பற்றித் தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததின் மூலம், யாழ்ப்பாண மன்னராட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

1658ல் ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்டது. இவர்கள் 138 வருடகாலம் ஆண்டபின், 1796ல் யாழ்ப்பாண இரச்சியத்தை பிரித்தானியரிடம் பறிகொடுத்தனர்

பிரித்தானியர் யாழ்ப்பாண இரச்சியத்தையும், அவர்களால் கைப்பற்றப்பட்ட இலங்கைத்தீவின் ஏனைய பகுதிகளுடன் சேர்த்து ஒரே அலகாக நிர்வகித்தனர். 1948 பிப்ரவரி 4ஆம் திகதி, முழுத்தீவையும் ஒரே நாடாகவே சுதந்திரம் கொடுத்துவிட்டு வெளியேறினர்.

ஆக எமது வலிகளின் மூலம் இங்கே ஆரம்பிக்கின்றது. இனி வரலற்று சாட்சியங்களாக..............

சங்கிலித் தோப்பு:

யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி மன்னனான சங்கிலியனின் மாளிகை அமைந்திருந்த இடம் எனக் கருதப்படுகின்றது.சங்கிலித் தோப்பு, யாழ்ப்பாண நகரில் இருந்து சுமார் இரண்டு மைல்கள் தொலைவில் நல்லூரில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில், நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்குச் சிறிது தூரத்தில் இது அமைந்துள்ளது. முற் குறிப்பிட்ட சங்கிலித்தோப்பு வளைவும், இவ் வீதியை அண்டியே உள்ளது. யமுனா ஏரி, வீதியிலிருந்து சற்றுத் தொலைவில், பிற்காலத்தில் உருவான குடியேற்றப் பகுதிகளுக்கு மத்தியில் அமைந்துள்ளதைக் காணலாம். வீதிக்கு அடுத்த பக்கத்தில்,சங்கிலித்தோப்புக்கு எதிரே இன்னொரு அரசத் தொடர்புள்ள இடமான, மந்திரிமனை உள்ளது. இதற்கு அருகிலேயே, யாழ்ப்பாண அரசர்களால் அமைக்கப்பட்ட சட்டநாதர் சிவன் கோயிலும் காணப்படுகின்றது. இது தவிர யாழ்ப்பாண அரசர் காலத்தில் நல்லூர் கந்தசாமி கோயில் அமைந்திருந்த இடமும், இவ்விடத்துக்கு அருகிலேயே உள்ளது.

200pxsangkilithoppu.jpg

போத்துக்கீசர் 1620 ல் யாழ்ப்பாணத்தை முழுமையாகக் கைப்பற்றித் தங்கள் நேரடி ஆட்சியில் கொண்டு வந்தபின்னர், அதன் தலைநகரத்தை யாழ்ப்பாண நகரத்துக்கு மாற்றினர். நல்லூரிலிருந்த யாழ்ப்பாணத்து அரசர்களுக்குச் சொந்தமான நிலங்கள் பல்வேறு பயன்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் கைக்கு மாறியபின்னர், சங்கிலித்தோப்புப் பகுதியில், அவர்களுடைய சமயக் கல்விக்கான நிறுவனம் ஒன்று அமைக்கப் பட்டிருந்ததற்கான சான்றுகள் உள்ளன. தற்போது இங்கே காணப்படும் வாயில் வளைவு, இத்தகைய கட்டிடங்களுள் ஒன்றின் பகுதியாகவே இருக்கக்கூடும். யாழ்ப்பாணத்து அரசர்களின் பரம்பரையைச் சேர்ந்த சில குடும்பங்களும் பிற்காலத்தில் இங்கே வாழ்ந்ததாகத் தெரிகிறது.

மந்திரிமனை:

யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரில், அவ்வரசர் காலத்தோடு பொதுவாகச் சம்பந்தப்படுத்தப்படும் ஒரு கட்டிடமே மந்திரிமனை ஆகும். போத்துக்கீசரிடம் யாழ்ப்பாணம் வீழ்வதற்குமுன் அக்கால அமைச்சர் ஒருவரின் இருப்பிடம் இதுவெனக் கூறப்படுகிறது. இக்கட்டிடம் இருக்கும் நிலமும், இதனைச் சுற்றியுள்ள பகுதிகளும், அரசத்தொடர்பு உடையவை என்பதில் ஐயமில்லை. சிறுவனாக இருந்த கடைசி மன்னன் சார்பில் அரசப்பிரதிநிதியாக இருந்த சங்கிலிகுமாரனுடைய அரண்மனையும், அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த நல்லூர் கந்தசுவாமி கோயிலும், வேறும் பல அரசத்தொடர்புள்ளவைகளும், இதற்கு அண்மையாகவேயுள்ளன.

mantrimanai.jpg

எனினும் இக்கட்டிடத்தின் அமைப்பை நோக்கும்போது, இது, பல யாழ்ப்பானச் சரித்திரவியலாளர் கூறுவது போல் ஒரு ஒல்லாந்தர் காலக் கட்டிடமென்றே கூற முடியும். இக் கட்டிடத்தின் உள்ளே மரத்தாலான சில தூண்கள், போதிகைகள் உட்படச் சில பகுதிகள், யாழ்ப்பாண அரசு காலத்தைச் சேர்ந்தவையெனக் கருதப்படுகிறது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியபின், தலைநகரத்தை நல்லூரிலிருந்து யாழ்ப்பாண நகருக்கு மாற்றினாலும், நல்லூரில் எஞ்சியிருந்த அரச கட்டிடங்களும், நிலங்களும் போத்துக்கீசரின் பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. பின்னர் வந்த ஒல்லாந்தரும் இவ்வாறே பயன் படுத்தினர். பின்னவர்கள் மேற்சொன்ன நிலங்களிலே புதிய கட்டிடங்களைக் கட்டிய ஆதாரங்களும் உண்டு. மந்திரிமனை என அழைக்கப்படும் இந்தக் கட்டிடமும் இவ்வாறே புதிதாக அமைக்கப்பட்ட அல்லது பெருமளவுக்குத் திருத்தியமைக்கப்பட்ட கட்டிடமாகவே இருக்கவேண்டும்.

இக்கட்டிடம் தற்போதைய உரிமையாளர்களின் கைக்கு வந்தபின்னரும், கடந்த நூற்றாண்டில் திருத்தவேலைகள் நடைபெற்றிருப்பதாகத் தெரிகிறது. எப்படியாயினும், யாழ்ப்பாணத்தில் அதன் காலனித்துவ காலத்துக்கு முற்பட்ட தொடர்புகளைக் கொண்ட, எஞ்சியுள்ள மிகச் சில கட்டிடங்களில் ஒன்று என்றவகையில் இது முக்கியத்துவம் பெறுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்வரை இக்கட்டிடம், அருகிலுள்ள சட்டநாதர் சிவன் கோயிலுடன் தொடர்புடைய குடும்பமொன்றினால் இருப்பிடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அக்காலத்திலேயே இதன் பெரும்பகுதி கைவிடப்பட்ட நிலையிலேயே இருந்தது.

இப்பொழுது சிங்கள இனவாதத்தின் கோரப்பிடியில் சிக்கிய யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்று எச்சமான இந்த மந்தரிமனை இடையுறாத தாக்குதல்களுக்கு உள்ளாகி அழிவடையும் நிலைக்கே வந்து விட்டது.

யமுனா ஏரி :

யமுனா ஏரி யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக இருந்த நல்லூரிலுள்ள பகர வடிவிலமைந்த ஒரு கேணிஆகும். இது யாழ்ப்பாணத்தைக் கடைசியாக ஆண்ட சங்கிலியனின் மாளிகை அமைந்திருந்த சங்கிலித்தோப்பு வளவில் உள்ளது. யாழ்ப்பாண வைபவமாலையின்படி இது யாழ்ப்பாண அரசின் முதல் அரசனாகக் கருதப்படும் கூழங்கை சக்கரவர்த்தியின் காலத்தில் கட்டப்பட்டது எனக் கூறப்படுகின்றது.

300pxyamunaeri.jpg

யாழ்ப்பாண வைபவமாலை, நல்லூர் நகரம் உருவாக்கப்பட்டது பற்றிக் கூறும்போது,

"....நாலு மதிலும் எழுப்பி, வாசலும் ஒழுங்காய் விடுத்து, மாட மாளிகையும், கூட கோபுரங்களையும், பூங்காவையும், பூங்காவன நடுவிலே ஸ்நான மண்டபமும் முப்புடைக் கூபமும் உண்டாக்கி அக்கூபத்திலே, யமுனாநதி தீர்த்தமும் அழைப்பித்துக் கலந்துவிட்டு, ........"

என்னும் வர்ணனையைக் காணலாம். இதன்படி, முப்புடைக் கூபம் எனக் குறிப்பிடப்பட்டது பகர வடிவில் அமைந்த கேணியையே ஆகும். யமுனாநதியின் நீர் கலக்கப்பட்டதால் இது பின்னர் யமுனா ஏரி எனப்பட்டது.

ஒல்லாந்தர் காலத்திலும், இக் கேணியானது, பூங்காவின் மத்தியிலே குளிப்பதற்கு உரிய குளமாகவோ அல்லது அழகூட்டும் நோக்குடனோ பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகளை அக்காலத்து வரைபடங்களில் காண முடிகின்றது.

யாழ்பாண இராச்சியத்தின் விடுதலைப் போரானது பல அடக்கு வடிவநிலைகளை இன்றுவரை கொண்டிருந்தது எமது தலைமுறையும் யாழ்ப்பாண இராச்சியத்தின் விடுதலைக்கான போராட்டங்களில் முன்னெடுத்தது பெரும் பங்காற்றி இருக்கின்றோம் இந்த இராச்சியத்தின் முடிவு முள்ளிவாய்க்காலுடன் முடிவடையவில்லை அது மேலும் பல்வேறு வடிவங்களில் வீறுகொண்டெழும்பும் என்பதே உண்மை ...........................................................

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் தகவல்களையெல்லாம் தேடியெடுத்து திரட்டியிருக்கிறீங்கள். சங்கிலிய மன்னனின் வைரங்கள் பதித்த அரியணை இங்கிலாந்தின் அருங்காட்சியகத்தில் இருப்பதாக எங்கையோ படித்த ஞாபகம். அதே நேரம் தமிழர் அரசின் சான்றுகளாக இன்னமும் கந்தரோடை பகுதியில் பழைய கோட்டை உள்ளது. அதனை ஆராய்ச்சி செய்தால் இலங்கையின் மூத்த குடிகள் தமிழர் என்பது வெளிவரும் என்பதால் இலங்கையரசு அதனை முறையான தொல் பொருள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தவில்லை.அந்தப் பகுதியில் சின்னவயதில் நாங்கள் போய் செப்புக்காசுகள் தேடி பொறுக்கியிருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அரிய படைப்பு, நன்றிகள் கோமகன்!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண வரலாறானது யாழ்ப்பாண வைபவ மாலையை மட்டுமே அடிப்படையாக வைத்து ஆராயப்படுகின்றது.அதற்கு மேல் சரியான ஆராய்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை.யாழ்ப்பாண வைபவ மாலையில் உள்ள தரவுகளின் படி யாழ்ப்பாண மன்னர்கள் விபரம்.

அரசர் பெயர் ஞான இராச

கூழங்கைச் ஆரியச்சக்கரவர்த்தி அல்லது காலிங்க

ஆரியச்சக்கரவர்த்தி .........................................கி.பி 1242 கி.பி 1210

குலசேகர சிங்கையாரியன் .......................... .கி.பி 1246

குலோத்துங்க சிங்கையாரியன் ......................கி.பி 1256

விக்கிரம சிங்கையாரியன் ............................கி.பி 1279

வரோதய சிங்கையாரியன் ............................கி.பி 1302

மார்த்தாண்ட சிங்கையாரியன் .......................கி.பி 1325

குணபூஷண சிங்கையாரியன் ........................கி.பி 1348

வீரோதய சிங்கையாரியன் ..............................கி.பி 1344 கி.பி 1371

சயவீர சிங்கையாரியன் ..................................கி.பி 1380 கி.பி 1394

குணவீர சிங்கையாரியன் ................................கி.பி 1414 கி.பி 1417

கனகசூரிய சிங்கையாரியன் ...........................கி.பி 1440

1450ல் கோட்டே அரசனின் பிரதிநிதியான சப்புமால் குமாரயா யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினான்

சப்புமால் குமாரயா அல்லது செண்பகப்பெருமாள் கி.பி 1450

1467ல் யாழ்ப்பாணம் மீண்டும் கனகசூரிய சிங்கையாரியன் வசம் வந்தது

கனகசூரிய சிங்கையாரியன் ............................. கி.பி 1467

(???) சிங்கையாரியன் .................................கி.பி 1478

சங்கிலி கி.பி .................................................1519 கி.பி 1519

1560ல் யாழ்ப்பாணத்தைப் போர்த்துக்கீசர் கைப்பற்றிச் சங்கிலியைப் பதவியினின்றும் அகற்றினர்

புவிராஜ பண்டாரம் ....................................கி.பி 1561

காசி நயினார் .............................................கி.பி 1565

பெரிய பிள்ளை .........................................கி.பி 1570

புவிராஜ பண்டாரம் ....................................கி.பி 1572

எதிர்மன்ன சிங்கம் ......................................கி.பி 1591

அரசகேசரி (பராயமடையாத வாரிசுக்காக) ......... கி.பி 1615

சங்கிலி குமாரன் (பராயமடையாத வாரிசுக்காக) . கி.பி 1617

1620ல் போர்த்துக்கீசரால் யாழ்ப்பாணம் மீண்டும் கைப்பற்றப்பட்டு, அவர்களின் நேரடி ஆதிக்கத்துள் கொண்டுவரப்பட்டது.

  • தொடங்கியவர்

நன்றிகள் சாத்திரி ஜஸ்ரின் :) :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.